நிசப்தம் அறக்கட்டளை உதவியுடன் கல்வி பயிலும் கல்லூரி மாணவர்கள் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.
அரவிந்த் குமார் - உ.சகாயம் ஐ.ஏ.எஸ்சின் தலைமையில் இயங்கும் அறிவியல் நகரம் நடத்திய அறிவியல் கண்காட்சியில் மாநில அளவில் முதலிடம்
சார்லி- தேசிய அளவிலான வாள் சண்டையில் வெற்றியாளர்
தமிழரசு - ஜிம்னாஸ்டிக்கில் தொடர்ந்து நிகழ்த்தும் சாதனைகள்
இந்த மாணவர்களை பாராட்டி ஒரு நிகழ்வினை நடத்துவது பிற மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் என்று நண்பர்கள் சொன்னார்கள். அது சரியெனப்பட்டது. நிசப்தம் அறக்கட்டளையோடு தொடர்பும், தோழமையும் கொண்டுள்ள நெருக்கமானவர்களை மட்டும் அழைத்து, சிறிய அளவிலான எளிமையான பாராட்டு நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்கள் முன்பாக மாணவர்களின் திறமைகளை விளக்கி அவர்களுக்கு எதிர்காலத்தில் இருக்கும் வாய்ப்புகளை எடுத்துச் சொல்வதுதான் நோக்கம். ஆரவாரமில்லாமல் செய்வோம். சக மாணவர்களை வேகம் எடுக்க வைப்போம்.
நாள் :
03.03.2018 சனிக்கிழமை
நேரம்:
மாலை 4 மணி முதல் 5-30 மணி முடிய.
(மிகச் சரியான நேரத்தில்)
இடம்:
வைர விழா மேனிலைப் பள்ளி, கோபி.
நிசப்தத்திற்கு நெருக்கமானவர் என்ற முறையில், தங்களின் வருகையை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். வாய்ப்பு இருப்பவர்கள் நிச்சயமாகக் கலந்து கொள்ளவும். மாணவர்களை ஊக்குவிப்பதுதான் நோக்கம் என்பதனால் வேறு எந்த விளம்பரமும் அறிவிப்பும் இருக்காது.
(குறிப்பு: வெளியூரில் இருக்கும் நிசப்தம் உதவி பெறும் மாணவர்கள் சிரமப்பட வேண்டாம். பிறிதொரு நாளில் சந்திப்போம்)
4 எதிர் சப்தங்கள்:
வாழ்த்துகள் "மணி"யான மாணாக்கர்களுக்கு.
அருமையான யோசனை .. பாராட்டும் அங்கீகாரமும் மாணவர்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர உத்வேகம் கொடுக்கும்..
//மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்கள் முன்பாக மாணவர்களின் திறமைகளை விளக்கி அவர்களுக்கு எதிர்காலத்தில் இருக்கும் வாய்ப்புகளை எடுத்துச் சொல்வதுதான் நோக்கம். ஆரவாரமில்லாமல் செய்வோம். சக மாணவர்களை வேகம் எடுக்க வைப்போம்.//
வாழ்த்துக்கள்
மண்ணிச்சுகோங் தல நான் வர முடியாத சூழ்நிலை. அதுக்கு பதிலா சில சில்வண்டுகள் நம்..! சார்பா கலந்து கொள்ளும்.
Post a Comment