Nov 4, 2007

ஜெயலலிதா அம்மையாரின் தேசபக்தி வாழ்க!!

நாட்டில் ஊடுருவிக் கிடக்கும் தீவிரவாதம் குறித்தான தங்கள் கவலை என்னைப் போன்றவர்களை புல்லரிக்க செய்கிறது அம்மையாரே.

கலைஞருக்கு எவ்வளவு தெனாவெட்டு இருந்தால் ஒருவர் இறக்கும் போது இரங்கல் கவிதை வாசிப்பார்? அதுவும் ஈழத்தைச் சேர்ந்த ஒருவரின் இறப்புக்காக...

இது போன்று நடைபெறும் மாபெரும் தவறுகளைச் சுட்டிக்காட்டி தாங்கள், சுப்பிரமணிய சாமியார், சோ போன்ற‌ நாட்டுப்பற்றாளர்கள் குரல் கொடுப்பதால்தான் தமிழகத்தில் ஏதாவது மூலையில் தான் உண்டு தன் சோலியுண்டு இருக்கும் சுப்பன் கூட, ஈழம் பற்றி பேசுவதே தவறு என்று வாயைக் கட்டிக் கொண்டு அமைதியாக இருக்கிறான்.

சாமானியனுக்கு அடுத்த வீட்டுக்காரன் சாகும்போது வாயை மூடிக் கொள்ள வேண்டும் என்ற பயத்தை உண்டாக்குவது எனபது எவ்வளவு பெரிய திறமை? திறம்படச் செய்கிறீர்கள் பற்றாளர்களே.

தங்கள் சமூகத்திற்கு ஒரு விண்ணப்பம்: தங்களுக்கு பிறரின் போராட்ட முறையோ, அணுகுமுறையோ பிடிக்கவில்லை என்னும் போது எதிர்த்துப் பேசுங்கள், அறிக்கை வெளியிடுங்கள், போராட்டங்களை நடத்துங்கள். யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை.

ஆனால் போராளிக‌ள் யாருக்காக‌ போராடுகிறார்க‌ளோ அந்த‌ ம‌க்க‌ளைப் ப‌ற்றி நினைப்ப‌து கூட‌ த‌வறு என்றும், அதுவே தேச‌விரோத‌க் குற்ற‌ம் என்ப‌து போன்ற‌துமான‌ தோற்ற‌ங்க‌ளை த‌ய‌வு செய்து தமிழகத்தில் உருவாக்காதீர்க‌ள்.

ஏற்க‌ன‌வே இந்திய‌ ஊட‌க‌ங்க‌ளுக்கு ஈழ‌த்த‌மிழ‌ர் பிர‌ச்சினை ஏதோ பெயர் தெரியாத ஆப்பிரிக்க‌ நாட்டு பிரச்சினைக்குச் ச‌ம‌மான‌து. பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ ஊட‌க‌ங்க‌ளுக்கு, ஈழ விவகாரம் என்பது செய்திப்ப‌ற்றாக்குறை வ‌ரும் போது நிரப்புவதற்கு தேவைப்ப‌டும் ஒரு விவாகார‌ம் என்ற‌ நிலையில், உற‌வுக‌ளை இழ‌ந்துவிட்டு தீவில் க‌த‌றிக் கொண்டிருக்கும் த‌மிழ‌னையும், த‌ன் வேர்க‌ளை வெட்டுக் கொடுத்து உல‌கின் ஏதோ ஒரு மூலையில் உயிர் வளர்க்கும் ச‌கோத‌ரர்க‌ளையும் அந்நிய‌ப்ப‌டுத்தும் போக்கினை கைவிடுங்க‌ள்.

இந்திய‌ அர‌சோ, ஊட‌க‌மோ தீவுத்த‌மிழ‌னுக்கு ஒரு உத‌வியும் செய்யாத‌ போதும், த‌மிழ‌க‌த்தை தாண்டிய‌ மாநில‌ங்க‌ளில் இது ஒரு ஊறுகாய் விவ‌கார‌மாக‌ இருந்த‌ போதும், குறைந்த‌ ப‌ட்ச‌ம் த‌மிழ்நாட்டிலாவ‌து சில‌ர் குர‌ல் கொடுத்துக் கொண்டிருக்க‌ட்டும். அவ‌ர்க‌ளால் எதுவுமே இய‌லாத‌ போது சில சொட்டுக்கள் க‌ண்ணீரையாவ‌து சிந்த‌ட்டும்.

அவனையும் மிர‌ட்டி த‌ன‌க்குள்ளாகவே த‌ன் துக்க‌ங்க‌ளை புதைத்துக் கொள்பவனாக‌ மாற்றாதீர்க‌ள். நீங்க‌ள் அர‌சிய‌ல் செய்வ‌த‌ற்கு எத்த‌னையோ விஷ‌ய‌ங்க‌ள் ம‌லிந்து கிட‌க்கின்ற‌ன‌. த‌மிழ‌க‌த்தில் வாக்குரிமை இல்லாத‌ இன்னொரு த‌மிழ‌னின் உயிரை வைத்து அரசிய‌லாக்காதீர்க‌ள்.

இந்த‌ விவ‌கார‌த்தில் 'க‌ன்ன‌ட‌த்து பாப்பாத்தி' என்று த‌ங்க‌ளை நிரூபிக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை அம்மையாரே.

6 எதிர் சப்தங்கள்:

கோவி.கண்ணன் said...

VaaMa,

அடுத்தமுறை ஆட்சிக்கு (வரக்கூடாது) வந்தால் அம்மா பொடாவுக்கு புடம் போட்டு இதையே காரணம் வச்சு கலைஞர் புடிச்சு போடமுடியுமான்னு பார்க்கும்.

புலி ஆதரவாளர் திருவாலர் வைக்கோவை கூட்டணியில் வைத்துக் கொண்டு இந்த அம்மா விடுக்கும் ஸ்டேட்மெண்ட் கேட்டுவிட்டு சிரிச்சுட்டு போய்டனும்.

:)

ஜோ/Joe said...

அதோடு சில நேரங்களில் நடுநிலை என்ற பெயரில் கலைஞரையும் ஜெயலலிதாவையும் ஒரே தட்டில் வைத்து உளறும் சில ஈழத்து நண்பர்கள் உணர்ந்த்து கொள்வது நல்லது.

Anonymous said...

ஜெயாவை நினைச்சால் புல் அரிக்குது ஏன் என்று கேட்கப்படாது.

Vaa.Manikandan said...

நன்றி கோவியார்!

ஜோ எந்த அப்பாவி அப்படி சொன்னது? உட்கார வெச்சு அறிவுரை சொல்லுங்க... :)

ஏன் அனானி? ;)

Anonymous said...

ithey aiadmk katchi thaan pala varudangalukku munnaaal oru brammaandamaanaa vila yeaduththu (public meeting)puratchi thalaivar mgr rs .1 cror, thalaivar prabakaranukku koduththaaru and ithe tamilnadu thaan (with indian goverment) pulikalukku aayutha payirchi yellaam koduththaanga...but ippo.... enna mo pooonga

Anonymous said...

ஜோ!!
"அதோடு சில நேரங்களில் நடுநிலை என்ற பெயரில் கலைஞரையும் ஜெயலலிதாவையும் ஒரே தட்டில் வைத்து உளறும் சில ஈழத்து நண்பர்கள் உணர்ந்த்து கொள்வது நல்லது"


100% உண்மைதான். நம்ம ஊரில சில வேடிக்கை மனிதர்கள் வாழ்கின்றார்கள்!!!

ஒரு ஈழத் தமிழன்