Nov 13, 2005

அனானிமஸ் தறுதலைகளுக்கு

அனானிமஸ் தறுதலைகளுக்கு

அனானிமஸ் தறுதலைகளுக்கு வணக்கம்.மன்னிக்க உங்களுக்கு எதற்கு வணக்கம்?.உங்களை கவிஞர் மனுஷ்யபுத்திரனின் சொற்களில் சொல்வதானால் "இருட்டில் கல்லெறிந்து விட்டு ஓடுபவர்கள்","வெறுப்பை உண்டு வாழும் புழுக்கள்".

கருத்துச் சுதந்திரம் இவ்வளவு பரந்த வெளியாக உங்கள் முன் விரிந்து கிடக்கும் நிலையில் கூட உங்களுக்கு வெளிச்சத்தை மறைக்க பல இருள்களை இணைத்து கட்டிய கருமை தேவைப் படுகிறது.

மிக தந்திரமான மனோவியல் தாக்குதல், உங்களைப் பிடிக்காதவனின் பிறப்பினைக் குறித்த வினாக்களைத் தொடுப்பதும், அவன் அந்தரங்கத்தைக் கீறிப் பார்த்து உள் நுழைய முயல்வதும்.அதனை பெரும்பாலும் திறமையாக செய்து முடித்து விடுகிறீர்கள்.திரைப்படப் போஸ்டரில் நடிகையின் முகத்தில் சிறுநீர் கழித்து அடையும் காம உச்சத்திற்கும் முகமற்று மற்றவரின் முகத்தில் உமிழ்வதற்கும் பெரிதும் வித்தியாசம் தெரியவில்லை.

தன்னால் இயலாத செயலை சக மனிதன் ஒருவன் முடிக்கும் போதோ அல்லது இறுதிப் புள்ளி நோக்கி பயணிக்கும் போதோ அவனது ஆடைகளைக் கிழித்து நிர்வாணப் படுத்தி வெளியேற்றச் செய்யப்படும் முதல் முயற்சி உங்கள் பெயரற்ற விமர்சனங்கள்.

முகம் பொருத்தாது ஒருவனால் விமர்சனம் செய்யப் படும் போது அது படைப்பினை தவிர்த்த தனிப்பட்ட வெறுப்பாக இருக்கும்.இருக்கிறது.படைப்பில் தன் இருப்பை நிலை நிறுத்த இயலாதவரின் சூழ்ச்சிகள் அதற்கான நடவடிக்கைளில் முதல் அடியை வைத்தவனைக் நிலை குலையச் செய்து விடும்.

இதுவரை படிப்பதற்கான களம் தெளிவாக இருந்தது. இணையம் எழுதுவதற்கான தளத்தையும்,படைப்பாளி இயங்குதலுக்கான தளத்தையும் வழங்கி இருக்கிறது.முதக் பதிவை பதிப்பித்து என் பெயரை பார்க்கும் போது,அந்தர வெளியில் உலவும் பரவசத்தை அடைந்தேன். இன்னும் பலருக்கும் அவ்வாறு தான் இருந்திருக்கும்.தாழ்வான விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல்,விகாரமான சூழலுக்கு வழி வகுக்கும்.இன்னும் நுழையாமல் எட்ட நின்று இதன் இயக்கத்தை கவனிக்கும் பல்வேறு படைப்பாளிகளின் வரவை உங்கள் விமர்சனங்கள் தடுக்கும்.

இந்த ஊடகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு கணிப்பொறியில் தமிழ் படிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது.இதன் பயணமும் இன்னும் நீண்டு கிடக்கிறது.


ஜாலியா முடிகலாமா? சிறுபுள்ளத்தனமா என்னையும் திட்டாதீங்க....

47 எதிர் சப்தங்கள்:

Ram.K said...

தூள் கிளப்பிட்டே மாமே!!!
(ஜனகராஜ் சொல்வது போல)
:))

குமரன் (Kumaran) said...

:-)

சிறுபிள்ளைத்தனமாகத் தானே திட்டக்கூடாது. பெரும்பிள்ளைத்தனமா திட்டலாமா? :-)

முகமற்ற தறுதலைகள் முக்கால்வாசிப்பேர் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரிந்தே செய்பவர்கள். அவர்கள் இங்கு மட்டும் அல்ல. எங்கு போனாலும் இருப்பார்கள். அவர்கள் எழுதுவதை முடிந்தவரை நகைச்சுவையாய் எடுத்துக்கொண்டு, முடியவில்லை என்றால் ignore செய்துவிட்டுப் போகவேண்டியது தான். பதிலடி கொடுக்க முயன்றால் அதுவே அவர்களுக்கு ஊக்கமாய்ப் போய்விடும்.

ENNAR said...

ஏன் இந்த பதிவாளர்கள் அனானிமஸ் பின்னூட்டமிடாமல் செய்து கொள்ள வேண்டியது தானே.
சிலர் நாம் படிக்க முடியாத அளவிற்கு அசிங்கமாக பின்னூட்டம் இட ஏன் அனுமதிக்கவேனும். இதில் பதிவாளர்களுக்கம் ஏதோ சுகமும் இருக்கும்போல் தெரிகிறது.

Anonymous said...

கவிதை நல்லாருக்கு...

Vaa.Manikandan said...

என்னது கவிதையா? யாருப்பா அது?

//பெரும்பிள்ளைத்தனமா திட்டலாமா? :-)//
திட்டுங்க...அதுக்குதானே இங்க இருக்கேன்.

//தூள் கிளப்பிட்டே மாமே!!!//
இன்னும் கிளப்பலாம்...

//ஏன் இந்த பதிவாளர்கள் அனானிமஸ் பின்னூட்டமிடாமல் செய்து கொள்ள வேண்டியது தானே.//
அண்ணா! என்னங்கண்ணா? இது சுதந்திர நாடுங்கண்ணா.

சிங். செயகுமார். said...

நான் இத பத்தி மனசுல கொஞ்சம் கோவ பட்டேன், நீங்க பதிவா போட்டுடீங்க. இருந்தாலும் ஓர் கலைஞனுக்கும் இரண்டு வகை விமர்சனங்களும் ஈசியா எடுத்துக்கிற சூழ் நிலை எல்லார்க்கும் அமையனும்.

Anonymous said...

கலைஞனா? யாரு கலைஞன்? அட போப்பு, நீ வேற வெவரம் புரியாம பேசிக்கிட்டு.

மணிகண்டப்பு, மனுசபுத்தரன் அனானிமஸ் பின்னூட்டம் (எந்த மடையன் உருவாக்குனான் இந்த வார்த்தைய?) போடுறவங்கள இன்னொன்னு கூட சொல்றாரு. சுயமைதுனம் பண்றவங்கிறாரு. அவருக்கு பயம் அவுரு அடிக்குற கூத்துல்லாம் வெளிய தெரியுதேன்னு. மணிகண்டப்பு, உனக்கும் நாப்பது வயசானா எலக்கிய பாலிடிக்சு புரியும்ப்பு.

Vaa.Manikandan said...

நன்றி செயகுமார்.

அனானிமஸ் அப்பு...மேட்டரு மனுஷ்யபுத்திரனப் பத்தியோ, அவர் அனானிமஸ் அ எப்படி சொல்றாருனோ இல்லை.நீங்க அவரைப் பத்தி சொல்றீங்க பாரு...அத தெளிவா,பயம் இல்லாம பெயரைச் சொல்லி சொல்லுங்க...அது தான் மேட்டர்...மத்ததெல்லாம் பீட்டரு சாமி!பீட்டரு.

Sri Rangan said...

கருத்துக்கு நன்றி.நல்ல பார்வை.

Anonymous said...

AATHUU IKKU EN NAYEE MAATHEEREE KOORAIKERAI

FREEDOM IS EVERHWHERE

YOU TAKE IT OR LEAVE IT

Anonymous said...

kuch kya poltha

Amar said...

Very well then.
Hope you get the desired number of comments.... ;-)


Signed
Samudra

Vaa.Manikandan said...

அதையேதான் நானும் சொல்றேன்.சுதந்திரமா பேசுங்க. நன்றி ரங்கன்,சமுத்ரா.

Vaa.Manikandan said...

abc puriyalaiyaa?

Anonymous said...

dey munaa punaa poi vera velai paarudaa mayiru

Anonymous said...

dey munaa punaa poi vera velai paarudaa mayiru

Anonymous said...

dey munaa punaa poi vera velai paarudaa mayiru

Anonymous said...

dey munaa punaa poi vera velai paarudaa mayiru

Anonymous said...

dey munaa punaa poi vera velai paarudaa mayiru

Anonymous said...

enakku oru mayiru puthiranayum theriyaathu, nee venumaana poi avanukku kaimathunam sey

ஜெ. ராம்கி said...

நல்ல முயற்சி. இதுவரை முகமூடி போடாதவன் என்கிற தகுதிதான் எனக்கு தைரியம்!

தாணு said...

மணிகண்டன்,
எப்பாடியோ பின்னூட்ட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. வாழ்த்துக்கள்

G.Ragavan said...

மணிகண்டனின் கருத்துகளோடு நான் ஒத்துப் போகிறேன். தான் சொல்ல வந்ததை நேரடியாக சொல்ல இயலாத கோழையாகத்தான் நான் பெயரிலிகளைப் பார்க்கிறேன். சொல்வது சரியோ தவறோ. நேர்மை தேவை. அது இல்லாத பொழுது என்ன சொன்னால் என்ன.....தன்னுடைய பெயரைக்கூட போட முடியாத அளவிற்கு ஒரு கருத்தைச் சொல்கின்றார்கள் என்றால் அந்தக் கருத்திற்கு நாம் எவ்வளவு மதிப்பு கெடுக்க வேண்டும் என்று உணர வேண்டும்.

Vaa.Manikandan said...

அடேயப்ப!
நல்ல சொற்களைப் பழகி இருக்கிறீர்.உங்களை மாதிரியான நல்லவர்கள்/வல்லவர்களால் தான் சமுதாயம் நன்றாக இருக்கிறது.தொடருங்கள் அனானிமஸ்.ஆனால் ஒரு பின்னூட்டத்திலேயே நான் புரிந்து கொள்வேன்.

//இதுவரை முகமூடி போடாதவன் என்கிற தகுதிதான்//
நாம எல்லாம் யாரு ராம்கி?

//எப்பாடியோ பின்னூட்ட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. //
என்னபா தானு, நான் என்னமோ பின்னுட்டதிற்கு அலயற மாதிரி எழுதுறீங்களே....எங்கய்யா இருக்கீங்க?

நன்றி ராகவன்.

Vaa.Manikandan said...

அடேயப்ப!
நல்ல சொற்களைப் பழகி இருக்கிறீர்.உங்களை மாதிரியான நல்லவர்கள்/வல்லவர்களால் தான் சமுதாயம் நன்றாக இருக்கிறது.தொடருங்கள் அனானிமஸ்.ஆனால் ஒரு பின்னூட்டத்திலேயே நான் புரிந்து கொள்வேன்.

//இதுவரை முகமூடி போடாதவன் என்கிற தகுதிதான்//
நாம எல்லாம் யாரு ராம்கி?

//எப்பாடியோ பின்னூட்ட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. //
என்னபா தானு, நான் என்னமோ பின்னுட்டதிற்கு அலயற மாதிரி எழுதுறீங்களே....எங்கய்யா இருக்கீங்க?

நன்றி ராகவன்.

Anonymous said...

As long as anonymous option is there in blogs,people will use it.
If you dont want anonymous postings close that option.

கொழுவி said...

பெயரிலி, முகமூடி என்பவையே குறிப்பிட்ட சிலரைக் குறிக்கும் பெயர்களாக இணையத்தில் பிரபலமானபிறகும், அந்தப் பெயர்களை அநாமதேயங்களைக் குறிக்கப் பயன்படுத்துவது சரியன்று.

நிற்க, கண்ணியமான முறையில் எழுதப்பட்ட விதயத்தோடு சம்பந்தப்பட்டு வாதங்கள், கருத்துக்களை முன்வைக்கம் அநாமதேயங்களையெல்லாம் 'தறுதலைகள்' என்று சொல்வது என்னைப் பொறுத்தவரை தறுதலைத்தனமானது. (தறுதலை என்ற வார்த்தையைப் பாவிப்பது என் ஜனநாயக உரிமை).
அதுசரி மணிகண்டா, அநாமதேயப் பின்னூட்டங்ளை நிறுத்த 'ஜனநாயக நாடு' என்று கோசம் போடும் நீங்கள் கருத்துக்களை எதிர்கொள்வதில் மட்டும் அதை யோசிக்கவில்லை? அநாமதேயங்களை நிறுத்த உங்கள் கைக்குள் அதிகாரம் இருந்தும் அதைச் செயற்படுத்தாது சும்மா பதிவு போடுவது ஏனோ?

அன்பு said...

முகமூடி


மற்றவர் மனத்திற்குள்
நுழைய முயல்பவனே
நீ உன் மனத்திற்குள்
நுழைய முயன்றதுண்டா?

உன் மனத்தின்
இருண்ட அறைகளுக்கும்
அங்கே உலவும் பேய்களுக்கும்
நீ பயப்படுகிறாய் அல்லவா?

உன் மனம்
உன் அசிங்கங்களின்
குப்பைக் கூடையாக
இருக்கிறதல்லவா?

உன் மனம்
பயத்தினாலும் கூச்சத்தினாலும்
உன் ரகசியமான ஆசைகளை
யாருக்கும் தெரியாமல்
ஒளித்து வைக்கும்
அந்தரங்க அறையாக
இருக்கிறதல்லவா?

உன் மனம்
அந்த ஆசைகளால்
நீலப்படம் தயாரித்துக்
கனவு என்ற
தன் அந்தரங்க அரங்கத்தில்
போட்டுப் பார்த்து
ரசிக்கிறதல்லவா?

அந்தப் படத்தில்தான்
நீ ஒரு நடிகனாக இல்லாமல்
உண்மையாக இருக்கிறாய் என்பதை
அறிவாய் அல்லவா?

அந்தப் படத்தை
பகிரங்கமாக
உன்னால் வெளியிட முடியுமா?

உன் மனம் ஒரு பாற்கடல்
அதைக் கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல
ஆலகாலமும் வெளிப்படும் என்பதை
நீ அறிவாய் அல்லவா?

உன் மனம் ஒரு பருந்து
அது மேலே பறந்தாலும்
கீழே செத்துக் கிடக்கும்
எலிகளைத் தேடுகிறதல்லவா?

உன் மனம் ஒரு சல்லடை
அது சாற்றை
ஒழுக விட்டுவிட்டுச்
சக்கையை வைத்துக் கொள்கிறது
அல்லவா?

உன் மனம் ஒரு மகா சமுத்திரம்
பயங்கர மர்மமான
அதன் ஆழம்
உனக்கே தெரியாதல்லவா?

உன் முகவரி
உன் முகத்தில் இல்லை
உன் மனத்தில்தான்
இருக்கிறது

அதை யாருக்காவது
தெரிவிக்கும் தைரியம்
உனக்கு உண்டா?

நம்முடைய முகவரிகள்
பொய்யானவை
நம்முடைய முகங்கள்
பொய்யானவை

நாம் யாரும்
நம்முடைய முகங்களில் இல்லை
அதனால்
யாரும்
யாரையும்
பார்க்க முடிவதில்லை

சமூகம் என்பது
ஒரு முகமூடி
நடன அரங்கம்

நாம் எல்லோரும்
நம் முகங்கள் என்ற
முகமூடிகள் அணிந்து
ஆடிக்கொண்டிருக்கிறோம்

நம் முகமூடிகளே
நம் மகுடங்கள்
அவை கழற்றப்பட்டுவிட்டால்
யாரும் அவரவர் அரியாசனத்தில்
அமர்ந்திருக்க முடியாது

- கவிக்கோ

Anonymous said...

இதை படிங்கப்பு

http://sadhayam.blogspot.com/2005/11/blog-post_14.html

நந்தன் | Nandhan said...

manikandan, intha prachhanikku theervu ennanu ninaikareenga? Neenga 'tharuthalai'nnu sonnathunala maatrangal erpatuduma? Unmaiya sonna avangaloda nokkam ungalai 'tharuthalai'nu solla vikarathuthan.
'Purpose terrorism is to terrorise' enpargale athupola.

thamizhla innum azhaga evlovo ezhuthalam. Vitu thallitu velaiya paarunga.

appadi ille, ithuvum ungal pathivai parapara panathai maatra oru murachinna...intha commenta kandukaatheenga.

Nandha

(Sorry for typing in thanglees :))

Anonymous said...

//நிற்க, கண்ணியமான முறையில் எழுதப்பட்ட விதயத்தோடு சம்பந்தப்பட்டு வாதங்கள், கருத்துக்களை முன்வைக்கம் அநாமதேயங்களையெல்லாம் 'தறுதலைகள்' என்று சொல்வது என்னைப் பொறுத்தவரை தறுதலைத்தனமானது.//

இதை நான் வழிமொழிகிறேன்.

Anonymous said...

கவிக்கோமாளி அவர்களே, உப்புசப்பில்லாத வாக்கியங்களை உடைத்துப் போட்டால் கவிதை ஆகிவிடுமா?

Vaa.Manikandan said...

//பெயரிலி, முகமூடி என்பவையே குறிப்பிட்ட சிலரைக் குறிக்கும் பெயர்களாக இணையத்தில் பிரபலமானபிறகும், அந்தப் பெயர்களை அநாமதேயங்களைக் குறிக்கப் பயன்படுத்துவது சரியன்று.//

சரியான கருத்து.திருத்திக் கொள்கிறேன்.
//அநாமதேயங்களை நிறுத்த உங்கள் கைக்குள் அதிகாரம் இருந்தும் அதைச் செயற்படுத்தாது சும்மா பதிவு போடுவது ஏனோ?//

நான் எனக்கு எதிரான கருத்துக்களை என்றுமே ஒதுக்கியதில்லை கொழுவி.அநாமதேய பின்னூட்டங்கள் என்னும் பெயரில் தனிப்பட்ட தாக்குதலை எதிர்க்கவே என் பதிவு.

இது உன்மையிலேயே டோண்டு வா எனக்குத்தெரியாவிடில் எனக்கும் பைத்தியம் பிடிக்கும்.

அன்பு,இந்த வரிகள் பெரும்பாலும் அனைவருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.என் பதில் தெவை இல்லாத ஒன்று.

கருத்துக்கு நன்றி நந்தா.

//கவிக்கோமாளி அவர்களே, உப்புசப்பில்லாத வாக்கியங்களை உடைத்துப் போட்டால் கவிதை ஆகிவிடுமா?//

ஏங்க நக்கீரரே..நான் எப்போ கவிதைனு சொன்னேன்,எதைக் கவிதைனு சொன்னேன்?சாட்டர்டே நைட்,இன்னும் டைட்டா?

kirukan said...

See.. John Gabriels Greater Internet Fuckwad theory which talks about anonymity...

http://kirukalkal.blogspot.com/

Anonymous said...

வா. மணிகண்டரே, நான் கவிக்கோமாளி என்று சொன்னது கவிக்கோ என்ற பெயரில் உளறியிருக்கும் புண்ணியவாளரை.

dondu(#11168674346665545885) said...

உண்மையான டோண்டு என்று கண்டுகொள்ள 2 சோதனைகள் உள்ளன. என்னுடைய ப்ளாக்கர் எண் 4800161. அது Dondu(#4800161) என்று வரும். அதன் மேல் எலிக்குட்டியை வைத்துப் பார்க்கவும்.

1. கீழேயும் அதே ப்ளாக்கர் எண் தெரிய வேண்டும்.
2. போட்டோ எனேபிள் செய்யப்பட்டிருந்தால் அதுவும் வரும்.

இரண்டும் சேர்ந்து வந்தால்தான் அது உண்மையான டோண்டு. மேலும் நான் இடும் பின்னூட்டங்களின் நகல் என்னுடைய இப்பதிவில் வரும். உங்களது இப்பதிவில் மேலே வரும் பின்னூட்டம் மனம் பிறழ்ந்த போலி டோண்டு போட்டது என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்குமென நினைக்கிறேன். இப்பின்னூட்டம் என்னுடைய இப்பதிவில் 498-ஆவது பின்னூட்டமாக நகலிடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: மேலும், என்னுடைய எழுத்துக்களை அறிந்தவர்கள் ஒரே நொடியில் போலி டோண்டுவை அடையாளம் கண்டு கொள்வார்கள். அதையும் மீறி எல்லாம் தெரிந்தும் என் பெயரில் உள்ள போலி பின்னூட்டங்களை அப்படியே அழிக்காமல் வைத்திருக்கும் இறைநேசன், வீர வன்னியன் ஆகியோரை பற்றி என்ன கூறுவது? வெட்கம்!!

Vaa.Manikandan said...

//பின்னூட்டங்களை அப்படியே அழிக்காமல் வைத்திருக்கும் இறைநேசன், வீர வன்னியன் ஆகியோரை பற்றி என்ன கூறுவது? வெட்கம்!!//

என் பதிவில் தனிப்பட்ட தாக்குதலாக வரும் பின்னூட்டங்களை மட்டுமே நீக்குவது எனக் கொள்கை வைத்திருக்கிறேன் டோண்டு. உங்கள் பெயரில் வந்த பின்னூட்டத்தை நீக்க இயலாது என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

"என் பதிவில் தனிப்பட்ட தாக்குதலாக வரும் பின்னூட்டங்களை மட்டுமே நீக்குவது எனக் கொள்கை வைத்திருக்கிறேன் டோண்டு. உங்கள் பெயரில் வந்த பின்னூட்டத்தை நீக்க இயலாது என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறேன்."

மணிகண்டன் அவர்களே நான் எழுதியது போன்ற ஒரு தோற்றத்தைத் தந்து நான் எழுதியிருக்கவே முடியாத தரக்குறைவில் ஒருவன் எழுதியிருக்கிறான். இதை விட ஒரு பெரிய தனிப்பட்ட தாக்குதல் இருக்க முடியுமா? இது கேரக்டர் கொலை. மேலே நான் சுட்டிய என் பதிவைப் போய் பாருங்கள். இணையத்துக்கு நீங்கள் புதிது என்றால் அது உங்களுக்கு தேவையான தகவல்களைத் தரும்.

இனி உங்கள் விருப்பம். போலி டோண்டுவின் பின்னூட்டங்களை இப்படியே அனுமதித்தால் எனக்கு நடத்தியதை மற்றவருக்கும் நடத்துவான். அவன் பின்னூட்டமிடும் வேறு பெயர்கள் மாயவரத்தான், ஹல்வாசிடி விஜய், மத்தளராயன் (இரா. முருகன்), எஸ்கே முதலியன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

test

ENNAR said...

//"என் பதிவில் தனிப்பட்ட தாக்குதலாக வரும் பின்னூட்டங்களை மட்டுமே நீக்குவது எனக் கொள்கை வைத்திருக்கிறேன் டோண்டு. உங்கள் பெயரில் வந்த பின்னூட்டத்தை நீக்க இயலாது என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறேன்."//
ஒருவரின் பெயரில் மற்றவர்கள் ஏதேனும் வேண்டுமென்றோ அல்லது அவருடைய பெயருக்கு கலங்கம் உண்டாக்க வேண்டும் என்றோ முறையில்லாம் எழுதியிருக்கும் பட்ச்சத்தில் அந்த சம்பந்தப் பட்டவர் நான் எழுதவில்லை அதை நீக்கி விடுங்கள் என்று சொன்னால் நீக்குவது தானே நல்லது. சட்டசபையிலோ அல்லது மேடையிலோ தவறுதலாக சொன்ன சொல்லையே திரும்ப பெற்றுக் கொள்வதில்லையா? அது போல நான் எழுதவில்லை; எனது பெயரில் யாரோ எழுதியுள்ளார் என சம்பந்த பட்ட நபரே கூறும்போது நீக்குவத தானே நல்லது. இதை நாம் அனுமதித்தால் இது வளர்ந்தல்லவா போகும்.
எனக்கு என்னமோ நிச்சயமா டோண்டு எழுதியிருக்கமாட்டார் என நான் நம்புகிறேன். காரணம் நடையும் அவருடையதல்ல.

Anonymous said...

Its simple dude. Turn off the anonymous commenting feature. You can't keep it open and blame others for the anonymous comments. That is downright stupid.

Vaa.Manikandan said...

சரி எண்ணார் டோண்டு அவர்கள் மீண்டும் என்னிடம் சொல்லும்பட்சத்தில் நீக்கி விடுகிறேன். தற்போதைக்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இருப்பினும் அவருடையதன்று எனத் தெரிந்து இருக்கும் போது அந்த பின்னூட்டம் இருப்பதில் என்ன தவறு எனத் தெரியவில்லை. போ.மணிகண்டன் என்னும் பெயரில் இருக்கும் பின்னுட்டத்தை நீக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.அது போலத்தானே இதுவும்?.

குழலி / Kuzhali said...

மணி உங்களுக்கு ஒரு மடல் அனுப்பியுள்ளேன்...

நன்றி

dondu(#11168674346665545885) said...

வா. மணிகண்டன் அவர்களே,

போ. மணிகண்டன் வா.மணிகண்டனிடமிருந்து வேறுபட்டவர் என்பது வெள்ளிடை மலை. ஆனால் என் விஷ்யத்தில் போலி டோண்டு Dondu(#4800161) என்று அடைப்புக்குறிக்குள் என்னுடைய ப்ரொஃபைல் எண்ணையும் கொடுத்து, என்னுடைய போட்டொவையும் போட்டு பின்னூட்டமிடுகிறான். எலிக்குட்டியை Dondu(#4800161) மேல் வைத்துப் பார்த்தால் உண்மை புரியும். அதை செய்யக்கூட சோம்பல்படுவார்கள் பலர் என்பதை அந்த இழிபிறவி எதிர்ப்பார்த்தே செய்கிறது. ஆகவே நீங்கள் இரண்டையும் ஒப்பிடுவது சரியானதில்லை.

இது தனிப்பட்ட தாக்குதலுக்கும் மேல் சீரியஸானது. கேரக்டர் கொலை இது. இந்த விஷயத்தில் வீர வன்னியன் பதிவில் ஜோசஃப் அவர்களே ஏமாந்துபோய் என்னைக் கடுமையாகப் பேச அங்கு குழலி வந்து உண்மையைக் கூறினார். ஜோசஃப் அவர்களுக்கு சங்கடமான நிலை ஏற்பட்டது. என்னிடம் மன்னிப்பும் கோரினார்.

இனிமேல் உங்கள் விருப்பம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ENNAR said...

// சரி எண்ணார் டோண்டு அவர்கள் மீண்டும் என்னிடம் சொல்லும்பட்சத்தில் நீக்கி விடுகிறேன். //
நன்றி
வா.மணிகண்டன், jsri சொன்னதும் நல்ல கருத்துதான்.

Vaa.Manikandan said...

இப்பொழுது டோண்டு,எண்ணார் ஆகியோருக்கு சந்தோஷமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
ok Jsri?

Anonymous said...

அனானிமஸ் தறுதலைகளுக்கு

அனானிமஸ் தறுதலைகளுக்கு வணக்கம்.மன்னிக்க உங்களுக்கு எதற்கு வணக்கம்?.உங்களை கவிஞர் மனுஷ்யபுத்திரனின் சொற்களில் சொல்வதானால் "இருட்டில் கல்லெறிந்து விட்டு ஓடுபவர்கள்","வெறுப்பை உண்டு வாழும் புழுக்கள்".

கருத்துச் சுதந்திரம் இவ்வளவு பரந்த வெளியாக உங்கள் முன் விரிந்து கிடக்கும் நிலையில் கூட உங்களுக்கு வெளிச்சத்தை மறைக்க பல இருள்களை இணைத்து கட்டிய கருமை தேவைப் படுகிறது.

மிக தந்திரமான மனோவியல் தாக்குதல், உங்களைப் பிடிக்காதவனின் பிறப்பினைக் குறித்த வினாக்களைத் தொடுப்பதும், அவன் அந்தரங்கத்தைக் கீறிப் பார்த்து உள் நுழைய முயல்வதும்.அதனை பெரும்பாலும் திறமையாக செய்து முடித்து விடுகிறீர்கள்.திரைப்படப் போஸ்டரில் நடிகையின் முகத்தில் சிறுநீர் கழித்து அடையும் காம உச்சத்திற்கும் முகமற்று மற்றவரின் முகத்தில் உமிழ்வதற்கும் பெரிதும் வித்தியாசம் தெரியவில்லை.

தன்னால் இயலாத செயலை சக மனிதன் ஒருவன் முடிக்கும் போதோ அல்லது இறுதிப் புள்ளி நோக்கி பயணிக்கும் போதோ அவனது ஆடைகளைக் கிழித்து நிர்வாணப் படுத்தி வெளியேற்றச் செய்யப்படும் முதல் முயற்சி உங்கள் பெயரற்ற விமர்சனங்கள்.

முகம் பொருத்தாது ஒருவனால் விமர்சனம் செய்யப் படும் போது அது படைப்பினை தவிர்த்த தனிப்பட்ட வெறுப்பாக இருக்கும்.இருக்கிறது.படைப்பில் தன் இருப்பை நிலை நிறுத்த இயலாதவரின் சூழ்ச்சிகள் அதற்கான நடவடிக்கைளில் முதல் அடியை வைத்தவனைக் நிலை குலையச் செய்து விடும்.

இதுவரை படிப்பதற்கான களம் தெளிவாக இருந்தது. இணையம் எழுதுவதற்கான தளத்தையும்,படைப்பாளி இயங்குதலுக்கான தளத்தையும் வழங்கி இருக்கிறது.முதக் பதிவை பதிப்பித்து என் பெயரை பார்க்கும் போது,அந்தர வெளியில் உலவும் பரவசத்தை அடைந்தேன். இன்னும் பலருக்கும் அவ்வாறு தான் இருந்திருக்கும்.தாழ்வான விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல்,விகாரமான சூழலுக்கு வழி வகுக்கும்.இன்னும் நுழையாமல் எட்ட நின்று இதன் இயக்கத்தை கவனிக்கும் பல்வேறு படைப்பாளிகளின் வரவை உங்கள் விமர்சனங்கள் தடுக்கும்.

இந்த ஊடகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு கணிப்பொறியில் தமிழ் படிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது.இதன் பயணமும் இன்னும் நீண்டு கிடக்கிறது.


ஜாலியா முடிகலாமா? சிறுபுள்ளத்தனமா என்னையும் திட்டாதீங்க....