எல்லோரும் மருத்துவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது நானும் ரவுடிதான் என்று ஜீப்பில் ஏற வேண்டியதில்லைதான். ஆனால் செந்தில்பாலன் என்ற டாக்டர் ‘என்ன நினைக்கிறீர்கள்?’ என்றார். மிகச் சமீபமாக தொடர்பில் இருக்கும் சிவகங்கைக்காரர் அவர். எலும்பு முறிவு மருத்துவர். ‘அப்படியெல்லாம் ஒண்ணும் நினைக்கலை டாக்டர்’ என்று சொன்னால் ‘பரவால்ல சொல்லுங்க’ என்கிறார். விட்டால் எலும்பை முறித்துவிட்டு கட்டும் போடுவார் போலிருந்தது.
எதற்கு வம்பு?
மருத்துவர்கள் மீது எவ்வளவோ விமர்சனங்கள் இருக்கலாம்- இருக்கிறது. ஆனால் அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே சங்கடமாகத்தான் இருக்கிறது. எத்தனையோ நோய்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கின்றன. எபோலா பற்றி ஆறு மாதங்களுக்கு முன்பாக நமக்குத் தெரியுமா? ஸ்வைன் ஃப்ளூ பற்றி ஐந்து வருடங்களுக்கு முன்பாக ஐடியாவே இல்லை. ஹெச்.ஐவி பற்றி பதினைந்து வருடங்களுக்கு எத்தனை பேருக்குத் தெரிந்திருந்தது? நோய்களை விடுங்கள். எத்தனை விபத்துக்கள் நடக்கின்றன? கொத்துக் கொத்தாகச் சாகிறார்கள். மிச்சம் மீதி பிழைத்தவர்களையெல்லாம் அள்ளியெடுத்துச் சென்று மருத்துவமனையில் போடுகிறார்கள். மருத்துவர்கள் பிழைக்க வைத்துவிடுகிறார்களா இல்லையா? யோசித்துப்பார்த்தால் உண்மையிலேயே மருத்துவர்கள் கடவுள்கள்தான்.
மாமாவுக்கு திடீரென்று நெஞ்சு வலி. அம்மாவின் தம்பி. அவர் பதினாறு வயதிலிருந்தே பாட்டாளி. அவரது மகன் இன்னமும் படித்துக் கொண்டிருக்கிறான். மகளுக்கு அவனை விடவும் சிறிய வயது. விவசாயம்தான் தொழில். ஆம்புலன்ஸில் தூக்கிப் போட்டுச் சென்றார்கள். ‘Massive attack’ என்றார்கள். நெஞ்சை அறுத்தார்கள். பிழைக்க வைத்துவிட்டார்கள். இயல்புக்கு வந்துவிட்டார். இன்னமும் அவர்தான் விடிந்தும் விடியாமலும் தோட்டத்தில் பறித்த பூவை பைக்கில் கட்டி மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்கிறார். குடும்பத்தை தோளில் சுமக்க வேண்டுமல்லவா? சுமந்து கொண்டிருக்கிறார்.
வேணியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். ‘பொதுவா பலருக்கு பத்து மாசம்...அய்யா தொட்டுப்புட்டா எட்டு மாசம்’ என்று சினிமாவில் பாட்டுக் கேட்க வேண்டுமானால் கெத்தாக இருக்கலாம். ஆனால் எட்டு மாதத்தில் மருத்துவமனையில் சேர்க்கும் போது எவ்வளவு சிக்கல்கள் என்று கூட இருந்து பார்க்கும் போதுதான் தெரிந்தது. ஏதேதோ பிரச்சினைகள். ‘தாய்க்கு அல்லது குழந்தைக்குச் சிரமம்’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்கள். நான்கு மணி நேரம் பிரசவ அறைக்கு வெளியே நின்று கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன். மாமனார், மாமியார் உட்பட எல்லோரும் நிற்கிறார்கள். அவர்கள் முன்பாக கண்கலங்கிவிடக் கூடாது என்று வைராக்கியம். ஆனாலும் முடியவில்லை. கண்ணீர் கசிந்து கொண்டேயிருக்கிறது. பெரும் போராட்டத்திற்கு பிறகு குழந்தையைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். கழுவக் கூட இல்லை. அவனது நெற்றியில் முத்தமிட்டேன். அவனுக்கு முதன் முதலாக முத்தமிட்டவன் நானாகத்தான் இருக்க வேண்டும் என்ற ஆசை அது. அந்த சந்தோஷத்தையும் தாண்டி அந்த டாக்டர் முகம்தான் தெரிந்தது. கடவுள் அவர்.
இன்னொரு சம்பவம்- நிகழ்ந்து நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டது. அப்பா காரை ஓட்டிச் சென்று மரத்தில் அடித்துவிட்டார். கால் முறிந்துவிட்டது. நெஞ்சிலும் இரண்டு எலும்புகளில் முறிவு. நிறைய ரத்தச் சேதம். தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறார்கள். பதறிக் கொண்டே சென்றேன். உடனடியாக அறுவைசிகிச்சை அரங்குக்கு அழைத்துச் சென்றார்கள். அவருக்கு அரைகுறையாக ஞாபகம் இருக்கிறது. ஒவ்வொருவராக பெயரைச் சொல்லி அழைக்கிறார். சப்தமே வெளியில் வரவில்லை. அதற்கு மேல் பேச முடியவில்லை. கண்களில் தாரை தாரையாக தண்ணீர் கொட்டுகிறது. ஏழெட்டு மணி நேரங்கள் அறுவை சிகிச்சை நடத்தி வெளியே கொண்டு வந்தார்கள். ‘இனி ஒன்றும் பிரச்சினையில்லை’ என்று அந்த மருத்துவர் சொன்னது வேதவாக்கு.
சொல்லிக் கொண்டே போகலாம்.
ஏதாவதொரு பெரிய மருத்துவமனையின் ஐ.சி.யூவிற்கு முன்பாக மூன்று மணி நேரம் நின்றிருந்தால் போதும். ஒரு உயிரின் மதிப்பைத் தெரிந்து கொள்ளலாம். குழந்தையை உள்ளே படுக்க வைத்துக் கொண்டு வெளியில் கதறிக் கொண்டிருக்கும் தாய், லாரிச் சக்கரத்தின் அடியிலிருந்து மீட்கப்பட்ட கணவனுக்காக தனது குழந்தைகளோடு வெளியில் அழுது கொண்டிருக்கும் மனைவி என ஒவ்வொருவருக்குமே அந்த அறை கோவில். உள்ளே சென்று வெளியே வந்து கொண்டிருக்கும் மருத்துவர்கள் தெய்வங்கள்.
இங்கு யாருக்குத்தான் மருத்துவர்களோடு மறக்க முடியாத அனுபவம் இல்லை? ஏதாவதொரு சமயத்தில் மிகப்பெரிய இக்கட்டிலிருந்து மருத்துவர்கள்தான் நம்மை காப்பாற்றியிருப்பார்கள்.
நானும்தான் மருத்துவர்களை விமர்சித்திருக்கிறேன். இல்லயென்று சொல்லவில்லை. சில மருத்துவர்கள் நம்மை ஏதோ விறகுக் கட்டையைப் பார்ப்பது போல பார்க்கும் போதும், ‘ஐடியில் வேலை செய்யறீங்களா?’என்று வேலையைத் தெரிந்து கொண்டும் நூறு ரூபாயைச் சேர்த்து வாங்கும் போதும் எரிச்சல் வரத்தான் செய்யும். காலங்காலமாக இருக்கும் வாய்ப்புண்ணுக்கு ‘இது ஹெர்ப்பிஸ் என்கிற பால்வினை நோய்’ என்று சொல்லி பரிசோதனை செய்யச் சொன்னார்கள். ரிசல்ட் வரும் வரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது ஹெர்ப்பிஸ் இல்லை என்று தெரிந்த பிறகு ‘என்னைத் தேவையில்லாமல் பரிசோதனை எடுக்கச் சொல்லிவிட்டார்கள்’ என்று திட்டினேன். எப்பொழுதுமே ரிசல்ட் நெகடிவ்வாக இருந்தால் நமக்கு அசட்டுத் தைரியம் வந்துவிடும் ‘அந்த நோயெல்லாம் எனக்கு வராதுன்னு தெரியும்...கமிஷனுக்கு வேண்டி டெஸ்ட் செய்யச் சொல்லிட்டான்’ என்று திட்டுவோம். ஒருவேளை ரிஸல்ட் பாஸிட்டிவாக இருந்துவிட்டால் நம்முடைய தொனி ஒட்டுமொத்தமாக மாறியிருக்கும்.
அதற்காக அனைத்து மருத்துவர்களுமே நல்லவர்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஸ்கேன் எடுப்பதற்கு நோயாளியை அனுப்பிவிட்டு ஸ்கேன் செண்டரில் கமிஷன் வாங்காத மருத்துவர்களே இல்லை என்று சொல்ல முடியுமா? மருந்துக்கடையில் தனக்கான பங்கை வாங்காத மருத்துவர்களே இல்லையென்று நிரூபிக்க முடியுமா? நகரங்களில் இரவு ஒன்பது மணிக்கு மேலாக குழந்தைகள் நல மருத்துவர் ஒருவரை ஃபோனில் பிடித்துவிடுங்கள் பார்க்கலாம். ஏழெட்டு மாதங்களுக்கு முன்பாக தம்பியின் மகன் கட்டிலிலிருந்து விழுந்துவிட்டான். மூக்கில் ரத்தம் கொட்டுகிறது. வண்டியை எடுத்துக் கொண்டு சுற்றுகிறோம் ஒரு மருத்துவரைப் பிடிக்க முடியவில்லை. வழக்கமாகச் செல்லும் குழந்தைகள் நல மருத்துவர் ஃபோனையே எடுக்கவில்லை. வீட்டுக்கு முன்பாக நின்று அழைப்பு மணியை அடித்தால் கதவு திறக்கப்படவே இல்லை.
அடுத்த முறை சென்ற போது அவரிடம் ‘அது எமர்ஜென்ஸி’ என்றேன். ‘ஆமாம்..ஆனால் எங்களுக்கும் ரெஸ்ட் வேணும்ல’ என்றார். அவர் சொல்வதும் சரிதான். ஆனால் ரத்தம் நின்றுவிட்டதால் பிரச்சினையில்லை. ஒருவேளை விபரீதம் ஆகியிருந்தால்? பத்து மணிக்கு யாரோ அழைக்கிறார்கள் என்றால் அது அவசரமாகத்தானே இருக்கும்? அதைக் கூடவா அந்த மருத்துவரால் புரிந்து கொள்ள முடியாது? ‘அவர் ஒருவர்தான் மருத்துவரா? பெங்களூரில் வேறு மருத்துவமனைகளே இல்லையா? ஏன் அவரிடம் சென்றீர்கள்’ என்று கேட்கலாம்தான். ஆனால் அவர்தான் ரெகுலர் மருத்துவர். சளி காய்ச்சலுக்கெல்லாம் அவரிடமே செல்கிறோம். அதனால் இது போன்றதொரு அவசரத்திற்கு நிச்சயம் உதவுவார் என்ற நம்பிக்கையில்தான் ஓடினோம். காலை வாரிவிட்டார்.
இப்படியும் மருத்துவர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான மருத்துவர்களிடம் ஒரு நாளைக்கு நாற்பது டோக்கன்கள்தான். அதற்கு மேலாக யாரையும் பார்க்க முடியாது என்றால் பார்க்க முடியாதுதான். இதுதான் நிதர்சனம். ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதை விட்டுவிட்டு இருக்கிற அத்தனை மருத்துவர்களுமே சேவை மனப்பான்மையோடு இருபத்து நான்கு மணி நேரமும் நோயாளிகளுக்காகவே வாழ்கிறார்கள் என்று தயவு செய்து சொல்ல வேண்டாம்.
ஒரு முறை பைக்கை எடுத்துக் கொண்டு போன போது எதிரில் வந்த குடிகாரரின் மீது மோதிவிட்டேன். கீழே விழுந்து முன்மண்டை கிழிந்து ரத்தம் ஒழுகுகிறது. மணி எட்டரை இருக்கும். மூன்று மருத்துவர்கள் ‘முடியாது’ என்று சொல்லிவிட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். ஒருவர் கிளம்பிக் கொண்டிருந்தார். இன்னொருவர் விபத்து என்றால் பார்க்க முடியாது என்றார். இன்னொருவர் வேறொரு காரணம் சொன்னார். கடைசியில் ஒரு மருத்துவர் கட்டுப்போட்டு உதவினார். அவர் நான்காவது மருத்துவர். ஒருவராவது உதவும் மனநிலையில் இருந்தார். இதுதான் உண்மை.
எந்தத் தொழிலில்தான் அத்தனை பேரும் புனிதமானவர்கள்? அத்தனை ஆசிரியர்களுமே சமூகத்துக்காக தங்களை அர்பணிக்கிறார்களா? ஒவ்வொரு பொறியாளனுமே சமரசம் செய்து கொள்ளாமல் திட்டமிடுகிறானா? எத்தனை வழக்கறிஞர்கள் நேர்மையானவர்கள்? மக்கள் குறித்த சிந்தனையோடு எத்தனை அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்? பத்திரிக்கையாளர்கள் அத்தனை பேருமே உணமையிலேயே தூண்களாக இருக்கிறார்களா என்ன?
இங்கு கிட்டத்தட்ட அத்தனை பேருமே பிழைப்புவாதிகள்தான். நமது மொத்தச் சமூகமும் கறையேறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் அசிங்கம் நிரம்பிக் கொண்டிருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் திருடர்கள்தான். பரஸ்பர நம்பிக்கை சிதிலமடைந்து கொண்டிருக்கிறது. பணமே பிரதானம். இந்த லட்சணத்தில் மருத்துவர்கள் மட்டும் புனிதமானவர்களாக இருக்க வேண்டும் என்று கோருவது எந்தவிதத்தில் நியாயம்? எம்.டி படிக்க மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கு இரண்டரைக் கோடி கொடுக்கிறார்கள். படித்து முடித்து வந்த பிறகு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரத்தானே செய்யும்?
வளர்ச்சி, வருமானம் என்ற ஓட்டத்தில் சமூகம் புரண்டு கொண்டிருக்கும் போது இதெல்லாம்தான் மனித இயல்பு. எவன் எப்படிப் போனால் எனக்கென்ன? நமக்கு எவ்வளவு வருமானம் வருகிறது? என்ற சிந்தனைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு மனிதனிடமும் குடி கொள்ளும் மனித பண்புகளாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி மனிதாபிமானத்தோடும் மனிதர்கள் இருக்கிறார்கள். அதில் சில மருத்துவர்களும் இருக்கிறார்கள். இந்த அளவில் நாம் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். அதையெல்லாம் விட்டுவிட்டு ‘தொண்ணூற்றொன்பது சதவீத மருத்துவர்கள் புனிதர்கள்’ என்று மருத்துவர்கள் சொல்வதிலும் உண்மையில்லை. கோட் சூட் போட்டுக் கொண்டு ‘மருத்துவர்கள் என்றாலே கொள்ளையர்கள்’ என்று யோக்கியபுத்திரன் போல பேசுவதற்கு நமக்கும் தகுதியில்லை.
ஃபுல் ஸ்டாப்.
29 எதிர் சப்தங்கள்:
Thank you:-)
எல்லாத் தொழிலிலும் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு! மருத்துவர்களும் விதிவிலக்கு அல்ல!
I agree I don't have rights to ask doctors. But as we are worshiping them as a god, we are expecting minimum ethics from them. Is that wrong?
அருமையான பதிவு!
அப்டி எல்லாம், பொதுப்படையா சொல்ல முடியாதுங்களே!!
யார் கறைபட்டாலும், மருத்துவர்களும், ஆசிரியர்களும் ரொம்ப முக்கியம் இல்லையா?
ஒரு வழக்கறிஞர் ஏமாத்தி சொத்தை இன்னொருத்தனுக்கு வாங்கி குடுத்தா கூட, ஒரு 10 வருசத்துலையோ, இல்ல அடுத்த தலைமுறையோ அத சம்பாதிச்சிட முடியும். அரசியல்வாதி-ன்னா அடுத்த தேர்தல், இப்டி எல்லாத்துக்கும் இன்னொரு வாய்ப்பு இருக்கு..
ஆனா உயிருக்கு?
எதுல வேணா தப்பு பண்ணலாம், உயிர் விசயத்துல?
ஃபுல் ஸ்டாப்.
ஒன்று சொல்ல நினைத்தேன். ஆனால் நீங்கள் தான் புல் ஸ்டாப் என்று சொல்லி விட்டீர்களே!!!!
Mr.Mani,
If you want to be a writer you should have more depth in seeing every other dimension in everything..
//வீட்டுக்கு முன்பாக நின்று அழைப்பு மணியை அடித்தால் கதவு திறக்கப்படவே இல்லை.
அடுத்த முறை சென்ற போது அவரிடம் ‘அது எமர்ஜென்ஸி’ என்றேன். ‘ஆமாம்..ஆனால் எங்களுக்கும் ரெஸ்ட் வேணும்ல’ என்றார். அவர் சொல்வதும் சரிதான். ஆனால் ரத்தம் நின்றுவிட்டதால் பிரச்சினையில்லை. ஒருவேளை விபரீதம் ஆகியிருந்தால்? பத்து மணிக்கு யாரோ அழைக்கிறார்கள் என்றால் அது அவசரமாகத்தானே இருக்கும்? அதைக் கூடவா அந்த மருத்துவரால் புரிந்து கொள்ள முடியாது? ‘அவர் ஒருவர்தான் மருத்துவரா? பெங்களூரில் வேறு மருத்துவமனைகளே இல்லையா? ஏன் அவரிடம் சென்றீர்கள்’ என்று கேட்கலாம்தான். ஆனால் அவர்தான் ரெகுலர் மருத்துவர். சளி காய்ச்சலுக்கெல்லாம் அவரிடமே செல்கிறோம். அதனால் இது போன்றதொரு அவசரத்திற்கு நிச்சயம் உதவுவார் என்ற நம்பிக்கையில்தான் ஓடினோம். காலை வாரிவிட்டார். //
He's right.that day you had an emergency..every other day someone else will have an emergency..so which day you want him to take rest..everyday he has to work round the clock???..will you work like that? so, what you should do? ..you should go to a hospital which has
24 hrs. service where doctors will work in shifts..
//ஒரு முறை பைக்கை எடுத்துக் கொண்டு போன போது எதிரில் வந்த குடிகாரரின் மீது மோதிவிட்டேன். கீழே விழுந்து முன்மண்டை கிழிந்து ரத்தம் ஒழுகுகிறது. மணி எட்டரை இருக்கும். மூன்று மருத்துவர்கள் ‘முடியாது’ என்று சொல்லிவிட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். ஒருவர் கிளம்பிக் கொண்டிருந்தார். இன்னொருவர் விபத்து என்றால் பார்க்க முடியாது என்றார். இன்னொருவர் வேறொரு காரணம் சொன்னார். கடைசியில் ஒரு மருத்துவர் கட்டுப்போட்டு உதவினார். //
again mr.mani..go to a hospital where you can be treated..you know how difficult it is to put stitches in a small clinic, without helper/nurses?
it's a tiresome job..doctor attends cases like that all day..you should understand doctor needs 8 hrs rest to serve patients next day..
your problem is if you go to a 24 hrs hospital they'll charge more..you want someone who can treat you for peanuts..
சமூகத்தில் எங்கும் எதிலும் தொழில் தர்மம் அழிந்து விட்டது. அப்படி இருந்தும் இதனால் முதலுக்கு
மோசமில்லை. ஆனால் மருத்துவம் அசட்டை, அலட்சியம், அதிக ஆசை - அடுத்தவர் உயிர் எனும் முதலே போய்விடுகிறது.
அதுவும் இந்தியா போன்ற வறுமையும், அறியாமையும் மிகுந்த நாடுகளில், வைத்தியர்களின் பேராசை
எளியோரை அழித்தே விடும்.
அதுவே இப்போ அதிகமாகிக் கொண்டே போகிறது. சடலத்துக்கும் வைத்தியம் செய்து காசு பார்க்கலாம்.
எனும் குரூரராக, தெய்வமெனப் போற்றப்பட்டோர் மாறிவிட்டார்கள்.
இதைப் பேச வேண்டிய இடங்களில் பேசியே ஆகவேண்டும். அந்த நிகழ்ச்சியில் வைத்தியர்கள் ஏன் வாயடைத்திருந்தார்கள். அவர்களிடம் பதில் இருந்ததா?
இதைக் கோட் சூட் போட்டு கேட்கக்கூடாதென கோபிநாத்தை நீங்கள் சாடுவதில் அர்த்தமில்லை.
மற்றும் படி , ஊரோடுது நாமும் ஒத்தோடுவோம் என பல வைத்தியர்களும் கொள்ளையடிக்க முற்பட்டுவிட்டார்கள் என்பது கசப்பான உண்மை.
//every other day someone else will have an emergency..so which day you want him to take rest..everyday he has to work round the clock???..will you work like that? so, what you should do? //
Well, is it really the case? I doubt it until some doc really prove that *with facts* that they get emergency cases every day. There would be occasional emergencies but not as they claim. If it is the issue would be a) paucity of hospitals/specialists in the area b) there is really something wrong in the area that need to be fixed by government/society.
This work culture is just not unique to doctors. In my profession, I've logged continuous 18/19 hours long workday but they are rare. Had a 3 month stint of production issue where I slept for 4 hours every day.
//..you should go to a hospital which has
24 hrs. service where doctors will work in shifts..//
Not really mate.
Only the duty doctor will attend for basic treatment.
As a near and dear, one may feel for the patients suffering. But, unless otherwise it is life threatening, specialist won't show up until next day morning.
//
ஒரு முறை பைக்கை எடுத்துக் கொண்டு போன போது எதிரில் வந்த குடிகாரரின் மீது மோதிவிட்டேன். கீழே விழுந்து முன்மண்டை கிழிந்து ரத்தம் ஒழுகுகிறது. மணி எட்டரை இருக்கும். மூன்று மருத்துவர்கள் ‘முடியாது’ என்று சொல்லிவிட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். ஒருவர் கிளம்பிக் கொண்டிருந்தார். இன்னொருவர் விபத்து என்றால் பார்க்க முடியாது என்றார். இன்னொருவர் வேறொரு காரணம் சொன்னார். கடைசியில் ஒரு மருத்துவர் கட்டுப்போட்டு உதவினார். அவர் நான்காவது மருத்துவர். ஒருவராவது உதவும் மனநிலையில் இருந்தார். இதுதான் உண்மை.
//
ஐயா
நீங்கள் 8 மணி நேரம் வேலை செய்கிறீர்கள்
மருத்துவர் 16 மணி நேரம் செய்யலாம்
ஆனால்
24 மணி நேரமும் அவர் முழித்திருக்க வேண்டும்
நீங்கள் எப்பொழுது சென்றாலும் அவர் தையல் போட வேண்டும்
என்ற உங்கள் எதிர்ப்பார்ப்பு தவறு
அவரிடம் தையல் போடும் உபகரணங்களை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே
இது தான் பிரச்சனை
பிழை உங்களிடம் தான் உள்ளது
மருத்துவரிடம் இல்லை
உங்கள் தவறான எதிர்பார்ப்பினால் தவறு செய்யாமல் சேவை செய்யும் மருத்துவரை குறை கூறுகிறீர்கள்
//
ஏழெட்டு மாதங்களுக்கு முன்பாக தம்பியின் மகன் கட்டிலிலிருந்து விழுந்துவிட்டான். மூக்கில் ரத்தம் கொட்டுகிறது. வண்டியை எடுத்துக் கொண்டு சுற்றுகிறோம் ஒரு மருத்துவரைப் பிடிக்க முடியவில்லை. வழக்கமாகச் செல்லும் குழந்தைகள் நல மருத்துவர் ஃபோனையே எடுக்கவில்லை. வீட்டுக்கு முன்பாக நின்று அழைப்பு மணியை அடித்தால் கதவு திறக்கப்படவே இல்லை.
அடுத்த முறை சென்ற போது அவரிடம் ‘அது எமர்ஜென்ஸி’ என்றேன். ‘ஆமாம்..ஆனால் எங்களுக்கும் ரெஸ்ட் வேணும்ல’ என்றார். அவர் சொல்வதும் சரிதான். ஆனால் ரத்தம் நின்றுவிட்டதால் பிரச்சினையில்லை. ஒருவேளை விபரீதம் ஆகியிருந்தால்? பத்து மணிக்கு யாரோ அழைக்கிறார்கள் என்றால் அது அவசரமாகத்தானே இருக்கும்? அதைக் கூடவா அந்த மருத்துவரால் புரிந்து கொள்ள முடியாது? ‘அவர் ஒருவர்தான் மருத்துவரா? பெங்களூரில் வேறு மருத்துவமனைகளே இல்லையா? ஏன் அவரிடம் சென்றீர்கள்’ என்று கேட்கலாம்தான். ஆனால் அவர்தான் ரெகுலர் மருத்துவர். சளி காய்ச்சலுக்கெல்லாம் அவரிடமே செல்கிறோம். அதனால் இது போன்றதொரு அவசரத்திற்கு நிச்சயம் உதவுவார் என்ற நம்பிக்கையில்தான் ஓடினோம். காலை வாரிவிட்டார்.
//
சார்
அவர் பணி நேரம் என்ன
அந்த நேரத்தில் அவர் நோயாளியை கவனிக்கவில்லை என்றால் தான் தவறு
24 மணி நேரமும் மருத்துவர்வேலை பார்க்க வேண்டும்
அவர் தூங்கவே கூடாது என்ற உங்கள் எதிர்பார்ப்பு தவறு
அதிலும் காலை வாரி விட்டார் என்பது எந்த விதத்தில் நியாயம்
பிழை மருத்துவரிடம் இல்லை
உங்கள் அதீத தவறான எதிர்ப்பார்ப்பு தான் காரணம்
//
இப்படியும் மருத்துவர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான மருத்துவர்களிடம் ஒரு நாளைக்கு நாற்பது டோக்கன்கள்தான். அதற்கு மேலாக யாரையும் பார்க்க முடியாது என்றால் பார்க்க முடியாதுதான்.
//
இதில் என்ன தவறு
அவருக்கு ஓய்வு வேண்டும் அல்லவா
//
இதுதான் நிதர்சனம். ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
//
இதுதான் நிதர்சனம். ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
//
அதை விட்டுவிட்டு இருக்கிற அத்தனை மருத்துவர்களுமே சேவை மனப்பான்மையோடு இருபத்து நான்கு மணி நேரமும் நோயாளிகளுக்காகவே வாழ்கிறார்கள் என்று தயவு செய்து சொல்ல வேண்டாம்.
//
ஐயா
நீங்கள் 8 மணி நேரம் வேலை செய்கிறீர்கள்
மருத்துவர் 16 மணி நேரம் செய்யலாம்
ஆனால்
24 மணி நேரமும் அவர் முழித்திருக்க வேண்டும்
நீங்கள் எப்பொழுது அழைத்தாலும் அவர் பேச வேண்டும் என்ற உங்கள் எதிர்ப்பார்ப்பு தவறு
இது தான் பிரச்சனை
பிழை உங்களிடம் தான் உள்ளது
மருத்துவரிடம் இல்லை
உங்கள் தவறான எதிர்பார்ப்பினால் தவறு செய்யாமல் சேவை செய்யும் மருத்துவரை குறை கூறுகிறீர்கள்
ணிகண்டன்
நீங்கள் கூறிய இரண்டு சம்பவங்களிலும் மருத்துவர்களிடம் எந்த குறையும் இல்லை
குறை உங்களிடம் தான்
உங்களின் அதீத எதிர்ப்பார்ப்பு தான் குறை
திருந்த வேண்டியது நீங்கள் தான்
இது தான் உண்மை
இது தான் நிதர்சணம்
johan paris-ayya athu nangu ezhuthapatta ,melum sila sensational issues kalanthu punaiyappaata oru,unmayil naam ninapathu angu yaarum pesi vida mudiyaathu,,athayum meeri pesinaalum edit seithu viduvaargal,u shud also a remember ita not a live but a recorded edited program,,dis was d info given not only by my doctor friends but also by my teacher freind who d gone to dat program/..
எந்த மருத்துவரையும் குறை கூறவில்லை. யாரையும் 24 மணி நேரமும் பணி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. இதுதான் ரியாலிட்டி. அதை ஏற்றுக் கொள்வதிலும் எனக்கு பிரச்சினையில்லை என்றுதானே எழுதியிருக்கிறேன்!
When the Nation is drowning in corruption, it is highly ridiculous to corner one set of professionals!, Like in any field, there will be good as well as bad people in health care too.
//I doubt it until some doc really prove that *with facts* that they get emergency cases every day.//
you can doubt as long as you are not a doctor. if possible talk to a doctor you know in ur circle, he'll tell you why he cudn't do that. or atleast try to imagine why a doc. has to ignore patients whe he can grab a patient and get some money..
//In my profession, I've logged continuous 18/19 hours long workday but they are rare. Had a 3 month stint of production issue where I slept for 4 hours every day.
It is your industry where u may get fired if you don't do it..doctors don't have that issue..it is because you are in a hire n fire kind of industry you are working for 19 hrs..if nobody can fire you, I'm sure you'll not work for 3 months with 4 hrs sleep everyday because it is not a professional job but slavery..
//But, unless otherwise it is life threatening, specialist won't show up until next day morning.
true..why you need a specialist when you dont have life threatening issue?...a duty doc. and nurses will take care of u nicely...the specialists' time is precious and he hardly sleeps/relaxes..let him attend you on priority..
I'm not a doc. but i know their profession..I'm against docs. who r rude just bcos they are famous and get lot of patients..they need to respect patients...but being said that, what mr.mani has written is something very shallow..
எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதில் தான் உள்குத்து அய்யா...நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றால் "எல்லாரும் அயோக்கியன், திருடன் ", இதில் டாக்டரை மட்டும் குறை சொல்வானேன் என்று?..பொத்தாம்பொதுவாக ஜல்லியடிக்காமல் உங்கள் விமர்சனங்களுக்கு பதில் சொன்னவர்களுக்கு விளக்கம் சொல்லவும்...
நோயாளிகள் நலன் பேணும்
நல்ல மருத்துவர்களும் உள்ளனரே!
மிகவும் நடுநிலையோடு மருத்துவர்கள் பிரச்சனையை அணுகியிருக்கிறீர்கள்.
மிக்க நன்றி
"..இங்கு கிட்டத்தட்ட அத்தனை பேருமே பிழைப்புவாதிகள்தான். நமது மொத்தச் சமூகமும் கறையேறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் அசிங்கம் நிரம்பிக் கொண்டிருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் திருடர்கள்தான். பரஸ்பர நம்பிக்கை சிதிலமடைந்து கொண்டிருக்கிறது. பணமே பிரதானம். இந்த லட்சணத்தில் மருத்துவர்கள் மட்டும் புனிதமானவர்களாக இருக்க வேண்டும் என்று கோருவது எந்தவிதத்தில் நியாயம்? .."
Lets change our thoughts like this.. Doctors are also common people like us. They are also have work hours, their own values and they are also just like politicians, lawyers, shop keepers etc., So, we should not expect them to be god. We don't need to honor them and we can do all the criticism about them just like we do to politicians, lawyers etc.,
Sila naal munnadi puthiya thalaimurai channela oru hospitala oruthan poonthu angu irunthavankalai vettum kaatchi oli parappunga. Antha uurla irukkum maruthuvarkalai kettal antha maruthuvamanai pattri kathai kathaiyya sollurval....
மணி HSR Layout-ல் ஒரு மருத்துவர் இருக்கிறார், அவர் இரவு 12,2 மணிக்கெல்லாம் எங்களுக்கு உதவி இருக்கிறார்.
உங்களுக்கு வேண்டுமானால் மின்னஞ்சல் அனுப்புங்கள், அவருடைய என் அனுப்புகிரேன்.
இதைத்தான் நானும் சொல்கிறேன். மருத்துவம் ஒரு புனிதமான சேவை, மருத்துவர்கள் கடவுளின் தூதர்கள் என்ற அந்தஸ்த்தை மட்டும் விரும்பும் இந்தக்கால கார்பரேட் டாக்டர்கள் அதற்குரிய சில சங்கடங்களையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
When i see this video, i am getting the feel that what he did was correct only.
https://www.youtube.com/watch?v=eNGXxZhEAWc..
அப்படியானால் இனி மருத்துவம் ஒரு சமுக சேவை என்று கூறுவதை தவறு என்று கூறுகிறீர்
இந்நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்ட மருத்துவர் புகழேந்தி ஒரு வார இதழில், தடுப்பூசிகள் ஆபத்தானவை என்றும், அதனால் தன் குழந்தைகளுக்கு போடவில்லை என்றும் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்தில் இதுபோல் மோசடியான ஆராய்ச்சிக் கட்டுரை சமர்பித்த மருத்துவர் ஆன்ட்ரூரி வேக்ஃபீல்டின் உரிமம் 2010ல் பரிக்கப்பட்டது http://news.bbc.co.uk/2/hi/health/8700611.stm. அவருடைய தவறான வாதத்தை நம்பி பல நாடுகளில் உள்ள பெற்றோர்கள் தம் குழந்தைகளை கொள்ளை நோய்க்குப் பறிகொடுத்தனர்.
இப்படிப்பட்டவர்களை கவுரவப்படுத்துவதால் நிகழ்ச்சிகளின் நோக்கம் வெறும் பரபரபிற்காகத்தான் என்று புலனாகின்றன.
சில மருத்துவர்கள் (10 சதமானம்) நல்லவர்கள். (இதே சதமானம்தான் வாத்தியார்களுக்கும், கட்டுமான என்'ஜினீயர்களுக்கும், எல்லோருக்கும் பொருந்தும்). நமக்கு டி.வி. சீரியல்கள் முக்கியம் என்றால், அவர்களுக்கு இல்லையா? அவர்களுக்கு personal Life இல்லையா?
மருத்துவ மாணவனுக்கு கேபிடேஷன் fee வாங்குவதைத் தட்டிக்கேட்க என்த பொதுஜனம் முன்வந்துள்ளது? How many times we have appreciated even a single person in service sector?
நாம் திருந்தாமல் (சமூகம்), சிலர் மட்டும் திருந்தவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. நாம் எப்படியோ அப்படியே இந்தச் சமூகமும்.
பாதுகாப்பான இரத்த அழுத்தம் (BP normal) என்பது 160/100 என்பதாக இருந்தது. 140/90 ஆகக் குறைக்கப்பட்டது. மேலும் 120/80 என்று 2003இல் WHO ஆல் குறைக்கப்பட்டது. ஏன்? உலகத்தின் பாதி மக்கள் தொகையை இரத்த அழுத்த நோயாளிகளாக வரையறுத்து தன் மருந்துக் கம்பெனியின் மருந்துகளுக்கான நீடித்த வியாபார நோக்கமன்றி வேறு என்ன இருக்க முடியும். இதனால் இரத்த அழுத்தத்தின் ஆரம்ப நிலை (pre hypertension, pre hypotension) நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடுகிறது. இதே போல 1997ல் இரத்தத்தில் சர்க்கரை அளவையும் (fasting blood glucose level) 140 mg/dL இல் இருந்து 126/ mg/dL ஆக குறைத்தது அமெரிக்க டையபெடிஸ் அசோசியேசன். இதற்கும் அதே வியாபார காரணம்தான். இந்த அளவுகள் என்பது அதிக மக்களின் சர்க்கரை/BPஅளவு எந்த அளவு உள்ளது என்று கணிக்கப்பட்ட பின் வரையறுக்கப்பட்டது.
“உங்கள் ஆரோக்கியத்தினால் யாருக்கு என்ன லாபம்? நோயில் தானே லாபம் உள்ளது”
இது போன்ற பல சந்தேகங்கள் உங்களுக்கும் இருக்கின்றனவா?
http://vaidheeswaran-rightclick.blogspot.in/2013/09/doctor-nurse-drug-politics-status-health.html
Post a Comment