Jun 22, 2006

ஏஞ்சலினா ஜோலி

மிக பிடித்த நடிகை யார் எனக் கேட்டால், ஏஞ்சலினா ஜோலி என்று நா கூசாமல் சொல்வேன். அவர் நல்ல நடிகையா என்றெல்லாம் தெரியாது. ஆனால் நல்ல அழகி. (கர்சீப் இருந்தா துடைசுக்க தம்பீ!)
Photobucket - Video and Image Hosting
இப்பொழுது எல்லாம் அறையில் HBO,AXN சேனல் மட்டும்தான்(கண்ணில் காட்டிய ரூம்மேட் வாழ்க!). மற்றவர்கள் ஆங்கிலப் படப் பிரியன் எனத் தப்பாக நினைத்தாலும் என் தலைவியை கண்ணில் காட்டிவிட மாட்டார்களா என்ற நப்பாசைதான்.

எங்கம்மா பொண்ணு பார்க்கட்டுமா என்று கேட்டால் ஏஞ்சலினா ஜோலியைப் பாருங்கள் என்று சொல்லி அடிவாங்கத் திட்டமிட்டுருக்கிறேன்.

Photobucket - Video and Image Hosting

மாதர் குல மாணிக்கத்துக்கு கலைச் சேவை செய்யவே இந்தப் பதிவு.

படத்தைப் போட ஒரு பதிவா? இதுக்கு ஒரு மேட்டரா? என்றெல்லாம் குண்டக்க மண்டக்க கேட்கக் கூடாது. தெரியும்..தெரியும் அதுக்குன்னே ஒரு குரூப் சுத்றாய்ங்கைய்யா! :) )

அம்மையார் பிறந்தது: 1975, ஜூலை (இது General Knowledge வினா)

பெயரின் பொருள், அழகான குட்டி தேவதை. (அட! சரியாத்தானே வெச்சிருக்காங்க!) அதெல்லாம் விடுங்க.
அவரது முன்னாள் கணவர்களின் பெயர்கள்: லீ மில்லர், மார்செலீன் பெர்ட்ராண்ட்.

சரி...படிச்சது போதும். படம் பாருங்க! இதுக்கு மேல personal பத்தி சொல்லக் கூடாதுன்னு மேலிட உத்தரவு.
Photobucket - Video and Image Hosting

எரியுற நேரத்துல எவ்வளோ கூலான மேட்டர்! ;)

யாருப்பா அங்க? "பேசலாம்"ல கவிதை- அதுவும் நவீன கவிதை மட்டும்தான்னு புரளி கிளப்பிய மவராசன்/மவராசி???? நாமும் இளரத்தமுல்ல? எல்லாம் பேசுவோம்லே......ஆங்ங்ங்ங்!!!!!

Photobucket - Video and Image Hosting

கோபப்படுபவர்கள் சின்னப் பையன் பேசிட்டுப் போகட்டும்னு மன்னிச்சு விடுங்க!!!

22 எதிர் சப்தங்கள்:

ஜொள்ளுப்பாண்டி said...

வாவ் வாவ் ( நாய் குரைப்பு அல்ல! உற்சாக அலறல் )

அண்ணே நீங்களும் நம்ம தலைவி ஃபேன் தானா ?? ஆஹா என்ன ஒரு உதடு என்ன ஒரு அழகு ! தலைவி ஏஞ்சலீனா சிரிச்சா போதும் ஒரு மாசத்துக்கு சோறு தண்ணியே வேணாமே ! :))) வாழ்க நின் கலைப்பணி !! :)))

பொன்ஸ்~~Poorna said...

//மாதர் குல மாணிக்கத்துக்கு கலைச் சேவை செய்யவே இந்தப் பதிவு.//
யூ டூ மணி?!!!!

Pot"tea" kadai said...

தரிசனம் கிடைத்ததய்யா...
அஞ்சலையம்மனின் தரிசனம் காணக் கிடைக்கச் செய்த வகையில் மணிகண்டனுக்கு கோடானு கோடி நன்றிகள்..:-))

//அவரது முன்னாள் கணவர்களின் பெயர்கள்: லீ மில்லர், மார்செலீன் பெர்ட்ராண்ட்.//

பிள்ளி பாப் தார்ண்டன்?

ஜொள்ளுப்பாண்டி said...

//பொன்ஸ் said...
//மாதர் குல மாணிக்கத்துக்கு கலைச் சேவை செய்யவே இந்தப் பதிவு.//
யூ டூ மணி?!!!!//

நோ மணி !!!பொன்ஸக்காவின் இப்படிப்பட்ட சீஸர்த்தனமான கேள்விகளுக்கெல்லாம் வருத்தப்படாதீங்கப்பூ!! நெஞ்சை நிமித்தி சொல்லுங்க ஜூலியப் பார்க்கறது தான் என் ஜோலின்னு !! :))))

ilavanji said...

பதிவுக்கு நன்றி!

// அம்மையார் பிறந்தது: 1975, ஜூலை //

அம்மணி என்னைவிட 8 வயசுதான் பெரியவங்க போல! ஹிஹி...

Anonymous said...

மணிகண்டா!!
இத, இத தான் எதிர்பாத்தேன்! சூப்பரப்பு!! அருமையான பதிவு :-)

வசந்தன்(Vasanthan) said...

ஐயா பொட்டிக்கடை,
அங்க கிட்மனின்ர கலியாணத்துக்கு சிட்னியே தடபுடலா நிக்குதாம். நீங்கள் இஞ்ச வந்து என்ன செய்யிறியள்?

Muthu said...

அட அட அட அட அட அட அட அட
தேவுடா தேவுடா

இந்த பக்கம் சூடுடா...

Muthu said...

illavanji,

உங்க ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு கவிதை

//பதிவுக்கு நன்றி!//

template..super



// அம்மையார் பிறந்தது: 1975, ஜூலை //

அம்மையார் என்னைவிட ஒருவருடம் மூத்தவங்க..(சரியாக)

manasu said...

//கர்சீப் இருந்தா துடைசுக்க தம்பீ!)//

எதுக்கு வேஸ்ட் பண்ணனும், அம்மனிக்கு கொடுத்தா ட்ரெஸ் தச்சுப்பாங்கள்ள!!!!

இதுவும் கவிதை தான், JPG கவித இல்லையா மணி??

வெண்பகாரர்கள் ஓரம்கட்டவும்!!!

http://akannabiran.blogspot.com/2006/06/blog-post.html

இதிலும் கவிதைதான்.

Karthik Jayanth said...

சார் மணிகண்டன் சார், இது என்ன சார் திடீர்ன்னு; இந்த அம்பாளுக்காகவே இங்க புதரகத்துல ரிஜிஸ்டர்டு தலமை கழகம் ஒண்ணு இருக்கு. சாமி பேர சொல்லி பீர்பந்தல் சாரி மோர்பந்தல் வச்சி பல காலமா நான் சேவை பண்ணிகிட்டு இருக்கும் போது தலமை கழகத்துக்கு சொல்லாம இப்படி கிளைகளை தொடங்குவது சரியா ?

Vaa.Manikandan said...

ஜொள்ஸ் அவுங்க எல்லாம் அப்படிதான் பேசுவாங்க...
ஜொள்ஸ் இருக்க பயமேன்னு தான் அந்தப் பதிவே போட்டேன்.

பொன்ஸ்,
ஜொ.பாவின் கூற்றுப் படியே நெஞ்சை நிமிர்த்தி உரக்கச் சொல்கிறேன்.
ஜோலியைப் பார்ப்பதுதான் என் ஜோலி.
ஜோலி மேட்டர் தான் எனக்கு ஜாலி மேட்டர்....ஜொ.பா பீட்டர் அதிகமாகுது...

இளவஞ்சிக்கு எப்பவுமே நகைச்சுவை அதிகம்...மக்கள் சொல்லி இருக்காங்க..உங்க பேர் ரகசியத்தை. :)
(சத்யராஜ் தேவலை.)

அடேயப்பா...கண்ணா....
நீங்களா அது? ஆனா வஞ்சப் புகழ்ச்சியோன்னு பயமா இருக்கு.

பொட்டீ, ஒரு படி மேலே போய்டீங்க...
வசந்தன் பாவம் அவரை ஏன் துரத்துறீங்க....அவர்தான் ஆஸ்திரேலியா ஜோலி ரசிகர் மன்ற நிர்வாகின்னு சொல்றாங்க.

முத்து நீங்க இல்லாமல் எப்படி சூடு கிளம்பும்னு பார்த்தேன். :)

Anonymous said...

அப்படின்னா நீங்க நிச்சயம் "ஒரிஜினல் ஸின்" படம் பார்த்திருப்பீங்க.

ரவி said...

ஏஞ்சலீனாவப்பத்தி பேச ஆரம்பிச்சா சோலி எல்லாம் மறந்திடும்...அதான் அங்க பேருக்கு பின்னாடி ஒரு சோலியப்போட்டு - போய் உங்க சோலியப்பாருங்கய்யா அப்படின்னு சொல்லுதா அவ

Chellamuthu Kuppusamy said...

அப்போ இளவங்சிய விட எனக்கு 15 வயசு தான் கம்மி.. :-)

Anonymous said...

மணிகண்டன்,

இதைப் பார்த்தீங்களான்னு தெரியலை. பார்க்காம இருந்தா, என்ஜாய்...

http://ja.metacafe.com/watch/90512/beautiful_angelina_jolie/

நன்றி
கமல்

இராம்/Raam said...

//அண்ணே நீங்களும் நம்ம தலைவி ஃபேன் தானா ?? ஆஹா என்ன ஒரு உதடு என்ன ஒரு அழகு ! தலைவி ஏஞ்சலீனா சிரிச்சா போதும் ஒரு மாசத்துக்கு சோறு தண்ணியே வேணாமே ! :))) வாழ்க நின் கலைப்பணி !! :))) //

என்னா அருமையான வரிகள்...அப்பாடி உங்கள விட பாண்டிதான் கரிக்கிட்டா ஜொள்ளிருக்கார்.... வாழ்க ஏஞ்சலீனா புகழ்... சங்கம் ஏதாச்சும் ஆரம்பிச்சிங்கனா என்னையும் சேர்த்துக்கப்பா....:)))))

இராம்/Raam said...

//யூ டூ மணி?!!!! //

வூ இஸ் த டிஸ்டர்ப்பன்ஸ்....

கப்பி | Kappi said...

மணி..

உங்கள் சேவை வலையுலகத்துக்குத் தேவை...

நீர் ஜோலி காட்டிய காளியப்பன்...

வாழ்க! வளர்க !! :)))

உங்கள் நண்பன்(சரா) said...

//மாதர் குல மாணிக்கத்துக்கு கலைச் சேவை செய்யவே இந்தப் பதிவு.//


நல்லா சேவை செய்யிங்க.. என்னோட ஆதரவு என்றைக்கும் ஆத்தா ஜோலிக்கு உண்டு...

போ.. போய் ஜோலியப் பாருங்கிராங்களோ!!! அது இது தானா...?


அன்புடன்...
சரவணன்.

Unknown said...

ஒரிஜினல் சின் பாத்தீங்களா?

Anonymous said...

enn sir ungalukku namma ooru ponnuinga azhagu kannilaye padaatha?. ada ponga sir, namma srideviya vidava azhagu?