Apr 17, 2007

வெர்ஜீனியா: லோகநாதன்.

எங்கள் ஊரான கரட்டடிபாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் என்ற பேராசிரியர் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்திருக்கிறார். எங்கள் ஊரைச் சேர்ந்த நண்பர்களும், என் தம்பியும் அழைத்துச் சொன்ன போது, இழப்பு பெரிதாகத் தெரியவில்லை. அந்த நிகழ்வின் மீது ஒரு இளக்காரமான பார்வை கூட இருந்தது. மற்றுமொரு சாவு என்ற ரீதியில்.

முழுமையாகச் செய்தியை உணரும் போது அதன் வெப்பம் புரிகிறது. தொடர்ச்சியாக அந்த வீட்டின் நிலை குறித்து பலரும் தொலைபேசியில் விவரிக்கும் போது, கோரத்தை அணுவணுவாக உள்ளேற்றிக் கொள்ள முடிகிறது.

எங்கள் ஊருக்குத் துரும்பையும் எடுத்துப் போட்டாரா என எனக்குள் எழுந்த கேவலமான, வலுவற்ற வினா ஒளிந்து கொள்ளத் துவங்குகிறது. அடிப்படையான மனிதாபிமானம் தாண்டி, சமூகத்தின் வக்கிரப்புத்தி நடுக்கம் கொள்ளச் செய்கிறது.

இதே விதமான மோசமான மன அழுத்தமும், அதன் விளைவாக நிகழ்ந்தேறும் கொடூரமான காட்சிகளுக்குமான காரணங்கள் எங்கேயிருக்கின்றன? மனித மனம் ரத்தம் பார்க்க அத்தனை விருப்பு கொண்ட வஸ்துவா?

லோகநாதன் அவர்களைப் பார்த்ததில்லை. அவருடைய தந்தையாரைப் பார்த்திருக்கிறேன். அவரது தந்தையாரின் முகம், எனக்குள் துன்பத்தைக் கூட்டுகிறது.

மனிதனாகவோ, தமிழனாகவோ, இந்தியனாகவோ அல்லது ஒரே கிராமத்தைச் சார்ந்தவனாகவோ துககத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன். உடனடியாக தாக்கத்தை உணர்ந்து கொள்ளாத குற்றவுணர்வுடன்.

8 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

ஈழமக்கள் துன்பங்களை தினமும் பல வடிவங்களில் பார்ப்பவர்கள். எனினும் இது மிகக் கொடுமையான துன்பம். அவருடைய உறவுகளுக்கு ஈடு செய்யமுடியாதது.

ஈழ மக்கள்

யாழினி அத்தன் said...

Here is the only and one everlasting solution.

"அன்பு" - love

Yourself
Neighbours
Enemies
Fellow Beings
Nature
and All.

Let nobody be neglected or ignored.
The world will look differently in our eyes after that. Teach this to our kids.

எவ்வுயிரும் தம்முயிர் போல் நினைப்பதுவே அல்லாமல் வேரொன்றறியேன் பராபரமே!!

- இராமலிங்க அடிகளார்

Vaa.Manikandan said...

யாழினி என்ன சொல்ல வருகிறீர்கள் என்று யூகம் செய்து கொள்ள முடிகிறது. நான் குறிப்பிட்டது போல இந்த மரணத்தை மற்றுமொரு மரணமாகத்தான் முதலில் எடுத்தேன்.

ஆனால் தொடர்ந்து அந்த மனநிலையில் பயணிக்க முடியவில்லை. ஏதோ ஒரு தொடர்ச்சி இருக்குமல்லவா? நான் பயின்ற அதே பள்ளி, அதே பஸ் நிறுத்தம், அதே பாதை.

என்னைப்போலவே கனவுகளோடு, சில வருடங்கள் முன்னதாகக் கிளம்பிப்போனவன். காரணமில்லாமல் சாவது என்பது சற்றேனும் உரசக் கூடியதாக இருக்கிறது. அதைத்தான் பதிவு செய்திருக்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மனதில் பட்டதைச் பட்டெனச் சொல்லியுள்ளீர்கள் மணிகண்டன்.
முதலில் வந்த சிந்தனையை,
பின்னர் வந்த சிந்தனை தள்ளிக் கொண்டு போனது நல்ல விடயமே!

/அவரது தந்தையாரின் முகம், எனக்குள் துன்பத்தைக் கூட்டுகிறது.
//

பேராசிரியர் லோகா அவர்களுக்கு இது போன்ற நேரத்தில் அளிக்கப்படும் அஞ்சலிகளும் ஆறுதல்களும், அவரின் அடுத்த தலைமுறையை யோசிக்க வைக்கும்.
நீங்கள் அவர் தந்தையைப் பற்றிக் கவலைப்பட்டது போலவே!

யாழினி சொன்னது நெகிழ்வாய் இருந்தது!

Anonymous said...

எந்த மரணத்திற்காகவும் இரங்கும் மனது ஒன்றை, அநியாயக் கொலைகளுக்காய் கோபப்படும் மனது ஒன்றை வேண்டி நிற்போம்!

Anonymous said...

Professor Loganathan may not have contributed significantly either to his native village / Tamil Nadu / India or to Tamil language / Tamil Sangams. However as a fellow Tamil / Indian, I feel proud of his accomplishments as a researcher and teacher. Please see his web site: http://www.cee.vt.edu/index.php?module=6&item=1&id=1&do=view&pid=f7693c5368cc20b5efedc914dc5030e1
I too wonder why such accomplished indians / Tamils usually shy away from making significant contributions towards common causes. It is also possible that they are contributing very discretely. When one is very much commited to giving his / her resources (time, money, ideas)for social causes, it is natural to feel disappointed over the silence of others especially if they hail from a remote village and make it well in USA. However, humaness and grief overrides all this and our deep sympathy goes to the families of all the victims. Hopefully this tragic episode teaches some lessons to motivate the politicians to implement meaningful gun control laws. Also, the college campuses must put in place better security measures to respond adequately and immediately to prevent any such incidents from occuring in the future.

- Thamizhan

பொன்ஸ்~~Poorna said...

கரட்டடிப் பாளயம் என்று படித்த உடனேயே நீங்கள் ஏதும் எழுதுவீர்கள் என்று நினைத்திருந்தேன்..

//எங்கள் ஊருக்குத் துரும்பையும் எடுத்துப் போட்டாரா என//
இந்தக் கேள்வியும் எனக்குள் எழுந்தது. ஆனால், நம்மில் ஒருவர் என்ற முறையில் இது போன்ற கேள்விகளை ஒதுக்கிவிட்டு வருத்தப்பட முடிகிறது - பேராசிரியர் லோகாவுக்கும், இறந்து போன முப்பத்தி மூன்று இளைஞர்களுக்கும், அவர்களுடன் மரித்துப் போன அவர்களின் கனவுகளுக்கும்...

அருண் said...

I can look at it only from a neutral angle....
Guns are a throw away in US...anybody can get it if they have a green card....
stop it at that stage...and solve this issue!