Jan 13, 2011

சென்னை சங்கமம்

கடந்த சில வருடங்களாக சென்னை சங்கமத்தில் நிகழும் 'கவிதை சங்கம'த்தில் கவிதை வாசிப்பதற்காக அழைக்கப்பட்டிருக்கிறேன். தொடக்கத்தில் எனது கவிதைகளுக்கான அங்கீகாரமாகக் கருதியும் பின்னர் வந்த ஆண்டுகளில் நண்பர்களைச் சந்திக்கும் நிகழ்வாகவும் தொடர்ந்து பங்களித்து வந்தேன்.

இந்த ஆண்டும் கவிதைச் சங்கமத்தில் கலந்து கொள்ளச் சொல்லி அழைப்பு வந்திருக்கிறது. என்னை நினைவில் வைத்திருந்து அழைத்த நண்பர்களுக்கு நன்றி. இந்நிகழ்விற்கு தலைமை தாங்கும் கலாப்ரியா அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதையுண்டு. ஆனால் இந்த ஆண்டு கவிதைச் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்பட்டு சிபிஐ-ன் விசாரணைக்குள்ளாக்கப்பட்ட ஜெகத் கஸ்பரின் தமிழ் மையம் இந்த ஆண்டும் சென்னை சங்கமத்தில் பிரதான பங்களிப்பைச் செய்கிறது. சென்னை சங்கமத்தின் இணையதளத்தில் தமிழ் மையம் பற்றி சிலாகிக்கப்பட்டிருக்கிறது.
கறையின் நிழல் விழுந்த ஒரு நபருக்கும் அவரது அமைப்புக்கும் சென்னை சங்கமம் அளிக்கும் முக்கியத்துவத்தை எதிர்க்கிறேன். எதற்காக தமிழ் மையத்திற்கும் ஜெகத் கஸ்பருக்கும் சென்னை சங்கமம் இடமளிக்கிறது என்பதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

கவிஞர் கனிமொழியின் இடத்தை ஸ்திரமாக்கப்படுவதற்கு நடத்தப்படுகிறது என்பது ஒரு காரணம் என்றாலும் கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்குமான இடமாக சென்னை சங்கமம் விளங்கி வருவதாக உணர்கிறேன். அதே சமயம் சி.பி.ஐ விசாரணைக்குப் பிறகாக தனது புனித பிம்பத்தை மறு உருவாக்கம் செய்து கொள்ள முனையும் கஸ்பருக்குத் துணையாக இந்தச் சென்னை சங்கமம் அமைந்துவிடக் கூடாது என்பதை நான் விரும்புகிறேன்.

இலக்கியமும் கலையும் சினிமா கவர்ச்சியிலும், அதிகாரத்தின் விரலசைவிலும், அரிதாரங்களினாலும் வெளிச்சம் பெறுவதில்லை. அப்படி விழக் கூடிய வெளிச்சம் தற்காலிகமானதுதான். தன் சுய நலங்களுக்காக இலக்கியத்தையும் கலையையும் பயன்படுத்திக் கொள்பவர்களை காலத்தின் சுழல் தாட்சண்யமின்றி தூர எறிந்துவிடும்.

சுய விளம்பரத்திற்காகவும், அரசியல் பாதுகாப்பிற்காகவும், குற்றச்சாட்டினை மறைப்பதற்காகவும், வருவாய் ஈட்டுவதற்காகவும் கலையையும், இலக்கியத்தையும் பயன்படுத்துவதற்கு எதிராக இந்த ஆண்டு நடைபெறும் கவிதைச் சங்கமத்தில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை.

நான் புறக்கணிப்பதனால் சென்னை சங்கமத்திற்கு எந்தவிதமான தடங்கலும் வரப்போவதில்லை; அதே சமயத்தில் எனது கவிதைகளுக்கான பிரசுர வாய்ப்புகள் குறையலாம் -எனினும் அது பற்றிய எந்தவிதமான விசனமும் இல்லாமல் எனது எதிர்ப்பினை பதிவு செய்வதற்கான வாய்ப்பாக இதனை பயன்படுத்திக் கொள்கிறேன்.
நன்றி.

12 எதிர் சப்தங்கள்:

Mohan said...

Congrats.Good decision.

Thirumalai Kandasami said...

We are very proud of your decision

http://enathupayanangal.blogspot.com

சாணக்கியன் said...

நல்ல முடிவு. வாழ்த்துகள்!. இப்படி எல்லோரும் தங்கள் எதிர்ப்பைக் காண்பித்தால் நல்ல விளைவுகள் ஏற்படும். இந்த ஒத்துழையாமையைச் செய்யவேண்டும் என்றுதான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன்.

shunmuga said...

மிக நல்ல முடிவு

Mahesh M said...

தமிழ் பாடலாசிரியர்கள்(தாமரை தவிர), கூழை கும்பிடு நடிகர்கள் போன்ற சராசரிகளிடம் இருந்து மறுபட்டு நிற்கிரீர்கள்... வாழ்த்துக்கள்

Anonymous said...

Glad you took the right decision.
-Ramesh.

vasan said...

பெய‌ருக்கேற்றால் போல் பூனைக்கு மணி க‌ட்டிய‌ வா(வ்) ம‌ணிக‌ண்ட‌ன்.
புல‌வ‌ரைப் போற்றும் புர‌வ‌லரின் புத‌ல்வி, என்ன‌ புக‌ல்வாரோ?
உண்மையை உள்ள‌த்திலும், உத‌ட்டிலும் ஓதுப‌வ‌னே க‌விஞன்,
உள்ளொன்று வைத்து புற‌மொன்று ஓதுவோன் க‌லைஞ‌ன்.
(த‌மிழ‌க‌த்தில் க‌லைஞருக்கும், க‌லைஞ‌னுக்குமுள்ள‌ வேறுபாடு,
ஆண்டான் அடிமை அளவு, ச‌ரிதானா சார்?)

விநாயக முருகன் said...

நல்ல முடிவு. வாழ்த்துகள்!

மதன் said...

Inspiring!

svramani08 said...

நல்ல முடிவு.வாழ்த்துக்கள்

G Tamilmani said...

Dear Sir,
In yesterdays (23.1.11)the new indian express Gnani has appreciated your gesture, did you see.
G.Tamilmani

Paraa said...

அரசியலில் பலம் படைத்தோரின் மன குளிர்விற்காக கூழை கும்பிடு போட்டு போற்றி கவிதை வசிக்கும் கவிகளில் ,தைரியமாக உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ததுக்கு பாராட்டுகள்.