டேட்டா அனலிடிக்ஸ் படிக்க விரும்புகிறேன் என்று நிறையப் பேர்கள் சொல்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பாக எழுதிய பதிவொன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். இன்றைய தேதியிலிருந்து பார்த்தால் எதிர்காலத்தில் அதிகளவு கவனம் பெறக் கூடிய நுட்பங்கள் என்று சுமார் முப்பது தேறும். மென்பொருள் துறை என்று இல்லை- எந்திரவியல், தொடர்பியல் என்று பல துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த எண்ணிக்கை பொருந்தி வரும். பத்து அல்லது பதினைந்து நாட்கள் இணையத்தை அலசினால் கண்டுபிடித்துவிடலாம். எந்த டெக்னாலஜி எப்படி இயங்குகிறது என்று ஒவ்வொன்றைப் பற்றியும் நமக்கு மேலோட்டமாகத் தெரிந்து கொண்டால் நமக்கு எது சரிப்பட்டுவரும் என்று புரிந்து கொள்ளலாம். அதன் பிறகு நம்முடைய அனுபவம் என்ன? எதை எடுத்தால் தம் கட்ட முடியும் என்றெல்லாம் கணக்குப் போட்டுக் கொள்ள வேண்டும்.
இதுவரையிலும் நான் ஆரக்கிள் ஆப்ஸில் இருந்தேன். வாடிக்கையாளர்களிடமிருந்து பெறக்கூடிய கேட்புப் புள்ளி (கொட்டேஷன்) தொடங்கி பொருட்களைத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்து அல்லது வேறொரு நிறுவனத்திடமிருந்து பெற்று வாடிக்கையாளருக்கு அனுப்பி வைத்து அதற்குரிய பணத்தை வசூல் செய்து நிறுவனத்தின் கணக்கில் சேர்ப்பது வரைக்கும் செய்யக் கூடிய பணிகளை மென்பொருளைப் பயன்படுத்தி நிறுவனங்கள் செய்கின்றன. இதையெல்லாம் செய்வதற்கு எந்த மென்பொருள் சரியானதாக இருக்கும்? அதன் விலை என்ன? சந்தையில் கிடைக்கும் மென்பொருளை அப்படியே பயன்படுத்த முடியுமா அல்லது அதில் ஏதேனும் மாறுதல்களைச் செய்ய வேண்டுமா? மென்பொருளை நிறுவனத்தில் நிறுவ என்னென்ன செயல்களைச் செய்ய வேண்டும், அதில் ஏதேனும் கோளாறு வந்தால் அதனைச் சரி செய்து கொடுத்தல் உள்ளிட்ட ஆலோசகர் பணியினைச் செய்து வந்தேன்.
ஒரு தருணத்தில் ‘இதற்கு மேல் நம்மால் தாக்குப்பிடிக்க முடியாது’ என்ற எண்ணம் தோன்றியது. அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. நான் செய்கிற வேலையை ஐந்து முதல் பத்து வருட அனுபவமுள்ள ஓர் இளைஞனால் செய்துவிட முடியும். அவனுக்கு வருடம் பத்து அல்லது பனிரெண்டு லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்தால் போதும். எனக்கு அதனைவிடவும் சம்பளம் அதிகம். ‘இவனை வெச்சுட்டு எதுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும்’ என எந்தத் தருணத்தில் வேண்டுமானாலும் நிறுவனம் யோசிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்தத் துறையிலேயே இன்னமும் சில வருடங்கள் தாக்குப்பிடிக்க வேண்டுமானால் வேறு சிலவற்றைப் படித்து, சான்றிதழ்கள் பெற்று என்னை நானே புதுப்பிக்க வேண்டும் எனத் தோன்றியது. எப்படியும் படிக்கப் போகிறோம்; புத்தம் புதிதாக ஒன்றைப் படித்துவிடலாமே என்ற முடிவுக்கு வந்தேன். அப்பொழுதுதான் ‘புதிய துறைகள் என்ன?’ ‘அதில் எது நமக்கு ஒத்து வரும்’ என்றெல்லாம் தேடத் தொடங்கியிருந்தேன்.
உண்மையைச் சொன்னால் எனக்கு மென்பொருள் துறையில் வெகு உயரத்துக்குச் செல்ல வேண்டும் என்றெல்லாம் எண்ணமில்லை. இன்னமும் பத்து வருடம் சம்பாதிக்குமளவுக்கு தகுதியானவனாக இருந்தால் போதும். பிழைப்புக்கு ஒரு வேலை. அதனால்தான் துணிந்து புதியதான ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ஒன்றிரண்டு வருடங்களில் சரிப்பட்டு வரவில்லையென்றால் விட்டுவிட்டு ஏதாவதொரு சுயதொழிலைச் செய்ய வேண்டும் என்பதுதான் திட்டம்.
மேலே சொன்னது போல புதிய நுட்பங்களைத் தேடிக் கொண்டிருந்த போது நமக்கு என்ன தெரியும் என்ற கேள்வி வந்தது. ஆரக்கிள் ஆப்ஸ் மாதிரியான ஒரு நுட்பத்தில் வேலை செய்கிறவர்களுக்குத் தெரிந்திருக்கும். இத்தகைய பணிகளைச் செய்யும் போது இந்நிறுவனங்களிடம் ஏகப்பட்ட தகவல்கள் இருக்கும். எந்த வாடிக்கையாளர் எந்தப் பொருளை வாங்குகிறார், வருடத்தில் எவ்வளவு முறை வாங்குகிறார் என்றெல்லாம் தகவல்கள் கொட்டிக் கிடக்கும். இவற்றைப் பயன்படுத்தி ‘அடுத்த மாதம் இந்தத் தேதியில் இதையெல்லாம் அவர் வாங்கப் போகிறார்’ என்று கணிக்க முடியும். ஆனால் பிரச்சினை என்னவென்றால் எந்தத் தகவலை வைத்துக் கொண்டு இதைக் கணிக்க முடியும் என்று தெரியாது. அங்குதான் டேட்டா அனலிடிக்ஸ் மாதிரியான நுட்பம் உள்ளே வருகிறது. டெக்னாலஜி என்று பார்த்தால் எனக்கு இதில் அன்னா, ஆவன்னா கூடத் தெரியாது. ஆனால் தரவுகளைப் பயன்படுத்துவதில் ஓர் ஆர்வமுண்டு.
‘வேலையை விட்டுவிட்டு புதியதான ஒன்றைத் தேர்ந்தெடுப்பதா?’ ‘இப்பொழுது எல்லாமும் சரியாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது, எதற்கு இப்படியொரு முடிவு’ என்ற கேள்விகள் எல்லாம் எழாமல் இல்லை.
‘வேலையை விட்டுவிட்டு புதியதான ஒன்றைத் தேர்ந்தெடுப்பதா?’ ‘இப்பொழுது எல்லாமும் சரியாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது, எதற்கு இப்படியொரு முடிவு’ என்ற கேள்விகள் எல்லாம் எழாமல் இல்லை.
ராதாகிருஷ்ணன் என்றொரு நிசப்தம் வாசகர் இத்துறையில் பேராசிரியர். தற்பொழுது ஐ.ஐ.எம்மில் ஆராய்ச்சிப்படிப்பைச் செய்து கொண்டிருக்கிறார். ‘எங்கேயிருந்து தொடங்குவது’ என நான் சொல்லித் தருகிறேன் என்று பாடத்தை அனுப்பி வைத்தார். அகிலா மாதிரியான நண்பர்கள் இந்தப் பாடத்தில் தயாரிப்புகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் உதவியுடன் நம்மாலும் கற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் புதிய வாய்ப்பு கிடைத்தவுடன் சரி என்று சம்மதித்தேன். சம்பளமும் கிடைக்கிறது. கற்றுக் கொள்ள வாய்ப்புமிருக்கிறது. அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் நிறைவாகக் கற்றுக் கொள்ள முடியும் என நினைக்கிறேன். எல்லாமே Flying Blind தான்.
புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ள விரும்புகிறவர்கள் மேம்போக்காக ஒரு துறையை எடுக்க வேண்டியதில்லை. அனுபவஸ்தர்கள் முதலில் ‘ஹாட்’ துறைகளை அடையாளம் கண்டறிந்து அதன் பிறகு இது நமக்கு ஒத்து வருமா என்று பார்க்க வேண்டும். அப்படி ஒத்து வந்தால் எதையெல்லாம் படிக்க வேண்டும், எங்கேயிருந்து தொடங்குவது என்பதைக் கண்டறிந்து பிறகு அதில் படிக்க ஆரம்பிக்கலாம். அதுதான் சரியாக வரும். மேம்போக்காக கேள்விப்படுகிற சில கவர்ச்சிகரமான சொற்களை அப்படியே பின்பற்ற வேண்டியதில்லை. அதில் வெற்றிக்கான சாத்தியக் கூறுகள் அரிது.
8 எதிர் சப்தங்கள்:
//ராதாகிருஷ்ணன் என்றொரு நிசப்தம் வாசகர் இத்துறையில் பேராசிரியர். தற்பொழுது ஐ.ஐ.எம்மில் ஆராய்ச்சிப்படிப்பைச் செய்து கொண்டிருக்கிறார். ‘எங்கேயிருந்து தொடங்குவது’ என நான் சொல்லித் தருகிறேன் என்று பாடத்தை அனுப்பி வைத்தார். அகிலா மாதிரியான நண்பர்கள் இந்தப் பாடத்தில் தயாரிப்புகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்//
விக்ரமன் பட கதாபாத்திரங்கள் போல் எல்லோருமே நல்லவர்களாய் உங்களுக்கு கிடைப்பது போல் எனக்கெல்லாம் கிடைப்பது இல்லை
Understanding data and data integration will provide a strong foundation for data analytics. For learning data, especially big data, here are the big data பிக்டேட்டா related posts:
http://www.nisaptham.com/search/label/பிக்டேட்டா
http://www.nisaptham.com/search/label/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE
எங்கேயிருந்து தொடங்குவது ? Need help on this. As we dont have any friends to help or guide on the topic.
சேக்காளி நீங்க பரவாயில்ல என்னக்கண்டாலே ஒரு 1000 வெட்டும்யய்சே ரெண்டுநாள்ல தந்துடரேன் பாட்டுதான்.குடுத்தா அத 50 ,100 ரா ஒரு ரெண்டு வருசத்தில தந்து முடிச்சிருவாங்க. ஒருத்தர் போதையில உண்மையை சொன்னது ஐசே யாரிட்டயும் ஒரு 1000 வாங்கி சேவிங்எக்கவுண்டில போட்டிடனனும் பிறகு காண்ர நேரம் 50\100 ரா குடுத்து முடிச்சிடனும்
Thanks Much for Geetha for taking pain to translate in Tamil. Best wishes for her and Mani for getting this started.
I`m sure lot of them will be benefited with this (atleast to know where to start)
I am also working in Oracle EBS background and trying to learn big data for quite some time. Please share the curriculum or lessons shared by the professor if you can/possible. It will be big help for me. I have some programming knowledge.
Thanks Krishnasivam for your encouraging comments!
Is it good to learn block chain technology
Post a Comment