Jul 21, 2010

ரமேஷ்-பிரேமின் "உப்பு" தொகுதியில் இருந்து இரண்டு கவிதைகள்

(1)
பறம்பு மலை
பேரரசர்களால் சுற்றி வளைக்கப்பட்டது

கபிலன்
குழந்தைகளை அள்ளிக் கொண்டு
ரகசிய மலைப்பாதை வழியாக வெளியேறுகிறான்

மலையுச்சிக் குடிலில்
பாரி
சிறைபட மறுத்து
கபிலன் விட்டுச் சென்ற
எழுத்தாணியால் தொண்டைக் குழியில்
குத்திக்கொள்கிறான்

தமிழ் நிலத்தின்
முதல் காவியம் எழுதப்படுகிறது

(2)
அழகு பற்றிய எல்லாவிதமாயைகளும் உடைந்துவிட்டன
அவளும் அவனும் மலங்கழிக்க
நிலவுக்குச் சென்ற அன்று

2 எதிர் சப்தங்கள்:

Unknown said...

இரண்டாவது பிடிச்சிருக்கு மணிகண்டன்.

ஆதி said...

இரண்டு கவிதைகளுமே அருமை, பகிர்வுக்கு நன்றி மணிகண்டன்