Aug 27, 2006

ஏங்க..இங்க கொஞ்சம் வந்துட்டு போறீங்களா?

ஏங்க..இங்க கொஞ்சம் வந்துட்டு போறீங்களா?

இல்லாமல் இருக்கும் ஆண்டவா! இந்தப் பதிவு அரசியல் கூட்ட நன்றியுரை போல் மாறாமல் இருக்க அருள்புரிவாய் தோழா!!!

வள்ளுவர் சொன்னார், எனச் சொல்லி

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு


எனக் குறளை எழுதினால், இவன் என்னடா "ரொம்ப பேசுறான்" என நினைப்பதற்கு வாய்ப்பு அதிகம். எனவே நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன். எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

குத்துமதிப்பாக எல்லோருக்கும் சொன்னால் நன்றாக இருக்காது. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சொன்னாலும் ஆகாது. பின்னர் யாருக்குத் தான் நன்றி சொல்வது என்று குறிப்பாகத் தெரியவில்லை.

************************
தமிழ்மணத்தில் இருந்து அறிவிப்பு வந்தவுடனே நிறைய "குஜால்" பதிவுகளைப் போடவேண்டும் என முடிவு செய்தேன். சிலவற்றைத் தயார் செய்தும் வைத்தேன். முன்னோட்டமாக நடிகைகள் படத்தைப் போட்டதற்கு நான் மதிக்கும் சிலரிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. எனக்கென இருக்கும் பாதை இதுவல்ல என முடிவு செய்து கொண்டேன்.

எனக்கு பொறுப்பு வந்து விட்டதா? (மறுபடியும்.....அடக் கடவுளே!)
**************************
எனது பதிவுகளை கவனித்து "நட்சத்திரமாக"த் தேர்ந்தெடுத்த மதி கந்தசாமி மற்றும் அவரின் குழுவிற்கும், தமிழ்மணத்திற்கும் நன்றிகள்.
************************

ஏன் என்று தெரியவில்லை வெள்ளிக்கிழமை காலையிலிருந்து ஒரு சோம்பல் வந்துவிட்டது. பின்னூட்டம் எண்ணிக்கை குறைந்ததால் இருக்கலாமா?(போச்சுடா மணி...நீயும் அலையுற குழு மெம்பரா? .சரி உன் ரேஞ்ச்சுக்கு எல்லாம் மனசுல இப்படி எல்லாம் ஆசை இருக்கத்தான் செய்யும். இது நல்லதுக்கு இல்லை. சீக்கிரம்் மாறிடு). இப்போதைக்கு வேண்டுமானால் இப்படி மேல்பூச்சு பூசலாம். "முதல் நான்கு நாட்களில் சொல்ல வேண்டியவற்றை சொல்லி விட்டேன்". (பிளீஸ் நம்பிடுங்க!!!)
*************************

நான் எழுதிய பதிவுகளில் கவிதை பற்றிய பதிவு மட்டும் கூடுதல் உற்சாகம் அளிப்பதாக இருந்தது. யாருக்காக எழுதுகிறேன் என்றார்கள்? யாருக்காகவும் இல்லை. எனக்கே எனக்காக. அப்புறம் எதற்கு வலைப்பதிவு? "டைரியில் எழுது" என்றார்கள். என் டைரி பொதுச் சொத்து யார் வேண்டுமானாலும் படிக்கலாம். (மணி....அடி பின்னுறடா...என்ன பண்ண? நானே சொல்லிக்க வேண்டியதுதான்)
************************

பின்னூட்டமிட்டும், மின்னஞ்சலிட்டும் ஊக்கமளித்த நண்பர்களுக்கும் நன்றிகள். சவூதியிலிருந்து மெனக்கெட்டு என்னை அலைபேசியில் அழைத்து பாராட்டுக்களும், கருத்துக்களும் சொன்ன நண்பர் முபாரக் அவர்களுக்கும் நன்றி.

பின்னூட்டம் அளவுக்கு மீறி வந்தால் இவனுக்கு தலைக்கனம் வந்துவிடலாம் என்று கருதியோ, இதுக்கு/இவனுக்கு எல்லாம் மெனக்கெட்டு எவன் பின்னூட்டமிடுவான் என நினைத்தோ 'எஸ்கேப்' ஆன நண்பர்களுக்கும் நன்றி. (ஆமாங்க! என்னை எல்லாம் கையிலேயே பிடிக்க முடியாது). சில பேர் அவர்களை டாஸ்டோயோவ்ஸ்கி ரேஞ்சில் நினைத்து பண்ணும் அலம்பல் பார்த்து சிரித்தாலும் நான் எங்கேயாவது பண்ணித் தொலைத்துவிடுவேனோ என்ற பயம் ஆட்டிப் படைக்கிறது.

ஒரு சீன் போட்டுக்கட்டுமா?:
டாஸ்டாயோவ்ஸ்கியின் முதல் நாவல் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை பெற்ற போது, 1846-பிப்ரவரி முதல் தேதியில் தனது சகோதரனுக்கு முதிர்ச்சியற்று எழுதினாராம். "எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது என". (ஹலோ....ஸ்டாப்...ஸ்டாப்)

இது ஒரு சும்மா உதாரணம்தான். நான் கூட அப்படி அட்டகாசம் பண்ணக் கூடும் இல்லையா?.நானும் முதிர்ச்சியற்ற சின்னப் பையன்தானே.

கூடிய விரைவில் என் தலை வழுக்கை ஆகிவிடலாம். அதற்குள் எத்தனை முறை உபயோகப் படுத்த இயலுமோ அத்தனை முறை "சின்னப் பையன்" என்பதனை உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும்.
***************************

அவன் மலைமீது அமர்ந்திருந்தான்
ஒரேயொரு கணம்
அவன் தோளுக்கு வலிக்காமல்
ஒரு பறவையின் நிழல்
சற்றே
அமர்ந்து கடந்து விட்டது.


இந்த ராணிதிலக் கவிதை போல் இந்த வாரம் "வந்து- சென்று"விட்டது. பெரிதாக எந்த பாதிப்போ அல்லது அதிர்வோ இன்றி. அதுதான் நானும் எதிர்பார்த்தது. சமுதாயக் கழிவுகளை என் பேனா முனையில்(சாரி..கீ போர்டு தட்டலில்) எரித்து விடுவா முடியும்?
***************************

இனிமேல் எப்பவுமே முதல் பக்கத்தில் இருக்க முடியாது.(அந்த போட்டோவை கொஞ்சம் பாருங்களேன்! ச்சும்மா 'போஸ்' எல்லாம் கொடுத்து எடுத்தேன் தெரியுமா?) ஒரு கட்டுரை போட்டால் அரை மணி நேரத்தில் ஓடிவிடும். அப்புறம் பின்னூட்டத்தை பதிவிட்டு இங்கு வந்து பார்க்க வேண்டும். அது தான் கொஞ்சம் 'பீலிங்ஸூ'. பின்னூட்டப் பக்கத்திலும் காணாமல் போனால் அடுத்த பதிவுக்கு மேட்டர் தயாரிக்க வேண்டும். (நல்ல பொழப்பு டா!!!)
**************************

இங்கு, அலுவலகத்தில் பிளாக்கர் திங்கட்கிழமை தொந்தரவு செய்ய ஆரம்பித்தது. கதை முடிந்தது என முடிவு செய்து கொண்டேன். நல்ல வேளையாக முத்து(தமிழினி) அவர்களும், பொன்ஸ்ம் பதிவுகளை வெளியிடுவதில் உதவியாக இருந்தனர். நன்றி.

ஸ்வீடனிலிருந்து பின்னூட்டங்களை மட்டுறுத்த உதவிய சகோதரி லீலாவிற்கும் நன்றிகள். நண்பர் ஜெய்கணேஷ், குப்புசாமி செல்லமுத்து, ராய் ஆண்டனிக்கும் நன்றிகள்.

பாலமாக இருந்த ஜிமெயிலுக்கும் கூட.
*************************

இவ்வளவு சொல்லியாச்சு...நடிகைகள் கிட்ட சுதந்திர தினச் செய்தியாக மக்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்கன்னு கேட்பாங்க இல்ல?
அந்த மாதிரி ஒண்ணே ஒண்ணு. நான் எந்தக் கட்டுரை கவிதை எழுதினாலும் அடிச்சு பிரிச்சு மேய வேண்டும் என எதிர்பார்க்கிறேன். விமர்சனம்-படைப்பவனை கூராக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. விமர்சனத்தைத் தாங்கிக் கொள்ளும் பக்குவமே படைப்பாளியின் பலம். எனவே விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன். (ஓவரான பேச்சா? அப்படியே இருந்தாலும் போர்வையை போர்த்தி அடிக்காதீங்க அப்பு!!!). அப்படியே நல்லா இருக்குதுன்னும் சும்மாவாச்சும் சொல்லணும்(மீசை+கூழு). இல்லைன்னா மனசு ஒடிஞ்சு போயிடும்ல புள்ள....

*****************************

சில விஷயங்களை ஜனரஞ்சகமாக எழுதவேண்டும், சில விஷயங்களை கோபமாக எழுத வேண்டும். இரண்டுமே முயன்று பார்த்தேன். இன்னும் சரியாகத் தெரியவில்லை. எழுத்தின் பிடி என் கரங்களுக்குள் வந்திருக்கிறதா என. அது சரி. தேடல்தானே வாழ்க்கை. முடிவு செய்து விட்டால் முடிந்து விட வேண்டியதுதான்.

இவ்வளவுதான் இன்றைய தினத்தில் என் திறமை. நன்றாக இருந்திருந்தாலும், இல்லையென்றாலும் அவ்வளவுதான் என்னால் முடிந்தது. நட்சத்திர வாரம் முடித்தும் முடங்காமல் தொடர வேண்டும் என எண்ணுகிறேன். நன்றி.

**********************

(டிஸ்கி இல்லையென்றால் என்னுடைய பதிவே இல்லை எனக் கங்கணம் கட்டிச் சொல்பவர்களுக்காக
டிஸ்கி: ஒன்றரை வருடமாக என்னை ஆபாசமாகவோ அல்லது பெருங்கோபம் கொண்டு திட்டியோ ஒரு பின்னூட்டம் கூட இடாமலும் மற்றும் என் பெயரில் போலியாக உலா வராத மவராசன்களுக்கும் நன்றி. ஆனால் போலி என்ற மேட்டர் நல்ல விளம்பர யுக்தி. அப்படித்தானே!!!)

அன்புடன்
வா.மணிகண்டன்

15 எதிர் சப்தங்கள்:

G.Ragavan said...

:-)

சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்த கல்வி மனப்பழக்கம்
எல்லாம் உங்களுக்குக் கிட்ட வாழ்த்துகள்.

இனியும் தொடர்ந்து பதிவுகள் போடவும். வழக்கமாக எல்லாரும் ஒரு வாரம் பத்து நாள் லீவு எடுப்பாங்க. நீங்க எப்படி?

குழலி / Kuzhali said...

யோவ் மணி கலக்கிப்புட்ட அப்பு, நல்ல நட்சத்திர வாரம்....

நன்றி

Badri Seshadri said...

இந்த வார நட்சத்திரப் பதிவுகள் அனைத்துமே நன்றாக இருந்தன.

கோவி.கண்ணன் [GK] said...

//சில விஷயங்களை ஜனரஞ்சகமாக எழுதவேண்டும், சில விஷயங்களை கோபமாக எழுத வேண்டும். இரண்டுமே முயன்று பார்த்தேன்.//

மணி ...!
நீங்கள் சொல்வது சரிதான். மேலும் சில விசயங்களை நகைச்சுவையாக எழுத வேண்டும்.

நட்சத்திரமாக கண்சிமிட்டாமல் ஜொலித்திருக்கிறீர்கள் !

வாழ்த்துக்கள் !!!

மஞ்சூர் ராசா said...

முடிந்தவரை முயற்சி செய்து உங்கள் நட்சத்திரவாரத்தை வெற்றியடைய செய்திருக்கிறீர்கள்.

இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாமோ என ஒரு தோணல்.

அடுத்த முறை அதை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை.

பாராட்டுக்கள்.

முபாரக் said...

என்ன மணி, இதுக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட்டா எப்படி?

ஏதோ நம்ம ஜாதியா இருக்கீங்களேன்னு போன் பண்ணேன் (நம்ம ஜாதின்னா இலக்கிய ஜாதிப்பா :)

மகராசனா நல்லாருய்யா :)

ILA (a) இளா said...

இந்த ஒரு வாரமும் நல்ல கலக்கலா எழுதினீங்க மணி. ஒரு வித்தியாசமான் பரிமாணம் என்று கூட சொல்லலாம். //அவன் தோளுக்கு வலிக்காமல் ஒரு பறவையின் நிழல்//

ரொம்ப பிடித்த வரிகள் ;)

நிறைய எழுதுங்க. வாசகர்கள் நிறைய இருக்காங்க.

Anonymous said...

இலக்கிய ஜாதிக்கு reservation இருக்கா? இருந்தால் எதிர்த்து ஒரு பதிவு போட வேண்டும்.

போலி ரவி

Sivabalan said...

நட்சத்திர பதிவுகளுக்கு மிக்க நன்றி.

Machi said...

/நானும் முதிர்ச்சியற்ற சின்னப் பையன்தானே.
/
நீங்க பிஞ்சுலயே பழுத்த ஆளூன்னு பேசிக்கிறாங்க. :-))

நட்சத்திர வாரம் அருமை.
கோ.க சொன்ன மாதிரி நகைச்சுவை பதிவு போடுங்க.

Anonymous said...

யார் க்கேட்து வெங்காய சாம்பார்? எடுத்துகப்ப.... வாளி வாளியா....

வந்துவிட்டது... சாம்பார்..

வ்டி? - இலவச இணிப்பு... ஹி.. ஹி...

Anonymous said...

நட்சத்திரங்கள் எப்பொழுதும் எனக்கு வியப்பை ஏற்படுத்துபவை. வியப்பை ஏற்படுதுவதால்தான் அவை நட்சத்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றனவோ என்னவோ? நட்சத்திரப் பதிவுகளில் உங்களுடையது விடிவெள்ளி நட்சத்திரப் பதிவு. இணையவானில் உங்களை மீண்டும் மீண்டும் காண விழைகிறேன். நன்றி.

ஜகன்

கப்பி | Kappi said...

கலக்கல் மணிகண்டன்...அருமையான நட்சத்திர வாரம்..வாழ்த்துக்கள்

Vaa.Manikandan said...

நன்றி ராகவன்.

அப்படி ஓய்வெடுக்கவெல்லாம் எண்ணமில்லை. "வாருங்கள். நாம் மயிரைச் சாப்பிடுவோம்" என்று கட்டுரை எழுத எண்ணம். ;) அநேகமாக இந்த வாரத்தில் எழுதி முடித்து விட முடியும் என நம்புகிறேன். சிலரைத் திட்ட வேண்டி இருப்பதனால் அவர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டி இருக்கிறது.

குழலி அண்ணாச்சிக்கும், பத்ரி அவர்களுக்கும் நன்றிகள்.

நன்றி எண்ணம் எனது, இளா மற்றும் சிவபாலன்.

கோவி.கண்ணன் தங்களின் கருத்துக்கு நன்றி. நகைச்சுவைத் தானாக வந்தால் நன்றாக இருக்கும். நாமாக இழுத்தால் சொதப்பிவிடும் அபாயம் இருப்பதால் சற்று அடங்கி இருக்க வேண்டியதாக இருக்கிறது :)

கூழ்+மீசை பார்முலாவை கொடுத்த மஞ்சூர் ராஜாவுக்கும் தேங்ஸ்!

யப்போவ்! முபாரக் அய்யா...ஏதோ எங்க ஆயா சொல்லுற மாதிரி இருக்கு. உங்களை எள வயசுன்னுல நெனச்சேன்!

போலி ரவியா? ;)

குறும்பன்,
பேசிக்குறாங்களா? யாருங்க? அவுங்க தெரியாமச் சொல்லுவாங்க! நீங்க சொல்லுங்க...என்னையப் பார்த்தா அப்படியா தெரியுது?

இட்லிவடை தெரியும்? இது யாரு....வடை சாம்பார்? சரி...சரி...நல்லா இருங்க!

ஜகன், லாப்டாப் நன்றி.

Omni said...

Hello from the USA!! :-)