Nov 16, 2005

ஜில் ஜில் ராணி,புல் புல் ராஜா!

சென்ற வார நட்சத்திரம் கணேஷிடம் இருந்து ஒரு மின்னஞ்சல்."யோவ் மணி,சென்சிடிவான மேட்டர தான் எழுதுவியா?"னு. ரஜினி ராம்கி "இப்படியே தொடருங்கள்"னு சொல்றாரு.

ஏன்?ஜாலி மேட்டர் எழுதலாமே!

எங்க ஊருல 'டவுசரு தங்கராசு'னு ஒரு 'ஆ'சாமி. டவுசருன்னா-டவுசரு தெரியற மாதிரி-பட்டை போட்ட காடாத்துணி டவுசர்-வேட்டி கட்டுவாரு. ரைமிங்கா யாரோ பேரும் வச்சுட்டாங்க.அண்ணன் தம்பிக மூனு பேர்லயே அதிகமா நாலாவது வரைக்கும் படிச்சவரு. வாத்தி பொண்ணுக்கு 'ரூட்' போட்டதுல துரத்தி விட்டுட்டதா சொல்வாரு. தினத்தந்திய மட்டும் கரைச்சு குடிப்பாரு. சுப்பு கடை டீ ல போட்டு. லேபர் ஆர்கனைசேஷன் பத்தி எல்லாம்-அதுவும் இன்டர்னேஷனல் லேபர் ஆர்கனைசேஷன் பத்தி எல்லாம் இவரு கிட்ட தான் கேட்டு தெரிசுக்குவாங்க.சும்மா அடிச்சு உடுவாரு.அமார்த்தியா சென் கணக்கா.

தலையோட வேலையே ஊருக்குள்ள பேரு வைக்கிறதுதான்.பேருன்னா பட்டாசும் கிளப்பும்.பற்றியும் எரியும்.வவுறன்(வயிறு உடையோன் என்பதன் மரு உ), பின்னூசியான், கடுவான் இந்தப் பேரு எல்லாம் பிரச்சினை கிளப்பாத பேருக.

கல்யாணம் ஆகாத ஆளு. பிரம்மச்சாரினு எல்லாம் சொல்ல முடியாது. அங்க,இங்க போய் காசு சம்பாதிச்சு, காரு வாங்கி, வூடு கட்டி அரைவயசுல என்ன சந்தோஷம், இங்க வா உலகத்த நம்ம ஊருக்கு கொண்டு வரலாம்னு சொல்ற மனுஷன்.

சரி கெட்ட பழக்கம் எதுவும் இல்லையா? இருக்கே. என்னை மாதிரியே கவிதை எழுதி மத்தவங்க கழுத்த அறுக்கிறது, நோன்பி(திருவிழா)னு வந்தா மைனர் ஷோக்கு பண்ணி-மூஞ்சி நிறைய பவுடரு பூசி-கலர்க் கண்ணாடி போட்டு பார்க்கிறவங்களை தலை தெறிக்க ஓட வைக்கிறது, 'சீன் பாத்'(வாய்க்கால்ல பொண்ணுக குளிக்கிற இடம்) எடுக்கிறன்னு சொல்லி ஜிகினா வேலை பண்ணுறதெல்லாம்,ராசவுக்கு பொழுதுபோக்கு.

'வலைப்பதிவுகள்' குறித்து கூட டவுசருக்குத் தெரியும். சில பேர்களை எல்லாம் தெளிவா சொல்லுவாரு. சரி இவரை பத்தியே சொல்லிட்டு இருந்தா எப்படி இதை முடிக்கிறது.ஆங்! ஒரு விஷயம் இருக்கு.நம்ம கணேஷ் க்கு பேரு வெச்சாரு.அர்த்தம் எல்லாம் கேட்க கூடாது.எனக்குத் தெரியாது.

பேரு தெரியுமா? "ஜில் ஜில் ராணி,புல் புல் ராஜா".

9 எதிர் சப்தங்கள்:

ilavanji said...

கணேஷுக்கு இது தேவைதான்! :)

Anonymous said...

இதென்ன தூக்கு ராணி அமுக்கு ராசா மேட்டரா?

தருமி said...

ஒரு சின்ன சந்தேகம்: புல்..புல் ராஜா-வில புல்லுக்கு ஸ்பெல்லிங் என்னங்க? புல் / full ..?

Ganesh Gopalasubramanian said...

யோவ் மணி...
வலைப்பதிவு பக்கம் ஆளக்காணும்னு சொல்லி ஃபீல் பண்ணினதுக்கு எனக்கு தேவை தான்.

இளவஞ்சி..... நம்மல கவுக்க ஆளு வந்திட்டாங்கப்பா

ilavanji said...

சொல்ல மறந்தது... கலக்கலா இருக்கு எழுத்துநடை..

சீரியஸ் முகமூடிய கழட்டி ஓரமா வச்சிட்டு கொஞ்சநாளைக்கு இப்படி போட்டுத்தாக்குங்க! :)

ஜெ. ராம்கி said...

Title TASMAC logovaa?! There was one Bar shop in Jones Road called "Sorgalogam" :-)

G.Ragavan said...

அட! மாட்டிக்கிட்டது கணேஷா.......

அய்யா மணிகண்டா...பேரச் சொன்னா போதுமா...அதுக்குப் பொருள் வெளக்கம் வேண்டாமா....இங்க பல பேரு தலசுத்தி வாய் தொறந்து மயங்கி விழுந்துட்டாங்களே.......

Vaa.Manikandan said...

நன்றி இளவஞ்சி. ஸீரியஸ் முகமூடி வேணுங்கிற போது போட்டுக்கலாம்.என்ன நான் சொல்றது?

அய்யா அனானிமஸ் ஏதோ நம்ம பொழப்பு சிவனேனு ஓடுது, தமிழ்மணத்துல இருந்து துரத்த முடிவு பண்ணீட்டீங்களா?

உங்க செளகரியம் தருமி.கணேஷ், டவுட்ட க்ளியர் பண்ணு பா!

இங்க டாஸ்மாக் எல்லாம் கிடையாது ராம்கி, எல்லாம் பப் தான்,ஜாலி தான்.

ராகவன் பொருள் விளக்கம்னா, டவுசருக்கு தந்தி அடிக்கட்டுமா?

Vaa.Manikandan said...

நன்றி இளவஞ்சி. ஸீரியஸ் முகமூடி வேணுங்கிற போது போட்டுக்கலாம்.என்ன நான் சொல்றது?

அய்யா அனானிமஸ் ஏதோ நம்ம பொழப்பு சிவனேனு ஓடுது, தமிழ்மணத்துல இருந்து துரத்த முடிவு பண்ணீட்டீங்களா?

உங்க செளகரியம் தருமி.கணேஷ், டவுட்ட க்ளியர் பண்ணு பா!

இங்க டாஸ்மாக் எல்லாம் கிடையாது ராம்கி, எல்லாம் பப் தான்,ஜாலி தான்.

ராகவன் பொருள் விளக்கம்னா, டவுசருக்கு தந்தி அடிக்கட்டுமா?