Sep 10, 2005

நயன் தாரா சினிமாவிற்கு வந்த சூட்சுமம்!

இந்த நயன் தாரா சினிமாவிற்குள் வந்த கதையை திரைத்துறையில் பணிபுரியும் என் நண்பன் சொன்னான்.எல்லோரும் வேறு மாதிரி நினைத்துகொண்டு இருப்பர்.உண்மை இந்தக் கட்டுரையின் முடிவில் தெரியும்/புரியும்.

அதாவுதுங்க.....நானு பாரதியாரின் கட்டுரையை மாங்கு மாங்குனு படிச்சு கண்ணா முழி கண்ணுக்குள்ள போறா மாதிரி பொழிச்சு பொழிச்சுனு டைப்ப் பண்ணி சந்தோஷமா இந்த வலைப்பதிவுல போட்டனுங்க.அட மொத்தமா முப்பது பேரு கூட படிக்காம போய்ட்டாங்க போங்க.எனக்கு பொசுக்குனு போய்டுச்சு.அட என்னங்க பார்தியார் என்ன அவ்வளவு பாவப்பட்ட சென்மமா?

பொக்குனு உக்காந்துட்டு இருந்த என்றகிட்ட பிரெண்டு வந்து சொன்னான்.சும்மா ரவுசுக்குனு ஏதாவது சினிமாக்காரியப் பத்தி போடுன்னு.ஆனது ஆகுட்டும்னு போட்டேன்.நான் இத எழுதும் போத்து என்ற ப்லாக்க பார்த்தவங்க மொத்தம் 4804.(அதாவது பாரதி வரைக்கும்).

நயன் தாராவுக்கு வந்தவங்கள்ல நீங்க எத்தனாவதுன்னு நீங்களே பார்த்துக்குங்க.

ஆமாம் மறந்துட்டேன்.நயன் தாரா "உழைப்பால" சினிமாவுக்கு வந்தாங்களாம்.

4 எதிர் சப்தங்கள்:

ஈழநாதன்(Eelanathan) said...

ஆக வலைவாசகர்களின் வருகைச் சூட்சுமம் உங்களுக்குப் புரிந்துவிட்டது என நினைக்கிறேன்

Vaa.Manikandan said...

ஆமாம் ஈழநாதன்.

Anonymous said...

Ama indha Bharathiar yaarunu sollave illaye?Devayani kooda 'barathi' padthula nadichvar thane?

Ganesh Gopalasubramanian said...

மணி

நான் தொடர்ந்து உங்க பதிவுகளைப் படித்து வருகிறேன். அதனால எனக்கு நயன்தாரா மேல் எந்த ஈர்ப்புமில்லை. :-))

கமர்ஷியலிசமும் வேணும் தானே