Feb 8, 2018

மயில் குஞ்சு

மகன் பிறந்திருக்கிறான். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையிலிருந்து கோவை மெடிக்கல் செண்டரில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். மருத்துவமனை வாசத்திலேயே இன்பம் தரக் கூடிய நிகழ்வென்றால் குழந்தை பிறப்புக்காகக் காத்திருப்பதுதான். ஒவ்வொரு சகுனமாக விளையாடியபடியே இருந்தேன். இரண்டு லிஃப்ட்களில் வலது புறம் இருப்பது முதலில் வந்து சேர்ந்தால் பையன் பிறப்பான். இடது புறத்து லிஃப்ட் என்றால் மகள் என்று நினைத்துக் கொண்டேன். வலது புற லிஃப்ட்தான் முதலில் வந்து சேர்ந்தது.  

ஞாயிற்றுக்கிழமை இரவில் வேணியை மருத்துவமனையில் சேர்த்தோம். அந்த அறைக்கு நேர் கீழாக அவசர சிகிச்சைப் பிரிவு. அவசர ஊர்திகள் வந்து கொண்டேயிருந்தன. ‘சாப்பிட்டுட்டு வர்றேன்’ என்று சொல்லிவிட்டுக் கீழே வந்த போது விபத்தில் இறந்து போன ஓர் இளைஞனைத் தூக்கிக் கொண்டு வந்திருந்தது அந்த அவசர ஊர்தி. உயிர் இருக்கக் கூடும் என்ற நம்பிக்கையில் அவனது அம்மாவும் மனைவியும் இன்னபிற உறவினரும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அருகாமையில் அமர்ந்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் இன்னோர் இளைஞன் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து ஓடி வந்து ‘அண்ணன் நம்மளை விட்டுட்டு போய்ட்டான்’ என்றான். கூட்டம் கதறியது. எனக்கு கை கால்கள் நடுங்கத் தொடங்கின. எதுவும் உண்ணத் தோன்றவில்லை. அறைக்குச் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டேன். மறுநாள் வேணிக்கு அறுவை. அவளைத் தூங்கச் சொல்லிவிட்டு இனிமேல் அந்தப் பக்கமே போகக் கூடாது என்று முடிவு செய்தபடியே தூங்க முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

திங்கட்கிழமை காலையில் அறுவை சிகிச்சைக்கு வேணியை உள்ளே அழைத்துச் சென்றிருந்தார்கள். அதுதான் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் பொதுவான அறுவை அரங்கு. இருதயம் செயலிழந்து, நுரையீரல் பிரச்சினைக்காக, விபத்துக்களில் அடிபட்டு என்று வெவ்வேறு காரணங்களுக்காக தமது ரத்த பந்தங்களை உள்ளே அனுமதித்துவிட்டு அரங்குக்கு வெளியில் நிறையப் பேர் காத்திருக்கிறார்கள். அங்கே சிரிப்பது கூட அநாகரிகம். எப்பொழுது குழந்தையை வெளியே எடுத்து வருவார்கள் என்ற பதற்றத்தையும் தாண்டி அடுத்தவர்களின் அழுகையும் கண்ணீரும் நம்மை என்னவோ செய்து கொண்டேயிருக்கும். 

பதினொன்றரை மணிக்கு மருத்துவர் வெளியே வந்து ‘இங்க யாருங்க கிருஷ்ணவேணிக்கு சொந்தம்?’ என்றார். அருகே சென்றேன். ‘பையன்’ என்றவர் ‘ரெண்டு பேரும் நல்லாருக்காங்க’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

அடுத்த சில நிமிடங்களில் எடுத்து வந்தார்கள். பிங்க் நிறத்தில் இருந்தான். கையில் B/o கிருஷ்ணவேணி என்று ஒரு பட்டையைக் கட்டியிருந்தார்கள். ‘பையன்..பார்த்துக்குங்க’ என்று செவிலியப் பெண் அவனது ஜிண்டைக் காட்டிவிட்டு ‘அப்பா மட்டும் கூட வாங்க’ என்று அழைத்துச் சென்றார். ‘இதை வெச்சு எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறது’ என்று மண்டை காய்ந்தேன். குளிக்க வைத்து ஆடை மாற்றிக் கொடுத்தார். 

பெரு மருத்துவமனைகளில் நோய்மைகளைப் பார்த்துப் பார்த்து வாழ்க்கை மீதான அவநம்பிக்கையும் பயமும் ஒரு போர்வையைப் போல வந்து விழுகின்றன. அப்பாவை அதே மருத்துவமனையில்தான் சேர்த்திருந்தோம். அந்த அறைப்பக்கமே போய்விடாமல் நான்கு நாட்களைக் கடப்பது பெரும் வாதை. தவிர்க்கவே முடியாமல் அந்தப் பக்கம் செல்லும் போதெல்லாம் அப்பாவை அமர வைத்திருந்த நாற்காலிகளும், ரத்தத்தைப் பரிசோதனைக்குக் கொடுப்பதற்காக காத்திருந்த அறையும் கண்களில் படும். கடந்த வருடம் நெருப்புக்கு அவரைக் கொடுத்துவிட்டு அஸ்தியை பவானி ஆற்றில் கரைத்த போது ‘உங்கப்பாவே உனக்கு மகனாகப் பிறப்பார்’ என்று கடைசிக் காரியங்களைச் செய்தவர் சொல்லி அனுப்பினார். மகள் பிறந்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் இருந்த எனக்கு பவானிக்காரர் சொன்ன சொற்கள்தான் நினைவில் வந்து போயின. 

என்னை இதே போல பிஞ்சுக் குழந்தையாக எடுத்து வந்த போது ‘மயில்குஞ்சு பார்த்திருக்கியா’ என்று அப்பா தன்னிடம் கேட்டதாக அம்மா சொல்லியிருக்கிறார். அப்பா பெயர் வாசுதேவன். இவனது பெயரிலும் ‘வாசு’ இருக்கும்படியாக பெயர் ஒன்றைத் தேட வேண்டும். 

‘திரு நிறை வாசன் எப்படியிருக்கு?’ என்றேன். 

‘நந்தன்னு வர்ற மாதிரி ஒரு பேரைச் சொல்லுங்க’ என்று சொல்லி மகி நிராகரித்துவிட்டான்.

மகி பிறந்த போது ‘அதுக்குள்ள அப்பா ஆகியாச்சு’ என்பது நம்ப முடியாமல் இருந்தது. அப்பொழுது எனக்கு இருபத்தெட்டு வயது. அவனைத் செவிலியப் பெண் தூக்கிக் கொண்டு வந்து காட்டிய போது திடீரென வந்த பொறுப்பு போல உணர்ந்த தருணம் அது. இவன் பிறக்கும் போது அப்படியே உல்டாவாகியிருக்கிறது. ‘வயசாகிடுச்சு’ என்கிற மனநிலை. ‘முப்பத்தஞ்சு எல்லாம் ஒரு வயசா?’ என்று கேட்கலாம்தான். [‘முப்பத்தஞ்சுதான் ஆச்சா?’ என்று யாராவது கலாய்ப்பார்கள். ‘சரி. முப்பத்தாறு’]. மகனுக்கு இருபத்தைந்து வயதாகும் போதே எனக்கு அறுபதைத் தாண்டிவிடும் என்று யோசித்தால் இந்த எண்ணம் இன்னமும் வலுப்பெறுகிறது. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி உடல்நிலையை ஒழுங்காக பாதுகாத்து என்னவெல்லாமோ செய்ய வேண்டியிருக்கிறது.

அநேகமாக இன்று  மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. இப்பொழுதெல்லாம் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போதே உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்து பனிரெண்டு இலக்கமுடைய RCH ID வாங்கிவிட வேண்டுமாம். ஜனவரியிலிருந்து இதைக் கட்டாயமாக்கியிருக்கிறார்கள். இந்த எண் இருந்தால்தான் பிறப்புச் சான்றிதழை வாங்க முடியும். இந்தத் தகவல் எங்களுக்குத் தெரியாது. நேற்றுதான் பதிவு செய்து வாங்கி வந்தேன். 

நேற்று பிரசவ அறைக்கு முன்பாக ஒரு பெண் ‘ஆமாங்க..சொகப் பிரசவம்தான்’ என்று வரிசையாக உறவினர்களுக்கு அழைத்துப் பேசிக் கொண்டேயிருந்தார். அவரது மகளுக்கு பிரசவமாகியிருக்கிறது. வாய் நிறையச் சிரிப்பு. அதே தளத்தில்தான் இன்னொரு சிறுபெண் அழுது கொண்டிருந்தாள். உள்ளே அவளது அப்பாவுக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. ‘நீதான் தைரியமா இருக்கோணும்..நீயே அழுதீன்னா அம்மாவுக்கு யாரு தைரியம் சொல்லுறது?’ என்று உறவுக்காரர் ஒருவர் அவளைத் தேற்றிக் கொண்டிருந்தார். இருவேறு காட்சிகள் அவை. அவரவருக்கு அவரவர் துக்கமும் சந்தோஷமும். எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு அறை எண் 547க்கு ஓடி விட வேண்டும் என்று பதறியபடியே நான் வேக வேகமாக எட்டி வைத்தேன். உள்ளே குட்டிப்பையன் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் உறங்கிக் கொண்டிருந்தான். மயில்குஞ்சு உறங்குவது போல.

69 எதிர் சப்தங்கள்:

David D C said...

வாழ்த்துக்கள் மணி!

நலம் வளம் பெருகட்டும்.

Bala said...

Valthukkal Mani !!!

Jaypon , Canada said...

வாழ்த்துக்கள். பேரும் புகழும் எல்லா நல்லனவும் மகிழ்வுடன் வாழட்டும் மயிலன்.

Anonymous said...

Best wishes......

Ponchandar said...

சண்முக வாசன் --- பெயர் எப்படி ???

Uma said...

நான் என் மகள் பிறந்தபோது குரங்குக் குட்டி போல இருக்கிறாள் என்று சொல்லி அனைவரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டேன். ஆனால் அப்படித்தான் இருந்தாள்... குச்சி குச்சியாக மேல்நோக்கி குத்திட்டு நின்ற மயிரும்,பிங்க நிறத்தில் விக்ஸ்மிடடாய் போன்ற முக்கோண முகமும், நீள நீளமாக கைகால்களுமாக!😉😀
வாழ்த்துக்கள் மணிகண்டன்!

Unknown said...

Congrats Mani.....

Chandru said...

வாழ்த்துக்கள் சார்...

Anonymous said...

Vazthukal mani Ji!!!!

Unknown said...

வாழ்த்துகள் மணி....

ஜெ.உமா மகேஸ்வரன் said...

வாழ்த்துக்கள் மணிகண்டன்!

Unknown said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

Happy Parenting Mani

Unknown said...

Congrats

GANESAN said...

உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் மனம்கனிந்த வாழ்த்துக்கள் , திரு.மணி

Devi said...

Very happy for you Anna

பெரோஸ் said...

உங்கள் குணம் நிரம்பியதுபோல்,
குளம் நிரம்பியது, குலமும் நிரம்பியது.
வாழ்வில் சந்தோஷமும் நிரம்பி வழிய வாழ்த்துக்கள்...

RAJ said...

ஆல் போல் தழைத்து அருகு போல் பெருகி தங்கள் குலம் வாழ வாழ்த்துக்கள் .
ந.இராஜு
சென்னை

Selvaraj said...

வாழ்த்துக்கள் உங்களுக்கும் மயில்குஞ்சின் அம்மாவுக்கும்

கொமுரு said...

வாழ்த்துக்கள் மணிகண்டன்!

Unknown said...

வாழ்த்துக்கள் மணி!

அன்பே சிவம் said...

🙌

Nandha said...

Congrats Mani. See if you like DevNandan.

Karthik R said...

வாழ்த்துக்கள்.

குட்டிப்பையா வாழ்க வளமுடன்.

Thirumalai Kandasami said...

மகிழ்ச்சி !!!

Duke Daniel said...

Congrats Mani.

சேக்காளி said...

"குட்டி" யான் நிம்மதியான வாழ்வு பெற வாழ்த்துகிறேன்.

சேக்காளி said...

//மகள் பிறந்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் இருந்த எனக்கு//
பெட்டர் லக் நெக்ஸ்டு டைமு.
முப்பத்தாறுனெல்லாம் கவலைப் பட வேண்டாம்.

சேக்காளி said...

//திரு நிறை வாசன் எப்படியிருக்கு?’ என்றேன்.

‘நந்தன்னு வர்ற மாதிரி ஒரு பேரைச் சொல்லுங்க’ என்று சொல்லி மகி நிராகரித்துவிட்டான்.//
வாச நந்தன் (VASA N ANDHAN)
வாசுதேவ நந்தன்
தேவ நந்தன்
நந்தவாசன்
நந்த தேவன்
ஆனந்த வாசன்.
இதுல ஏதாவது ஒண்ணு பிடிச்சிருந்தா கறிசோறு கண்டிப்பா வேணும்.

சேக்காளி said...

//இருவேறு காட்சிகள் அவை. அவரவருக்கு அவரவர் துக்கமும் சந்தோஷமும்.//
மகன் பிறந்துள்ளான் என்ற நிலையில் கூட
அங்கு எழுத்தாளனாய் தான் நின்றிருக்கிறீர்கள்.
இது வரமா? சாபமா?

சேக்காளி said...

ஆனாலும் உங்க நேர்மையை மெச்சுகிறேன் உமா.
//விக்ஸ்மிடடாய் போன்ற முக்கோண முகமும்//
என்ன மா கற்பனை பண்ணிருக்கீங்க!!!!!

Sathyamoorthy said...

வாழ்த்துக்கள் அண்ணா :))

Kodees said...

Congrats and wishes!!

செ. அன்புச்செல்வன் said...

வாழ்த்துகள் நால்வருக்கும் மணிகண்டன் சார் !! மயில்குஞ்சுக்கு மயில்நந்தன் என்ற பெயரைப் பரிந்துரைக்கிறேன்!!

Murugaraj said...

வாழ்த்துக்கள் மணி!

அசோக் said...

வாழ்த்துக்கள் :)

Murugaraj said...

வாழ்த்துக்கள் மணி!

Anonymous said...

Sir vazhthukal. Kuttypaiyan vazhga valamudan.

Sathyamoorthy said...

வாழ்த்துக்கள் அண்ணா :))

Rajkumar said...

வாழ்த்துக்கள்.

vic said...

வாழ்த்துக்கள் மணி

Sakthivel Viru said...

வாழ்த்துக்களுங்க மணி

Anonymous said...

இரண்டு லிஃப்ட்களில் வலது புறம் இருப்பது முதலில் வந்து சேர்ந்தால் பையன் பிறப்பான். இடது புறத்து லிஃப்ட் என்றால் மகள் என்று நினைத்துக் கொண்டேன்.

MCP Mani garrrrrrrrrrrrrrrrrrrrrrrr

Full Stop.

Congrats

Anonymous said...

Congratulations !!!

சேதுபதி said...

வாழ்த்துக்கள் அண்ணா...

தினேஷ்குமார் செ said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் நால்வருக்கும்!

யது நந்தன்.. சற்றே வித்தியாசமான பெயர்.

Vishnu said...

Congrats Mani.

nilakutti said...

தேவ நந்தன்? வாழ்த்துக்கள் மணிகண்டன்!!!

Muthu P.E said...

எல்லா நலமும் பெற்று வளமுடன் வாழ்க பல்லாண்டு. மகிழ்ச்சி

Prabhu Jayaprakasan said...

Best wishes to you and family!!

அன்பே சிவம் said...

குடும்பத்தாரின் விருப்பத்துக்கு விட்டுடுங்களேன். அவர்களின் மகிழ்ச்சியும் முக்கியமல்லவா! முக்கியமாக தங்கள் தாயார்.

Unknown said...

Manamarntha vazhthukkal, yellam valla iraivanin asigaludan.

Kalai Amuthan said...

வாழ்த்துக்கள் மணி. வாசன். வா son. நல்லலருக்கா.

அன்புடன் அருண் said...

எல்லா வளமும் பெற்று மகிழ்வோடு வாழ்க!! வாழுவீர்கள்!

கண்ணன் கரிகாலன் said...

மணிவாசனுக்கு வாழ்த்துகள்.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

மயில் குஞ்சுவும் மற்றும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் எழுவரம் வாழ்க வளமுடன்

Kathir said...

Congrats !!

நாச்சியப்பன் said...

தாய்க்கும், சேய்க்கும், தமயனுக்கும், தங்களுக்கும் வாழ்த்துகள்.

Vinoth Subramanian said...

Your father is back... Congratulations!!!!May god bless the child and bless him with the bright future!!!

Anonymous said...

Congrats Mani! Hearty wishes to you & family :)

Sathya said...

Congratulations Mani

ilavalhariharan said...

வா ழ் த் து க ள்.... வாசுநந்தன் ...வாழ் க.

உஷா said...

மணி,
வாழ்த்துக்கள் மனைவியைக் காதலியுங்கள்.

Maktub said...

Congratulations! All the best to you and your family !!

Anonymous said...

வாழ்த்துக்கள்? தேவனந்தன் எப்படியிருக்கு?

Devathaii said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

Congrats Mani..Best wishes...

Malar said...

வாழ்த்துக்கள் :):)

Anonymous said...

வாழ்த்துகள் மணி.
அபுல்