பள்ளிகளுக்கு புத்தகங்கள் வாங்கித் தரலாம் என்று எழுதிய போது எதிர்பார்த்ததை விடவும் சற்று கூடுதலாகவே பணம் சேர்ந்துவிட்டது. கிட்டத்தட்ட அறுபதாயிரம் ரூபாய். இந்தத் தொகையில் ஆறு பள்ளிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கித் தரலாம் அல்லது தகுதியான பள்ளி என்று தோன்றினால் ஓரிரு பள்ளிகளுக்கு கூடுதலான தொகையை ஒதுக்கி மொத்த பள்ளிகளின் எண்ணிக்கையை ஐந்தாக மாற்றிக் கொள்ளலாம். இதை இன்னமும் உறுதியாக முடிவு செய்யவில்லை.
இப்போதைக்கு மூன்று பள்ளிகள் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்னமும் திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளி நிர்வாகத்தினரிடம் பேசவில்லை. நண்பர்களின் பரிந்துரை அடிப்படையில் அந்தப் பள்ளி பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அரசுப்பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்குவதற்கு ஏதேனும் அரசு அனுமதி பெற வேண்டுமா என்று தெரியவில்லை. அதையும் விசாரிக்க வேண்டியிருக்கிறது.
- தாய்த்தமிழ் பள்ளி, கோபி
- தாய்த்தமிழ் பள்ளி, திருப்பூர்
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, துலுக்கமுத்தூர், திருப்பூர் மாவட்டம்
இவை தவிர தங்கள் பள்ளிக்கு புத்தகங்களை வழங்கக் கோரி இரண்டு மூன்று பள்ளிகளிடமிருந்து மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. சற்று பரிலீத்துதான் பள்ளிகளை முடிவு செய்ய வேண்டும். அதே போலத்தான் புத்தகங்களின் பட்டியலும் இன்னமும் முழுமையாகத் தயாராகவில்லை. இந்த வேலைகளை இன்னும் ஒரிரு வாரங்களில் முடித்து மார்ச் மாத மத்தியில் புத்தகங்களை அனுப்பி வைத்துவிடலாம்.
பெறப்பட்ட தொகை விவரம் இது-
திரு. சரத் ரூ. 5000
திரு. ஈஸ்வரன் ரூ. 1000
திரு. இளையதாசன் ரூ. 2000
திரு. ராமன் வரதாச்சாரி ரூ. 5000
திரு. தெய்வ.மெய்யப்பன் ரூ. 1200
திரு. நடராஜன் ரூ. 500
திரு. அப்துல் மஜீத் ரூ. 1500
மூன்று பேர்கள் தங்களின் பெயர் வெளியே தெரியக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அவர்களில் ஒருவர் இருபதாயிரம் ரூபாயும், ஒருவர் பத்தாயிரமும் இன்னொருவர் ஐந்தாயிரமும் அனுப்பியிருக்கிறார்கள்.
இது போக லிண்ட்சே லோஹன் புத்தகத்திற்கான ராயல்டி தொகை ரூ.3500, எனது பங்களிப்பாக ரூ.4000. மேலும் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் ஒரு தொகையை தந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். ஆக மொத்தம் சற்றேறக்குறைய அறுபதாயிரம் ரூபாய்கள்.
இது எதிர்பார்த்த தொகையைத் தாண்டிவிட்டதால் சிலர் பணம் தருவதாகச் சொன்ன போதும் மறுத்துவிட வேண்டியிருந்தது. அவர்கள் மன்னித்துக் கொள்ளவும். இது பண விவகாரம் என்பதாலும், ஏற்கனவே தெரிவித்திருந்தபடி சற்று பயப்படுவதாலும்தான் மறுக்க வேண்டியதாகிவிட்டது. தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.
இந்தச் செயலை முழுமையாக முடித்த பிறகு பள்ளிகளின் விவரம், வழங்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல் ஆகியவற்றை அறிவித்துவிடுகிறேன்.
பணரீதியாகவும் மனரீதியாகவும் இந்தச் செயலை ஊக்குவித்த அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றிகள்.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment