Apr 13, 2016

யூகம்- மூன்றாம் நதி

மூன்றாம் நதி நாவலை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துவிடலாம். ஆளாளுக்கு வெளியீட்டு விழா, விமர்சனக் கூட்டம், விருது விழா என்று ஆரம்பித்துவிட்டார்கள். நல்லவேளையாகத் தேர்தல் வந்து எல்லோரையும் திசை மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த இடைவெளியில் புகுந்து நம் புத்தகத்தின் பெயரை பிரபலமாக்கி விட்டுவிட வேண்டும். சேக்காளியைத் தவிர வேறு ஒருவராவது ‘செமயா ப்ளான் பண்ணுறாண்டா’ என்று காதில் புகைவிட்டால் அதுவே மிகப்பெரிய சந்தோஷம். 

ஜூன் மாதத்தின் புத்தகக் கண்காட்சிக்குள் புத்தகத்தைக் கொண்டு வந்துவிட வேண்டும். அட்டை வடிவமைப்பு வேலை முடிந்துவிட்டது. இன்றுதான் வந்து சேர்ந்தது. அட்டகாசமாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். யார் வடிவமைத்திருக்கக் கூடும் என்று யூகம் செய்ய முடிகிறதா என்று பாருங்கள்.


கிட்டத்தட்ட புத்தகத்திற்கான அத்தனை வேலைகளும் முடிந்த மாதிரிதான். வழக்கம்போலவே ஜீவகரிகாலன்தான் ‘மெதுவா பண்ணிக்கலாங்க’ என்று தாளித்துக் கொண்டிருக்கிறார். நமக்கென்று பதிப்பாளர் வந்து வாய்த்திருக்கிறாரே! மற்றவர்களுக்கெல்லாம் கண்ணும் கருத்துமாக இருப்பார். என் நெற்றியில் மட்டும் இனாவானா என்று எழுதி ஒட்டியிருப்பதால் அவ்வளவு அசிரத்தை. இந்த வாரம் சென்னை செல்லும் போது காதுக்குள் சுடுதண்ணீரை ஊற்றி சுறுசுறுப்பாக்கிவிட்டு வரலாம் என்றிருக்கிறேன்.

வடிவமைப்பாளரை யூகித்துவிட்டீர்களா? அட்டை வடிவமைப்பைச் செய்தவர் யாராக இருக்கும் என்று கண்டுபிடிப்பது ஒரு போட்டி. சரியாக யூகிக்கும் ஐந்து பேருக்கு நாவலின் பிரதியை என் செலவில் அனுப்பி வைக்கிறேன். ‘அய்யோ அனுப்பி வெச்சுடாத’ என்று பயப்படவெல்லாம் வேண்டாம். சிரத்தையுடன்தான் எழுதியிருக்கிறேன். மோசம் போகாது. 

அட்டை வடிவமைப்பாளரை நூறு பேர் சரியாகக் கணித்தால் எப்படி ஐந்து பேருக்கு மட்டும் புத்தகத்தை அனுப்ப முடியும்? நூறு பேர்களின் பெயரையும் ஒரு தாளில் எழுதி குலுக்கிப் போட்டு எடுக்கலாம். நிஜமாகவேதான்! சீட்டை யார் எடுப்பது என்று இப்பொழுதே கேட்கக் கூடாது. காஜல் அகர்வாலாகவும் இருக்கலாம். இலியானாவாகவும் இருக்கலாம். 

இந்திய நேரப்படி ஏப்ரல் 15, 2016 மதியம் மூன்று மணி வரை அவகாசம். நிசப்தம் தளத்திலோ ஃபேஸ்புக்கிலோ பின்னூட்டமாக எழுதலாம். சரியான விடை எழுதியவர்களை மட்டும் வடிகட்டி குலுக்கி எடுத்துவிடலாம்.

கேட்க மறந்துவிட்டேனே! அட்டை வடிவமைப்பு எப்படி இருக்கிறது? 

35 எதிர் சப்தங்கள்:

Unknown said...

Prabhu Kalidas

BalajiMurugan said...

அடி....தூளு....பட்டாசு....
அட்டை வடிவமைப்பு: அண்ணியார்.... :)



Thilagarajan Selvaraj said...

Santhosh narayanan

ADMIN said...

அட்டை படம் அருமை. வாழ்த்துகள்.!
அட்டைபடம் வடிவமைத்து யாரென்று யூகிக்க முடியவில்லை.
ஆனால் "ஓசி"யில் புத்தகம் படிக்க ஆசை.. (ஹி..ஹி..)

kaniB said...

Must be Santosh. It looks very good and decent. Using only two colors add more attraction.

Churchill said...

Prabhu Kalidas

Thiruvalluvanar said...


cover designed by Vaa Manikandan!

Anonymous said...

திரு.கோபு ராசுவேல் / திரு. சந்தோஷ்

Jose Jose said...

Santhosh / Gobu rasuvel

Anonymous said...

Dear Mani,

Last week,I have sent an email regarding a boy diagnosed for aplastic anemia.
It would be really helpful if you can give a helping hand.
My name is Parthasarathi from Doddampalayam, a village nearby Bhavanisagar.
I have sent all the contact details tn that email.
Please help.

Thanks!

Vaa.Manikandan said...

என்னுடைய எண்ணுடன் உங்களுக்கு பதில் அனுப்பியிருக்கிறேன். விவரங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

சேக்காளி said...

//சேக்காளியைத் தவிர வேறு ஒருவராவது ‘செமயா ப்ளான் பண்ணுறாண்டா’ என்று காதில் புகைவிட்டால் அதுவே மிகப்பெரிய சந்தோஷம்//
பாஸு!!!! எனக்கே ஒரு காதுல தான் பொகை வந்துக்கிட்டு இருக்கு.இன்னொரு காதுலயும் வர்றதுக்கு இன்னும் ரெண்டு நாளு ஆவும்.இதுல "தவிர வேறு ஒருவராவது" ங்கறதெல்லாம் கொஞ்சம் அதிகமா(யி)ருக்கு.

சேக்காளி said...

//அட்டை வடிவமைப்பு எப்படி இருக்கிறது? //
அட்டை நன்றாக இருக்கிறது மணி.வடிவமைத்தவருக்கு பாராட்டுக்கள்.
குறிப்பு :இது நக்கல் அல்ல.

சேக்காளி said...

//Blogger PunithBala said...
அடி....தூளு....பட்டாசு....
அட்டை வடிவமைப்பு: அண்ணியார்.... :)
வா மணிகண்டனின் கட்டுப்பாடு முழுவதும் அண்ணியிடம் உள்ளது என கச்சியை ஒடைக்க செமயா ப்ளான் பண்ணுற மாதிரி இருக்கு.சாக்குரத பாஸு

Anonymous said...

waiting for the book fair and waiting to read your book
hope it satisfies tamil fiction fans. we look forward
to your book more than the elections. in tamilnadu elections
whoever wins nothing is going to happen, DMK AIADMK AND THE
THIRD FRONT ARE ALL SAME THEN WHY SHOULD WE BREAK OUR HEADS.
LET US HOPE THIS BOOKFAIR BRINGS SOME GOOD BOOKS FOR TAMIL
BOOK LOVERS.

Kogulan said...

Gobu

Nanthakumar Kannan said...

சந்தோஷ் நாராயணன்

Dhanapal said...

செமயா ப்ளான் பண்ணுறாண்டா

Bonda Mani said...

நான்தான் ..

Nandhu said...

அட்டை வடிவமைத்தவர் அண்ணியாக இருக்க வேண்டும். ஆக மொத்தம் அண்ணி பெயர் அட்டைகளுக்கு நடுவில் இருக்கும் :) :)

Unknown said...

very nice to see! Really super

Jaypon , Canada said...
This comment has been removed by the author.
Kokila said...

Prabhu Kalidas

உஷா said...

மணி,

விடை "என் சந்தோஷ்"( சந்தோஷ் நாராயணன்)
வெற்றி பெற்றல் மகிழ்ச்சி சும்மா கிடைத்தால் பெரும் மகிழ்ச்சி.

வித்தியாசமான வடிவமைப்புடன் இருப்பதால் என்னவென்று பார்க்க வேணும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.
(பார்த்தவுடன் மனதில் நினைச்சது)


NAGARATHAN said...

ஒருவேளை மதனா இருக்குமோ? இல்ல உங்க மனைவியாரா? எனக்கென்னமோ மதன் மாதிரிதான் தெரியுது. வடிவமைத்தவர் யாராயிருந்தாலும் 'தெறி'க்க விடுகிறது.

வேல்முருகன்
bcvelmurugan@gmail.com

Anonymous said...

Good to read your interview in tendral, excited to read in hard copy of tendral - Chicago

Unknown said...

Santhosh narayanan

Kiruba said...

Santhosh Narayanan

shan said...

Santhosh narayanan

பெரோஸ் said...

திரு.கோபு ராசுவேல் அவர்கள்...
கூகிள்+ DP பார்த்தா ஐடியா நம்ம ஐடியா மணியோன்னு டவுட்டா கீது...

பால கணேஷ் said...

ஒன்று மட்டும் நிச்சயமாகக் கூற முடியும் மணிகண்டன். அட்டை வடிவமைச்சது... சத்தியமா நானில்ல. ஹி.. ஹி.. ஹி... என் ஓட்டு சந்தோஷ் நாராயணனுக்கே.

Gurunathan said...

Cover designed by Cartoonist Bala.

Udhayakumar said...

Santhosh Narayanan

Ramanathan said...

பாலா அல்லது தமிழச்சி தங்கபாண்டியன்

RAGHU said...

mathiraj