Nov 24, 2005

பெண்ணியமும் வறட்டுக் கூச்சலும்

குழந்தை பெற்று மதத்தைக் காப்பாற்றுங்கள்.ஆர்.எஸ்.எஸ் தலைமை இவ்வாறு கதறியிருக்கிறது.அவர்கள் முன் வைக்கும் வாதம்- ஒப்பீட்டளவில் இந்து மதத்தை பின்பற்றுவோரைக் காட்டிலும், மற்ற மதத்தைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என்பது.இந்துக்குடும்பங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மதத்தின் வலுக் கூட்டப்படும் என்கின்றனர்.

களைகளினூடாக மத்ததை வலுப்படுத்த எண்ணிக்கை காரணியாக அமையாது. இந்த விவாதத்தில் எனக்கு நாட்டம் இல்லை. இரைச்சலில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல பெண்கள் அமைப்புகள் இங்கு தலையிடுகின்றன.

பெண்ணியம் பேசும் பெண்களில் பெரும்பான்மையானோர் இந்திய கிராமப்புற பெண்களின் ஜீவாதாரமான பிரச்சினைகள் குறித்தான கவலை கொண்டிருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். சானியா மிர்ஸாவின் குட்டைப் பாவாடை, குஷ்பூவின் ஆண் பெண் உறவு முறைகள், ஆர்.எஸ்.எஸ் இன் விவாதம் போன்ற ஊடகங்களினால் செறிவூட்டப்பட்ட பிரச்சினைகளை கையிலெடுத்து சிதறி விழும் வெளிச்சத்தினை தங்களின் முகத்தில் படியச் செய்துகொள்வது மட்டுமே இவர்களின் பெரும்பணி.

காமம் சார்ந்த-மேற்குறிபிடப்பட்ட விஷயங்களை ஓடியவற்றை மட்டும் கையிலெடுப்பது மட்டுமின்றி, பெண்களின் மீதான வன்முறைகளில் உடலியல் குறித்தானவை தவிர எதுவும் இல்லை என்னும் படிமத்தையும் தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர்.

கருத்துச் சுதந்திரத்தின் முதுகெலும்பே தாங்கள் தான் எனக் கூறிக் கொள்ளும் இவர்கள், ஒரு மத அமைப்பு தனது மதம் குறித்தான கருத்தினை, தனது மதத்தினருக்கு தெரிவிக்கும் போது இவர்கள் ஏன் தலையிட வேண்டும்?(இது ஒரு வாததிற்காக முன் வைக்கிறேன். எதிர்ப்பதும் அவர்கள் உரிமைதான்)

இவர்கள் சொல்லும் கருத்துகளில் நியாயம் இருக்கலாம்.இருக்கும். ஆனால் இந்த மாதிரியான விவாதங்களில் மட்டும் நுழைந்து தங்கள் இருத்தியலைப் பதிவு செய்து கொள்வதோடு நில்லாமல் , இந்தியப் பெண்களின் ஒட்டு மொத்த பிரதிநிதி என்று தங்களைக் கூறிக் கொள்வதில்தான் வேறுபடுகிறேன்.

இன்னும் கல்வியின் வீச்சம் அற்று, சமூகத்தின் நிகழ்வுகள் ஒன்றுமே தெரியாமல்,மூன்றாம் மனிதர்களாக/ஜந்துக்களாக முடங்கிக் கிடக்கும் கோடிக் கணக்கான பெண்களைப் பற்றி பேசட்டும்.நூற்றுக் கணக்கான வழிமுறைகளில்,பெண்களின் மீது கண்ணுக்குத் தெரியாத ஊசிகள் இறங்கிக் கொண்டே இருக்கின்றன.

பப் குறித்தோ, குடிப்பது குறித்தோ நைட்கிளப்புகளில் அமர்ந்து அறிக்கை தயாரிப்பதால் ஒன்றும் நிகழந்து விடப் போவதில்லை.

ஊடக வெளிச்சம் மட்டுமே பெரிதாகப் படும் இவர்கள் குறித்துப் பேசுவதும் நையாப் பைசா பிரையோஜனம் இல்லாத குஷ்பூ விவகாரம் பற்றி பேசுவதும் ஒன்று தான்.

10 எதிர் சப்தங்கள்:

ilavanji said...

யோவ் மணி,

என்னய்யா ஆச்சு? பெண்ணீயம், ஒப்பீடு, படிமம், ஊடகம் னு பெரிய பெரிய வார்த்தைகளா வருது!! 5ஸ்டார் சாப்பாடு ஒத்துக்கலையா!? ச்ச்சும்மா! :)

//இன்னும் கல்வியின் வீச்சம் அற்று, சமூகத்தின் நிகழ்வுகள் ஒன்றுமே தெரியாமல்,மூன்றாம் மனிதர்களாக/ஜந்துக்களாக முடங்கிக் கிடக்கும் கோடிக் கணக்கான பெண்களைப் பற்றி பேசட்டும்// அர்த்தமுள்ள வார்த்தைகள்!!

enRenRum-anbudan.BALA said...

//இன்னும் கல்வியின் வீச்சம் அற்று, சமூகத்தின் நிகழ்வுகள் ஒன்றுமே தெரியாமல்,மூன்றாம் மனிதர்களாக/ஜந்துக்களாக முடங்கிக் கிடக்கும் கோடிக் கணக்கான பெண்களைப் பற்றி பேசட்டும்.நூற்றுக் கணக்கானவழிமுறைகளில்,பெண்களின் மீது கண்ணுக்குத் தெரியாத ஊசிகள் இறங்கிக் கொண்டே இருக்கின்றன.
//
நியாயமான பேச்சு, மணிகண்டன் !

Anonymous said...

//இன்னும் கல்வியின் வீச்சம் அற்று, சமூகத்தின் நிகழ்வுகள் ஒன்றுமே தெரியாமல்,மூன்றாம் மனிதர்களாக/ஜந்துக்களாக முடங்கிக் கிடக்கும் கோடிக் கணக்கான பெண்களைப் பற்றி பேசட்டும்.நூற்றுக் கணக்கான வழிமுறைகளில்,பெண்களின் மீது கண்ணுக்குத் தெரியாத ஊசிகள் இறங்கிக் கொண்டே இருக்கின்றன.//

நீங்கள் நமது கலாச்சாரக் காவலர்களைப் பற்றிதானே பேசுகிறீர்கள்? உண்மையான வார்த்தைகள்.

Anonymous said...

//பெண்ணியம் பேசும் பெண்களில் பெரும்பான்மையானோர் இந்திய கிராமப்புற பெண்களின் ஜீவாதாரமான பிரச்சினைகள் குறித்தான கவலை கொண்டிருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். சானியா மிர்ஸாவின் குட்டைப் பாவாடை, குஷ்பூவின் ஆண் பெண் உறவு முறைகள், ஆர்.எஸ்.எஸ் இன் விவாதம் போன்ற ஊடகங்களினால் செறிவூட்டப்பட்ட பிரச்சினைகளை கையிலெடுத்து சிதறி விழும் வெளிச்சத்தினை தங்களின் முகத்தில் படியச் செய்துகொள்வது மட்டுமே இவர்களின் பெரும்பணி.//

"எல்லார் கையிலயும் மம்பட்டியைக் கொடு" தத்துவம். இது "எவ்வளவுதூரம் சரி" என்று காலப்போக்கில் உணர்ந்துகொள்வீர்களென்று நம்புகிறேன்.

b said...

பெண்ணியம்னா என்னாங்க?

Anonymous said...

Very healthy discussion

-gobi nath

Vaa.Manikandan said...

நன்றி இளவஞ்சி,பாலா,கோபிநாத்.
அனானிமஸ் நன்றி. நீங்கள் பெயரிட்டே தெரிவித்திருக்க்லாமே!
சன்னாசி எதைப் புரிந்துக்கொள் என்று என்னைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.

//ஆர்.எஸ்.எஸ் இன் கருத்தில் தலையிட பெண்களுக்குத் தேவையில்லையென்கிறீர்களா?//
கொண்டோடி நான் தேவையில்லையென்று சொல்லவே இல்லையே!
தயவு செய்து இன்னொரு முறை வாசியுங்கள்.

மூர்த்தி கொஞ்சம் இருங்க.கேட்டுச் சொல்கிறேன்

Anonymous said...

penniya vadhigalin uzhaipal indhia sothurimai sattam matrapatirukiradhu, domestic violence sattam vandhirukiradhu, pengaluku edhirana pala prachinaigalai satta reedhiyaga edhirkollgirargal. ungaluku avargaludaya nadavadikaigal theriyavilai alladhu puriyavilai enbadharkaga ellam varatu kuchal aagividadhu,

Vaa.Manikandan said...

நான் இல்லை என்று சொல்லவில்லையே. பெண்ணியவாதிகள் எல்லோரும் பெண்களாகவும், பெண்கள் அமைப்புகளாகவும் இருக்க வேண்டும் என்பது கட்டாயமா என்ன? "பெண்ணியவாதி"களால் இவை எல்லாம் வந்திருக்கின்றன என்பதை மனதார ஏற்றுக் கொள்கிறேன்

Vaa.Manikandan said...

கருத்துக்கு நன்றி பொழுது