Jan 24, 2017

நம் நண்பன்

சென்னைக் கலவரத்தில் மாணவர்கள் வன்முறை, விஷமிகள் வன்முறை என்றுதான் நேற்று காலையிலிருந்து செய்திகள் வந்து கொண்டிருந்தன். சமூக மற்றும் வீடியோ யுகத்தில் எந்தவொரு செயலையும் வெறும் வாய்ஜாலத்தால் மறைத்துவிட முடிவதில்லை. மாலைவாக்கில் வன்முறையைப் பற்ற வைத்ததே காவலர்கள்தான் என்பதற்கான வீடியோ ஆதாரங்கள் வரத் தொடங்கிவிட்டன. காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்லிக் கொள்வதில் எவ்வளவு தூரம் உண்மை என்று புரிந்து கொள்ளலாம்.

வன்முறை தொடங்கிய பிறகு வடபழனி உள்ளிட்ட இடங்களில் கலவரக்காரர்களும் சேட்டைகளைச் செய்திருக்கிறார்கள். சிக்கிய அரசு அதிகாரியின் வாகனத்தை ஒரு குழு எப்படித் தாக்குகிறது என்பதற்கு கீழே இருக்கும் வீடியோ உதாரணம்.எவனோ அடிக்கிறான், நொறுக்குகிறான், நெருப்பை  மூட்டுகிறான் என்பதற்கும் காவல்துறையே இதையெல்லாம் செய்கிறது என்பதற்கும் மலையளவு வித்தியாசம் இருக்கிறது.

ஆட்டோக்காரன் என்ன பாவம் செய்தான்? அவன் வண்டியை எரிப்பது, குடிசைகளுக்கு முன்பாக நிற்கும் வண்டிகளை நொறுக்குவது என ருத்ரதாண்டவத்தை காவல்துறை நிகழ்த்தியிருக்கிறது.

உளவுத்துறையின் வழியாக வேறொரு மாதிரியான தகவலைக் கசியச் செய்து பழிகயை பிறரின் மீது போட்டுவிட்டு காவல்துறை யாரோ சிலரின் ஏவல்துறையாக செயலாற்றிய கருப்பு தினத்தை பதிவு செய்து வலையேற்றியே அத்தனை பேருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

கிடைத்த வீடியோக்களை ஆவணத்திற்காக இங்கே பதிவு செய்து வைக்கிறேன். இன்னும் நிறைய வீடியோக்கள் இருக்கக் கூடும். கிடைத்தால் இதே பதிவில் இணைத்துவிடுகிறேன். நிரந்தர ஆவணமாக இருக்கட்டும்.

வெட்கப்படுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று. முந்தின நாள் வரை சிரித்துக் கொண்டும் மாணவர்களோடு விளையாடிக் கொண்டுமிருந்த காக்கிச்சட்டைகள் ஒரே இரவில் ஏன் மாறிப் போனார்கள்? யார் மாறச் சொன்னார்கள்? புரிவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகக் கூடும். தனிமையில் யோசித்தால் உண்மையிலே வலிக்கிறது.

ஒருவேளை இவையனைத்து மார்ஃபிங் செய்யப்பட்டவை அல்லது போலியானவை என்பதாக இருப்பின் அதை நிரூபிப்பதும் காவல்துறையின் கடமைதான். ஏனெனில் இந்த சலனப்படங்கள் உலகம் முழுக்கவும் பரவியிருக்கின்றன.

(Videos can be seen through browsers)

When you see 'Plugin not supported'

This Error Happens when you try to View Flash content in Chrome Browser on Android.

Step 1: Go to Google Play Store,Do a Search for "Puffin Web Browser" and Install it .
Step 2: Open Puffin browser and Go to the URL where you have yourFlash Content.You will be able to see content that includes Flash 7 எதிர் சப்தங்கள்:

Jaypon , Canada said...

இனி தீ வைக்க 100. தீயை அணைக்க 101 கூப்பிடலாம்.

jas said...

Mani,

Do not jump into conclusions. It is extremely easy to morph videos or manufacture fake videos. Have you forgotten the entire worker force from North-East took flight from Bangalore and Chennai because some miscreants posted false videos of Muslims being tortured in North-East whereas the actual videos are from some old pictures from Myanmar?

சேக்காளி said...

//புரிவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகக் கூடும்//
obey the order. கட்டளைக்கு கீழ்படி. இதைத்தான் செய்வார்கள்.
முந்தாநாள் வரை நமக்கு நண்பர்களாயிருக்கும் படியான கட்டளை. நேற்று வன்முறையாளர்களுக்கு உதவியாக வன்முறையை செய்வதற்கான கட்டளை.
காவல் துறை போராட்டக்காரர்களுக்கு மட்டும் நண்பராயிருந்தால் ஒருதலை பட்சமாகிவிடுமல்லவா.அதனால் வன்முறையாளர்களுக்கும் நண்பர்களாகியிருக்கின்றனர்.

சூர்யா said...

நேற்று மாலை ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி விட்டு, பிறகு அணைத்து மீடியாவையும் கூப்பிட்டு இது நிரந்தர சட்டம் என்று புரியும் வகையில் மக்களுக்கு விளக்கி விட்டு, போராட்டக்காரர்கள் களைந்து செல்ல நேற்று ஒரு நாள் இரவு முழுதும் அவகாசம் கொடுத்திருக்கலாம்... வெண்ணை திரண்டு வரும் வேளையில் பானையை உடைத்துவிட்டன தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மற்றும் காவல்துறை... சுருக்கமாக சொன்னால் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக் கொண்டன..

அதேசமயம் அறவழியில் போராடி இந்தியா முழுவதும் பாராட்டு வாங்கிய மாணவர்கள்.. போலீசாரின் அராஜக வீடியோக்களை வெளியிட்டு கடைசி நேரத்தில் தங்கள் போராட்டத்தை களங்கப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கையும் முறியடித்து வெற்றி வாகை சூடி விட்டனர்.

Unknown said...

audio recording by bbc correspondent on camera seizure:

http://www.bbc.com/tamil/india-38719969

DHAKSHNA said...

@துரைசிங்கம் ,அன்புசெல்வன் ,ஆறுச்சாமி எதிர்ப்பார்த்து நிற்கிறோம் ஆனால் அங்க விசாரணை முத்துசெல்வனே காட்சியளிக்கிறார் !#shameontnpolice

@போலீஸ் என்றுமே வெறிபிடித்த___ தான் , இதுவரை காத்திருந்தது எஜமானின் ஆணைக்கு #ShameonTNPolice

@Today people understood whom Su. Swamy was mentioning as TN porukki's....#shameontnpolice

@இப்போது பார்ப்பது தான் காவல்துறையின் உண்மையான முகம். #shameontnpolice

ADMIN said...

நம்பவே முடியவில்லை. நண்பனாக இருந்துவிட்டு இப்படி செய்வார்களா என...!