Apr 4, 2006

காலச்சுவடுக் கவிதை

நிசப்தம்
விரவிக் கிடக்கும்
இந்த இரவின்
விளிம்பில்
சொற்கள்-
உன்
விரல்களின் நுனியிலிருந்து
உதிரத்
தொடங்குகின்றன.

நன்றி: காலச்சுவடு ஏப்ரல்'2006

கவிதைக்கு அர்த்தம் சொல்லும் போது அது தனக்கான வலிவினை இழக்கிறது என்னும் கருத்தில் உடன்பாடு கொண்டு. கவிதை தன்னை வாசிப்பவனுக்கு அவனின் மனநிலைக்கு தகுந்தவாறு பொருள் தரவேண்டும் எனவும் விரும்புபவன் நான்.

ஆயிரம் பேர் வாசித்து, ஆயிரம் பொருள் பெறுமெனில் அது படைப்பளிக்கும் படைப்பிற்குமான வெற்றி எனலாம். ஆனால் இக்கவிதைக்காக முதாலாவது கூற்றினை நான் மீற வேண்டியதாக இருக்கிறது.

வாசித்த நண்பர்கள் பலரும் இரவில் எழுதுபவனின் மனநிலை இந்தக் கவிதை என நேர்கோட்டுப் பார்வையில் தங்களின் கருத்தினை முன்வைத்தனர்.

சொல்லுங்கள்.எனக்கு இதனில் முரண்பாடு எதுவுமில்லை.

எனினும் 'உன்' என்னும் சொல்லினை உட்புகுத்தியுள்ளது, இந்த எண்ணம் தவிர்க்கப் படவேண்டும் என்பதற்காகத்தான். அதனையும் மீறி துருத்தி நிற்கிறது.

இரவு முழுவது பேசித்தீர்த்த சொற்கள் நிச்பத்ததில் வடிந்து போக, இவளின் விரல்கள் தீண்டத்துவங்குகின்றன என்பதனைத் தவிர நான் எதனையும் யோசிக்கவில்லை.

5 எதிர் சப்தங்கள்:

ilavanji said...

ஊடலின் பிறகு பேச்சுகளற்ற ஒரு இரவில், கூடலின் தொடக்கமாக அவள் தனது விரல்களின் ஸ்பரிசங்களின் மூலம் பேச நினைப்பவைகளை உணர்த்துகிறாள் - என்பதுதான் எனக்கு புரிந்தது...

அதெல்லாம் இருக்கட்டும் ஓய்! எங்க ரொம்ப நாளா ஆளைக்காணோம்!?

Muthu said...

கோபிகாரரே,

காலச்சுவடு கவிதையை இரண்டு நாட்களுக்கு முன்னரே படித்தேன்.ஆனால் எனக்கு கவிதைகளை உள்வாங்கி கொள்வதில் சில சிக்கல்கள் இருப்பதாக ஏற்கனவெ பல இடங்களில் பதிவு(?) செய்துள்ளென்.

இளவஞ்சி மேலே கூறியுள்ளபடிதான் இருக்கிறது என் புரிதலும்...

வாழ்த்துக்கள் கவிஞரே....

தருமி said...

உங்களுடைய + இளவஞ்சியின் 'நோட்ஸ்' படித்ததும் புரிந்தது நன்றாக இருந்தது.

Ganesh Gopalasubramanian said...

என்ன மணி ! இந்தக் ஏற்கனவே நாம் அலசிவிட்டோம் என்று நினைக்கிறேன்.

Vaa.Manikandan said...

இளவஞ்சி, முத்து, தருமி, கணேஷ் கருத்துக்கு நன்றிகள்.