Jun 11, 2009

முதல்வர் ஒய்வு பெறுவது பற்றிய 'ஓ பக்கங்கள்'ஞாநியின் கருத்துகளும் எனது மன்னிப்பும்.

ஞாநி அவர்கள் இந்த வார ஓ பக்கங்களில் திரு.ஸ்டாலின் துணை முதல்வரானது பற்றியும், அவர் 2007 ஆம் ஆண்டிலேயே ஓ பக்கங்களில் திரு.கருணாநிதி ஓய்வெடுக்க வேண்டும் என குறிப்பிட்டதையும், அந்தக் கருத்தை எதிர்த்து கண்டனக் கூட்டங்கள் நடத்தியும், இணையதளங்களில் கட்டுரை எழுதியும் அவரை திட்டித் தீர்த்தவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும் என்று எழுதியிருக்கிறார்.

2007 ஆம் ஆண்டு அக்டோபரில் 'தீம்புனல்' என்ற அமைப்பு நடத்திய முதல்வர் கருணாநிதி ஓய்வு பெற வேண்டும் என்ற ஞாநியின் கருத்துக்கு எதிரான கண்டன கூட்டத்தில் நான் பார்வையாளனாக கலந்து கொண்டு, நிகழ்ந்தவற்றை என் வலைப்பதிவில் செய்ததோடு நில்லாமல், கட்டுரையில் ஞாநி மீதான எனது விமர்சனங்களையும் சேர்த்து எழுதியிருந்தேன். (http://pesalaam.blogspot.com/2007/10/blog-post_21.html)

மூன்றாண்டுகளுக்கு முன்பாக கருணாநிதி சக்கர நாற்காலியில் வரும் நிலைமையில் இல்லை. முதல்வர் பதவிக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தன. தெளிவான உடல்நிலையோடு இருந்தார். அப்பொழுது அவர் ஓய்வு பெற்றாக வேண்டிய சூழ்நிலையில் இல்லை.

அந்த சமயத்தில் இலங்கை பிரச்சினை போன்ற அவரின் தமிழின பற்றுக்கான சோதனைகளும், ஸ்டாலின், தயாநிதி தவிர்த்து, கனிமொழி, அழகிரி ஆகியோரை அரசியல் ரீதியாக முன்னெடுப்பதும் அதிகம் இல்லாமல் இருந்தது.

தமிழின உணர்வோடு பாடுபடக் கூடிய, அதே சமயம் அதிகாரத்தை கையகப் ப‌டுத்தக் கூடிய தலைவராக தமிழகத்தில் அவர் மட்டுமே இருக்க முடியும் என்றும் நான் தீர்க்கமாக நம்பிக் கொண்டிருந்தேன். ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் நடத்தும் திறன் வாய்ந்தவர் அவர் என்பதும் என் எண்ணம்.

அதே கண்டனக் கூட்டத்தை கனிமொழி, தன் இலக்கிய பின் புலத்தையும், கவிஞர் பட்டத்தையும் அரசியல் ரீதியாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள பயன்படுத்துகிறார் என்பது என் சிற்றறிவுக்கு எட்டாத விஷயம் ஆகியிருந்தது.

அடுத்த‌ இரண்டாண்டுகளில் அதிகாரத்தையும், பதவியையும் தன் குடும்பத்தாரை ஸ்திரமாக்க மட்டுமே கருணாநிதி பயன்படுத்தப் போகிறார் என்பது தெரியாமல் இருந்தது.

ஒருவேளை அப்பொழுதே ஸ்டாலின் முதல்வராகியிருந்தால், அழகிரியும், கனிமொழியும் பெரிதாக அரசியலில் உதயமாகியிருக்க‌ முடியாமல் கூட ஆகியிருக்கலாம்.

ஈழம் பற்றியெரியும் போது பதவியெதுவுமற்ற கலைஞர் மிக உரத்த குரலில் தன் கண்டனத்தை பதிவு செய்திருக்கலாம். தமிழினத்தின் தலைவன் அவர்தான் என்பதில் அரசியல் ரீதியாக எதிரியாக இருப்பவனுக்கும் துளி சந்தேகம் வந்திருக்காது.

கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் இருந்திருக்க வேண்டிய கலைஞர் தன் அறிவை தமிழருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பயன்படுத்தியிருக்கலாம். அதிகமான குடும்ப,மன மற்றும் பணி அழுத்தத்தில் முதுகு தண்டு வட பிரச்சினை கூட வராமலும் இருந்திருக்கலாம்.

கடைசி ஒரு வரி தவிர்த்து மற்றவற்றையெல்லாம் முன்பே யூகித்து ஞாநியாலும் எழுதியிருக்க முடியாது என்று நினைக்கிறேன். அவர் எதை நினைத்து எழுதினாரோ தெரியாது. ஆனால் அவரது விருப்பம் அன்று நிறைவேறியிருக்கலாம் என்று இப்பொழுது தோன்றுகிறது.

அந்த கருத்துகளுக்காக நான் அவரை திட்டியதற்காகவும், அவரது கருத்தை மறுத்ததற்காவும் வருந்துகிறேன்.

மன்னிப்பு கோருகிறேன்.

நன்றி.

வா.மணிகண்டன்.

7 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

இலக்கிய வியாதி ஆகப்போறீங்க..பெரிய மனுசங்க எல்லாத்துகிட்டயும் நல்ல பேரு வாங்குங்க சாமி..வாழ்த்துக்கள்..

இப்ப ட்ரெண்ட் இதுதான்.

Anonymous said...

Don't worry mani take it easy

eethulam aaharasiyala sakkajam ppa


Raviraj
chennai

மதிபாலா said...

புரிஞ்சிக்கிடுற அளவுக்கு நமக்கு சக்தியில்லே தலை.

சென்ஷி said...

:)

குறவஞ்சி said...

முதலில் உங்களை கவிஞனாக நிலை நிறுத்த முயலுங்க்ள். சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு நொந்து போகிற உங்கள் துயரம் அரசியல் சார்பால் அமிழ்ந்து போக வேண்டாம்.காஷ்மீரில் மூன்றாவது தலை முறை, டில்லியில் ஐந்தாவது தலை முறை.ஞானி ஓ....அவர் ஆரியத் தலை முறை

Vaa.Manikandan said...

ரவிராஜ்,சென்ஷி, மதிபாலா வருகைக்கு நன்றி.

//இலக்கிய வியாதி ஆகப்போறீங்க..பெரிய மனுசங்க எல்லாத்துகிட்டயும் நல்ல பேரு வாங்குங்க சாமி..வாழ்த்துக்கள்..//

அன்பின் அனானி,

நீங்க‌ள் என் வ‌லைப்ப‌திவுக‌ளை வாசிப்ப‌துண்டா என்று தெரிய‌வில்லை. நான் ந‌ல்ல‌பேர் வாங்கும் அதே அளவுக்கு‌ நீங்க‌ள் சொல்லும் "பெரிய‌ ம‌னுச‌ங்க‌ளை" விம‌ர்சித்தும் எழுதியிருக்கிறேன். ஞாநியின் த‌ய‌வில் நான் எத‌ற்கு 'இல‌க்கிய‌வியாதி' ஆக‌ வேண்டும் என்றுதான் புரிய‌வில்லை.

அன்பின் கேவி,

இந்த‌ப்பதிவில், நான் க‌விஞ‌னாக‌ என்னை நிலை நிறுத்துவ‌த‌ற்கான் ஒரு கூறு காட்டமுடியுமா த‌ங்க‌ளால்?

Muthu said...

ஞானி எந்த அடிப்படையில் அப்படி ஒரு கருத்து சொன்னார் என்று தெரியாமல் ஒரு மன்னிப்பை வேஸ்ட் செய்ய தேவையில்லை மணி.

ஓய்வு பெற்றால் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக அவர் கர்ஜனை கொடுப்பார் என்று எப்படி நீங்கள் எதிர்பார்க்கலாம்? அப்போதும் ஸ்டாலின் தானே முதல்வராக இருப்பார்?