Jan 6, 2013

கூரியரில் வந்த குழந்தைகூரியலிருந்து அழைப்பு வந்த போதே என்ன வந்திருக்கிறது என்று தெரியும். டெலிவரி பாய் அலைபேசியில் அழைத்தார். “வீட்டில் யாருமில்லையே” என்றார். யாரும் அந்த நேரத்தில் இருக்க மாட்டார்கள். வீட்டு ஓனரிடம் கொடுத்துவிட்டு போய்விடுங்கள் என்றேன். ஓனர் வீடும் பூட்டிக் கிடப்பதாகச் சொன்னார். சரி என்ன செய்யலாம் என்றதற்கு, வீட்டிற்கு முன்னால் சாக்குபையை போட்டு ஒளித்து வைத்துவிடுகிறேன் என்றார். யாரும் எடுக்க மாட்டார்கள் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் கூரியர் கொண்டு வந்தவரே “என்னமோ ஏதோ” என்று நினைத்து கையோடு கொண்டு போய்விட்டால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது. கையோடு கொண்டு போயிருந்தால் அவருக்கு எந்த இலாபமும் இருந்திருக்காது. எனக்குத்தான் பெரிய நஷ்டம் ஆகியிருக்கும். அந்த பார்சலில் வந்திருந்தது “என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி”கவிதைத் தொகுப்பின் பிரதிகள்.

காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து அனுப்பி வைத்திருந்தார்கள். அவசரமாக வீட்டிற்கு வந்த போது அவர் ஒளித்து வைப்பதாகச் சொன்ன இடத்தில் இருந்த சாக்குப் பைக்குள் பார்சல் இருந்தது. பதட்டத்துடன்தான் பிரித்து பார்த்தேன். பிறந்த குழந்தையை முதன் முதலாக பார்ப்பது போல சந்தோஷமாக இருக்கிறது. இதை அதீதமான உவமையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. உண்மையிலேயே அப்படித்தான் இருந்தது.

தொகுப்பை வாங்கி வைத்துக் கொண்டு என்ன செய்வது? சில பிரதிகளை கவிதை வாசிக்கும் நண்பர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். சில பிரதிகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். எல்லாவற்றிலும் ஒரு கஞ்சத்தனம் இருக்கும். அப்படியான கஞ்சத்தனத்தினால் சில பிரதிகளை கைவசம் பிடித்துக் கொள்ளலாம். எனக்கு இரண்டு பிரதிகள் போதுமானதாக இருக்கும். முதல் கவிதைத் தொகுப்பும், முதல் கட்டுரைத் தொகுப்பும் என்னிடம் ஓரேயொரு பிரதிதான் இருக்கிறது. ஒருவேளை காணாமல் போய்விட்டால் சுவடில்லாமல் போய்விடக் கூடும் என்பதால் ஒவ்வொரு முறை புத்தக அலமாரியைக் கலைக்கும் போது அந்த இரண்டு புத்தகங்கள் இருக்கின்றனவா என்று சரிபார்த்துக் கொள்வது வழக்கமாகியிருக்கிறது.

இந்த அலட்டலை இதோடு நிறுத்திக் கொள்கிறேன். இதை எழுத ஆரம்பித்ததன் நோக்கமே வேறு. கஞ்சத்தனத்தினால் சில பிரதிகளை மிச்சம் பிடித்துவிடுவேன் என்று சொன்னேன் அல்லவா? அந்த பிரதிகளை என்ன செய்வது என்று யோசித்த போது நிசப்தம் தளத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு அனுப்பி வைத்துவிடலாம் என்று தோன்றியது. என் எழுத்து வாழ்க்கையைப் பொறுத்த வரைக்கும் பிற எந்த ஊடகத்தை விடவும் நிசப்தத்தை முக்கியமானதாக கருதுகிறேன். 

நான் தொடர்ந்து எழுதுவதற்கான ஊக்கத்தை கொடுக்கும்  நிசப்தத்தை வாசிப்பவர்களுக்கு கவிதைத் தொகுப்பை அனுப்புவது என்பது நிச்சயமாக சந்தோஷமானதாகவே இருக்கும். எத்தனை பிரதிகளை அனுப்ப இயலும் என்று எண்ணிக்கை தெரியாது. முடிந்தவரை அனுப்பி வைக்கிறேன். 

மின்னஞ்சலில் முகவரியை அனுப்பி வையுங்கள். என்னிடம் இருக்கும் எணிக்கைக்கு ஏற்ப புத்தகங்களை அனுப்பி வைக்கிறேன். புத்தகம் அனுப்பி வைக்கக் கோரும் வேண்டுகோள்கள் நிறைய வந்து சிலருக்கு அனுப்பி வைக்க முடியாமல் போகுமெனில் அதையும் குறிப்பிட்டு பதில் அனுப்பிவிடுகிறேன்.

அல்லது புத்தகத்தை விலை கொடுத்து வாங்க விரும்பினால் அதுவும் எனக்கு சந்தோஷம்தான். காலச்சுவடு பதிப்பகம், சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் முக்கியமான புத்தகக் கடைகளில் கிடைக்கும். பின்வரும் இணைப்பின் வழியாக ஆன்லைனிலும் பெற்றுக் கொள்ள முடியும். 


புத்தகம் எழுதுவது, அதை பதிப்பிப்பது, பிறரிடம் சேர்ப்பிப்பது- இது எதுவுமே பெரிய சிரமமில்லை. அவை முக்கியமுமில்லை. அந்த புத்தகம் எந்தவிதமான உரையாடலை உருவாக்குகிறது என்பதுதான் அவசியம்.விருதுகள், விமர்சனக்கட்டுரைகள் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்.

குறைந்தபட்ச கவனத்தையாவது புத்தகம் பெற வேண்டும். புத்தகத்தை வாசித்துவிட்டு ஓரிரு வார்த்தைகளாவது யாராவது பேச வேண்டும். முகம் தெரியாதவர் யாரேனும் எழுத வேண்டும். அதுதான் ஒரு புத்தகத்திற்கான வெற்றி.  

11 எதிர் சப்தங்கள்:

பொன். வாசுதேவன் said...

அன்பான வாழ்த்துகள் மணி. படித்துவிட்டு எழுதுகிறேன்.பொன்.வாசுதேவன்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நிச்சயம் உங்கள் கவிதை நூல் அனைவரின் கவனத்தையும் கவரும்.
வாழ்த்துக்கள்.

Kodees said...

மணி!, மெயில செக் செய்யுங்க!

Deiva said...

I am regular reader of your blog. I am interested in reading the book. I am not sure whether you can send to US. If so, Please respond back to me at deiva.meyyappan@gmail.com. I will e-mail my address.

Deiva Meyyappan

ஜீவ கரிகாலன் said...

//நிசப்தம் தளத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு அனுப்பி வைத்துவிடலாம் என்று தோன்றியது.//
அப்படியென்றால் எனக்கும் உண்டு தானே??

ஆனால் நான் தான் வாங்கி விட்டேனே.

//என் எழுத்து வாழ்க்கையைப் பொறுத்த வரைக்கும் பிற எந்த ஊடகத்தை விடவும் நிசப்தத்தை முக்கியமானதாக கருதுகிறேன். //
வாழ்த்துகள்

பாலு said...

Sorry Manikandan! I will read it after buying it.. May be it may take some time. But I strongly recommend you dont send it free of cost. I have gifted many books instead of bouquets to friends. No one has ever read it. Let them pay for it. In case you are sending it to me, I will remit the cash to your bank account. I am not saying this because I want to stand out. As a genuine reader, who is a well wisher of tamil writers, I am writing this.

சாந்தி மாரியப்பன் said...

தவிட்டுக்குருவி வெற்றியடைய வாழ்த்துகள்..

Uma said...

"என் எழுத்து வாழ்க்கையைப் பொறுத்த வரைக்கும் பிற எந்த ஊடகத்தை விடவும் நிசப்தத்தை முக்கியமானதாக கருதுகிறேன். "
உங்கள் குருவிக்கு எனது வாழ்த்துக்கள்!

RajaRathinam said...

என் முகவரி : R. RajaRathinam,
15J, சரவணா நகர்,
கவுண்டம் பாளையம்,
கோவை - 641030.

--
Thanks and regards,
RajaRathinam

M.Jai Shankar said...

Dear மணிகண்டன் ji.. Hw r u boss?.. Proud to be ur fan and inspired a lot from ur writings.. Keep going thala.. தங்கள் பிரதிகளை மின்னஞ்சலில் பெற நானும் விழைகிறேன் தோழா.. (m.jaishankar4u@gmail.com)

--
நட்புடன்,

M.Jai Shankar,
Mobile: 07498876374,
Navi Mumbai, MH.

M.Jai Shankar said...

Dear மணிகண்டன் ji.. How r u boss?.. Proud to be your fan and inspired a lot from your writings.. Keep going தல.. தங்கள் பிரதிகளை மின்னஞ்சலில் பெற நானும் விழைகிறேன் தோழா.. (m.jaishankar4u@gmail.com)
--
நட்புடன்,
M.Jai Shankar,
Mobile: 07498876374,
Navi Mumbai, Maharashtra.