Nov 16, 2017

அக்டோபர்’2017

நிசப்தம் அறக்கட்டளையின் அக்டோபர் 2017 மாதத்திற்கான வங்கி வரவு செலவு விவரம்.


பத்து கிராமப்புற அரசுப்பள்ளிகளுக்கு பள்ளிகளுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய்க்கு நூலகங்கள் அமைக்க  பாரதி புத்தகாலயத்திற்கு ஐம்பத்தைந்தாயிரம் வழங்கப்பட்டது.  (காசோலை எண் 226)

குணசுந்தரி என்ற பெண்ணின் (திருச்சி அண்ணா பல்கலைக்கழகம்) கல்லூரித் தொகை ரூ. 23,123 (காசோலை எண் : 225)

பனிரெண்டாம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான கோப்பு, எழுதுகோல், நோட்டுப்புத்தகங்கள் என ஒரு செட்- இந்த வருடத்திற்கு என 300 செட் தயார் செய்யப்பட்டது. அதற்கு லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற கடைக்கு ரூ 21,775 வழங்கப்பட்டிருக்கிறது.

(தொடர்ச்சி...)


காசோலை எண் 232:  தக்கர்பாபா வித்யாலயா விடுதிக்கு குளிர்சாதனப்பெட்டி வாங்கிக் கொடுப்பதற்காகக் கொடுக்கப்பட்ட தொகை. ‘கடந்த ஆண்டு ராயல்ட்டியாக வந்த தொகையை நிசப்தம் அறக்கட்டளையில் செலுத்திவிடுங்கள். அந்தத் தொகையை இந்தப் பணிக்குக் கொடுத்துவிடுகிறேன்’ எனச் சொல்லியிருந்தேன். யாவரும் பதிப்பகத்திலிருந்து பணம் இன்னமும் வரவில்லை. பத்தாயிரம் ரூபாய் தாயுமானவன் என்ற லண்டன் வாழ் நண்பர் கொடுத்திருக்கிறார். 

காசோலை எண் 230: கெளதம் (ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி) என்கிற மருத்துவ மாணவனுக்கான கல்வி உதவித் தொகை.

தொடர்ந்து உதவுகிற, துணையாக நிற்கிற அனைவருக்கும் நன்றி.

குறிப்பு: இப்பொழுது ஆன்லைனில் கணக்கைத் திறப்பதேயில்லை. ஒவ்வொரு மாதமும் கணக்கு விவரத்தை வங்கியிலிருந்து மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறார்கள். அநேகமாக மாதம் தொடங்கி ஐந்தாறு நாட்கள் கழித்து வந்து சேரும். இந்த மாதம் சரியாகக் கவனிக்காமல் விட்டுவிட்டேன். யாருமே கேட்கவில்லை. சுமதிதான் நினைவூட்டினார். பணம் கொடுத்தவர்களே கேட்கவில்லையென்றால் எப்படிங்க? ஒரு நியாய தர்மம் வேண்டாமா? இனிமேல் சரியாகக் கேட்கவும்.

ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ளவும்-
vaamanikandan@gmail.com

1 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

// பணம் கொடுத்தவர்களே கேட்கவில்லையென்றால் எப்படிங்க? ஒரு நியாய தர்மம் வேண்டாமா? இனிமேல் சரியாகக் கேட்கவும்.//
சின்னப் புள்ளேளு முட்டாயி கடையில நின்னுகிட்டு வாங்கி தந்தா தான் வருவேன் ன்னு அழுற மாதிரி அழுவதற்கு முன்னால் பணம் அனுப்பியவர்கள் இல்லே ன்னா உதவி பெற்றவர்கள் வரவு செலவு கணக்கை கேட்டு தொலைக்கவும்.
நான் இதுவரைக்கும் பணம் அனுப்பாததால் கேக்க முடியாது.
தூர்தர்சன் ல ஒளிபரப்பான நிகழ்ச்சிய முழுசா பாத்ததுக்கான கூலி அந்த 200ஓவா வை தான் கேக்க முடியும்.