May 10, 2018

அயோக்கியத்தனம்- பதிவு குறித்து

திரு. மணிகண்டன் அவர்களுக்கு ,

தங்களுடைய 'அயோக்கியத்தனம்' கட்டுரை படிக்க நேர்ந்தது . பிரச்சனை ஓரளவுக்கு சி.பி .ஸ்.சி. மேல் என்றாலும் முழுவதுமாக சொல்ல முடியாது. கடல் தாண்டி சென்று படிக்கும் பல வட மாநில மாணவர்கள் உள்ளனர். அருகில் இருக்கும் மாநிலத்துக்கு சென்று வர ஏன் இத்தனை கூச்சல்? மாணவனாக எல்லா இடத்திலும்  'Comfort zones' எதிர்பார்ப்பது சரி அல்ல. 18 வயதில் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஓட்டுரிமை உண்டு. 18 வயதில் அருகே இருக்கும் மாநிலத்துக்கு சென்று வர இவ்வளவு எதிர்ப்பா அல்லது துணிவு இல்லையா?

எனக்கு தெரிந்து முகநூல் தவிர தவிர எந்த சமுக கல்வியும் இங்கு இல்லை. முக நூலில் மட்டும் என்ன வேர்த்து  வடிகிறது! அனைத்திலும் வெறுப்பையும் , துவேசத்தையும் பரப்புகிறார்கள். ஒவ்வோர் பதிலும் வெளிப்படும் வன்முறையை கொஞ்சம் கவனியுங்கள். ஒவ்வொரு மாணவனுடைய இயலாமையும் அரசாங்கத்தின் மீதான துவேசமாக மாற்ற எல்லா மட்டத்திலும் முயற்சிகள் நடக்கின்றன. இப்படியே சென்றால் சில வருடங்களில் தமிழ்நாடும் இலங்கை மாதிரி மாற்றிவிடுவார்களோ என்று பயமாக உள்ளது. இந்த சமுக மனநிலையில் ஒரு சர்வாதிகாரி உருவாக ரொம்ப நாள் பிடிக்காது. வெறுப்பை தூண்டிவிடுவது மிக சுலபம். இது வரலாறு நமக்கு சொல்லிக்கொடுத்த பாடம்.

நீங்கள் சொல்வதிலும் உண்மை உள்ளது . நீட் கஷ்டம் தான். சென்று வர பணம் செலவாகும்தான்.  இல்லை என்று சொல்லவில்லை. இந்த காரணம்களால் ஒருவனது வெற்றி தடைபடாது. வெல்பவன் தனக்கான வழியை கண்டடைவான். உதவவும் பலர் உள்ளனர். மனம் உண்டானால் மார்க்கமும் உண்டு.

சில சூழச்சிகள் உள்ளன இல்லை என்று செல்லவில்லை. சோதனைகளை தாண்டித்தான் வென்றாக வேண்டும். வெற்றி என்றும் நம்மை தேடி வராது. தன்னம்பிக்கையை கொடுக்காத கல்வி என்ன கல்வி? போராட மனமில்லாதவர்கள் அனிதாவை போல் தற்கொலை செய்து கொள்ளலாம். கல்வி கற்கும் நிலையில் ஏற்படும் சிக்கல்களுக்கும், அசௌரியங்களுக்கும் இத்தனை கூப்பாடு போடுகிறார்கள். படித்து முடித்து வேலை வாய்ப்பிலும், அதன் பின் தன்னை நிலைநிறுத்தி கொள்ள எத்தனை போட்டிகளை சூழ்நிலையை சமாளிக்க வேண்டி இருக்கிறது. வருமானத்திற்க்காக எவ்வளவு பயணம் செய்ய வேண்டி இருக்கும். எல்லாம் தானாக தேடிவரும் என்னும் நினைப்புதான் பலபேரை கெடுக்கிறது.

ஒரு தொழில்முனைவோனாக பல நேர்முகத்தேர்வுகளை எடுத்திருக்கிறேன் ., இவர்கள் எண்ணம் என்பது என்ன தெரியுமா " இவர்கள் மனப்பாடம் செய்து , அதை அப்படியே வாந்தி எடுத்து ., ஒரு degree MBA,BE என்று ஏதாவது ஒரு certificate கொண்டுவந்து கொடுத்தவுடன் எ/சி ரூமில் ரோலிங் chair போட்டு ஐம்பதாயிரம் சம்பளம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்பதில் தவறில்லை. அதற்குண்டான தனிதிறைமைகள் , தகுதிகளை வரத்து கொண்டோமா என்றால் இல்லை.

நீட் போன்ற தேர்வுகள் ., இதில் இருந்து மாணவர்களை வெளியில் இழுக்கிறது. நாடு தழுவிய நிலையில் போட்டியிட செய்கிறது. போட்டியிட வேண்டும் என்றால் தனி திறமைகளை வளர்த்தாக வேண்டும். இது இங்கு உள்ள பள்ளிகளுக்கு சிக்கல். வேண்டாத வேலை. பணம்.  தேசிய அளவில் போட்டியிட்டாள் no1 என்று சொல்லி பணம் கொழிக்க இயலாது. இதற்காக தூண்டி விடுகிறார்கள். கல்லூரிகளிலும் மேனேஜ்மென்ட் கோட்டாவில் பல பிரச்சனைகள் வருகின்றன. அரசியல்வாதிகள் தான் இங்கு கல்வித்தந்தைகள். அவர்களது பிரச்னை சமூக பிரச்சனையாக உருவெடுக்க வைக்கிறார்கள். நீங்கள் சொல்லுங்க 2005 முந்தைய வரை 12ஆம் வகுப்பில் 1000 மார்க் என்பது பெரிய விஷயம். இன்று அப்படியா உள்ளது? மார்க்குகள் அள்ளி இறைக்க படுகிறது.  

இன்றைய மாணவர்கள் எதைத்தான் கற்கிறார்கள்? தமிழ் , ஆங்கிலம் , ஹிந்தி ஏதையுமே முழுமையாக கற்பதில்லை. நீங்களே மொழி தெரியதால் அனுபவித்த சிரமத்தை பல முறை எழுதி  உள்ளீர்கள். மாணவர்கள் வெளியே சென்றால் தான் எதையாவது கற்க முடியும். இன்றைய பள்ளி சூழலில் மாணவர்கள் சுற்றுலா செல்கிறீர்களா என்றே கூட தெரியவில்லை. இது போன்று வெளியில் சென்று, தேசிய அளவில் போட்டியிட்டு, நாமும் தேசிய நீரோடையில் கலக்க வேண்டும். 70 வருடமாக நாம் விலகியே இருந்துவிட்டோம். எந்த தகுதியையும் வளர்த்துக்கொள்ளவில்லை. இனியாவது கொஞ்சம் விழித்து செயலாற்றுவோம்.

நீட் என்பது ஒரு நல்ல வாய்ப்பு. இது அணைத்து கல்வி  துறைகளுக்கும் கொண்டு வரப்படவேண்டும். 

நன்றி.

பிரபு குமாரசாமி 

                                                                          **

அன்புள்ள திரு.பிரபு,

வணக்கம்.

விரிவாக எழுத வேண்டும் என வரிக்கு வரி வாசித்துக் கொண்டு வந்தேன். 'அனிதாவை போல தற்கொலை செய்து கொள்ளலாம்' என்ற வரியை வாசித்தவுடன் என்ன எழுதினாலும் அர்த்தமிருக்காது என்ற மனநிலை வந்து ஒட்டிக் கொண்டது. கீழ்மையான கருத்து இது. 

ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்- 

எந்த மாணவனும் 'நான் தேர்வெழுத செல்ல மாட்டேன்' என்று போராடவில்லை. துணிச்சல் இல்லை என்று பதுங்கவில்லை. ஏ.சி.அறை வேண்டும் என்று கேட்கவில்லை. பார்த்துக் கொண்டிருக்கும் மற்றவர்கள் கேட்கிறார்கள். இவ்வளவு பெரிய மாநிலத்தில் ஒரு லட்சம் மாணவர்களுக்குக் கூட  தேர்வு மையங்கள் அமைத்துத் தராமல் அலைக்கழித்தது என் என்றும், அதன் பின்னாலிருக்கும் அரசியல் காரணங்கள் என்ன என்றும் கேள்விகளைக் கேட்கிறார்கள்.  வேறு எந்த மாநிலத்திலும் இல்லாமல் தமிழக மாணவர்களுக்கு மட்டும் ஏன் இப்படியொரு அலைச்சல் என்று கேட்கிறார்கள். 

உங்களின் புரிதல்கள் இன்னமும் விசாலமாக வாழ்த்துக்கள். அதுதான் தொழில் முனைவோராக தங்களை உயர்வடையச் செய்யும். 

நன்றி.

அன்புடன்,
மணிகண்டன் 

38 எதிர் சப்தங்கள்:

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

அனிதா தற்கொலை போல எல்லோரும் செய்ய வேண்டுமா?சரியான முறையில் பதில் சொல்லி உள்ளீர்கள். வாழ்க வளமுடன்

மதன் said...

“உங்களின் புரிதல்கள் இன்னமும் விசாலமாக வாழ்த்துக்கள்”

நச்.. குழந்தைகளின் பார்வையில் இருந்து பார்த்தாலதான் தெரியும் இது எவ்வளவு கஷ்டம் என்று..

கண்ணன் கரிகாலன் said...

பிரபு எழுதியுள்ள கருத்துகள் பெரும்பாலும் சரியே. சிந்திக்க வேண்டும்.
தேசிய நுழைவுத்தேர்வு குறித்து இவ்வளவு எதிர் கருத்துக்கள் பிரச்சினைகள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஆளும் கர்நாடகா கேரளா வில் கூட இல்லை.

Vaa.Manikandan said...

கண்ணன்,
உங்களுக்கு புரியவில்லையா அல்லது புரியாத மாதிரி காட்டிக் கொள்கிறீர்களா என்று தெரியவில்லை. கர்நாடகா, கேரளா மாணவர்கள் எந்த மாநிலத்தில் தேர்வு எழுதினார்கள்?

Anonymous said...

May be they will understand when they live in 2nd grade town or villages and see the challenges for the kids. Right now, their view is from a student who lives in Metro, goes to IIT coaching, writes JEE (or at least have seen people doing this)...

Anonymous said...

Modi is a bloody incompetent moron who does not understand history. He has the mentality of Hitler and people are going to suffer for that. BJP has to lose in karnataka first and then they have to get out of power in center too. Otherwise no one can save India. Hindutva as explained by the greatest asshole in India's history named "Subramanya Swamy", is going to take India back to stone age. If you watched the debate between Prakash Raj and soonaa saami, you would understand that how Hindutva tactically destroys its opponents by acting like they follow all Dharmas. They are trying to be legally correct but morally and ethically way more corrupt than any other organization. That's why no one can question them. Real bastards!

Asok said...

I support 100% Prabhu's comment. We are expecting very sophisticated environment for everything, I got everything in Tamilnadu state until I completed my degree and get my first job. After I came out from India, I felt like I never learn anything how to face the difficult timings. Moreover we have to teach/help our students how to handle these kind of situation and let them record their difficulties to the government. The Facebook and magazines are showing all hatreds, which is not at all needed. Of course, we are facing the difficult time now, so time to learn and move forward. Moreover, NEET is not the only one way to get a bright future. If the student is really smart, he just ignore to take exams and pursue other options. Moreover, we can learn and follow our passion any age, we stupidly giving pressure to our students this is the only time people can get their future, which literally explains how to earn money, even it is not teaching how to make money. So time to follow "மாத்தி யோசி".

Unknown said...

நீட் தேர்வு பிரச்னை இல்லை. வேறு மாநிலத்திற்கு எழுத சொன்னது தான் என்ன அரசியல் என்பதே. நேரடியாக கேட்பது என்றால் கர்நாடகா, ஆந்திரா, மாணவர்களை தமிழகத்திற்கே பிற மாநிலத்திற்கு ஏன் அனுப்பவில்லை. குறிப்பாக தேர்தல் நடக்க உள்ள கர்நாடகா. இப்படி தமிழக மாணவர்களுக்கு பாகுபாடு காட்டி விட்டு அதை பேசாமல் தேசிய நீரோட்டத்தில் விலகினால்
என்று குற்றம் சாட்டுவது என்ன நியாயம். தமிழ்நாடும் இந்தியாவின் ஒரு அங்கம் என்பதில் தமிழர்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது.

Velraj said...

:) you want to send the students outside of state to get used to the difficulties? Hmm.. when a student is about to write one of his critical exam, we create challenges with the travel and say that is how he can face real world? It is not a recruitment, it is an exam.

I lived in US for 10 years and I have never seen anyone doing that even though the kids have more exposure here.

Gopal bhavani said...

"அனிதா போல தற்கொலை செய்து கொள்ளலாம்"
நீங்கள் என்ன மாதிரியான மன நிலையில் இதை எழுதினீர்கள் என்று தெரியவில்லை,தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூக, பொருளாதார சூழ்நிலையை தயவு செய்து களத்தில் சென்று பாருங்கள் அவர்கள் பள்ளிக்கு வருவதற்கே எவ்வளவு துயரப்படுகிறார்கள் என்று தெரியும்.

“உங்களின் புரிதல்கள் இன்னமும் விசாலமாக வாழ்த்துக்கள்”

உங்களுக்கு வேறு எப்படி சொல்வது?

Catherine Augustine said...

போராட மனமில்லாதவர்கள் அனிதாவை போல் தற்கொலை செய்து கொள்ளலாம். ///Yuck.

Thanks to you... Got to know these kind of people are who we live with.

Anonymous said...

Most of the opinions about NEET are correct. We also have to state the utter failure of the CBSE board and last minute ruling by a Supreme Court.
I don’t know how exactly the centers are allotted— I guess they would ask for students preference ranked, it is possible students/ parents didn’t think about the possibility of getting their second or third preference. However I will strongly condemn the board - sheer incompetence.
Rajan

Anonymous said...

மன்னிக்கவும். தாங்கள் பிரபு குமாரசாமிக்கு சொன்னது உங்களுக்கும் பொருந்தும். கொஞ்சம் பார்வையை விசாலமாக்க முயலுங்கள்.
௨. நீட் தேர்வு அமைப்பாளர்கள் தமிழகத்திலிருந்து எழுத இருக்கும் மாணவர்களை சரியாக எதிர்பார்க்காமல் குறைவான இடங்களுக்கு ஏற்பாடு செய்து விட்டார்கள். "ஆமாம், தப்பாகி விட்டது, அடுத்த முறை ஒவ்வொரு மாணவனுக்கும் இதே மாநிலத்தில் ஏற்பாடு செய்ய முயல்கிறோம். இந்த முறை பொறுத்துக்க கொள்ளுங்கள்" என்று ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்து இருக்க வேண்டும்.
௩. கன்யாகுமரிக்காரர்கள், ஹோசூர்க்காரர்கள் சரியாக தமக்கு அனுகூலமாக உள்ள திருவனந்தபுரம், பெங்களூருவை தெரிந்து செய்திருக்கிறார்கள். அது போன்றோரையும் சேர்த்து நீட் தேர்வு-மைய அரசு எதிர்ப்பு கோஷத்தில் சேர்த்துவிட்டனர். அதே போல்ராஜஸ்தானில் உள்ள கோடா என்ற ஊரில் கோச்சிங் பெற்று அங்கேயே தேர்வு எழுத விரும்பி தேர்ந்தெடுத்தவர்களையும் இதில் சேர்த்து கூக்குரல் இடுகின்றனர்.
௪. விண்ணப்ப படிவத்தில் மூன்று இடங்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதிலே சரியான புரிதல் இல்லை. மூன்றாவதை காலியாக விட்டு விட்டு விட்டால் இரண்டுக்கும் கொடுப்பர் என்று எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது. சாப்ட்வேர் எழுதியவரின் புரிதல் வேறு போலும்.
௫. தமிழ் நாட்டில் வரும் பிரச்னைகள் எல்லாவற்றையும் மைய அரசு-மோடி எதிர்ப்பு எழுச்சியாக பல நிறுவனங்கள், குழுக்கள் சிரமம் எடுத்துக் கொள்கின்றன, இது தமிழ் நாட்டுக்கு நல்லதல்ல,

கவிமணி கலியமூர்த்தி said...

அனிதா போல தற்கொலை செய்து கொள்ளலாம்.. நான் பார்த்து அருவெறுத்த வாக்கியம்.
உங்கள் மனநிலை மேம்பட வாழ்த்துக்கள்.

Dharma said...

முதல்ல நாம சமமான கல்வி வழங்க முயற்ச்சி செய்வோம்.அப்புறமா சமமான தேர்வு நடத்தலாம்.

Anonymous said...

//போராட மனமில்லாதவர்கள் அனிதாவை போல் தற்கொலை செய்து கொள்ளலாம்.//
What a stupid thought is this!!
Prabhu, mind your words.
Anitha struggled a lot and she went to the so called Supreme court to get justice. But the system and court killed ANitha. It's cold blooded murder.

I'm sure Prabhu is very rich and never came across any struggles in his life. This kind of people are insane to the society.

- Gurunathan

Anonymous said...

NEETல Negative marking இருக்குதா? எந்த நாட்லயும் இல்லாத நுழைவு தேர்வு முறையா இருக்கே?!

Anonymous said...

நீட் என்பது ஒரு நல்ல வாய்ப்பு.TRUE. PROVIDED ALL ARE GIVEN EQUAL/ SAME OPPORTUNITIES.
LEAVE OUT THOSE WHO HAVE PURPOSELY/DELIBERATELY CHOSEN OTHER STATE CENTERS. AT LEAST A FEW WILL BE THERE WHO HAVE BEEN FORCED OUT OF TAMIL NADU. WHAT IS THE REMEDY FOR THEM?
I HAVE ONE QUESTION TO ASK.
IF REGIONAL LANGUAGE EXAM WRITING STUDENTS CAN BE ACCOMMODATED IN THEIR RESPECTIVE STATES (LIKE TAMIL STUDENTS IN TAMIL NADU BENGALI STUDENTS IN BENGAL) WHY NOT TO ALL STUDENTS CENTERS OF THEIR CHOICE.
TO ME IT LOOKS POSSIBLE. ONLY EXPERTS HAVE TO SAY.
CBSE GIVES EXPLANATION FOR EVERYTHING. LET THEM EXPLAIN THIS CASE BY CASE QUOTING THE STUDENTS CHOICE.
ONLY ' PUBLIC INTEREST LITIGATION' IS THE SOLUTION.
NO POLITICAL PARTIES. ONLY PARENTS/STUDENTS/WELL WISHERS.
I AM READY. INTERESTED PEOPLE CAN JOIN.
MY MAIL ID IS nagooo2002@yahoo.co.uk
ANBUDAN,
M.NAGESWARAN.

David D C said...

IPL போட்டிக்கு ஆயிரகணக்கான காவலர்களைப் பணியமர்த்திய முடிந்தது. நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு தேர்வு ஏற்பாடு செய்வதற்கு காலம் போதவில்லை.

It is not a question of possibility, but priority. What is more important to our children.

கேரள மக்கள் கல்விக்காகவும் வேலைவாய்ப்புக்காகவும் மாநிலம் விட்டுப்பெயர்ந்த நிலை எப்போதோ வந்துவிட்டது.
கர்நாடக மக்கள் தான் கல்வி தனியார் மயமாக்கலால் முதலில் பாதிக்கப்பட்டனர்.
தமிழக மக்களும் தற்போது அதே சூழலில்!

Murugan R.D. said...

தகுதி உள்ளது தப்பி பிழைக்கும் என்று டார்வின் ஐந்தறிவு உயிரினங்களை வைத்து சொன்ன கோட்பாட்டை பிரபு குமாரசாமி போன்றவர்கள் ஆறறிவு படைத்த மனித இனத்துக்கும் பொருத்திபார்த்து தத்துவம் பேசியுள்ளார், ம்ஹூம் மனித இனத்தில் இதுபோன்ற புரிதல் குறைபாடுள்ள அல்லது தன்னை தவிர்த்த சமூகம் எக்கேடுகெட்டாலும் தன் வயிறும் வாழ்க்கையும் நிறைந்தால் போதும் என்ற இயந்திர குணம் அல்லது மிருக குணம் உள்ளோரும் எல்லா மொழியினத்திலும் உண்டு,,, இவர் மேலான ஆத்திரத்திரமும் வெறுப்பும் நியாயமானதே என்றாலும் கடந்து செல்வோம், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு என்று நிறைய சோதனைகள் இலக்குகள் உண்டு,,,

Unknown said...

பல மாணவர்களுக்கு வேறு மாநிலத்துக்கு சென்றது., உண்மையை சொன்னால் நிர்வாக குளறுபடி .. எதிர்பாராத வகையில் அதிக விண்ணப்பங்கள் வந்தது / கடைசி நாட்களில் இடம் பிடித்து ORGANISE பண்ண முடியாதது .. இது அடுத்த வருடம் சரி செய்ய பட்டுவிடும் .. ( இதில் எந்த தந்திரமோ அல்லது பழிவாங்களோ இல்லை )

அனிதா ஒரு கோழை ., யார் மறுத்தாலும் அவர் வெறும் கோழை ., அவரது தற்கொலையை புனிதபடுத்தி பரிதாபப்பட வேண்டியது இல்லை ., அவர் எதற்கு இறந்தார் ??? நீட் எழுதமாட்டேன் ., DOCOTR சீட் வேண்டும் .. அரசாங்கம் செய்யாததால் தற்கொலை .. 1100 மார்க் மேல் எடுத்துவருக்கு ஏன் நீட் வேண்டாம் .. தன்னம்பிக்கை இல்லாம இவங்க மார்க் எடுத்து என்ன பிரயோஜனம் .. இவங்க எத புரிஞ்சு படிச்சு இந்த மார்க் வாங்குனாங்க ..

கார்த்திக் said...

“கொஞ்சம் பார்வையை விசாலமாக்க முயலுங்கள்.”

நீங்க என்ன சொல்றீங்கன்னா, இந்த வருஷம் கஷ்டப்பட்ட மாணவர்கள் பத்தி ஓன்றும் சொல்லக்கூடாது, ஏனா அவங்க தலையெழுத்து.. அடுத்த வருஷம் எல்லாம் சரி ஆய்டும்.

உங்க குழந்தைய அங்க வச்சு பாருங்க சார்!!! அந்த வலி தெரியும்..

Anonymous said...

“உங்களின் புரிதல்கள் இன்னமும் விசாலமாக வாழ்த்துக்கள்”

Well said :-)

A.E.Manju said...

​அனிதா படித்தது ஒரு சிற்றூரில் உள்ள அரசு பள்ளியில் . அவர் போன்ற பல மாணவர்கள் இன்னும் இந்த உலகம் நல்லவர்களால் ஆனது என்று நம்பும் பால்மணம் மாறாத பிள்ளைகள்... பாவம் அவர்களுக்கு இந்த உலகம் அரசியல் சூழ்ச்சி நிறைந்ததென்று தெரியாது. இதையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவு பக்குவப்படாத குழந்தைகள் மீது நம் அரசியவாதிகளின் அர(ற)க்கக் கைகள் படரும் போது நமக்கு சொரணை வர வேண்டும். இல்லையென்றால் நாம் என்ன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய மக்கள் இல்லை மாக்கள் நாங்கள் என்று பெருமை கொள்வோம். நினைக்கவே நெஞ்சு பதறுகிறது..வேறு நாடுகளிலெல்லாம் குழந்தைகள் படிப்பதை தவிர எந்த ஒன்றைப் பற்றியும் கவலைப்படத் தேவை இல்லை..நம் ஊரில் தான் பிள்ளைகள் தம்முடன் போட்டியிடும் மாணவர்களுடன் மட்டுமின்றி படிப்பறிவே இல்லாத அரசியல்வாதிகளுடனும் கூட போட்டி போட வேண்டி இருக்கிறது. நீங்கள் யாரும் இந்த நிலையை மாற்ற போராடவில்லையென்றால் பரவாயில்லை முட்டுக் கொடுக்காதீர்கள்..

Anonymous said...

Mentioning about Anitha Should have been avoided. She is one among the many children who dont have all the access and opportunity. Many think that, since we have the access and opportunity, it means every one in the state will by default have. This is not true.


CBSE had done blunder, and it had said it will correct next time. But none of the officials have been punished by this. The controller of CBSE examination for TN should be sacked.


There is 30% increase in the students who are appearing for NEET compared to last year.
We should not blindly and selectively ignore the fact that Kerala govt has approached CBSE and requested to increase the centers. This is called State Governance.

The higher education officials of TN should also be sacked for not acting on this.

Out of more than 1 lakh students , 1500 have been alloted outside TN. ( Even if it is 1 student it is condemn able, no doubt in that).

At the same time, blaming center govt for all mishaps is not completely right.

How can we think that Cent Govt, sat and devised a plan to make this 1500 students to go outside of TN and write exam ? What do they get by this. Does it make any logic? If they have made this for all 1 Lakh students then yes it brings in a doubt.

For me saying this, Don't call me a bhakt. I don't want BJP in TN. TN should be always ruled by state party,and should not be ruled by national party who are always controlled by Delhi.

But we are seeing growing trend in hatred against Indian Constitution. If a problem is with a party, let us condemn the party, not the constitution. Lets not spread hatred and make people think alienated from national stream. If we think getting separated from nation will bring us prosperity, then no point in discussion.

We need to think about fruitful solution and action. Mani sir had started this from last year on NEET coaching. That should be the way to handle situation.

- Somesh

Anonymous said...

Oru pathu varudangalukku mun thamizhagathilum entrance irunthathu, ingulla maruthavakalloriyilo allathu poriyiyal kalooriyil sera vendum enil thanithani nuzhaivu thervu eludhi thaan sera mudiyum, piragu vandha arasiyal maatrathaal thaan entrance enbadhu neekapattadhu, vadakku indiyavil maanavargal veliye sendru padikak kaaranam avargal maanilathil pothiya kalloori infrastructure vasathigal illai, iruppavai anaithum saamaaniyanuku ettadhavaiyaagave irukinrana, aanaal tamil naatil apadiyaan nilai illai enbadhai ninaivootukiren

Anonymous said...

இன்று தமிழ்நாட்டில் எது நடந்தாலும் சரி, அதை தமிழர்களுக்கு எதிரான சதியாக ஜோடித்து, அதை திட்டமிட்டு மைய அரசு செய்வதாக நாம் நம்பவைக்க படுகிறோம். எல்லாம் அரசியல். எங்கு சென்றாலும் எதிர்மறை எண்ணம் ஊட்டப்படுகிறது.

கர்நாடகாவில் கூட (பெங்களூரில்) நீட் தேர்வுக்கு சில நிமிடங்கள் தாமதமாக வந்த 3 கன்னட மாணவ /மாணவிகளை அதிகாரிகள் தேர்வெழுத அனுமதிக்கவில்லை. ஆனால் கன்னடர்கள் இதை தங்களுக்கு எதிராக மத்திய அரசு செய்த சதியாக பார்க்கவில்லை. கேரளத்திலிருந்து சென்னை தேர்வெழுத வந்த மலையாள மாணவி ஒருவர் அனுமதிக்கப்படவில்லை. அவருடைய புகைவண்டி பல மணி நேரம் தாமதமாக, அவர் சில நிமிடங்கள் தாமதமாக தேர்வு மையத்திற்கு வந்துள்ளார். இதை எந்த மலையாளியும் மோடி அரசின் துரோகம் என்று கூறவில்லை. தமிழர்களுக்கு மட்டும் என்ன ஆயிற்று?

பாக்கிஸ்தான் எல்லைக்கும் (ராஜஸ்தான்), சீனா எல்லைக்கும் (சிக்கிம்) எனதருமை தமிழ் மாணவ செல்வங்களை பந்தாடிய பா.ஜா அரசு என எளிதில் உணர்வை தூண்டும் செய்திகள், ஆனால் யாரும் புள்ளி விவரங்களை நடுநிலைமையோடு சொல்வதில்லை. கிட்டத்தட்ட ஒரு லட்சம் (1,07,288) தமிழ் மாணவ, மாணவிகள் தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளனர். சுமார் ஐயாயிரம் (5000) மாணவ, மாணவிகளுக்கு மட்டும் தங்கள் மாநிலத்திற்கு வெளியே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. அவர்கள் கூட பெரும்பாலும் அண்டை மாநிலத்திலுள்ள அருகாமையான நகரத்தில்தான் தேர்வெழுதினர் (3,685 Tamil Nadu aspirants from Madurai, Tiruchirapalli, Tirunelvelli were allocated centres in nearest centers of Ernakulum, which are closer than centers in Chennai). சிக்கிம், ராஜஸ்தான் எல்லாம் அவர்களின் விருப்ப தேர்வுகளே.

ஒரு மாணவன் பாதிக்க பட்டாலும் தவறு தவறுதான். அது சரி செய்யப்படவேண்டும். ஆனால் அது ஒரு இனத்திற்கு எதிரான சதி, துரோகம், அயோக்கியதனம் என எப்படி முடிவு காட்டுகிறீர்கள். இப்படிப்பட்ட பதிவுகளும், நுண்ணரசியலும் அனிதா போன்ற இளம் மாணவர்களின் தன்னம்பிக்கையை கொல்லத்தானே செய்யும். நம்முடைய புரிதல்கள் இன்னமும் விசாலமாக வேண்டும். அதுதான் நம் மாநிலத்திற்கும், சந்ததியிக்கும் நல்லது. அதைத்தான் நண்பர் பிரபு குமாரசாமி சுட்டி காட்டியுள்ளார்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன் தோன்றிய மூத்த குடி! ஒரு தேசிய இனம். இந்திய அளவில் அதிகப்படியான உயர் கல்வி கற்றவர்களை கொண்ட மாநிலம். Most urbanized state. 2011 கணக்கெடுப்பின்படியே 50 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் நகர்புறத்தில் வாழும் மாநிலம், ஆனாலும் நம்மால் நீட் தேர்வு எழுத முடியாது. நீட் தேர்வு என்பது நம் தமிழ் மாணவர்கள் மருத்துவம் பயிலக்கூடாது எனும் ஆரிய சதியன்றி வேறொன்றும் இல்லை.... போங்க சார்....நீங்கள் எல்லாம் சும்மா இருந்தாலே போதும், பல அனிதாக்கள் நீட்டையும் வென்று மருத்துவர்களாகி வாழ்வையும் வெல்வார்கள்.

Unknown said...

I support 95%. Just allow the children to grow. Give breath to "வீழ்வே னென்று நினைத் தாயோ?"

Selvaraj said...

திரு. பிரபு குமாரசாமி அவர்கள் 'போராட மனமில்லாதவர்கள் அனிதாவை போல் தற்கொலை செய்துகொள்ளலாம்' என்று கூறியிருப்பது நிச்சயமாக அவரது இதயத்திலிருந்து வந்திருக்காது. கோபத்திலும் ஆதங்கத்தில் எழுதியதால் அவசரத்தில் வார்த்தைகளை கொட்டியிருப்பார். பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை

Anonymous said...

கொஞ்சம் பார்வையை விசாலமாக்க முயலுங்கள் - அடுத்தவனுக்கு சொல்லும் முன் தனக்கு அந்த தகுதி இருக்குதான்னு நினைக்கனும். ............பிரபு கருத்துக்கள் சரியே.....

- நாஞ்சில் நாட்டான்

சேக்காளி பதிவர் said...

கேனப்பய(ல்) ஊருல கிறுக்குபய நாட்டாமை.என் வீட்டுக்கு நான் நுழைவு சீட்டு வாங்கணுமாம்.அது ஏன் டா ன்னு கேட்டா அதை மறைக்க அடுத்த தடவை பக்கத்தூருல போயி நுழைவு சீட்டை வாங்குங்கான்.இப்ப நாம பக்கத்தூருக்கு எப்படி போகச் சொல்லுவ ன்னு சண்டை போடுறோம். நுழைவு சீட்டு (நீட் தேர்வு) விசயத்த மறந்துட்டோம்.
கடந்த வருடம் நீட் தேர்வில் முதலிடம் பெற்றவரை கூகுள் மூலம் தான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் "அனிதா" படித்தவுடன் பற்றிக்கொள்கிறது.
இது சீழ் பிடித்த மனதினர்களுக்கு சிகிச்சையை துவக்கி விட்டாள் மருத்துவர் அனிதா என்பதைத் தான் உணர்த்துகிறது.
வாழ்த்துக்கள் மகளே அனிதா.தொடரட்டும் உன் சேவை.

Anonymous said...

திருநவேலி க்கு பக்கத்துல தான் எர்ணாகொளம் இருக்காம். நம்புங்க ய்யா

Anonymous said...

திருநெல்வேலி - எர்னாகுளம் : 273 கி.மீ
திருநெல்வேலி - சென்னை : 720 கி.மீ

நீங்க நம்பித்தான் ஆகணும் ப்ரோ. கூகுள் மேப் பொய் சொல்லாது.

Anonymous said...

அண்ணாச்சி இன்னொரு விசயம் கவனிச்சியளா... நீட் தேர்வு தமிழ்ல எழுதலாம்.. ஆனா மலையாளத்துல எழுத முடியாது.... அப்ப அவிகதானே பிரச்சனை பண்ணனும்... நம்ம பயலுகல ஏ தூண்டி விடறானுவொ.... ஒரே கொழப்பமா இருக்கே.

Anonymous said...

You have brought up a very excellent details, thank you for the post.

David D C said...

திருநெல்வேலி மாவட்ட மாணவன் / மாணவி ஏன் தூரமான இடத்தில தேர்வு எழுத வேண்டும்? ஏன் சென்னை vs எர்ணாகுளம் ஒப்பீடு?
திருநெல்வேலியில் இல்லா கல்விக்கூடங்களா?
திசைதிருப்பி பிரச்சனைகளை மறைக்க / மறுக்க வேண்டாம்.

Anonymous said...

WAS COLLECTING LOT OF INFORMATION ON 'NEET 'FOR 'PIL .'SOME OF THE CLARIFICATIONS OF 'CBSE' ARE
1) THEY INCREASED THE NO OF CENTERS IN TAMILNADU COMPARED 2017. AS MANY AS 5 NEW CENTERS WERE INTRODUCED.

NEW CENTERS ARE
Namakkal
Thiruvallur
Tirunelveli
Vellore
KancheePuram.
WE HAVE TO KNOW WHEN THE CENTERS WERE INTRODUCED PARTICULARLY TIRUNELVELLY. WELL WISHERS CAN HELP.
They also say T.N. got its share compared to U.P.
U.P. 171/114306 (NO OF STUDENTS)
T. N.170/107288.(NO OF STUDENTS)
They also say exam centres were announced on 17 th April itself. Exam was on 6th May. 18 days. Enough time.
MOREOVER ON 18 TH MAY CBSE ANNOUNCED "NO CHANGE OF CENTERS".
ONLY TAMIL AS A REGIONAL LANGUAGE HAD THE MAXIMUM TAKERS.
DISTINCT POSSIBILITY IS THERE TAMIL WILL BE REMOVED SHORTLY.OUR POLITICIANS WILL MAKE NOISE AND DO NOTHING.
LET US GUARD/PROTECT OURSELVES.
CBSE WILL TELL ONLY HALF TRUTHS.PL.HELP BY SHARING FULL TRUTHS.NEGATIVE MARKING IS IN MANY ENTRANCE EXAMS LIKE IIMS/AEEE ETC. OTHER WISE GUESSING WILL START PREVAILING . IN A MULTIPLE CHOICE QUESTION PAPER THIS WILL BE DANGEROUS SINCE ALL ANSWERS WILL SEEM TO BE CORRECT.
OUR STUDENTS IF GUIDED PROPERLY WILL EASILY WIN NEET LIKE IAS 2018/2017.
MEANWHILE LET US FIGHT IN COURTS,PL.HELP.
MY MAIIL ID IS nagooo2002@yahoo.co.uk
ANBUDAN,
M.NAGESWARAN.

Anonymous said...

Very interesting topic, thank you for posting.