May 15, 2018

காங்கிரஸ் வென்றிருக்க வேண்டிய தேர்தல்

கடைசி சில நாட்களாக எதிர்பார்த்த முடிவுதான் இது. காங்கிரசும் பாஜகவும் சரிக்கு சரியாக வெல்லும் என்ற நிலைமைதான் இரண்டு வாரங்களுக்கு முன்பாக இருந்தது. தேர்தல் நெருங்க நெருங்க பாஜகவின் வியூகம் அதிரடியானதாக மாறியது. மத்திய அமைச்சர்கள் களமிறக்கப்பட்டார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் தினசரி ஒரு நட்சத்திர பேச்சாளர் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள். மோடி, அமித்ஷா உள்ளிட்ட பெருந்தலைகளின் பிரச்சாரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பம்பரமாகச் சுழன்றார்கள். ஒரே நாளில் பல கூட்டங்களில் பேசினார்கள். மோடி பொதுக் கூட்டங்களில் பேசிக் கொண்டிருந்த போது அமித்ஷா கட்சிப் பணியாளர்களிடம் விவாதித்து பின்னணி வேலைகளை விரட்டிக் கொண்டிருந்தார்.  'கட்சியின் காரியதரிசிகள் முக்கியமானவர்கள்' என்று அவர் எங்கயாவது கட்சிக்கு கூட்டத்தில் பேசியதாக தினமும் செய்தி கண்ணில் பட்டுக் கொண்டிருந்தது. 

உண்மையில் இது பாஜக தோற்றிருக்க வேண்டிய தேர்தல். அப்படிதான் சூழல் இருந்தது. காங்கிரசுக்கு எதிரான வெளிப்படையான எதிர்ப்புணர்வு எதுவுமில்லை. ஆனால் கடைசி சில நாட்கள் மிரட்டலாக இருந்தன என்பதை களத்தை நன்கு கவனித்தவர்கள் ஒத்துக் கொள்வார்கள். சமூக ஊடகங்களில், தொலைக்காட்சிகளில், வானொலிகளில் பாஜக செய்த பரப்புரையின் வேகத்துக்கு காங்கிரஸ் ஈடு கொடுக்க முடியவில்லை என்பதுதான் நிஜம். 'காங்கிரஸ்  ஏன் இவ்வளவு அசால்டாக இருக்கிறது' என்றுதான் தோன்றியது. இப்படியொரு எண்ணம் உருவாக்க காங்கிரஸ் அனுமதித்திருக்கவே கூடாது. 

இரண்டு கட்சிகளுமே பணத்தை அள்ளி வீசினார்கள். பாஜகவிலும் சரி காங்கிரஸிலும் சரி- தலா இருநூறுக்கும் அதிகமான கோடீஸ்வரர்கள் வேட்பாளர்களாக்கப்பட்டிருந்தார்கள். அதனால் பணம் பிரச்சினையாகவே இல்லை. கடைசி வரைக்கும் 'இதுவா அதுவா' என்ற மனநிலையில் இருந்த வாக்காளர்களைக் கடைசி நேரத்தில் ஒரு புரட்டு புரட்டி போட்டதுதான் பாஜகவின் வெற்றிக்கு காரணமாகத் தோன்றுகிறது. கடைசி சில நாட்களில் 'பாஜக ஜெயிச்சுடும்' என்று பேச வைத்தார்கள். அப்படியான வேகத்தை பாஜகவின் பிரச்சாரம் காட்டியது. அந்த வேகம் காங்கிரசின் மிகப்பெரிய பலவீனமாக மாறிப் போனது. பாஜக இறங்கி விளையாடத் தொடங்கிய போது கூட காங்கிரஸ் தமக்கான நட்சத்திர பிரச்சாரகர்கள் இல்லாமல் திணறிக் கொண்டிருந்தது. 

தொடக்கத்தில் இருந்தே தாம் எப்படியும் வென்றுவிடுவோம் என்கிற மனநிலையில் காங்கிரஸ் இருந்து கொண்டிருந்தது. கடந்த தேர்தலில் இருந்ததை போன்ற வேகமான பரப்புரையை சித்தராமையா முன்னெடுக்கவில்லை. காங்கிரஸ் அசமஞ்சமாக இருந்ததை பாஜக பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கி தனது திட்டங்களை மாற்றியமைத்த போது காங்கிரஸ் அதற்கான பதிலடி திட்டங்கள் எதையும் பெரிய அளவில் செயல்படுத்தவில்லை. தேசிய அளவிலான தமது கட்சியின் தலைவர்களை அது சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ராகுலையும் சித்தராமாயாவையும் மட்டும் நம்பி ஒரு மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வது- அதுவும் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை செய்வது சாத்தியமில்லாமல் போனது. வெறுமனே 'டிஃபென்சிவ் மோட்'டில் கட்டையை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

எடியூரப்பாவை நம்பி மட்டும் பலனில்லை என்பதை பாஜக விரைவில் புரிந்து கொண்டது. அவரது ஆட்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். அவரது மகனுக்கே சீட் வழங்கப்படவில்லை. 'கட்சிதான் முக்கியம்' என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள்.  அதே சமயம் எடியூரப்பா 'தாம் வெல்லப் போவதாகவும், 19 ஆம் தேதி பதவியேற்பதாகவும்' சொல்லிக் கொண்டிருந்தார். மறுபக்கம் சித்தராமையா தமது தொகுதியான வருணாவை மகனுக்கு ஒதுக்கினார். சாமுண்டீஸ்வரியில் தாம் தோற்றுவிடக் கூடும் என்று பயந்து பாதாமியிலும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.  இவையெல்லாம் வாக்காளர்களிடம் குழப்பம் உண்டாக்கின. ஒருவேளை பாஜக ஜெயிச்சுடுமோ என்று அனுமானிக்கத் தொடங்கினார்கள். வாக்காளர்களை இப்படி நம்ப வைப்பது மிக முக்கியம். அதை பாஜக செய்தது. இந்த கடைசிகட்ட ஸ்விங்கை மிக முக்கியமானதாகக் கருத வேண்டியிருக்கிறது. 

அரசியலில் 'அவனுக்கு வோட்டு போடலைனா நமக்கு போட்டுடுவாங்க' என்று மிதப்பில் இருப்பது மிகப்பெரிய அடியைத் தந்துவிடும். தமது எதிரிக்கு எதிரான வாக்குகளை தமக்கு ஆதரவான வாக்குகளாக மாற்றத் தெரிகிற திறன் வேண்டும். பாஜகவுக்கு எதிரான மனநிலையை தமக்கு சாதகமான வாக்காக மாற்றுகிற பிரச்சார யுக்தி எதுவுமே காங்கிரஸிடம் தென்படவில்லை. தமது ஆட்சிக்கு எதிரான பெரிய அலை எதுவுமில்லாத போதும் தோற்றிருக்கிறது.  அதே சமயம் பாஜக காங்கிரசுக்கு எதிரான மனநிலையை ஒன்று திரட்டி அறுவடை செய்திருக்கிறது. 

பணம், சாதி என சகலமும் இந்தத் தேர்தலில் காரணிகளாக இருந்தன. யாரும் யாருக்கும் சளைக்கவில்லை. 'தேர்தலில் கோல்மால் எதுவுமில்லையா' என்று கேட்கலாம்தான். இருக்கும். இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் கோல்மால் மட்டுமே ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று நம்பவில்லை. காங்கிரசும் பாஜகவும் வலுவான எதிரிகள்தான். அந்த வலுவை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கிறது. தேர்தலில் களப்பணி மிக முக்கியமான காரணி. சகலமட்டத்திலும் அதை பாஜக செய்தது. காங்கிரஸ் கோட்டை விட்டது. 

2019 பொதுத் தேர்தலுக்கு கர்நாடக தேர்தல்தான் முன்னோட்டம் என்றார்கள். அப்படி எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறேன்.

இனி என்ன வேண்டுமானாலும் பேசலாம். களத்தில் பார்க்கும் போது ஒன்றைப் புரிந்து கொள்ள முடிகிறது-  பாஜகவின் உழைப்பு அசாத்தியமானது. திட்டமிடல் மிரட்சியூட்டக் கூடியதாக இருக்கிறது. தோற்றுப் போக வேண்டிய தேர்தலில் வெற்றியடைகிறார்கள். காங்கிரஸ் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்வதே இல்லை. தமது பழைய செல்வாக்கையே நம்பிக் கொண்டிருக்கிறது. மாட்டு வண்டி ஓட்டுவது, சாலையில் முகம் காட்டுவது என இந்திரா, ராஜீவ் பிரச்சார யுக்திகளை மட்டுமே இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறது. களமும் காலமும் வெகுவாக மாறிக் கிடக்கிறது. இதைப் புரிந்து தம்மை வேகப்படுத்திக் கொள்ளாவிட்டால் அடுத்த வருடம் பொதுத் தேர்தலிலும் இதுதான் நடக்கும். 'பாஜக தோற்றுவிடும்' என்று தொடக்கத்தில் பேசுவார்கள். 'போட்டி சரிக்கு சரி' என்று தேர்தல் நேரத்தில் பேச்சு வரும். ஆனால் முடிவு வேறு மாதிரியாக இருக்கக் கூடும்.

16 எதிர் சப்தங்கள்:

raja said...

அடுத்து தமிழ்நாட்டில் எதிரொலிக்காமல் இருந்தால் சரி. எஸ் வீ சேகர் போன்ற அருவெறுப்பான மனிதர்களை அடித்து துவைக்க வேண்டும் போல் இருக்கிறது. என்ன செய்வது! இவர்களின் ஆட்டம் இன்னும் அதிகமாகி விடும்.

David D C said...

2016 தமிழக தேர்தல், Brexit, US President Election, இந்திய மாநில தேர்தல்கள் - அனைத்தும் உணர்த்தும் உண்மை
There is no substitute for hard work;
if work smarter, no one will stop your victory!
இப்போதாவது, தொண்டர்களை திரட்டி வெற்றி நோக்கி இயக்குவதன் முக்கியத்துவம் புரிந்தால் சரி - நல்ல எண்ணமும் திட்டங்களும் கொண்ட தமிழக தலைவர்களுக்கு?
கொள்கைப் பேச்சும், மக்கள் தாமாகவே முன்வந்து வெற்றிபெறவைப்பர் என்று நம்புவதும் தேர்தல் வெற்றி தராது.

களப்பணி அனுபவமிக்க தங்களுக்கு தெரிந்த உண்மைதானே இது?

Selvaraj said...

வாட்டாள் நாகராஜ் படுதோல்வியடைந்ததுதான் ஒரே ஆறுதல்

SENTHIL,BLR said...

Congress & JDS on forming the Government. HDK can be new CM.

Anonymous said...

ONE IS REMINDED OF THIRU, BAKTHAVATCHALAM'S STATEMENT 1967.
A VIRUS HAS SPREAD IN KARNATAKA.
LET US KILL IT BEFORE 2019.
BEFORE IT SPREADS AND KILLS THE NATION .
IT WILL KILL ALL OF US.
RAHUL IS NO MATCH TO MODY.
ONLY MAMTAS/PAWARS CAN MATCH MODY.
IT IS A FREEDOM STRUGGLE
LET US UNITE AND WIN.
IF IT IS RAHUL VS MODY MODY WILL WIN.
MAMTHA VS MODY MAMTHA WILL WIN.
SINGLE HANDEDLY SHE BEAT CPM/CONGRESS.
.CONGRESS BRINGS TO MIND/MEMORY ALL THE CORRUPT/OTHER ACTS OF SONIA/HER TEAM .
MAMTHA IS SIMPLE. EVEN BJP IS NOT DIRECTLY ACCUSING HER OF CORRUPTION.
SHE WILL OUT SMART MODY. PLEASE REMEMBER HER STAND ON TERRITORIAL ARMY.
SENSE OF SACRIFICE IS NEEDED FROM CONGRESS.
LET US PRAY IT COMES TO CONGRESS.
WE WILL JOINTLY WIN.
ANBUDAN,
M.NAGESWARAN.

சலீம்பாய் said...


//எஸ் வீ சேகர் போன்ற அருவெறுப்பான மனிதர்களை அடித்து துவைக்க வேண்டும் போல் இருக்கிறது.//

ஆமா எஸ்வீ சேகருக்கு முன்னாடி தமிழ்நாட்டு அரசியலில் அப்படியே சங்கத்தமிழ் மட்டும்தான் கரைபுரண்டு ஓடியதாக்கும்? கருணாநிதியும் ஸ்டாலினும் பேசாத பேச்சா? தீப்பொறியும் வெற்றிகொண்டானும் காதில் ஈயத்தை காச்சி ஊத்துவார்கள் என்பது தெரியாதா? திமுகவில் இருந்தபோது ஜெயாவை ஆபாசமா பேசி பின் அதிமுகாவில் சேர்ந்து கருணாநிதியை அசிங்கமாக திட்டியவர் தீப்பொறி ("கைது பண்ணப் போனா பொண்டாட்டியோட பெட்ரூமிலிருந்து வேட்டிய புடிச்சிட்டு வர்றான்யா, இந்த வயசில சேட்டைய பார்த்தியா?"). அவர்கள் ரேஞ்சுக்கு இறங்கி எதிர் அரசியல் பேச காங்கிரஸில், பாஜகாவில் போதுமான ஆட்கள் இல்லை. இளங்கோவன் ராஜா போன்ற சிலர்தான் உண்டு.

Anonymous said...

I think Lingayat Problem is most important for this election. Siddaramaiah had mistaken in this issue.

Anonymous said...

I spoke to one of my Lingayat friend before election. His statement is 'Lingayats will be the last guys who want to be called as non-hindus'.

It looks like Congress did not understand this ground reality and followed blindly the divide & conquer logic.

nerkuppai thumbi said...

உங்கள் மன நிலையிலிருந்தே தொடங்குவோம்: காங்கிரஸ் வென்றிருக்கவேண்டியது; கடைசி நேரத்தில் பா ஜ க ப்ரமிப்பாட்டுக் காட்டி அதிக இடங்களை தட்டிக் கொண்டது. அப்படியே இருக்கட்டும். இப்படி நடப்பது காங்கிரசுக்கு இது முதல் தடவையா? பொதுத் தேர்தலுக்குப் பின் சட்டிஸ்கரில் குஜராத்தில் பா ஜ க இவ்வாறு தானே வென்றது? இவ்வளவு ஆண்டுகள் பதவியில் இருந்த கட்சியில் ராஹுலையும் சித்த்தராமையாவையும் தவிர்த்து என் நட்சத்திர பேச்சாளர்கள் இல்லை? காங்கிரசின் முந்தைய அமைச்சர்கள் சிதம்பரம் சவானையும் கமலநாத்தையும் போல் ஊழல் வாதிகளாக மக்களுக்கு ஊழல் வாதிகளாகத் தெரிகிறார்கள் உ காங்கிரசு அரசு கொண்டுவந்த திட்டங்களை எந்த ஒரு அமைச்சரும் தம் அரசின் திட்டம் இதை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று நினைக்க வில்லை. பயனுள்ளதோ பயனற்றதோ அனைவரும் ஒரே குரலில் மோடி பேரைச் சொல்லி பேசுகிறார்கள். மல்லிகார்ஜுன கார்கே எத்தனை கூட்டங்களில் சித்தராமையாவின் அரசு மிக நன்றாக செயல் பட்டது என்று சொல்லி ஒட்டு கேட்டிருப்பார்? சித்ததுவை புகழ்ந்தால் தேர்தலுக்குப் பின் சீனியாரிட்டி என்று சொல்லியோ தலித் என்று சொல்லியோ முதல் அமைச்சர் பதவியில் அமர ஆசை அவருக்கு. ஐந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர்கள் தம் அரசின் நல்ல திட்டங்களை சொல்லி வாகு கேட்கவில்லை என்றால் எவ்வளவு மீண்டும் ஆட்சியை பிடிக்கும்?

Anonymous said...

29 இடங்களில் பிஜபி டொப்பாசிட் இழந்ததை கருத்தில் கொள்ளனும்

raja said...

சலீம் பாய்,

திமுகவை பற்றிய உங்கள் கருத்துக்கள் சரியே. திமுகவையும் அதிமுகவையும் நம் தலையில் கட்டிய நம் பெற்றோர்களை நினைத்தால் கோபம் தலைக்கு ஏறுகிறது.ஸ்டாலின் வழக்கமாக பேசும் ரௌடி பேச்சு, இந்திராவை பற்றி கருணாநிதி பேசிய பேச்சுக்கள் நினைக்கவே அருவெறுப்பானதுதான். இன்று கருணாநிதியிடம் எல்லாம் இருக்கின்றன, பேச்சை தவிர. இயற்கையின் விதி!!

அதே நேரத்தில் எஸ் வி சேகரை மன்னிக்க முடியாது. நீங்கள் சொல்வது எப்படி இருக்கின்றதென்றால், "அவன் 10 பேரை பாலியல் வன்கொடுமை செய்தான், இவன் ஒன்றுதானே செய்தான், விட்டு விடலாம்" என்பது போல் இருக்கிறது.

தனக்கு அரசியலில் வாழ்வளித்த ஜெயலலிதாவை அவர் இறந்த பிறகு, "ஜெயந்திரனை கைது செய்த பாவத்திற்கு தான் தண்டனை" என்று கூசாமல் பேசினார். எந்த டிவி என்பது மறந்து போயிற்று. அத்தனை திமிரோடு பதில் அளித்தார் எஸ் வி சேகர். நம் வீட்டில் பத்திரிகையில் ஒரு பெண் வேலை செய்தால், "படுத்து வேலை வாங்கி இருப்பாள்" என்று எவனாவது பேசினால் சும்மா இருப்போமா?

Anonymous said...

"ஆனால் கடைசி சில நாட்கள் மிரட்டலாக இருந்தன"...க்கு பதிலாக
"இருக்கின்றன" என்று ஒரு 4 நாள் முன்னாடி சொல்லிஇருந்தால் நல்லா இருந்திருக்கும்..

சேக்காளி பதிவர் said...

//29 இடங்களில் பிஜபி டொப்பாசிட் இழந்ததை கருத்தில் கொள்ளனும்//
சேக்காளி பதிவர்

Anonymous said...

ஹாஹாஹா... இங்க கமெண்ட் போடும் கீழ்ப்பாக்கம் ஏரியா மாதிரியான ஆசாமிகளுக்கு,
பிஜேபி வந்தால் பிரச்சனையாம் , ஆனால் ஒரு இத்தாலி மாபியா நாட்டை அண்டா பிரச்னை இல்லயாம். மதசார்புடைய (சிறுபான்மை மக்களுக்கு மட்டுமே) உழைக்க விரும்பும் காங்கிரசும் மஜத வும் சேர்ந்து ஆட்சி அமைக்கலாமாம், ஆனால் appeasement கிடையாது, எல்லாரும் ஒன்று அன்று ஆள விரும்பும் பிஜேபி ஆல கூடாதாம். போங்கய்யா நீங்களும் உங்க அதி புத்திசாலியான மூளையும்.

பிஜேபிக்கு ஆதரவு இல்லாம எதிர் தரப்பிற்கு ஆதரவு கொடுத்தால்... மேற்கு வாங்க இந்துக்களும் கேரளா இந்துக்களும் காஷ்மீர் இந்துக்களும் படும் பாட்டை நீங்களும் பட வேண்டும் என்று சாபம் இடுகிரென். நல்லா- ஆஆஆஆஅ இருங்கோஓஓஓஓஓஓஓஓ

Anonymous said...

ஹாஹாஹா... இங்க கமெண்ட் போடும் கீழ்ப்பாக்கம் ஏரியா மாதிரியான ஆசாமிகளுக்கு,
பிஜேபி வந்தால் பிரச்சனையாம் , ஆனால் ஒரு இத்தாலி மாபியா நாட்டை அண்டா பிரச்னை இல்லயாம். மதசார்புடைய (சிறுபான்மை மக்களுக்கு மட்டுமே) உழைக்க விரும்பும் காங்கிரசும் மஜத வும் சேர்ந்து ஆட்சி அமைக்கலாமாம், ஆனால் appeasement கிடையாது, எல்லாரும் ஒன்று அன்று ஆள விரும்பும் பிஜேபி ஆல கூடாதாம். போங்கய்யா நீங்களும் உங்க அதி புத்திசாலியான மூளையும்.

பிஜேபிக்கு ஆதரவு இல்லாம எதிர் தரப்பிற்கு ஆதரவு கொடுத்தால்... மேற்கு வாங்க இந்துக்களும் கேரளா இந்துக்களும் காஷ்மீர் இந்துக்களும் படும் பாட்டை நீங்களும் பட வேண்டும் என்று சாபம் இடுகிரென். நல்லா- ஆஆஆஆஅ இருங்கோஓஓஓஓஓஓஓஓ

Anonymous said...

மணி அண்ணா உங்களுக்கு பிஜேபி பிடிக்கலைனா கூட ஒரு நியாயம் இருக்கு. ஆனா காங்கிரஸ் நிசப்தத்தில வர்ற அளவுக்கு ஒர்த் இல்லண்ணா.