Nov 20, 2012

பறையன், பறையனா இருந்தா கொளுத்துவானுங்க


தர்மபுரி சாதிக்கலவரங்கள் குறித்து ஆளாளுக்கு முத்துக்களை உதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தலித் கிராமத்தை மேல்சாதியினர் எரித்தது சரியானதுதான் என்று நிரூபிக்க குட்டிக்கரணம் அடிக்கிறார்கள் மேல்சாதிப்பிரதிநிதிகள். ராமதாஸ் முதற்கொண்டு கொங்குவேளாளர் பேரவை மணிகண்டன் வரை ஏகப்பட்டவர்கள் காமெடி ப்ரோகிராம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வரிசையில் இப்பொழுது கடைசியாக பழமலய்.

பழமலய் பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு குட்டி அறிமுகம். மண் மணம் தெறிக்க தனது சமூகக் கவிதைகளால் அழுத்தமான இடம் பதித்தவர் என்று நவீன இலக்கியவாதிகள் கொண்டாடினார்கள். தலித் ஆதரவாளர்கள் போற்றினார்கள். 

பேராசிரியர், தலித் வாழ்வியலை எழுத்தாக்கியவர் என ஏகப்பட்ட பில்ட் அப்களுடனான பிம்பத்தைக் கொண்டிருக்கும் பழமலய்யின் மொக்கைத்தனமான கமெண்ட்டை இன்று வாசிக்க நேர்ந்தது. பல காதல் திருமணங்கள் “நாடகத் திருமணங்கள்” என்று ராமதாஸ் சொல்லி வாய்மூடிய ஓரிரு நாட்களுக்குள் பிபிசி தமிழ் தளத்தில் பழமலய் சொல்லியிருப்பது இதுதான் -

காதல் திருமணங்கள் ‘மேல் சாதி’ மாப்பிள்ளைகள் ‘கீழ் சாதி’ப் பெண்களைத் திருமணம் செய்வதாக இருந்தால் அது எந்தப் பிரச்சினையையும் கிளப்புவதில்லை. ஆனால், ‘கீழ் சாதி’யைச் சேர்ந்த ஒரு ஆண், ‘மேல் சாதி’யைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால்தான் அது ராமாயணம் போல சீதையை மீட்கும் போருக்கு இட்டுச்செல்கிறது .

ஒரு பிரச்சினையின் மையத்தை கண்டுபிடித்திருக்கிறார் என்பதை பாராட்டி இவருக்கு அடுத்த வருடம் ஏதாவது ஒரு பரிசு கொடுத்தால் தேவையில்லை போலிருக்கிறது. அது நோபல் பரிசாக இருந்தால் இன்னமும் பொருத்தமாக இருக்கும். 

நுணுக்கமாக கவனித்தால் பழமலய்யின் கமெண்ட் பிரச்சினையின் வேரைக் கண்டுபிடிப்பதில்லை. ‘மேல்சாதி’க்காரர்கள் செய்தது தவறில்லை என்பதற்கான Justification. 'நீ மேல்சாதிப்பெண்ணை கைபிடித்தால் இப்படித்தான் எரிப்பார்கள்’ என்பதான Warning என்றே புரிந்து கொள்ள வேண்டும். ஆண் எந்தச் சாதியை பெண்டாண்டாலும் துடிக்காத மீசை பெண் வேறு சாதிக்கு வாழ்க்கைப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை என்பதை எப்படி புரிந்து கொள்வது? பழமலய்க்குள் புரையோடிக் கிடக்கும் ஆணிய மனநிலைதான் துருத்திக் கொண்டிருக்கிறது.

ராமதாஸூம், கொங்கு வேளாளர் பேரவை மணிகண்டனும் என்ன உளறினாலும் அது பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஓட்டு பொறுக்கி அரசியல் நடத்துபவர்களின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கும் என விட்டுவிடலாம். ஆனால் அறிவு சார்ந்த தளத்தில் தன்னை பேராசிரியர்,கவிஞர், தலித் போராளி என்றெல்லாம் பிரகடனப்படுத்திவிட்டு தனக்குள் ஒளிந்திருக்கும் பூனைக்குட்டியை வெளியிடும் ஒருவரைப் பார்த்தால் எரிச்சல்தான் மிஞ்சுகிறது. எழுதுவதற்கும் வாழ்வதற்கும் சம்பந்தமே தேவையில்லை என்பதற்கு இன்னொரு சாட்சியமாக தன்னை மாற்றிக் கொண்ட கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

எனது பேட்டி முழுமையானது இல்லை என்றோ திரிக்கப்பட்டிருக்கிறதோ என்றோ சொல்வார் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

முன்பு பழமலய் எழுதி நான் கொண்டாடிய கவிதை ஒன்று இப்பொழுது ஏனோ ரொம்பவும் இம்சிக்கிறது.

கண்மணி குணசேகரன் கடிதம் எழுதியிருந்தார்.
'மணக்கொல்லைக்கு' அழைத்திருந்தார்.

ஒரு முற்பகலில்
ஊரைச் சுற்றிக் காட்டினார்.

ரெட்டியார் கிராமம்.
பத்து பன்னிரெண்டு போலத்
தோட்டமும் வீடுமாகப் பெரிய ஓட்டு வீடுகள்.
இடையிடையே சில இடிந்து கிடந்தன.
எருக்கு முளைத்திருந்தது.

"சாபம் அய்யா-
கழுத விழுந்து பொரளணும்!
குடியத்துப் போவணும்!"

இதான் பறவீரன் கோயில்.
அது பறவீரன் குளம்.
அந்த வீடு இந்த வீடு இன்னு
சில ரெட்டியாருங்க வந்து கும்புடுவாங்க.
இங்க நின்ன ஒரு அழிஞ்சி மரத்துலதான்
தல கீழா தொங்கவுட்டு
வைக்கோலப் போட்டு கொளுத்துனாங்களாம்

இதான் அந்த நெலம்
அந்தப் பஞ்சத்துலயும் இந்தக் கொல்லையில
அப்புடி கம்பு வெளஞ்சிருந்துதாம்.
தோ, புலியூரு
அந்தப் பக்கத்துல இருந்து வந்துதான்
ஒரு ராத்திரி கம்ப அறுத்துட்டானாம்

கேள்விப் பட்டு வந்த அவன் பொண்டாட்டி
நெறமாத கர்ப்பிணி-
'பசிக்குத் திருட வந்தவன,இப்புடி
பண்ணிப்புட்டீங்களேடா பாவிவோளா'ன்னு
மண்ண வாரிவுட்டு அழுது பெரண்டாளாம்.

அப்ப,
அப்ப அடிச்சி உட்டுடலாமுன்னு தடுத்துவுங்க குடும்பங்க
இப்ப வித்து மாறிகிட்டிருக்குது
கொளுத்னவனுவோ வீடுங்க
எருக்கு மொளச்சி கெடக்குது"

நின்று நினைத்தேன்:
கோயில், அடையாளம் என்று நின்ற வேல்,
நாவாக அசைந்து சொன்னது.
'பறையன்,
பறையனா இருந்தா கொளுத்துவானுங்க.
வேரறுக்கும் 
வீரனா இருந்தா கும்புடுவானுங்க'.

10 எதிர் சப்தங்கள்:

Subramanian said...

மிக வேகமாக வளர்ந்து வரும் கணினி யுகத்தை, நாகரிக யுகமாக வளர்க்க இதுபோன்ற சாதியம் சுட்டும் தலைப்புகளை தவிர்க்கலாமே..

சார்வாகன் said...

வணக்கம் சகோ.அருமை நன்றி

வாகை said...

அவரின் முழு பேட்டியையும் வெளியிடாமல் ஓரிரு வரிகளைக் கொண்டு அவரை புரிந்து கொள்ளச் சொல்வது நியாயமில்லை. உங்கள் அணுகுமுறை சரியானது இல்லை

Vaa.Manikandan said...

சுப்பிரமணியன்,

இதே நவநாகரீக உலகத்தில் மலத்தை கரைத்து சகமனிதனின் வாயில் ஊற்றுகிறார்கள், ஊரைப்பிரித்து சுவர் எழுப்புகிறார்கள், இதே கணினி யுகத்தில்தான் ஒரு ஊரையே எரிக்கிறார்கள்.

வாகை,

அவருடைய முழுப்பேட்டிக்கான இணைப்பு இதே பதிவில் இருக்கிறது. வாசித்துவிடுங்கள்.

கறுத்தான் said...

அய்யா !பழமலை என்று இல்லை இன்று தமிழகத்தில் உள்ள முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் என்று கருத படுவோர் யாரும் இச்சம்பவத்தை பற்றி ஆய்வும் செய்யவில்லை கண்டனமும் தெரிவிக்க வில்லை மேலும் கருத்து தெரிவிபவர்களும் எதாவது ஒரு இடத்தில பறையர் சமூகத்தை பற்றி ஒரு சாடலாவது சாடி விட்டுத்தான் போகிறார்கள் இதுபூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்பதை போல் இருக்கிறது தமிழ் சினிமா நூற்றுக்கு தொண்ணுறு சதமானம் காதலை போற்றி படம் எடுகிறார்கள் அந்த புரட்சி இயக்குனர்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டார்கள் முதலில் அந்த மக்கள் மத்தியில் இந்த சமூகத்தை பற்றி நம்பிக்கை உருவாக்க பட வேண்டும்

Subramanian said...

//இதே நவநாகரீக உலகத்தில் மலத்தை கரைத்து சகமனிதனின் வாயில் ஊற்றுகிறார்கள், ஊரைப்பிரித்து சுவர் எழுப்புகிறார்கள், இதே கணினி யுகத்தில்தான் ஒரு ஊரையே எரிக்கிறார்கள்.//

எல்லோரும் செய்கிறார்கள் என்று நாமும் செய்யலாமா? சாலையில் எல்லோரும் குப்பை கொட்டுகிறார்கள் என்று, அது தவறு என்று தெரிந்த நாமும் குப்பையை கொட்டலாமா?

indrayavanam.blogspot.com said...

நல்ல அலசல்,அருமை பதிவு

காவ்யா said...

//காதல் திருமணங்கள் ‘மேல் சாதி’ மாப்பிள்ளைகள் ‘கீழ் சாதி’ப் பெண்களைத் திருமணம் செய்வதாக இருந்தால் அது எந்தப் பிரச்சினையையும் கிளப்புவதில்லை. ஆனால், ‘கீழ் சாதி’யைச் சேர்ந்த ஒரு ஆண், ‘மேல் சாதி’யைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால்தான் அது ராமாயணம் போல சீதையை மீட்கும் போருக்கு இட்டுச்செல்கிறது //

முதல் வாக்கியமே தவறு. கீழ்சாதிப் பெண்ணை அவ்வளவு சுலபமாக மேல்ஜாதி ஆண் காதலித்து இழுத்துக்கொண்டு போக முடியாது. அவர்களும் எதிர்ப்பர். ஆனால், ஒன்று கூடி மேல்ஜாதியினர் வீடுகளைக்கொழுத்துமளவுக்குப் போகாது. அதற்கு பல உட்காரணங்கள்.

கீழ்சாதியைச் சேர்ந்தவன் மேல் ஜாதிப் பெண்ணைக் காதலிக்க மணம் செய்யவும் அவன் ஜாதி ஒத்துக்கொள்ளாது. கறுப்பர்களில் இஃது உண்டு. நம் நாட்டு வடகிழக்குமக்களிடையும் இஃது உண்டு. தம் பெண்ணைப் பிறர் மணம் செய்ய விரும்புவதில்லை.

ஒரு எஸ் சி பெண்ணை மணக்காமல் இன்னொரு ஜாதிப்பெண்ணை மணத்தல் தன் எஸ் சிப்பெண்களை இழிவுபடுத்தலே என்பது எண்ணம். அவர்களுக்கு அழகில்லையா? குணமில்லையா?

மேலும், ஒரு எஸ் ஸியோ எஸ் டிக்கோ ஜாதியால் வேலை கிடைத்து நல்ல சம்பளம், பதவி அந்தஸ்து என்றவுடன் அவன் தன் ஜாதிப்பெண்ணையே மணந்தால் அவன் ஜாதி உயரும் அவனோடு சேர்த்து பலர் உயர்வார்கள்.

But he thinks that his status has gone up; and so he is above his own ppl. ;for his status, only an upper caste girl can be his bride. This is a perverse mentality that shd be curbed.

If an SC or ST boy marries an upper caste girl, the Government shd take back his job. Let him be jobless and get a private job and live with his upper caste bride.

இஃதையெல்லாம் மறந்து மேல்ஜாதிப் பெண்ணை நாடும் பழக்கம் தவறு. எப்படி உங்களிடம் உங்கள் இனப்பெண்கள் உங்கள் ஆண்களையே மணந்தால் நன்று என்று நினைப்பு இருக்கிறதோ அவ்வாறே அவர்களுக்கும் இருக்கும். இப்பிரச்சினை தவறு செய்பவர்கள் நீங்கள்.

Everyone shd marry w/in his or her own caste. Love marriages shd be discouraged.

Marrying an upper caste girl indicates that the dalit suffers from inferiority complex. He shd ask himself: Why no such complex for Upper Caste ?

Unknown said...

உங்கள் இனம் உள்ள பகுதியில் வேறு இனப்பெண்கள் நிம்மதியாக இருக்கமுடியவில்லை என்பதே உண்மை. காதல் என்டா காதல் உங்கள் சாதியில் பெண்களே இல்லையாட உங்கள் இன இழுக்கை போக்குவதற்க்கு உங்க புள்ள குட்டிகள நல்ல படிக்க வைங்கடா......... கப்பிதனமா பேச வந்துட்டையா..

Anonymous said...

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளன் என்றால் தலித் ஆதரவாளனாகவும், பார்ப்பன எதிர்ப்பும் இருக்க வேண்டும். இது மாதிரி சம்பவங்கள் நடந்தால் பொங்கி எழுந்து so called மேல் சாதியினரை விமர்சிக்க வேண்டும். பாரதி மாதிரி கோபக்காரனாய் காட்டிக் கொள்வதில் தவறில்லை. சமூகப் புரட்சி என்பது தலித் ஆதரவு நிலை எடுப்பதால் மட்டுமே வராது.