Aug 28, 2017

டிவியில் என்ன பேசுன?

ஞாயிற்றுக்கிழமை காலையில் தூர்தர்ஷன் பொதிகை சேனலில் ‘காலைத் தென்றல்’ நிகழ்ச்சியில் விருந்தினராக அழைத்திருந்தார்கள். 

விடுமுறை தினத்தில் காலை ஏழரை மணிக்கு நாம் பேசுவதையெல்லாம் யார் கேட்பார்கள் தோன்றாமல் இல்லை. நாமாகச் சொன்னால் ‘அய்யோ சொல்லிட்டானே’ என்று ஒன்றிரண்டு பேர் நினைத்துவிட்டால் என்ன செய்வது என்று கமுக்கமாக இருந்து கொண்டேன். இப்பொழுதெல்லாம் கமுக்கமாக இருந்தால்தான் தாதா என்று ஏற்றுக் கொள்கிறார்களாம். 

அதிகாலை ஆறரை மணிக்கு ஜீவகரிகாலன் அழைத்துச் சென்று அரங்கத்தில் விட்டுவிட்டார். நேரடி ஒளிபரப்பு.

யாராவது ‘ஆமா நீங்க என்னவெல்லாம் எழுதுவீங்க?’ ‘ட்ரஸ்ட்ல என்ன செய்யறீங்க?’ என்று கேட்கும் போது நம்மை நாமே பிரஸ்தாபிக்க வேண்டியிருக்கும். அங்கும் இப்படித்தான் இருக்குமோ என்று பயமில்லாமல் இல்லை. நல்லவேளையாக கேள்விகளைக் கேட்ட செழியன் நிசப்தம் வாசிக்கிறவர். நிறையத் தெரிந்து வைத்திருந்தார். உரையாடலை கவனித்தால் தெரியும். என்ன பேசிக் கொள்கிறோம் என்று முன்னதாகவெல்லாம் முடிவு செய்து கொள்ளவில்லை.

‘நீங்க பேசிட்டே இருங்க..தடையாச்சுன்னா கேள்வி கேட்பேன்’ என்று அவர் சொல்லியிருந்தாலும் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டேயிருந்தார். 

இயல்பாகப் பேச முடிந்தது. முப்பது நிமிட நிகழ்ச்சி. ‘ஏன் முன்னாடியே சொல்லல?’ என்று ஒன்றிரண்டு பேர் கேட்கக் கூடும். அவர்களுக்காக இந்தச் சலனப்படம். அரை மணி நேரத்தில் எதையெல்லாம் சொல்ல வேண்டுமெனெ நினைத்தேனோ அவற்றைச் சொல்லியிருக்கிறேன்.ஒரு காலத்தில் தூர்தர்ஷன் என்பது பெருங்கனவு. இயக்குநர், தூர்தர்ஷன், சிவானந்தாசாலை முகவரிக்கு எவ்வளவு கடிதங்கள் அனுப்பியிருப்பேன்? சொந்தக்காரர்கள் அத்தனை பேரின் பெயர்களையும் குறிப்பிட்டு ஏகப்பட்ட கடிதங்கள் எழுதியிருக்கிறேன். அதில் ஒரேயொரு கடிதத்தை எதிரொலி நிகழ்ச்சியில் வாசிக்கவும் செய்தார்கள்.

1975 ஆம் வருடத்திலிருந்து பணியாற்றும்- தொடக்க கால ஊழியர்- பாலாஜி ராவ்விடம் எனக்குப் பேசுவதற்கு நிறைய இருந்தன. ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபால், கோப்பெருந்தேவி, ஃபாத்திமா பாபு, நிஜந்தன் என்று ஒவ்வொருவர் பற்றியும் விசாரித்தேன். அவரும் சலிப்பில்லாமல் சொல்லிக் கொண்டேயிருந்தார். தூர்தர்ஷன் என்றால் வாழ்ந்து கெட்ட குடும்பம் ஒன்றின் பிம்பம் எனக்கு. 

தனியார் சேனல்களில் ஒருவிதமான இறுக்கத்தன்மை இருக்கும். தூர்தர்ஷனில் அப்படியில்லை. ஏதோ அவரவர் வீட்டில் இருப்பது போன்ற உணர்வுடன்தான் இருக்கிறார்கள். நேரடி ஒளிபரப்பின் போதே கூட சர்வசாதாரணமாக அலைபேசிய அலறவிடுகிறார்கள். பேசி முடித்த பிறகு நன்றாக இருந்ததாகச் சொன்னார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பாளர் லட்சுமி காலை உணவுக்காக திருவல்லிக்கேணிக்கு அழைத்துச் சென்றார். 

நல்ல மனிதர்கள்.

பெங்களூரு திரும்பும் போது செழியனும் நானும் ஜெயலலிதா சமாதிக்குச் சென்றோம். இன்னமும் எம்.ஜி.ஆர் சமாதியில் காது வைத்துக் கேட்கிற மனிதர்கள் இருக்கிறார்கள். செழியன் என்னை பாரீஸில் இறக்கிவிட்டார். நடந்து மூர்மார்கெட் சென்று அங்கே சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு....அது பற்றி தனியாகச் சொல்கிறேன்.

எப்படிப் பேசியிருக்கிறேன்?

12 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

பண மற்றும் தொழில்நுட்ப வசதிகள் அதிகம் வாய்க்கப்பெற்ற தனியார் தொலைக்காட்சிகளுக்கு கூட இத்தகைய நேரலைப் பேட்டிகள் தயாரித்து ஒளிபரப்பக் கூடிய துணிச்சல் இருக்குமா என்பது சந்தேகத்திற்குரிய விசயம். தங்கு தடையின்றி உரையாற்றிய தங்கள் பேட்டி சிறப்பு. தங்கள் சமூக பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

ர. சோமேஸ்வரன் said...

Simply superb, after long years i watched Pothigai TV program.

RAJ said...

Good sir, Free flow of your thoughts and and actions.

அன்பே சிவம் said...

பத்தாது, பற்றாது இன்று இங்கிருக்கும். சூழலுக்கு 1 மணி பத்தாது. இன்னும் ஒரு 100 மணிகள். வேணும். எங்க மணிய இன்னும் ஒரு மணி நேரம் பேச விட்டா என்ன முழுகிடும். இதுல வெளம்பர எடைவேள வேற.

சேக்காளி said...

பாத்தாச்சு, ரசிச்சாச்சு
கையும் தட்டியாச்சு.
(நெசமாவே கை தட்டுனேன். 200 ஓவா அனுப்பி வைக்கவும்)

MV SEETARAMAN said...

PODIGAI TV excels in the LIVE Interviews. Manikandan has been given full time to express about his work. The Doordarshan staff has one a very good job, little intervention and very much supportive.
We at home regularly see PODIGAI for its value based programme. no noise, no chatter, no self trumpeting.
The space around the interview is pleasing.
All these shows how one should conduct oneself,
you can see always this aspects in all corporations of PSUs by Central Government.
our best wishes for NISAPTHAM and its activities.

S.ஜஸ்டின் லியோன் said...

நெகிழ்ச்சியுடன் கண்ணில் நீர்வுடன் உங்கள் பேட்டியை பார்த்தேன் "கடவுளே"இவருக்கு நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை குடுக்கங்கள் என்று பிறாத்த்திக்கொண்டு பார்த்தேன். நம்ம வீட்டில் ஒருவர் பேட்டியை பார்த்தது போன்ற உணர்வு.

Anonymous said...

Very good deeds. Very well said about "Thirupathi Undiyal" so many good hearts are giving their hard earned money to many good causes. Keep it going Mani!!

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

paarththen.
kalakarthik

vijayan said...

சர்க்கார் டிவி களில் காணப்படும் இயந்தரத்தன்மை இல்லாமல் இயல்பாக இருந்தது பேட்டி.ஆனால் நீங்கள் ரொம்பவும் முன்னெச்சரிக்கையுடன் பேசுகிறீர்களோ என்று எனக்கு ஒரு அனுமானம்.

Anonymous said...

EXTREMELY HUMBLE. 'PANIVU'/HUMILITY HAS BECOME A PART OF YOUR SYSTEM.
KARNAN KAVASAM POLA.
FULL OF 'NERMAI'.
THE REPLY ON TIME MANAGEMENT "PUDICHATHAI SEYOROM" IS TRUE/OUT OF THE WORLD.
AS USUAL UNUSUAL.
ANBUDAN,
M.NAGESWARAN.

Ravi said...

Very nice speach, if possible watch Dr.Iraianbu program (Kaloori Kalangal)in podhigai TV Monday to Friday night 10.30. excellent program for students.