Mar 29, 2016

உள்ளீடு

அவ்வப்பொழுது நெருக்கமான ஒரு சிலரிடம் கேட்டுக் கொள்வதுதான். ‘போர் அடிக்காம போகுதுங்களா?’. நிசப்தத்தில் எழுதுவதை முன் வைத்து இந்தக் கேள்வியைக் கேட்பேன். எதிர்கொள்கிற கருத்துக்களின் அடிப்படையில் நமது பாதையை அனுமானித்துக் கொள்ளலாம்.  ‘நான் போறதுதான் பாதை’ என்று கண்களை மூடிக் கொண்டு ஓட்டி குழியில் இறக்கிவிடக் கூடாது அல்லவா? அந்த சூதானம்தான். இந்த முறை சற்று பரவலாகவே கேட்டுவிடலாம் என்று தோன்றியது. அதனால்தான் வலது பக்கம் நான்கு கேள்விகள். 

எழுத்தைப் பொறுத்த வரைக்கும் நாம் எழுதுவதுதான் எழுத்து என்றெல்லாம் இருக்க வேண்டியதில்லை. நிசப்தம் உரையாடலுக்கான களமாகவே இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதைவிடவும் சக மனிதர்களுடன் உரையாடுகிற உரையாடி என்று சொல்லிக் கொள்ளவே விரும்புகிறேன். இத்தகைய ஒரு வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் போது சில சமயங்களில் கவனம் பிசகிவிடுவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. மதி மயங்குதல். அவ்வப்போது அருகாமையில் இருப்பவர்களிடம் ‘சரியா போறோமா’ என்று கேட்டுக் கொள்வதில் தவறில்லை. கிள்ளி வைக்கச் சொல்வது போல.

உரையாடுகிறவனுக்கு நிறைய உள்ளீடுகள் அவசியம். அது விவரங்களாகவோ, செய்திகளாகவோ, பின்னூட்டங்களாகவோ அல்லது வேறு எந்த வடிவிலோ இருக்கலாம். அவற்றைக் குதப்பி அவன் ஒரு தெளிதலுக்கு வர வேண்டியிருக்கும். அப்படியான ஒரு குதப்பலுக்கும் தெளிதலுக்குமாக இந்தக் கேள்விகளை முன் வைத்திருக்கிறேன். மிகச் சாதாரணமான கேள்விகள்தான்.

ஃபேஸ்புக் மாதிரியான இடங்களில் இதையெல்லாம் கேட்க வேண்டியதில்லை. வாசிக்கிறார்களோ இல்லையோ விருப்பக்குறிக்கான பொத்தானை ஒரு அமுக்கு அமுக்கிவிட்டுச் செல்கிறவர்கள் அதிகம். அதனால் இங்கு மட்டும்தான் கேட்டிருக்கிறேன். தங்களின் முப்பது வினாடிகளை எடுத்துக் கொண்டதற்கு மன்னிக்கவும். அதே முப்பது வினாடிகளை எனக்காக ஒதுக்கியமைக்கு மிக்க நன்றி.

வேறு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் மின்னஞ்சலிடவும். vaamanikandan@gmail.com

8 எதிர் சப்தங்கள்:

ஆரூர் பாஸ்கர் said...

பேஸ் புக் பற்றிய உங்கள் கருத்து சரியே. எண்ணங்களை எழுதுகிறேன். வாழ்த்துக்கள்

Jaypon , Canada said...

Anna, I did vote.

Commonman said...

கட்டுரைகளின் உள்ளடக்கம் (content ) நன்றாக உள்ளது.
ஆனால் சிலசமயம் கட்டுரைகளை முடிக்கும் போது கொடுக்கும் மணிகண்டன் டச் தற்போதெல்லாம் செயற்கையாக தோன்றி சற்றே ஆயாசத்தை கிளப்புகிறது. உதாரணமாக நேற்றைய 'வேகம்' என்ற தலைப்பில் கடைசிவரை சுவாரசியமாய் போய்கொண்டிருந்த கட்டுரை

//எல்லோரும் ரத்தக் கறையோடு இருந்தார்கள். அதில் அந்தக் குழந்தையின் ரத்தமும் கலந்திருக்கக் கூடும் என்று நினைக்கும் போதே விரல்கள் நடுங்கத் தொடங்கின.//

மேற்கண்ட வரியை படித்தபோது சற்றே மிகையாகவும், எழுத்தாளரால் வலிந்து திணிக்கப்பட்டதை போலவும் உணர்ந்தேன்.


அடுத்து ஒரு மிகச்சிறிய குறை தான், அரிதாக உங்கள் வலைப்பூவில் வரும் தட்டச்சு பிழைகள்,

உதாரணமாக சமீபத்திய 'வெக்கை' கட்டுரையில்

//நீங்க ஒண்ணுக்கு அடிச்சு விட்ட வலியில கிடந்த ஒடக்காகிட்ட சாமி அது என்ன கேட்டிருக்கும்?’//

என்ற வரியில்

//நீங்க ஒண்ணுக்கு அடிச்சு விட்ட வலியில கிடந்த ஒடக்காகிட்ட சாமி 'வந்தப்ப' அது என்ன கேட்டிருக்கும்?’//

என்று இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

கடைசியாக ஒரு சிறிய வேண்டுகோள், சமீபத்திய 'பதில் தெரியுமா?' கட்டுரையில் நீங்கள் மாணவர்களிடம் கேட்ட எந்த கேள்விக்கும் எங்களுக்கும் விடை தெரியவில்லை, நேரம்கிடைக்கும்போது விடைகளை பகிரவும்

அதேபோன்ற வேறு சில சுவாரசியமான தகவல்கள் இருந்தால் பகிரவும்.

சேக்காளி said...

ஊரெல்லாம் ஆயிரம் ரெண்டாயிரம் ன்னு பேச்சா கிடக்குது. இவருக்கு சும்மா போடணுமாமுல்ல ஓட்டு.

Anonymous said...

சரியான கலவையாக

இப்படியே தொடரலாம் - both are giving same meaning

Anonymous said...

The voting results percentages do not sum up to 100%

Jaypon , Canada said...

Ha..ha LoL for "SekkaaLi" comment. "ME" don't expect a single penny.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

Posts shows the time of the postings,but at what day is not known.If the date also is made known,the full meaning could be mapped with that day's social/political/economic/local scenario.Vaazhha valamudan