Jun 14, 2006

ஜேர்மானிய தமிழனுக்கு(?) ஒரு மடல்.

வணக்கம்.

தங்களின் நலனுக்கு எந்தக் குறைச்சலும் இருக்காது என நம்புகிறேன்.

தங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று தங்களின் கவிதையைப் படித்தவுடன் தோன்றியது. தனியொரு பின்னூட்டமிட்டும் கூட,ஒரு பதிவு எழுத வேண்டும் எனத் தோன்றியது ஆனால் தங்களைப் பற்றி எனக்கு சரியான நினைவு இல்லை.

ஒரு சம்பவம் மட்டும் இருக்கிறது.

முன்பொருமுறை கொலை மிரட்டல் குறித்தான பதிவொன்றெழுதி, தன் முடிவு நெருங்கிவிட்டதாகவும், மனைவி மக்கள் எல்லாம் கதறுவது போலவும் ஒரு 'புரளி' கிளப்பியவர் என்று ஞாபகம். நீங்கள் பதிவு போடாமல் இருந்தால் குடியொன்றும் மூழ்கி விடப்போவதில்லை என நினைத்து பின்னூட்டம் போட மனம் வரவில்லை. அது பரபரப்புக்கான வெற்றுக் கூச்சல் என்றும் ஒரு பொறி என்னுள் இருந்தது. ஆனாலும் ஒரு வேளை அது உண்மையாக இருப்பின் அது தங்களை புண்படுத்தும்படி ஆகி விடக் கூடும் என்பதாலும் 'சும்மா' இருந்து விட்டேன். சரி நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும். உங்களை ஏன் 'பொய்யர்' ஆக்க வேண்டும்?. பின்னூட்டம் வாங்குவதனைக் காட்டிலும் தங்களின் பதிவுகள் வேறொன்றும் 'புரட்சி' செய்திடவில்லை என்பது எனக்குத் தெரியும். உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் கூட.

பாசிசம் குறித்தெல்லாம் பேசிய போது எல்லாம் தங்களின் 'அறிவு ஜீவி'ப் பிம்பம்தான் என்னுள் இருந்தது. நடுநிலைமையுடன் தாங்கள் சிந்திப்பதாகவும் நினைத்தேன். முதலில் நினைத்தேன். நாம் செய்யும் தவறுகளை நாமே எப்பொழுது ஒத்துக் கொண்டிருக்கிறோம். ஜெர்மனியில் இருக்கும் ஒரு தமிழன்(?) நேர்மையாகவும், நெஞ்சுரத்தோடும் சொல்லி வருகிறார் என. எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி வருகிறீர்கள். அது சரி! எனக்கு எல்லாம் தங்களைப் பற்றி என்ன பிம்பம் இருந்தால் என்ன வந்து விடப் போகிறது?

இதில் பெரிய காமெடியே நீங்கள் உபயோகப் படுத்தும் 'பாசிசம்' என்ற சொல்தான்.

ஈழம் என்பதெல்லாம் பெரிய விஷயம். இது குறித்து பேசவோ, எழுதவோ எனக்கு உங்களைப் போல 'விஷய ஞானம்' போதாது. எனவே எனக்கு எதற்கு இது எல்லாம் என்று மூ* க் கொண்டு இருக்கலாம். ஆனால் 'இளரத்தம்' அமைதியாக இருப்பதில்லை.

ஏழாம்தரமாகக் கூட உங்களை விமர்சிக்க முடியும். ஆனால் அது உங்களுக்கு 'உறைப்பதை'க் காட்டிலும் 'எரிச்சல்' உண்டாக்கி விடக் கூடும் என எழுதவில்லை. எனக்கு ஒன்றும் அறிவுஜீவி பிம்பம் குறித்தான கவலையில்லை. ஏழாம் தரமாக விமர்சிக்கவும் தயங்கப் போவதில்லை.

நீங்கள் மனித உரிமை பற்றியும், வன்முறைகள் பற்றியும் சரியான பார்வை கொண்டவராக இருப்பின், இரு தரப்பு குற்றங்களையும் முன் வையுங்கள். அவன்தான் விமர்சகன். ஒரு பக்கக் குறைகளை மட்டும் பட்டியலிட்டு அடுத்த பக்கக் குறைக்களின் மீது திரையிடுபவனுக்கு வேறு பெயர் இருக்கிறது.

எங்களுக்கு தெரியும் அளவிலான 'ராணுவக் கொடுமைகள்' கூட தங்களுக்கு தெரியாமல் போவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

முளைத்து மூன்று இலை கூட விடாத 'பொடிப் பையன்' நான். தமிழன் என்பதனைத் தவிர எனக்கும் ஈழ மக்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. எனக்கு இருக்கும் அக்கறை கூட மெத்த அறிந்த உம் போன்றவரிடம் இல்லையே என்பதுதான் என் வருத்தம் எல்லாம். உங்களுக்கு கோபம் வரலாம் அல்லது கோபம் வருவது மாதிரி நடிக்கலாம். 'எனக்கா அக்கறையில்லை?' என்று. அக்கறை இருக்குமெனில் அதை விட மகிழ்ச்சி இந்தக் கணத்தில் வேறொன்றுமில்லை எனக்கு.

நான் எல்லாம் 'வாய் சவடால்' தான். 'கருத்து சுதந்திரம்' எனக் கொண்டு தமிழனுக்கு ஆதரவாக பேசவும் எழுதவும் மட்டும்தான் முடியும். அது சரி. உங்களிடம் 'வாய்சவடால்' பற்றி பேசி என்ன வந்து விடப் போகிறது. நீங்களும் பாவம் என்னைப் போலதானே. ஆனால் வயது ஏறும் போது நான் மாறிவிட வாய்ப்பிருக்கிறது. அதுதான் உங்களைப் பார்த்து என்னை பரிதாபப் பட வைக்கிறது.

தாங்களோ அல்லது தாங்களைச் சார்ந்தவர்களோ வரிந்து கட்டிக் கொண்டு என்ன எழுதினாலும் எனக்குக் கவலையில்லை. எனக்கு வருத்தமெல்லாம் என் சகோதரன்,சகோதரி கொலையுறும் போது தட்டிக் கேட்பவன் மீது, எங்கோ மறைந்து கொண்டு ஏவி விடப்படும் விமர்சனங்கள் குறித்துதான்.

இந்தியா என் தாய்நாடு. அதற்கு எந்தப் பங்கம் வரவும் விரும்பமாட்டேன். அதே போல்தான் ஈழத்தமிழன் என் சகோதரன். அவனுக்குக் கொடுமை என்றால் பயந்து முக்காடு போட்டு போர்வைக்குள் சுருங்கவும் விருப்பமில்லை.

ஆள்காரன் குசு விட்டால் அடிடா புடிடா என்பதும் முதலாளி குசு விட்டால் மணக்கிறது மணக்கிறது என்பதான மனநிலையை தூர வைத்து விட்டு குரல் கொடுங்கள். தோள் கொடுக்கும் முதல் அணியில் நான் நிற்பேன்.

அன்புடன்...
வா.மணிகண்டன்.

22 எதிர் சப்தங்கள்:

Muthu said...

மிகவும் நியாயமான பதிவு.

ஈழபாரதி said...

தெளிந்த ஞானம் உண்மையை, உண்மையாக எழுத வேண்டும், விமர்சனங்கள் எங்கும் இருக்கும். உண்மையை பொய் எனக்கூறும்போது வரும் ஆத்திரம், அனைவருக்கும் பொதுவானது, ஆனால் இவர்கள் என்ன சொன்னாலும் திருந்தப்போவதில்லை.

"குலத்தை அழிக்கும் கோடரிக்காம்புகள்"

Anonymous said...

Well said Mani.
I also shocked when I read his "kavithai".
In the end of his "kavithai" we all know that who is fascist.

ரவி said...

சூடாகிட்டீங்க போலிருக்கு...

கூல் கூல்..

Anonymous said...

I was shocked when I read his Kavithai

Manikandan we really appreciate that Tamils like you understand our problems.

the way he written his Kavithai says it all. the writer was not even a human

Anonymous said...

மணிகண்டா!
உமக்குதான்!!இதைக் கூறும் அருகதை இருக்கிறது. நீங்கள் பக்கத்து நாட்டிலிருந்து பார்க்கிறீர்கள்."நடப்பதை";;;நாம் வாய் திறந்தால் முத்திரை குத்துவார்கள். ஆனாலும் பொறுக்கவில்லை.மிருகம் கூட இப்படி அல்ல!!!!!; அவர்கள் தொங்கியது;வீடல்ல! கொட்டில்;ஏழைகளின் கொட்டில்;;;;;;அவர்களை வாழவிடுங்கள். வெளிநாட்டில் வந்து தஞ்சம் கோரி, ஒய்யாரமாக வாழ முடியாத ஏழைகளை; வாழவிடுங்கள்!! இல்லையோ!!!! ஓரிரவில் குண்டைப் போட்டு முற்றாக அழித்து விடுங்கள். கொத்திக் குதறாதீர்கள்.
பவானி சிறீதரன்

இளங்கோ-டிசே said...

மணிகண்டன்,
இந்த விடயத்தைத் தவிர்த்து ஒரு விடயம்.... சார்பு சார்பின்மை என்பவற்றைத் தவிர்த்து ஈழத்தமிழருக்காய் அக்கறைக்கப்படும் ஒரு இளந்தலைமுறை-மீண்டும்- வெளிப்படையாக இந்தியாவிலிருந்து பேச ஆரம்பித்திருப்பது இதந்தருகின்றது. இவ்வாறு தம் மீது அக்கறைப்படவும், தாங்கள் பாதிக்கப்படும்போது தங்களுக்காய் தார்மீக ஆதரவு தர தமிழக நண்பர்கள் இருக்கின்றார்கள் என்பதையறிந்தால் தசாபதங்களாய் போரால் பாதிக்கப்பட்டு ஈழத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் மிகவும் ஆறுதலடையக்கூடும். நன்றி.

Vaa.Manikandan said...

Thanks for all.

In this system I am facing font problem. So that I am unable to give reply for all. Tomorrow I will give my comment for all.

One more thing,
Dear Thamilian,

For whom ur comment should go? for him know?if that is the case ok.

I thought u r talking about me.anyway I am from India not from germany. please clarify it. If u dont mind. Thanks

வெற்றி said...

மணிகண்டன்,
மிகவும் நல்ல பதிவு. நீங்கள் குறிப்பிடும் இந்த நபர் யார் என்பதை ஈழத்தமிழர்கள் பலர் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். அவருடைய எழுத்துக்களைப் பார்த்தாலே உங்களுக்குப் புரிந்திருக்குமே! உலக போராட்ட வரலாறுகளையோ, அல்லது யாதார்த்தமாக சிந்திக்கக் கூடிய அறிவாற்றலோ அல்லது திறமையோ இல்லாத வடிகட்டின முட்டாள்.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே தெரியாத முட்டாள் மற்றவர்களும் தன்னைப்போல் வடிகட்டின முட்டாளாக தன்மானமில்லாதவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் நகைப்புக்குரிய விடயம்.

காத்து said...

தமிழனாக நீங்கள் எழுதிய இந்த பதிவு அருமை....!

Anonymous said...

நன்றி மணிகண்டன்!
இந்த மாதிரியானவர்கள் நிறையப்பேர் இங்குள்ளனர். நான் ஈழத்தில் பலரைப் பார்த்திருக்கிறேன். வெட்கத்தைவிட்டுச் சொல்வதானால் இப்படியானவர்களுடன் கூட்டுச்சேர்ந்து திரிந்திருக்கிறேன். மற்றும் இவர்களைப்போல் புலிகளை குற்றம் சொல்வதற்கு எங்கோ கண்தெரியாத தேசத்தில் எழுதப்பட்ட, சற்றும் எமக்கு அறிமுகமில்லாத சொற்களை எல்லாம் உபயோகப்படுத்தியும் இருக்கிறேன். ஆனால் 1985 இல் இவர்கள் பற்றிய உண்மையை உணர்ந்தேன். அதை 1987- 1998 காலப்பகுதியில் இல் உறுதி செய்தேன்.

Anonymous said...

தனக்குக் கிடைத்ததைவிட அதிக அனுதாபம் இதில்கொலை செய்யப்பட்டவர்களுக்குக் கிடைத்ததுதான் பிரச்சினை.
தனக்காகப் பதிவு போடாதவர்கள், பின்னூட்டமிடாதவர்களெல்லாம் இதற்காகப் பதிவுகளும் பினனூட்டங்களும் இட்டதுதான் பிரச்சினை.
இது எந்தச் சாதாரண மனிதனுக்கும் வரக்கூடிய உணர்வுதான்.
அதை இவ்வளவுக்குப் பெரிதுபடுத்த வேண்டுமா?

ஆனால் அவர் இந்தக் கவிதையை அவரது மற்றப் பெயர்களான வைத்தியக்கலாநிதி கருணாநந்தன் அல்லது ஜனநாயகம் பெயர்களில் எழுதியிருந்தால் இப்படிப் பிரச்சினை வந்திருக்காது. சிறிரங்கனின் பெயரிலேயே எழுதியது அவரது நிதானமின்மையைக் காட்டுகிறது. வந்த வயிற்றெரிச்சலில் அவசரப்பட்டுவிட்டாரென்றே நினைக்கிறேன்.

Anonymous said...

அடிங்க.... தி.மு.க ஆட்சியில இருக்கிறதால தானே இந்த ஆட்டம் போடுற! இதுவே அம்மா ஆட்சின்னா இப்படி பேசுவியா???

Anonymous said...

//தனக்குக் கிடைத்ததைவிட அதிக அனுதாபம் இதில்கொலை செய்யப்பட்டவர்களுக்குக் கிடைத்ததுதான் பிரச்சினை.
தனக்காகப் பதிவு போடாதவர்கள், பின்னூட்டமிடாதவர்களெல்லாம் இதற்காகப் பதிவுகளும் பினனூட்டங்களும் இட்டதுதான் பிரச்சினை.
இது எந்தச் சாதாரண மனிதனுக்கும் வரக்கூடிய உணர்வுதான்.
அதை இவ்வளவுக்குப் பெரிதுபடுத்த வேண்டுமா?

ஆனால் அவர் இந்தக் கவிதையை அவரது மற்றப் பெயர்களான வைத்தியக்கலாநிதி கருணாநந்தன் அல்லது ஜனநாயகம் பெயர்களில் எழுதியிருந்தால் இப்படிப் பிரச்சினை வந்திருக்காது. சிறிரங்கனின் பெயரிலேயே எழுதியது அவரது நிதானமின்மையைக் காட்டுகிறது. வந்த வயிற்றெரிச்சலில் அவசரப்பட்டுவிட்டாரென்றே நினைக்கிறேன்.//
வாழைப்பழம்,ஊசி, வாழ்க தமிழர்!

ஜூலியன் said...

Hello Manikandan well said. Srirangan's post is very untimely and misplaced.

Vaa.Manikandan said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி என ஒற்றை வரியில் முடித்துவிட என்ன இருக்கிறது. எனக்கு இருக்கும் உணர்வினை விட, அழுத்ததினை விட உங்களுக்கு பாதிப்புகளும், வருத்தமும் அதிகமாக இருக்கும். பின்னூட்டங்களில் உணர முடிகிறது.

முத்து,செந்தழல் ரவி ஆகிய இருவர் மட்டுமே இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என நினைக்கிறேன். ஆனால் இந்த விஷயத்தில் உணர்வு பூர்வமான இந்தியர்கள் பலரை எனக்குத் தெரியும். வலைப்பதிவு உலகில் கூட ஒத்த கருத்துள்ளவர்களை சந்தித்திருக்கிறேன். இனம்புரியாத தயக்கம் அவர்களுக்கு தடையாக இருப்பதனை உணர முடிகிறது. பயமா அல்லது அதையும் தாண்டிய ஏதேனும் ஒன்றா என்பதுதான் புரியவில்லை. தனிப்பட்ட முறையில் விவாதிக்கும் இவர்கள், பொது இடத்திற்கு என விவாதம் வரும் போது பின்வாங்குவது சற்று வருத்தம் என்றாலும், கூடிய விரைவில் நிலை மாறும் என நம்புகிறேன். இளந்தலைமுறையைச் சார்ந்த இந்தியர்களின் உணர்வுகள் சற்று தெரிய ஆரம்பித்திருப்பதனை நீங்களும் உணர்ந்திருப்பது திருப்தியாக இருக்கிறது.

அனானிமஸ் ஆக வந்து கருத்து தெரிவித்தவர்களுக்கும், ஈழபாரதி, தம்பி, வானதி,பவானி சிறீதரன், தமிழியன், டி சே தமிழன், வெற்றி, காத்து, ஜூலியன், நீயோ நானோ ஆகிய அனைவருக்கும் நன்றி. இந்தக் கருத்துக்களைப் படிக்கும் போது என் பார்வை சற்று விரிவடைவதையும் உண்ர முடிகிறது.

வி.கண்ணன், நான் எது எழுதினாலும் அதனை சுரண்டிப் பார்க்கவே வரும் உங்களுக்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. கருத்து சொல்ல அம்மா என்ன அய்யா என்ன? ஈழத்தமிழர்கள் குறித்து சென்ற ஆண்டிலும் பதிவெழுதியிருக்கிறேன் என்பதனை உங்களுக்கு சுட்டிக் காட்டவே விரும்புகிறேன். நன்றி.

Anonymous said...

Thanks. Mukam kaatta virumbaatha oru inthiya thamizan.

Anonymous said...

Dear everyone!
ஈழத்தமிழர்கள் போராடுகின்றார்கள் ஆனால் அவர்களின் திசைவழிப் போக்கு மாறிவிட்டது. மக்களை நம்புவதிலும் பார்க்க ஆயதத்தையும் பெரும் வல்லரசுககளை நம்புகின்றனர்.

2 . மக்களை இனவெறியரசு கொல்கின்றது. இவற்றை தடுப்பதற்கு அப்பால் பழிக்குப் பழி என்ற நிலையில் கொலைகளை உற்பத்தி செய்கின்றனர் மறுதரப்பினர்.
3. ஈழமக்களுக்கு தொடர்ந்தும் குரல் கொடுப்பது சிறுசக்தியாக இருக்கின்ற நக்சல்பாரிகளின் சிந்தனை வடிவத்தை ஏற்றவர்களே. இவர்களே எக்காலத்திலும் துனிந்து செயற்படுபவர்கள். அரசியல் வாதிகள் போன்று பிரதிபலன் பார்த்து செய்வர்கள் என்பதை ஈழத் தமிழர்களுக்கு சொல்லிக் கொள்கின்றேன்.
இவர்களே தொடர்ச்சியாக சுயநிர்ணயத்தினை தனியே ஈழத் தமிழர்கள் மாத்திரம் அல்ல சிங்கள முஸ்லீம் மலைய மக்களுக்கும் உள்ளது என பாகுபாடின்றி ஏற்றுக் கொள்கின்றனர்.
சுயநிர்ணயம் என்பது ஈழத் தமிழர்களுக்கு மாத்திரம் அல்ல.

4. கொலை அச்சுறுத்தல் என்பது எவ்வகையில் நிகழ்ந்தாலும் கண்டிக்கபட வேண்டும். இவை சிறிரங்கன் சார் மீது மாத்திரம் அல்ல எவர் மீது நடந்தாலும் கண்டிக்கபட வேண்டியதே. இதே போலதான் ரிபிசி என்றபுலியெதிர்ப்பு வானொலி மீதான அச்சுறுத்தலும் கண்டிக்கப்பட வேண்டியதே.
முரண்பாடாக இருப்பதை உரைப்பதற்கு சுதந்திரம் வேண்டுமே.
5.சிறிரங்கன் மீதான அவதூறை மலினப்படுத்தபடுவதையும் அதனை ரசிப்பதையும் காணமுடிகின்றது. இதுவும் வக்கிர உணர்வாக தெரியவில்லையா?
தமிழகத்தில் உள்ளவர்களே ரசிக்கும் நிலைக்கு உட்பட்டுள்ளனர்???

கொலைகளை ரசிப்பவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் சிந்தனையில் பேதம் இருக்கின்றதை கவலை கொள்ள வேண்டியிருக்கின்றது.
6. பொதுவுடமைவாதிகள் தம்மைமாத்திரம் சிந்திப்பதில்லை. சர்வ உலகம் சார்ந்து சிந்திக்கின்றனர். இதனை பகுத்தறிந்து கொள்வதற்கு பெரும் அறிவு தேவையில்லை. இது கூட எழுதிய பலருக்கு இல்லை என்பதை தங்கள் தளத்தில் இருந்து தெரிகின்றது.

நன்றி
பொய்யாமொழிசிகன்

Vaa.Manikandan said...

நன்றி பொய்யாமொழிசிகன்.

ஆயுதத்தையும் பெரும் வல்லரசுகளையும் நம்புவதில் என்ன தவறு இருக்கிறது. மக்களைத் திரட்டி அகிம்சை வழியில் போராட்டம் நடத்தினால் செவி கொடுத்துக் கேட்கவும் தயாரில்லாத கொடூர-இன வெறி ஆட்சி அல்லவா ஈழத்தில் நடக்கிறது? தீவிரவாதம் மட்டும்தான் வழி என்பது என் வாதம் அல்ல. மிதவாதமும் தீர்வு தரலாம். ஆனால் ஈழ மண்ணில் மிதவாதத்திற்கு இடமிருக்கிறதா என்பதுதான் இருக்கும் வினா.

எதிரியைக் கொண்டுதான் போராடுபவனின் ஆயுதம் தீர்மானிக்கப்படுகிறது. ஆங்கிலேயரிடம் போராட உதவிய அகிம்சை அனைத்து ஆக்கிரமிப்பாளர்கள், சர்வாதிகாரிகள், இனவெறியாளர்களிடம் எடுபடும் என்று சொல்ல முடியாது.

நக்சல்பாரிகளின் சிந்தனையை ஆதரிப்பவர்கள் என்பதனால் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அவர்கள் குரலெழுப்பக் கூடாது என்பதா? நெடுமாறன் அவர்களும் சுப வீரபாண்டியன் அவர்களும் என்ன பிரதிபலன் பார்த்து செயல்பட்டார்கள்? எதற்காக தூற்றி எறிகிறீர்கள்?

சிறீரங்கன் அவர்களின் மீதான கொலை மிரட்டலை வேறு யாரும் மலினப் படுத்திவிடவில்லை. அத்தனை பெருமையும் அன்னாரையே சாரும். அவரது அந்தப் பதிவையும் தொடர்ச்சியாக அவர் கொடுத்த Running commentary ஐயும் ஒரு முறை படித்துப் பாருங்கள். சிறு குழந்தையும் சொல்லிவிடும் அதில் இருக்கும் 'சிறுபிள்ளைத் தனத்தை' (!). இந்த ஒரு கூற்று வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் நான் மிகக் கவனமாக சொற்களைக் கையாண்டேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் எம்மைக் குறித்து வருத்தப் படுவது இருக்கட்டும். தமிழ்நாட்டுப் பார்வையை சிறிது காலத்திற்கு விலக்கி வையுங்கள். குடல் சரிந்து சாகும் பிள்ளைகளையும், சிதறிச் சாகடிக்கப்படும் பெண்களையும் பாருங்கள். அவர்களுக்காக துளி கண்ணீர் கசியுங்கள். வேறு தேசத்தில்- ஏ.சி அறையில் அமர்ந்து வலைப் பதிவுகளில் கதறுபவர்களுக்கு எந்த சோகமும் நிகழ்ந்துவிடாது.

Anonymous said...

I dont agree with you. read www.tamilcircle.net artical which is from Puthiyajananayagam. What about Vico?? Thiruma?? I will write in Tamil when i get a time. பொய்யாமொழிசிகன்

Anonymous said...

ஐயா பொய்யாமொழிகேசிகன்,

நீங்கள் எல்லா மிரட்டல்களையும் கண்டியுங்கள். யார் வேண்டாமென்றார். இந்தப்பதிவு ஈழத்தில் நடந்த படுகொலையைக் கண்டித்தவர்களைக் கண்டித்து எழுதப்பட்ட சிறிரங்கனின் பதிவுக்கு எதிரானது. இதைப்பற்றி எதுவும் சொல்லாமல் எங்கோ சுற்றுகிறீர்களே? அங்கு நடக்கும் கொலைகளையும் சித்திரவதைகளையும் வைத்து நாங்கள் வியாபாரம் செய்கிறோமாம். இவர்மட்டும் தனக்கு விடப்பட்டதாக ஒரு மிரட்டல் கதையை வைத்து வியாபாரம் செய்யலாமாம்.

சிறிரங்கனின் மிரட்டல் கதையை அப்படியே நம்பமுடியாமல் இருப்பதற்குரிய வலுவான காரணங்களை பலஇடங்களில் பலர் எழுதிவிட்டார்கள். அவர் நேர்மையாகப் புலியெதிர்ப்பைச் செய்ததில்லை. பல இடங்களில் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டுள்ளார். அதன்மூலமே அவரின் நேர்மையான விமர்சனங்கள்கூட அடிபட்டுப்போனது. இன்றைக்கு தமிழ்மணத்தில் புலியெதிர்ப்பைக் கக்கிக்கொண்டிருந்த இரு வலைப்பதிவுகள் காணாமல்போய்விட்டன. இவையெல்லாம் தெரியாமல்தான் வந்து கருத்துச் சொல்கிறீர்களா?

பொதுவுடமை வாதிகள் யாரைப் பற்றிச் சிந்திக்கிறார்கள் என்பது பிரச்சினையில்லை. அதற்காக தாம் எதிர்க்கும் ஒரு பகுதியை கருத்து ரீதியாக எதிர்கொள்ளாமல் கட்டுக்கதைகளைப் பரப்பியா எதிர்கொள்ளவது? தாம் சொல்வதை உண்மையென்று நம்பவைக்க என்னவெல்லாம் நாடகமாடினர்? இங்கேகூட பலர் புனைபெயரில் எழுதுகிறார்கள். அது பிரச்சினையுமில்லை. ஆனால் அப்புனைபெயர்களை உண்மையாக்கினதில்லை.

Anonymous said...

சிறிரங்கனுக்கு இடப்பட்ட அச்சுறுத்தல் அவதூறு என்பன ஒரு பிரிவினரால் இடப்பட்டது. அதனை நீங்கள் எவ்வாறு விளங்கிக் கொண்டீர்கள் என்பது பற்றிய நிலைபாடு பற்றி நான் வலுக்கட்டாடயமாக உங்களுக்கு திணிக்க வேண்டிய அவசியமில்லை.

கொல்லப்படுகின்றார்கள்ச/
உண்மைதான் நித்தம் கொலைகள் தான் நடைபெறுகின்றது. இதனை முற்றாக நிறுத்த உங்கள் குரலைக் கொடுங்கள்.
/ தனியே சில கொலைகளை இரத்தத்தை காட்டி அரசியல் செய்யும் கயமைத்தனத்தை ஆதரிக்க முடியாது./
இவைதான் கடந்த 25 ஆண்டுகள் அரசியல் ஏதுமற்று கொலைகளை செய்வது பின்னர் அதன் எதிர் விழைவுகளைக் காட்டி பிழைப்பு நடத்துவது நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
/ எதை தாம் கட்டுக்கதைகளாக இருக்கின்றது.
கட்டுக் கதைகளாக இருப்பது அரசியல் உள்ளடக்கம் கொண்டதாக இருப்பதில்லை. ஆனால் அரசியல் உள்ளடக்கத்தின் விளங்கிக் கொள்வதில் இருக்கின்ற மாறுபாடு என்பது கட்டுக்கதைகளாக மற்றவர்களுக்கு தெரிவதில் வியப்பு இருப்பதில் ஆச்சரியப்படத் தேவையில்லை.

நாம் வெறும் புலியெதிர்ப்பை முன்வைப்பதில்லை.

அரசியல் கருத்திரீதியாக கருத்துக்களை முன்வைக்கின்றோம்.

அரசியல் கருத்துக்கள் மாறுபாடாக இருப்பற்கு தங்களுக்கும் எமக்கும் உள்ள கருத்து ரீதியாக பாகுபாடே சுட்டி நிற்கின்றது. ஆக தங்கள் கருத்தும் எமது கருத்தும் மாறானது./

எங்கு பொதுவுடமைவாதிகள் குறுப்பிட்ட ஒரு பிரிவினரை மாத்திரம் எதிர்க்கின்றனர்??
மக்கள் நலன் என்ற நிலையில் இருந்து அனைத்து பிற்போக்குத்தனத்தையும் எதிர்ப்பது பொதுவுடமைவாதிகளே.//
பொய்யாமொழிசிகன்