May 9, 2018

மண்ணின் மரங்கள்

அடர்வனத்துக்காக சேகரித்து வைத்திருக்கும் நாற்றுக்கள் இவை. நம் மண்ணின் வகைகள். மொத்தம் அறுபத்தெட்டு வகைகளிலிருந்து ஆயிரத்து அறுநூறு நாற்றுகளை சேகரித்திருக்கிறோம். பட்டியலில் இல்லாத நாட்டு வகை நாற்றுகளாக இன்னமும் நானூறு நாற்றுக்கள் தேவை. தேடிக் கொண்டிருக்கிறோம். நாட்டு வகையில் இருபத்தைந்து முதல் ஐம்பது நாற்றுக்கள் வரை இருந்தால் விலை கொடுத்து வாங்கி கொள்ளலாம். ஒரே பிரச்சினை போக்குவரத்துதான். பார்சலில் அனுப்புகிற சமாச்சாரமும் இல்லை. நூறு நாற்றுக்களுக்கு தனியாக வண்டி வாடகை கொடுத்தாலும் கட்டுபடியாகாது. அதை மட்டும்தான் யோசிக்க வேண்டியிருக்கிறது.

யாராவது மர வகைகளைத் தேடும் போது இந்தப் பட்டியல் உதவும் என்பதற்காக இங்கே பதிவு செய்து வைத்துவிடலாம். 

வகையும் எண்ணிக்கையும்-

பிராய் 50
இடம்புரி (திருகு மரம்) 1
ஒதியன் 4
பேய் அத்தி 10
பச்சை கனகாம்பரம்  1
நுணா 10
நழுவை  10
கடுக்காய் 2
அழிஞ்சல் 2
காட்டு எலுமிச்சை  12
வெண் சீத்தா 2
பாய் மொண்ணை  21
நொச்சி  20
பாவட்டம் 30
வெப்பாலை  50
எட்டி 10
இரும்புளி 50
இலந்தை 33
மா 11
வன்னி 10
இங்க் மரம் 50
நரிவிலி 30
தரணி 40
கடல் ஆத்தி 20
இருவாட்சி 40
ஆத்தி 50
வெல் விளா (காட்டுபாட்சி) 20
வெண்ணாந்தை 40
வில்வம் 10
நீர் அடம்பை 30
பூந்திக் கொட்டை (சோப் நட்) 10
குகமதி 30
வீரா 8
முறுக்கன் 20
காட்டு கறிவேப்பிலை 50
கருமரம் 30
கன்னிரா  20
கல்யாண முருங்கை 20
காட்டு நாரத்தை 25
செருண்டி 20
சூரக்காய் 50
சிறுதும்புளி 50
அத்தி 3
அகல்யா  5
ஈர்குள்ளி 30
பாலமரம் (மனில்காரா) 5
பச்சைக் கிளுவை 13
குமிழம் 10
எலும்பொட்டி  25
விளா 50
புங்கன் 50
கல் ஆல் 2
புத்ரன் ஜீவா  5
வேம்பு 40
ஆய 35
சரக்கொன்றை 50
சீத்தா 10
நீர்மருது 5
நாவல் 50
புளி  40
இலுப்பை 40
ஈட்டி 15
தனக்கு 29
பொருசு 40
வேங்கை 40
கறிவேப்பிலை 10
சூரிப்பழம்  30
சந்தனம்  2

6 எதிர் சப்தங்கள்:

Jaypon , Canada said...

ஆஹா பெயர்களை படிக்கவே அழகாக இருக்குங்க.பல பெயர்கள் நான் கேள்விபபட்டதேயில்லை.கேள்விப்பட்டதில் பல பார்த்ததும்இல்லை.

Vaa.Manikandan said...

எனக்கு மட்டும் எல்லாமும் தெரியுமா என்ன? அனுபவமே ஆசான் :)

kailash said...

நாற்றுக்கள் வாங்கிய இடத்தையும் குறிப்பிட்டால் பேருதவியாக இருக்கும் , இன்னும் கொஞ்சம் பழ வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள் பறவைகளை ஈர்க்கும் . Please share the graph of saplings with spacing after completion

பொன்.முத்துக்குமார் said...

முடிந்தால், ஒவ்வொன்றின் புகைப்படத்தோடு பெயரையும் குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும் (நற நற-ன்னு ஏதோ சத்தம் கேக்குற மாதிரி இருக்கே)

Anonymous said...

I have to agree with Mr. Muthukumar. A picture of each variety along with it's name would be useful. In addition where you have sourced them. I understand it's very laborious but please it would be a knowledge base for future projects

ilavalhariharan said...

ஒரு மாதுளை வாங்கி முத்துகளைப் பரவ லாக 2,3இஞ்ச் குழிகளில் தூவி மண்ணை ப் போட்டு மூடி விட ஒரு வாரத்தில் முளை த்து விடுகிறது முயற்சிக்கலாம்.