May 23, 2006

ஆந்திரா ஸ்நாக்ஸ்(தேவையில்லாதது)

சில ஆந்திரா ஸ்நாக்ஸ் காரமாகக் கிடைத்தது. எபோதுமே ஆந்திரா- காரம்தான். பகிர்ந்து உண்டால் பசியாறும். எடுத்துக் கொள்ளுங்கள்.

1. ரேடியோ மிர்ச்சிதான் இப்பொழுது ஐதராபாத்தில் சூடு பறக்கும் விஷயம். கொடி கட்டிப் பறக்கிறது. மூலை முடுக்குகளிலெல்லாம் 'சாலா hot குரு'தான்.

2.பவன் கல்யாண்(சிரஞ்சீவி தம்பி) நடித்து, தரணி இயக்கிய 'பங்காரம்', அப்படியொன்றும் வரவேற்பினை பெறவில்லை. விஜய் இதே கதையில் தமிழில் நடிக்க இருப்பதாக படம் வருவதற்கு முன்பாக பேச்சு நிலவியது. இப்பொழுது மாறி இருக்கலாம்.

3.த்ரிஷா நடித்து வெளிவந்த 'பவுர்ணமி' படம் தோல்வி அடைந்துவிட்டது. அம்மையாரின் ஆட்டம் அடக்கி வாசிக்கப்படுகிறது.

Photobucket - Video and Image Hosting

4.மகேஷ்பாபு இப்பொழுது முக்கியமான இளைய நட்சத்திரம். இவர் நடித்த 'போக்கிரி' கடைசியாக வெளிவந்து சக்கை போடு போடுகிறது. இது அநேகமாக விஜய்யின் அடுத்த படம் என்று பேச்சு. 1.5 கோடி ரூபாய் அதன் 'ரீமேக்' உரிமை எனப் படித்தேன். இதன் ஹீரோயின் 'இலியானா' ஒன் ஆப் த ஹாட்.

Photobucket - Video and Image Hosting

5.ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியும், சந்திரபாபு நாயுடும் மேடைகளிலும், சட்டப் பேரவையிலும் ஒருவொருக்கொருவர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தாலும், பொது மேடைகளில் கை கொடுத்து அளாவும் அளவிற்கு நாகரீகமான அரசியலை பார்க்க முடிகிறது. (செம பீலிங்க்ஸ்).

6. பாலகிருஷ்ணா நடித்த 'வீரபத்ரா' ஊற்றிக் கொண்டது. அவரது அருமை பெருமைகளை 'நந்தா'வின் பதிவில் காணலாம்.

7. பாலகிருஷ்ணாவுடன் நடிப்பதாக மீராஜாஸ்மின் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கிறார். இதனை அறிந்த ரவிதேஜா 'வாழ்க்கை சீரழிக்கப்படும்' என எஸ்.எம்.எஸ் அனுப்ப ரவிதேஜாவும் பாலகிருஷ்ணாவும் அடித்து உருண்டிருக்கிறார்கள்.

8. சிரஞ்ஜீவி கடைசியாக நடித்த 'ஜெய் சிரஞ்ஜீவா' தோல்வியடைய, முருகதாஸின் 'ஸ்டாலினை' நம்புகிறார். அடுத்து அரசியல் பிரவேசம் இருக்கலாம் என ஒரு பேச்சு. ஹனுமான் என்னும் 'அனிமேஷன்' படத்தில் சிரஞ்சீவி ஹனுமானுக்கு குரல் கொடுக்கிறார்.

9. சண்டைக் கோழி 'பந்தெம் கோடி' என வெளியாகிவிட்டது. புதுப் பேட்டை 'தூள் பேட்டா' என்ற பெயரில் எதிர்பார்க்கப்படுகிறது.

10. சில சினிமா பிரமுகர்களின் பட்டப் பெயர்கள்.

மெலோடி பிரம்மா -இசையமைப்பாளர் மணி சர்மா
டான்சிங் சென்சேஷன் - பிரபுதேவா
கிரேஸி ஸ்டார்-ரவிதேஜா
யங் டரங் - தருண்
யுவசாம்ராட்-நாகர்ஜூன்
விக்டரி வெங்கடேஷ்
மெகா ஸ்டார் -சிரஞ்சீவி
ஸ்டைலிஷ் ஸ்டார்- அல்லு அர்ஜூன் (நம்ம 'குறும்பு' கதாநாயகன்)
பிரின்ஸ் -மகேஷ் பாபு
யுவரத்னா - பாலகிருஷ்ணா.( தயவு செய்து கவனிக்கவும்)

எப்படிங்க, மேட்டர் நல்லா இருக்கா? சொல்லுங்க. ஓகேன்னா இதையும் தொடரலாம்.

26 எதிர் சப்தங்கள்:

ரவி said...

சூப்பர்...அப்படியே ஆந்திரா பருப்பு சமையல் குறிப்பும் போட்டு தாக்குங்க..

எதாவது படம் போட்டிருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்...

Vaa.Manikandan said...

கேட்டது கொடுக்கப்படும்...
ரவி உங்களுக்காக படங்கள். :)

Anonymous said...

என்'ஹைதராபாத் நாட்களை'நினைவு
படுத்திவிட்டீர்கள்.ஆந்திரா ஸ்நாக்ஸ்
தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

அன்புடன்,
துபாய் ராஜா.

மணியன் said...

பேசலாமில் பேசாமல் "ஆந்திரா ஸ்நாக்ஸ்" என்றே தனி பதிவாய் போட்டுவிடுங்கள்.

Muthu said...

ஏலு கொண்டல வாடா கோவிந்தா கோவிந்தா..

பிரதீப் said...

* தமிழ் குறும்பு படத்தில் நடிச்சது "அல்லு அர்ஜூன்" இல்லை, அவரு நரேஷ் - அவங்க அண்ணன் ஆர்யன் ராஜேஷ் (தமிழில் ஆல்பம்னு ஒரு படத்துல நடிச்சாப்புல) கூட இங்க பெரிய ஹீரோ .... ஆகலாமின்னு பாத்தாரு, ஆனா பரவாயில்லை.

* அல்லு அர்ஜூன் "ஹாப்பி"யில் நடிச்சாரு. (தமிழ் அழகிய தீயே)

* நீங்க சொன்ன மாதிரி "பவுர்ணமி" தோல்வியால அடக்கி வாசிக்கிறது த்ரிஷா மட்டுமில்லை, டைரக்டர் (?!) பிரபுதேவா, ஹீரோ பிரபாஸ் மற்றும் பலரும்தான்.

* "வீரபத்ரா" ஊற்றிக் கொண்டதில் ஆந்திர மாநிலமே ஊற்றிக் கொண்ட ரேஞ்சில் கொண்டாடியது. அண்ணன் பப்ளிசிட்டி அப்படிப்பட்டது!

* மகேஷ் பாபுவோட "போக்கிரி"க்கு பலத்த வரவேற்பு. இலியானாவுக்கும்தான். அடுத்து விஜய் இதை நடிப்பாருன்னு நினைச்சாலே குலை நடுங்குது!!!
ஏற்கனவே மகேஷ்பாபுவோட "ஒக்கடு"தான் கில்லியாகி விஜய்யை கில்லியாக்குச்சு, அந்த ராசியை நம்புறாரு விஜய்!

Vaa.Manikandan said...

துபாய் ராஜா,
இங்கதான் குப்பை கொட்டுனீங்களா? 'கொடுத்து' வெச்சவருதான் போங்க.

நட்சத்திரம் சொன்னா மறுப்பேது? அப்படியே ஆகட்டும்.

முத்து...ஆயி போயிந்தி! ஜருகண்டி!ஜருகண்டி!!

பிரதீப் அடிச்சு தூள் கிளப்புறீங்க! மீரு எக்கட உண்ணாரு?

பிரதீப் said...

நேனு இக்கடே... ஹைதராபாத்லோ உன்னானு...

ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேன் :)
நீங்க சொன்ன அந்த அரசியல் நாகரீகத்தைத் தமிழ்நாடு தவிர வேற எல்லா மாநிலங்களிலும் பாக்கலாமுங்க.

நந்தன் | Nandhan said...

Mani,

இ மேட்டரு சால பாகுந்தி. இலாகே கண்டினியூ செய்யண்டி.

நான் பார்த்தவரையில் மார்கெட்டிங்க் மூலம் தான் ஹைதரபாத் இவ்வளவு வளர்ச்சி பெற்றுள்ளது, ஒன்றும் இல்லாத விஷயங்களை கூட தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் அந்த கலை, ஆகா. அதுவும் டெக்கான் க்ரோனிகல் ஹைதராபாத் தான் உலகம் என்ற ரேஞ்சில் தான் செய்தியை தரும்.

ஹைதராபாது கார்பரேஷன் போல சென்னையிலும் நல்ல விஷயங்கள் செய்யலாம்.

Anonymous said...

///"துபாய் ராஜா,
இங்கதான் குப்பை கொட்டுனீங்களா? 'கொடுத்து' வெச்சவருதான் போங்க."///

ஆமாம் மணி!சுத்தாத இடமேயில்லை.
சார்மினார்,சில்க்கூர் பாலாஜி கோயில்,
கோல்கொண்டா கோட்டை,.,..,....,
இன்னும் எவ்வளவோ இருக்கே.அதைப்
பத்தியெல்லாம் எழுதுங்களேன்.

அன்புடன்,
துபாய் ராஜா.

Chellamuthu Kuppusamy said...

துண்டு துண்டாச் சொன்னாலும், நாமலும் ஒரு வாய்ஸ் விடலாம்...

* கில்லி காப்பி அடிச்சது போதாம போக்கிரி வேறையா?
* பாலகிருஷ்ணா காரு இந்த அளவுக்கா? மீராச்சேச்சி சும்மா சொல்லக் கூடாது.
* NTR இன் மகளை மணக்கும் முன் நாயுடு காங்கிரசில் தான் இருந்தார். அன்று தொட்ட நட்புடன் கூடிய அரசியல் நாகரீகம்.

-குப்புசாமி செல்லமுத்து

Boston Bala said...

பாலகிருஷ்ணாவுக்கு இன்னும் மார்க்கெட் இருக்கிறதா :ஓ! (சிரஞ்சீவி ரொம்ப நாளாக காங்கிரஸில் இருந்தாரே... இன்னும் அங்கேதான் இருக்காரா?)

கைப்புள்ள said...

இது கூட நல்லா தாங்க இருக்குது. தமிழ்மணத்துல ஒரு ஜெமினி டிவி...நடத்துங்க!
:)-

கைப்புள்ள said...

இது கூட நல்லா தாங்க இருக்குது. தமிழ்மணத்துல ஒரு ஜெமினி டிவி...நடத்துங்க!
:)-

Vaa.Manikandan said...

வாங்க..வாங்க...எல்லோரும் வாங்க....

சிரஞ்சீவி காங்கிரஸ் ல இருந்தாரானு 'நாக்கு தள்ளிது'

ஜெமினி மட்டுமில்லை..தேஜா, ஈநாடுன்னு பல மேட்டர் இருக்கு அப்பு....

நன்றி குப்புசாமி,கைப்புள்ள,பாலா,நந்தன்,ராஜா,பிரதீப்.

பொன்ஸ்~~Poorna said...

நல்லா இருக்குங்க.. அப்படியே தொடருங்க!!

//ரேடியோ மிர்ச்சிதான் இப்பொழுது ஐதராபாத்தில் சூடு பறக்கும் விஷயம். கொடி கட்டிப் பறக்கிறது. மூலை முடுக்குகளிலெல்லாம் 'சாலா கொட் குரு'தான்.
//
நான் இருந்தவரை இந்த ரேடியோ மிர்ச்சி எல்லாம் இல்லை.. ஆகாசவாணியும், விவித் பாரதியும் (ரெண்டும் ஒண்ணு தானா?) அழுது வடிந்து இந்தி, தெலுகுவில் பேசியதெல்லாம் கேட்டுகிட்டு இருப்பேன்.. மிர்ச்சி வந்தாச்சுன்னா, மறுபடி ஹைதராபாத் வரலாம் போலிருக்கே!!

Vaa.Manikandan said...

வாங்க பொன்ஸ். நான் கிளம்பிட பிளான் பண்ணிட்டு இருக்கேன்.

கானா பிரபா said...

உங்க ஸ்நாக்ஸ் சுவையாக இருக்குங்க, கூடவே பாலகிருஷ்ணா பற்றிய நந்தாவைன் பதிவைப் படிக்க ஆசை, அவரின் புளொக் முகவரி கொடுப்பீங்களா?

Vaa.Manikandan said...

Nandha's link:

http://mkannadi.blogspot.com/2006/05/blog-post_19.html

கானா பிரபா said...

ரொம்ப நன்றி

கோவி.கண்ணன் said...

ஆந்திரா ஸ்னாக்ஸ்னு நெனெச்சி படித்தேன், ஆனால் படித்ததும் தெரிந்தது ஆந்திரா மசாலா என்று. நன்றாக கின்டியிர்க்கிறார்கள். ஆந்திராபக்கம் நம்ம பெத்தராயிடப்பத்தி என்ன மாட்டலாடுகிறார்கள் என்று சொல்லவில்லையே ?

Vaa.Manikandan said...

கானாவுக்கும், கோவிக்கண்ணனுக்கும் 'தன்யவாத்'...

'பெத்தராயுடு'னா ரஜினியத்தானே சொல்றீங்க? அவருக்கென்ன...இங்கேயும் 'சூப்பர் ஸ்டார்தான்'

manasu said...

//ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியும், சந்திரபாபு நாயுடும் மேடைகளிலும், சட்டப் பேரவையிலும் ஒருவொருக்கொருவர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தாலும், பொது மேடைகளில் கை கொடுத்து அளாவும் அளவிற்கு நாகரீகமான அரசியலை பார்க்க முடிகிறது. (செம பீலிங்க்ஸ்).//

ரொம்ப ரொம்ப ஃபிலிங்ஸ்.....

பரம்பரை விரோதி, அடுத்த தேர்தலுக்கு இருக்கமாட்டார் என அப்படி என்ன விரோதமோ!!!!

கூத்தாடி ரெண்டுபட்டா ஊருக்கு தான் நஷ்டம்.

நொருக்ஸ் நல்லா இருந்தது மணி.

நீங்களும் புதரகமா? பார்த்துப்பா எல்லோரும் போய் புஷ் அ இங்க அன்ப்பிடாதிங்க.......

ilavanji said...

தகவலெல்லாம் நல்லாத்தான் இருக்கு...

இன்னேரத்துல ஆபீஸ்ல என்னையா செய்யற?! வயசுப்பையன் வேற! காத்துக்கருப்பு அடிச்சிட போகுது! :)))

Karthik Jayanth said...

வா.மணிகண்டன்,

எனது ஹைதராபாத் நாட்களை நினைவுபடுத்தியது உங்களின் பதிவு.. அங்கட உன்டின ரோஜ்லோ அமீர்பேட்டே மன ஸ்தலமண்டி.. அதி மஞ்சி ரோஜ்லுஅன்டி

பாலய்யா காரு சித்திரம் ச்சுஸி புர்ர பாடௌஅயிந்தண்டி :-( .

Vaa.Manikandan said...

நன்றி மனசு...

'தல' கார்த்திக்...சும்மாவே எனக்கு தெலுகு கேட்டு கேட்டு 'அள்ளு' வுடுது...இதுல நீங்க வேறயா?

வாங்க இளா...என்ன ரொம்ப நாளா பேச்சே இல்ல? 'காத்து கருப்பு' அடிச்சுடுச்சோ...தெரியுது....அனுபவம்....சொல்றீங்க...கேட்டுக்கறேன் :)