May 25, 2006

பேசலாம்- குறிப்பு

வலைப்பதிவர் பெயர்: வா.மணிகண்டன்

வலைப்பூ பெயர் :பேசலாம்

சுட்டி(URL) :www.pesalaam.blogspot.com

ஊர்:சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம். தற்போதைய வாசம் ஐதராபாத்.

நாடு:இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:திரு.தேசிகன்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :திங்கள், பிப்ரவரி 07, 2005

இது எத்தனையாவது பதிவு:73

இப்பதிவின் சுட்டி(URL): http://pesalaam.blogspot.com/2006/05/blog-post_25.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: கவிதையை விமர்சித்து நான் எழுதிய சில பின்னூட்டங்கள் நீக்கப்பட்டன. எனக்கென ஒரு பதிவு இருப்பின் சுதந்திரம் இருக்கும் என்னும் எண்ணத்தில் ஆரம்பித்தேன்.

சந்தித்த அனுபவங்கள்:ஆரம்பத்தில் மிக முரட்டுத்தனமாக பின்னூட்டமிட்டும், எனக்கு வந்த பின்னூட்டங்களுக்கு பதிலளித்தும் வந்த நான், என்னை மாற்றிக் கொள்ள வேண்டியதாக இருந்தது.

பெற்ற நண்பர்கள்:நிறைய நண்பர்கள் தொடர்ந்து உற்சாகமூட்டியும், ஆதரித்தும், தங்களின் கருத்தை தயக்கமில்லாமலும் எனக்கு சொல்லி வருகிறார்கள்.

கற்றவை: என்னை பற்றியும் கவிதை குறித்தும் முழுமையான புரிதலுக்கு உதவுகிறது.ஏதொ நானும் எழுதுகிறேன் என எழுதினால் நிலை பெற முடியாது. நல்ல பதிவுகள் நிச்சயம் கவனம் பெறும்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: இந்த சுதந்திரத்தில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. நினைத்ததை எழுத இயலும் என்பது நன்மை. கேட்க யாரும் இல்லை என தொடர்ந்து தரமற்ற எழுத்துக்களை படைக்க வாய்ப்புகள் மிக அதிகம்.

இனி செய்ய நினைப்பவை: தமிழின் நவீன கவிதை குறித்த விவாதத்தை இன்னும் மிகத் தீவிரமாக்க வேண்டும். வேற்று மொழிக் கவிஞர்களை அறிமுகப்படுத்த வேண்டும்.(குறைந்த பட்சம் என்னால் இயன்ற அளவு)

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: வய்து 25. முதுநிலை தொழில்நுட்பம்(M.Tech) முடித்து ஆந்திரத்தலைநகரில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். கவிதையில் ஆர்வம் உண்டு. உயிர்மை,காலச்சுவடு ஆகிய இதழ்களிலும், பல இணைய இதழ்களிலும் கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. கட்டுரைகள் தினமணியில் வந்திருக்கின்றன.

0 எதிர் சப்தங்கள்: