Dec 27, 2006

ஆபாசமென்று நீங்கள் முடிவு செய்யலாம்.

இக்கவிதையை நீங்கள் படித்துவிட்டு ஆபாசமான கவிதை என்ற முடிவுக்கு நீங்கள் வ‌ரக்கூடும்.

நெரிசலில்
திருடக் கொடுத்த
முலைகளைத்
தேடியலைகிறாள். பச்சைச் சுடிதார்க் காரி.

பிருஷ்டத்தைத்
தடவிய விரல்களும்
கிள்ளிய விரல்களும்
ஒன்றா என பிதற்றித் திரிகிறாள். சிவப்புப் புடவைக் காரி.

விலகும்/விலக்கிய மாராப்பின்
காற்றசைவில் முளைத்துக் குதிக்கிறது
காமச் சாத்தான்.

சுரப்பின்
காலச்சுருதியில் நீர்க்கிறது. காமம்.

தலைப்பை ஆமோதிப்பவ‌ர்களுக்கு: நான் ஒன்றும் செய்வதற்கில்லை.

5 எதிர் சப்தங்கள்:

cherankrish said...

//சுரப்பின்
காலச்சுருதியில் நீர்க்கிறது. காமம்.//

புரியவில்லை கொஞ்சம் விளக்க ஏலுமா?

Sridhar Narayanan said...

நல்ல அருமையான கவிதை.

சில நாள் முன்னர் ஒரு கலாச்சாரம் பற்றிய விவாத்தின் பொழுது நான் எண்ணிப் பார்த்த சில விஷயங்களில் இந்த female molestation ஒன்று.

இந்த கவிதையை எழுதியது தாங்களா? எனது பாராட்டுக்களும் நன்றிகளும்!

Balamurali said...

ஆபாசமாக இல்லை.
அவமானமாக இருக்கிறது
இப்படி எல்லாம் கவிதை எழுதும் நிலை(க்கு சமூகம்) வந்து விட்டதே என்று...

Nagai.S.Balamurali.chennai.

ப்ரியன் said...

நல்ல கவிதை மணி.

மஞ்சூர் ராசா said...

பிருஷ்டத்தைத்
தடவிய விரல்களும்
கிள்ளிய விரல்களும்
ஒன்றா என பிதற்றித் திரிகிறாள். சிவப்புப் புடவைக் காரி.

//பிதற்றித் திரிகிறாள். சிவப்புப் புடவைக் காரி.//

இந்த வரியின் அர்த்தம் சரியா?