Sep 3, 2017

என்ன கேட்டீங்க?

In the year 2015, we subscribed to chinnanathi magazine after seeing your post in nisaptham. I received the magazine only for 2 months. After that they disappeared, no responses to emails and calls. Kindly check and let us know..
சின்னநதி மற்றும் மின்மினி என்ற இரண்டு இதழ்களை பல பள்ளிகளுக்கு அனுப்பச் சொல்லி நிசப்தம் அறக்கட்டளையிலிருந்தும் பணத்தை சந்தாவாக செலுத்தியிருந்தோம். இதழ்களை திடீரென்று நிறுத்திவிட்டார்கள். மிக மிக கசப்பான அனுபவம் இது. குறைந்தபட்ச பொறுப்புணர்வுடன் பள்ளிகளுக்கு அவர்கள் தகவலாவது தெரிவித்திருக்க வேண்டும். செய்யவில்லை. அதன் பிறகுதான் சிற்றிதழ்களின் சந்தா என்றாலே பரிந்துரை செய்யச் சங்கடமாக இருக்கிறது. இத்தகைய இதழ்களை பரிந்துரை செய்தது தவறுதான். மன்னிப்புக் கோரிக் கொள்கிறேன்.

சரஹாவில் கேட்கப்படும் பெரும்பாலான கே‍ள்விகளுக்கு நீங்கள் மழுப்பலான பதிலையே கூறுவது போலத் தோன்றுகிறது. ஒப்புக் கொள்கிறீர்களா?
ஆமாம். இனி அரிவாளை சேனை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

குழந்தைகளை அடிக்கலாமா?
அளவுக்கு மிஞ்சாதவரை தவறில்லை.

பிடித்த எழுத்தாளர்(கள்)?
அசோகமித்திரன், சுஜாதா, ஜெயமோகன், மனுஷ்ய புத்திரன், பெருமாள் முருகன், இரா.முருகவேள்

Who is your very close friend in school period and college period
பள்ளிக்காலங்களில் செந்தில்பிரபு, சாதிக், வெள்ளியங்கிரி. கல்லூரியில் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிற அளவுக்கு நெருக்கமான நண்பர்கள் இல்லை.

மனைவியிடம் அடி வாங்கியுள்ளிரா? How she react when wrote about another girl (abt sight adichify 😊, ....)
அடி வாங்கியதில்லை. முன்பு கோபப்பட்டுப் பார்த்திருக்கிறேன். எத்தனை தடவைதான் எனக்குச் சொல்ல முடியும்? ‘திருந்தாத ஜென்மம்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் என நினைக்கிறேன்.

நானெல்லாம் ஏதாவது சிறிசா செஞ்சாலே பெரிசா சாதிச்சது போல ஒரு மனநிறைவு கிடைக்கும். நீங்கள் சமூகப்பணிகளில் நிறைய ஈடுபடுவதால் உங்களுக்கும் அதுபோல பலதடவை சின்னச்சின்ன மனநிறைவு கிடைத்திருக்கும். ஆனால், இன்னும் முழுமையான மனநிறைவு கிடைக்காததுபோல் என்றாவது எதற்காகவாவது உணர்ந்திருக்கிறீர்களா?
முழுமையான மனநிறைவை அடைந்துவிட்டால் சலிப்பு தட்டிவிடும். ‘இதை எப்படி இன்னமும் சிறப்பாக செய்திருக்க முடியும்’ என்ற கேள்விதான் தொடர்ந்து இயங்குதலுக்கான முக்கியமான ஆதாரப்புள்ளி. 

தாங்கள் தங்களுடைய வழுக்கைத் தலையினையும், ஒல்லியான தெகத்தையும் அவ்வப்போது சுயபகடி செய்து கொள்கிறீர்கள். அதில் பிரச்சனை என்னவென்றால் அதைப் பொதுவெளியில் பதிவிடுகிறீர்கள். அதைப் படிக்கும்போது சப்பையான தோற்றம் கொண்ட சொட்டைத்தலையனான எனக்கு மிகவும் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. மற்றவன் சொன்னால் பரவாயில்லை... கடந்து போய்விடுவேன். நிறைய வாசித்து பெரிய பெரிய பேச்சுக்களெல்லாம் பேசும் ஒரு சிந்தனையாளனின் பார்வையும் இவ்வளவுதானா என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.
உடலை வைத்து நம்மை நாமே தாழ்வாக நினைத்துக் கொள்ள எதுவுமில்லை. சுயபகடி என்பது கூட எல்லாவற்றையும் எளிமையாகத் தாண்டிச் செல்வதற்கான ஒரு செயல்பாடுதான். ‘நல்லவேளை சொட்டை விழுந்துச்சு..வயசானவன்னு நம்புறாங்க..இல்லைன்னா என்னைப் பொடியனாவே நினைச்சுட்டு இருந்திருப்பாங்க’ என்றுதான் உண்மையிலேயே நம்புகிறேன். அவரவர் உடலமைப்பு அவரவருக்கான தனித்தன்மை. அதைக் கொண்டாடுவதிலும் சுயபகடி செய்வதிலும் சந்தோஷமிருக்கிறது. 

What will you do if you wakeup in "a thick forest jungle" where no one is there after a sleep?
ஒரு முறை ஈரோட்டிலிருந்து மைசூரு செல்லும் வண்டியில் ஏறியிருந்தேன். நள்ளிரவு நேரம். கோபியில் இறங்காமல் சத்தியமங்கலத்திலும் இறங்காமல் பண்ணாரி தாண்டி விழிப்பு வந்தது. இரண்டு பக்கமும் அடர்வனம். நடத்துனரைக் கேட்ட போது ‘பண்ணாரி தாண்டி ஃபாரஸ்ட்டுக்குள்ள போய்ட்டு இருக்கு’ என்றார். நிறுத்தச் சொல்லி இறங்கி எதிர்த்திசையில் செல்லும் பேருந்தில் ஏறி உறங்கி ஈரோடு சென்றுவிடக் கூடாது என கொட்டக் கொட்ட விழித்திருந்தேன். 

சாராவில் கேட்கப்பட்டவை.

2 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

All I can think of is that "The road to hell is paved with good intentions". This has many meanings. You will understand the meaning according to your life and you will think that its correct. Someone else will have the exact opposite meaning and he will also believe that its exactly correct. What a weird world?

சேக்காளி said...

நமக்கெல்லாம் வேலை செஞ்ச கூலி ஒழுங்கா கெடைச்சாலே பெரிய விசயம்.
இந்த லெச்சணத்துல என்ன த்தை யாவது பின்னூட்டம் எழுதுவோம் ன்னு வந்தா
"Congratulations!"
You have won a reward"
ன்னு ஒரு பொட்டி தொறக்கு.
நம்புறா மேரிக்கி செய்ங்க தல.