வெகு நாட்களாக திட்டமிட்டதுதான். கடைசியில் அந்த நாள் வந்துவிட்டது. பெங்களூரிலிருந்து கோயமுத்தூருக்கு குடி பெயர்கிறோம். இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. நிறைய யோசிக்க வேண்டியிருந்தது. 'என்ன இருந்தாலும் பெங்களூரு மாதிரி வராது' என்று சொந்தக்க்காரர்கள் சொன்னார்கள். 'குழந்தைகளின் படிப்பு பாதிக்கும்' என்று சிலர் சொன்னார்கள். யார் சொல்வதையும் தட்ட முடியவில்லை. எல்லாவற்றையும் எடை போட வேண்டியிருந்தது.
என்னதான் வெளியூரில் சம்பாத்தியம் அதிகம் என்றாலும் சொந்த ஊருக்கு பக்கத்தில் இருப்பது போல வருமா? படித்து முடித்த பிறகு பதினைந்து வருடங்களாக வெளியூர் வாசம். நிறையத் தொடர்புகள் அறுந்து போய்விட்டன. அப்பாவும் அம்மாவும் தெம்பாக இருக்கும் வரையில் வீட்டில் எப்பொழுதும் திருமண அழைப்பிதழ்கள் நிறைந்து கிடைக்கும். இப்பொழுதெல்லாம் வெகு சொற்பம். 'அவங்களுக்கு கொடுத்தா மட்டும் வரவா போறாங்க' என்று நினைத்துக் கொள்கிறவர்கள் அதிகம். திருமணங்கள் இல்லை. துக்க காரியங்கள் இல்லை. கிடாவிருந்துகள் கூட இல்லை. இப்படியே இருந்தால் அடுத்த தலைமுறையில் முழுமையாகத் தொடர்பற்று விட்டு போய்விடக் கூடும். உள்ளூரில் முக்கால்வாசிப் பேரை அடையாளம் தெரிவதில்லை.
என்னதான் வெளியூரில் கிளை பரப்பினாலும் உள்ளூரில் வேர் ஓட வேண்டும் என்கிற மனநிலைதானே பெரும்பாலானவருக்கு இருக்கும்? எனக்கு உண்டு.
தமிழ் படிக்கத் தெரியாத மகன்கள், தொடர்புகளற்ற உறவுகள், சொந்த மண்ணில் செய்ய விரும்பும் எதையும் செய்ய முடியாத தடை என எல்லாவற்றையும் தாண்டி வந்தே தீர வேண்டும் என நினைத்துக் கொண்டேயிருந்தேன். அப்பா இறப்பதற்கு முன்பாகவே கோயமுத்தூருக்கு மாறி விட வேண்டும் என காரியங்களை ஆரம்பித்திருந்தேன். அதுவொன்றும் அவ்வளவு சுலபமில்லை. இப்பொழுதுதான் நேரமும் காலமும் கனிந்து வந்திருக்கிறது.
தனியொருவனாக இருந்தால் பையை தூக்கி தோளில் மாட்டி கிளம்பியிருக்கலாம். வீடு தேடவே இரண்டு மூன்று சனி, ஞாயிறுகள் தேவைப்பட்டது. எட்டு பேருக்கு யார் வீடு தருவார்கள்? அதுவும் கோயமுத்தூரில் வீட்டு உரிமையாளர்களுக்கு இரண்டு கொம்புகள் இருக்கும் போலிருக்கிறது. இப்பொழுது வீடு கொடுத்திருப்பவர் கூட 'தயக்கத்தோடுதான் தருகிறேன்...நீங்க வீட்டு உரிமையாளராக இருந்தால் என் பிரச்சினையை புரிஞ்சுக்குவீங்க' என்றார். கன கடுப்பு. எதுவுமே பேசவில்லை. 'பெங்களூரில் எங்க வீட்டை வாடகைக்கு விட்டுட்டுதான் வர்றோம்ன்னு சொல்ல வேண்டியதுதானே' என்று வேணி கேட்டாள். அவர் தன்னை பெரிய ஆளாக நினைத்திருக்கிறார். அதை ஏன் உடைத்து விட வேண்டும். பேசட்டும்.
வீடு இப்படியென்றால் பள்ளிக்கூடங்கள் அதைவிட. எவ்வளவு லோலயம் பேசுகிறார்கள்?
கோவையில் நண்பர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் இதற்கெல்லாம் அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டியதில்லை என்று தோன்றியது. இப்பொழுதுதான் கிட்டத்தட்ட எல்லாமும் ஓர்ஸு ஆகியிருக்கிறது. இந்த வார இறுதியில் ஒரு வண்டியை பிடித்து சாமானங்களை எல்லாம் ஏற்றிவிட்டால் அடுத்த வாரம் கோயமுத்தூர்வாசி.
'எல்லாம் நல்லாத்தானே இருக்கு...இப்படியே போகட்டும்' என்று நினைத்துக் கொண்டேயிருந்தால் சட்டியை விட்டு நம்மால் வெளியவே வர முடியாது. அதற்குள்ளேயே குதிரை ஓட்ட வேண்டியதுதான். 'கால் நிலத்தில் வலுவாக நிற்கிறது; தலையில் தேவையான சரக்கு இருக்கிறது' - இந்த நம்பிக்கை இருந்தால் காலை எடுத்து இன்னொரு பக்கம் வைத்துப் பார்க்க தயங்கவே கூடாது. அப்பொழுதுதான் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும் என்று திரும்பத் திரும்பச் சொல்வதுண்டு. பேசுவதையும் எழுதுவதையும் விட செயல்படுத்துவதுதான் கடினம். Comfort Zone ஐ உடைக்க பயம் இருக்கும். தயக்கம் இருக்கும். ஆனால் உடைத்தே தீர வேண்டும். அதிகபட்சம் என்ன ஆகிவிடும்? தலையா போய்விடும்?
யோசித்துப் பார்த்தால் பெங்களூரில் எல்லாமே செளகரியம்தான். சொந்த வீடு. அமைதியான வேலை. நினைத்தால் வேறு நிறுவனத்துக்கு மாறிவிட முடியும். ஆனால் ஓர் எந்திரத்தனம் வந்துவிட்டது. வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை. வார இறுதியில் பயணம். இன்னமும் எவ்வளவு காலத்துக்குத்தான் இப்படியே இருக்க முடியும்? நாற்பதுகளைத் தொடும் வரைக்கும்தான் வாழ்க்கையை நாம் கட்டுப்படுத்த முடியும். வயது கூடக் கூட வாழ்க்கைதான் எல்லாவற்றையும் முடிவு செய்யும். அதன் போக்கில்தான் நாம் ஓட வேண்டும். நினைத்தாலும் நாம் திசை மாற்ற முடியாது. அப்படியொரு நிலைமை வருவதற்குள் அதன் போக்கை தேவைப்படும் திசை நோக்கி மாற்றி விட்டுவிட வேண்டும் என ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். சாத்தியமாகியிருக்கிறது.
'பெங்களூருக்காரன்' என்று எவ்வளவுதான் வேகமாகச் சொன்னாலும் அடுத்தவர்களுக்கு பயமே வருவதில்லை. மதுரைக்காரன் திருநெல்வேலிக்காரன் என்று இனி யாராவது வரட்டும். கோயமுத்தூர்க்காரன் என்று சொல்லி முஷ்டியை மடக்குகிறேன்.
இனி நினைத்தால் ஊருக்குச் சென்றுவிட முடியும். எழுபது கிலோமீட்டர்தான். இனி வேறு ஒரு வேகத்தில் ஓடலாம்.
45 எதிர் சப்தங்கள்:
Welcome to Coimbatore sir.. Get settled, we will meet sometime in Cbe..
வாழ்த்துகள்! நான் துபாயில் இருக்கிறேன். உங்கள் நிலமைதான் இங்கே இருப்பவர்கள் அனைவருக்கும். யோசித்தால் காரியம் ஆகாது. சட்டு புட்டுன்னு முடிவு பன்ன வேண்டியதுதான்.
Welcome Mani....
Welcome to Coimbatore Mani... All the best !!
- Saravana
MY DEAR MANIKANDAN,
WELCOME TO KOVAI. IT HAS BEEN YOUR DREAM . LOT OF PEOPLE WILL BENEFIT. PARTICULARLY STUDENTS .
GOD WILL BLESS YOU BY FULFILLING ALL YOUR WISHES/AMBITIONS.
' DHARMAM THALAI KAKKUM'.
IN YOUR HUMILITY YOU'LL SAY IT IS THE DONORS . THE INITIATIVE WAS YOURS. I CAN GO ON AND ON.
ANBUDAN,
M.NAGESWARAN.
I AM JUST REPEATING MY MAIL.
வாழ்த்துக்கள்!!! உங்கள் முடிவு எனக்கும் நம்பிக்கையளிக்கிறது. கடந்த பத்து வருடம் ஆந்திராவில் வசிக்கிறேன். தமிழ்நாட்டில் நம் ஊருக்கே திரும்ப நினைத்தும் ஒரு சின்ன தயக்கம். அது இப்போது அறவே தயக்கம் இல்லை. நன்றி என் தோழா...
ரொம்ப நாளா தேடன கேள்விக்கு விடை கிடைத்தது உங்களிடமிருந்து. நன்றி
வாழ்த்துக்கள் மணிகண்டன் , சந்திப்போம் பிறிதொரு நாள்
புதிய பயணத்திற்கு வாழ்த்துக்கள் மணிகண்டன்!
அன்புடன் வரவேற்கிறோம். வாருங்கள்
What about your Job sir,
Have you quit from present job or have you made any arrangement (new job) at CBE
கோவை மாநகராட்சி தங்களை இனிதே வரவேற்கிறது....
வாழ்த்துக்கள். பெங்களூரரில் நமது பிள்ளைகள் படும் துயரை உடன் இருந்து அனுபவித்திருக்கிறேன். உங்கள் முடிவு மிக சரியானது. வாழ்த்துக்கள்.
சமயவேல்
புதிய ஊரும்
தங்கள் பணியும்
தொடர சிறக்க
வாழ்த்துகள் மணிகண்டன்.
Good decision Mani, Even I thought the same multiple times but due to multiple dependency I'm not able to move out of Bengaluru.
I guess you missed one important information in your article. That is how you are going to manage your financial needs and what job you switched ? how long you plan for this switch and give me some tips for people like me.
Welcome to Coimbatore Sir☺️
நீண்ட நெடு நாட்களாக பதிவு இல்லை என்ற போதே,ஏதோ பெரிய ஒரு செயலில் ஈடுபட்டு உள்ளீர்கள் என ஊகித்தேன்.நானும் உங்கள் வலைதளத்தில் வாசிப்பவன் மட்டும் அல்ல கோவை வாசியும் கூட,எனவே மிக்க மகிழ்ச்சி.திட்டம் அனைத்தும் இனிய நிறைவு பெற வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்
//மதுரைக்காரன் திருநெல்வேலிக்காரன் என்று இனி யாராவது வரட்டும்.//
கோயம்புத்தூர்ல கால் பட்ட உடனே குசும்பு கொப்பளிக்க ஆரம்ப்பிச்சிருமோ.
நாங்க பாட்டுக்கு அக்கடான்னு இருக்கோம். எதுக்குய்யா வம்பிழுக்கேரு.
உங்கள் மனம் போல் வாழ்ந்திட வாழ்த்துக்கள் மணிகண்டன்.
வேலையிலும் மாற்ற்மா?
ஒரு வாரம் பதிவின்றி நிசப்தம் நிசப்தமாக இருந்தது .. இன்று திறந்து பார்த்தால் உங்களது இடமாற்றம் குறித்த பதிவு. நீண்ட நாள் திட்டம் என்று நீங்களே பதிவில் தெளிவாக சொல்லிவிட்டீர்கள் ..பெரும் முடிவு இது.. .. வேலை குறித்த மாற்றங்களுக்கு முன்னமே திட்டமிட்டிருப்பீர்கள் என நம்புகிறேன் ..
சொந்த ஊருக்கு அருகாமையில் வசிப்பது ஒரு பெரும் நிறைவை அளிக்கும்.. வாழ்த்துக்கள்..
அன்புடன்
சரவணன்.சே
“கோவையில் நண்பர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் இதற்கெல்லாம் அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டியதில்லை என்று தோன்றியது.”
அப்படி எல்லாம் இல்லை மணி. நீங்க சும்மா ஒரு பதிவு போட்டு இந்த இடத்தில வீடும் பள்ளியும் பார்க்கிறேன்னு சொல்லியிருக்கலாம். எங்களால் முடிஞ்ச கான்டாக்ட் குடுத்துருப்போம்...டைம் சேவ் ஆகும்...யாரும் தொந்தரவுனு நெனைக்க மாட்டோம்...
வெல்கம் டூ கோவை..
வாழ்த்துக்கள் மணிகண்டன்...
வருக... வருக...!
All the best Mani! Which area in Cbe? Will meet you - Krishnan Iyer
Well done Mani! We will meet sometime in CBE - Vetha Narayanan - Teacher.
வழக்கம் போல் நிறுத்தி, நிதானமாக, அவதானித்து எடுக்கப்பட்ட முடிவாக உணர்கிறேன்! நிச்சயம் சிறப்பானதாக இருக்கும்!
வாழ்த்துக்கள் மணி! (சற்று பொறாமையுடன்)
Wow Good decision.Kudos to you. We are planning to move to Coimbatore too. Will soon implement. We Have our own house there. Feeling orphan here. Haven't attended any wedding for 10 years.
வாழ்த்துக்கள் திரு.மணி . பக்கத்தில் இருப்பதால் உங்களை சந்திப்பது சுலபமாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சி
Bold decision Bro.. Wish you good luck !
கோவையில் நண்பர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் இதற்கெல்லாம் அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டியதில்லை என்று தோன்றியது.”
அப்படி எல்லாம் இல்லை மணி. நீங்க சும்மா ஒரு பதிவு போட்டு இந்த இடத்தில வீடும் பள்ளியும் பார்க்கிறேன்னு சொல்லியிருக்கலாம். எங்களால் முடிஞ்ச கான்டாக்ட் குடுத்துருப்போம்...டைம் சேவ் ஆகும்...யாரும் தொந்தரவுனு நெனைக்க மாட்டோம்...
வெல்கம் டூ கோவை..
-நானும் இதைத்தான் நினைத்தேன்.நாற்பத்து நான்கு ஆண்டுகள் கோவை வாசி,ஆதலின்.என்றாலும் உங்கள் சுயத்துக்கு ஒரு கும்பிடு போட்டு கொண்டேன். வாழ்க வளமுடன்
Welcome back to Tamilnadu,sir.
Love and regards,
Krishnamoorthy.
வாழ்த்துகள் மணி. நான் ஊரில் மண்ணை கவ்வ ஆரம்பித்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. வரும் திங்கட்கிழமை முதல் இரவு நேரத்தில் மட்டும் "கோபி"காரன் ஆக போகிறேன்.
Welcome to Coimbatore. We will miss your stories about your bike travel in Bangalore.
What about Job Mani. Have you found an something in CBE itself? I heard IT companies are setting up shop there.
BTW, Congratulation on a brave and good decision :)
தேர்தல்ல சுயேட்சையா நிற்க தோதா கோவைக்கு ம் நடக்கட்டும்நடக்கட்டும் வாழ்த்துக்கள்
யாதும் ஊரே யாவரும் கேலி....... விசாலப்பார்வை...........
All the best for your bold decision sir
Raghu you are correct
யாதும் ஊரே யாவரும் கேலி....... விசாலப்பார்வை..கேலி இல்ல உங்க அரசியலை பார்த்துக்கொண்டு இருக்கும் வெளிநாட்டவனின் ஆதங்கம் அரசியல் இப்பொ மேகா பிஸ்னஸ் அதில நல்லவன் உள்ள நுலைய முடியாது என்பதை உடைத்து நெட்டில் இருக்கும் இளைஞர்கள் சுயேட்சை கட்சி ஒன்றை உருவாக்கி இளைஞர்கள் களத்தில் இறங்க வேண்டும் ஓட்டுக்கு காசு வாங்குறது என்பதை மாற்றி சுயேட்சையா நிக்கிறவர்க்கு ஓட்டு உனக்குதான் இந்தா 1000 ருபான்னு நிதியும் குடுங்க காசு போட்டு நிக்கிறவங்க அத முதலீடா நினைக்கிறாங்க திருப்பி எடுக்க நினைக்கிறாங்க அத மாத்துங்க ஏன் சுயேட்சை கட்சி என பேர் அடுத்த தடவை வேறொரு சுயேட்சை
இதெல்லாம் வேளைக்கு ஆகுமா எல்லாமே ஒரு நம்பிக்கைதானே முயட்சிதானே தற்போதுதான் அரசியல் சுழ்நிலை மாற்றம் வேண்டி நிற்கிறது மாகாராஜா இளவரசர் முறை மாறவேண்டும் (மாறி இருக்கு என்ன இளைய இளவரசர்) ரிலே முறை வரவேண்டும் இப்போ இளைஞர்கள் நாடு என இந்தியாவுக்கு பேர் ஜல்லிக்கட்டு,வேள்ளம் வந்தா,மரம் நட என எல்லாவற்றுக்கும் செய்யும் நீங்கள் சுயேட்சையா ஒரு நல்லவரை உங்க ஊருக்கு நிருத்துங்கள் அந்த சுயேட்சையும் 4 வருசத்துககு பின் அவர் முன்ன பார்த்த வேளைக்கு திரும்பிடணும்
கொஞ்சம் முன்கூட்டியே சொல்லி இருந்தால் மாவட்ட எல்லையிலேயே பெரிய வரவேற்ப்பு
பேனர் வச்சிருப்பேன். வாங்க, வாங்க என்று வரவேற்க்கிறேன். கோவையில் எந்த ஏரியா?
Vic என்ன கோபம் தெரியவில்லை , யாதும் ஊரே anonymous, it's me., since Vic diverts my intention of those words to mani... I am into this P.S. The article was about how carefully we hide behind our comfort line and run behind things that we assume ourselves to be doing great deal. Mani has a elitist thought and roots to the ground. If mani took to Coimbatore to know about that place, or was on job transfer -it's ok... But here, the gentlemen hides behind the self satisfying rationales, which none would bother.
உங்கள் நீண்டநாள் திட்டம் நனவாகியுள்ளது.வாழ்த்துக்கள்
Got Job in CBE?
வாழ்த்துக்கள் மணி.ஆச்சரியமாக இருக்கிறது. குடும்பத்தில் அனைவருக்கும்
ஒராதாத்த கருத்து.அசத்திவிட்டீர்கள். விவரமாக எதிர்பார்க்கிறேன்.
Post a Comment