இவ்வளவு பரிதவிப்பான தினங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைத்ததில்லை. கடந்த ஒரு மாதமாகவே அப்பாவின் உடல்நிலை மோசமாகிக் கொண்டேயிருக்கிறது. அவர் சிகிச்சை பெற்றுவரும் கோவை சிங்காநல்லூர் மருத்துவமனையில் அழைத்துக் கேட்ட போதெல்லாம் ‘அப்படித்தான் இருக்கும்’ என்று சொல்லிவிட்டு ஏதாவதொரு மாத்திரையைக் கொடுக்கச் சொன்னார்கள். பயமாக இருந்தது. வழக்கமாக ஒவ்வொரு நான்காவது வாரமும் அழைத்துச் செல்வோம். இந்த முறை மூன்றாவது வாரத்திலேயே அழைத்துச் சென்றோம்.
முதுநிலை மருத்துவர் மீதான நம்பிக்கை படிப்படியாகக் குறைந்திருந்தது. நோயாளியை அமர வைத்துக் கொண்டு கணினித்திரையைப் பார்ப்பதும், அலைபேசியில் பேசுவதும் பிறகு திரும்பி ‘என்ன பேசிட்டு இருந்தோம்’ என்று கேட்பதுவுமாக சலிப்பை ஏற்படுத்தியிருந்தார். இளநிலை மருத்துவரைச் சந்தித்த போது ‘எதுக்கு ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பார்த்துடுறீங்களா?’ என்று கேட்டார். அதன் பிறகு நிறைய சோதனைகள். நிறையச் சிக்கல்கள். எல்லாவற்றையும் இப்பொழுது பேச விரும்பவில்லை.
சிங்காநல்லூர் மருத்துவமனையில் நம்பிக்கையூட்டும் விதமாக எந்த மருத்துவரும் பேசாதது பெரிய மன அழுத்தத்தைக் கொடுத்தது. அவர்களைப் பொறுத்தவரைக்கும் எழுபதை நெருங்குகிற ஒரு பெரியவர் அவர். எனக்கு அப்படியில்லை அல்லவா? யாரிடமும் விரிவாக விவாதிக்கவும் முடியவில்லை. உள்ளுக்குள்ளேயே புழுங்கிப் போனேன். சில மருத்துவத் துறை சார்ந்த நண்பர்களிடம் மட்டும் பேச முடிந்தது. அதுவும் பேசும் போதே உடைந்து போகிற மனநிலை. அப்பாவை எனக்கு மிகப் பிடிக்கும். யாருக்குத்தான் அவரவர் அப்பாவைப் பிடிக்காது? நாங்கள் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு ஆஸ்துமா தொந்தரவு. சாதாரண அரசு ஊழியர். அம்மாவும் அப்பாவும் ஒவ்வொரு மருத்துவமனையாகச் செல்வார்கள். அலோபதி, சித்தா, ஆயுர்வேதம் என்று பார்க்காத மருத்துவமில்லை. அவர்கள் மருத்துவமனைக்குச் சென்ற பிறகு வீட்டில் நானும் தம்பியும் விளையாடிக் கொண்டிருப்போம். என்ன நடக்கிறது என்பதைச் சொல்லவே மாட்டார்கள். ஆனாலும் எங்களுக்கு எந்தக் குறையும் வைத்ததில்லை. கஷ்டப்பட்டுத்தான் படிக்க வைத்தார்கள். சிரமப்பட்டுத்தான் வளர்த்தார்கள்.
எட்டாம் வகுப்பு படிக்கும் போது மிதி வண்டி வேண்டும் என்று கேட்டேன். கோபியை விடவும் கவுந்தப்பாடியில் நூறு ரூபாய் குறைவாகக் கிடைக்கும் என்று அங்கே சென்று மிதிவண்டியைப் பூட்டி அழுத்திக் கொண்டே வந்துவிட்டார். கடும் வெயில். வியர்வை வழிய மூச்சிரைக்க அவர் வந்து சேர்ந்த போது புதுச் சைக்கிளின் உற்சாகத்தையும் தாண்டி அப்பாவை நினைத்து அழுதேன். அதன் பிறகு அவரை நினைத்து இப்பொழுதுதான் அழுகிறேன். மருத்துவக் கோப்புகளை எடுத்துக் கொண்டு பெங்களூருக்கும், கோவைக்கும் பேருந்துகளில் பயணிக்கும் போது என்னையுமறியாமல் உடைந்து கொண்டிருந்தேன். எந்த ஒரு மனிதனுக்கும் தனிமையில் அழுகிற நிலைமை வரவே கூடாது. சுற்றிலும் இருந்தவர்கள் வித்தியாசமாகப் பார்த்த போதெல்லாம் அவசரப்பட்டுக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.
கடந்த வாரத்தில் சிங்காநல்லூர் மருத்துவமனையில் சொல்லிவிட்டு வந்து கோவை மெடிக்கல் சென்ட்டர் மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம். சக்தியை உறிஞ்சுகிற செலவுதான். ஆனால் வேறு எந்த வழியுமில்லை. ஒரு வாரத்திற்குப் பிறகு வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறோம். மருந்துகள் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அம்மாவும் நொறுங்கிப் போயிருக்கிறார். பழைய நினைவுகள் ஒவ்வொன்றாகக் கிளறப்பட்டு மேலெழும்பி வந்து கொண்டேயிருக்கின்றன.
என்ன செய்ய முடியும்?
சோதனைகள் வர வேண்டிய கால கட்டம் என்று இருந்தால் அதைத் தவிர்க்கவே முடியாது என்பதைத் உணர்ந்து கொண்டிருக்கும் தருணம் இது. ‘இந்தத் துன்பத்தை இவன் தாங்கிக் கொள்வான்’ என்று முடிவு செய்யப்பட்டு அந்தத் துன்பம் அவரவருக்கு வழங்கப்படுகிறது போலிருக்கிறது. அதைத் தாங்கிக் கொள்கிற மனதையும் சமாளிக்கிற பலத்தையும் சேர்ந்து கொடுத்தால் தேவலாம். ‘நாம் அடுத்தவர்களின் துன்பத்தைத் தாங்கிக் கொண்டால் நம் துன்பம் குறைந்துவிடும்’ என்கிற சிறு நம்பிக்கை இருந்தது. சுயநலமான நம்பிக்கைதான். ஆனால் அப்படியெல்லாம் எதுவுமில்லை. இன்னாருக்கு இதுவென்று ஏற்கனவே இறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவையவை அதன்படியே நடக்கின்றன.
இந்த மன உளைச்சலினால் கடந்த சில நாட்களில் அறக்கட்டளை சம்பந்தமாக எந்தவொரு விசாரணையையும் செய்ய முடியவில்லை. ஏற்கனவே ஒப்புதல் தெரிவித்திருந்த காசோலைகளில் ஒன்றை மட்டும் அனுப்பி வைக்க முடிந்தது. எதையும் செய்கிற மனநிலை இல்லை என்பதுதான் காரணம். நிறையப் பேர் அழைத்திருந்தார்கள். இணைப்பைத் துண்டித்துக் கொண்டேயிருந்தேன். யாரிடமாவது உணர்ச்சிவசப்பட்டுவிடுவேனோ என்கிற பயம் உள்ளூர இருந்து கொண்டேயிருந்தது.
அப்பா இப்போதைக்கு நன்றாக இருக்கிறார். நேற்று வீட்டிலிருந்து பெங்களூருக்குக் கிளம்பும் போது தலையணைக்குக் கீழாக இருந்து ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார். ‘வேண்டாங்கப்பா’ என்றேன். வற்புறுத்திக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். வீட்டை விட்டு வேகமாக வெளியேறி அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.
அடுத்தவர்களின் குடும்பங்களில் கேள்விப்படக் கூடிய நோய்மை, பிணி என்பதெல்லாம் இப்பொழுது நமக்கு சாதாரணமாகியிருக்கின்றன. அவர்கள் சொல்லும் போது கேட்டுவிட்டு பரிதாபக் குரலில் ஆறுதல் சொல்லிவிட்டு மறந்துவிடுகிறோம். அதன் பிறகு நம்முடைய உலகம் இயல்பானதாக மாறிவிடுகிறது. ஆனால் அதே நோய்மையும் பிணியும் நம் ரத்த உறவுகளில் நிகழும் போதுதான் வலியையும் கண்ணீரையும் உணர முடிகிறது. ஆனால் ஒன்று- நமக்கு நிகழ்கிற எல்லாக் காரியங்களுக்கும் ஓர் அர்த்தம் உண்டு என முழுமையாக நம்பலாம். இதுவும் கூட அப்படித்தான். அதே சமயம் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிற மனநிலையைத்தான் இறைவனிடம் கேட்கிறேன். ஆனால் எல்லாத் தருணங்களிலும் எல்லாவற்றையும் எதிர்கொள்ளவும் தாங்கிக் கொள்ளவும் முடிவதில்லை. இதை தட்டச்சு செய்யும் போதும் கூட கண்ணீர் வழிந்து கொண்டேதான் இருக்கிறது.
குறிப்பு: யாரேனும் Bayer அல்லது Health Impetus நிறுவனத்தில் பணி புரிந்தால் தெரியப்படுத்தவும். தங்களிடம் ஓர் உதவி கோரவிருக்கிறேன். நன்றி.
குறிப்பு: யாரேனும் Bayer அல்லது Health Impetus நிறுவனத்தில் பணி புரிந்தால் தெரியப்படுத்தவும். தங்களிடம் ஓர் உதவி கோரவிருக்கிறேன். நன்றி.
49 எதிர் சப்தங்கள்:
Sorry to know that Mani. Hope you get through this tough time soon. Wish your dad a complete recovery.. take care.
மனிதம் நிறைந்திருக்கிற மனதில் சிறிய பிரச்சினைகள் கூட பெரிய பாதிப்பை உண்டாக்கி விடும். அதோடு பாசமும் பயமும் கலந்து விட்டால் பரிதவிப்பு அதிகமாகிவிடும்.
"பயத்தை விட்டு விடுங்கள்" என்பதை விட "இதுவும் கடந்து போகும்" என்ற வாக்கியத்தை அடிக்கடி நினைவு படுத்தி கொள்ளுங்கள்.
வணக்கம்
எல்லாம் நல்ல படியாக உடல் நலமுடன் திரும்ப இறைவனை பிராத்திக்கிறோம்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
The Almighty may shower His mercy on him to cure asap.
Ibrahim.
அடுத்தவர்களுக்கு வரும் துன்பத்தை துடைப்பவனின் துயரை ஆண்டவன் துடைப்பான். நம்பிக்கையுடன் இருங்கள் மணி நிச்சயம் நல்லது நடக்கும்.
Dont worry Manikandan,
i will prey for your father and there wont be any problem for him.
As you did lot of help to people so god will be always with you.
உங்களுடைய நிலையை எண்ணி மிகவும் வருத்தப்படுகிறேன். உங்களுடைய மனவேதனையை சரிசெய்ய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Mani, please don't worry...god will test good people..but h won't harm them..always remember that god is always there to take care of good people..
appavin udalnilai viravil kunamagi vara en gurunthan sai vendugiren . manam Thalaratheergal Sir .. ungal varthaigal than appaviruku manapalathai kodukum
Mani,
Wish your father a fast recovery, back on good health & long life by the grace of the DIVINE BLISS.
I was wondering why a long gap since your last post,now I UNDERSTAND your feelings.
May I please know the place of residence of your parents,as I may make a visit on them,if time permits.,me hailing from Paariyur Vellalapalayam,settled in Coimbatore now.
May the ALMIGHTY grant you enough strength to overcome this difficult situation.
Prof.P.Gopalakrishnan,RVS CET,COIMBATORE
mail id chellamsgopi@gmail.com
Vaazhha valamudan
அப்பா விரைவில் குணமடைந்து வருவார் சார்
கவலை வேண்டாம் , மன உறுதியுடன் இருங்கள் நல்லதே நடக்கும் .
மணிகண்டன், மனம் தளராதீர்கள் , அப்பாவுக்கு குணமாகிவிடும் நம்புங்கள் உங்களைப் போன்ற நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும்
நாங்களும் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுகிறோம் .
Mani, Sincere wishes for your dad's speedy recovery. I am sure he will be alright soon, and you would come out of this worry. Wish you all good luck during this tough time. You should take care of your personal things before you spend time on 'Nisaptham'. So, you could leave these things aside for sometime. Our prayers are with you. Good luck. Regards, Radhakrishnan, Cochin
அய்யா, அனடோமிக் தெரபி என்ற ஒன்று இருக்கிறது, அதில் எதுவுமே நோய்கள் அல்ல, சர்க்கரை, புற்றுநோய், ஆஈட்ஸ் எதுவுமே நோய்கள் அல்ல என்று கூறுவார்கள். நான் இரண்டு வருடங்கள் மேலாக தொடர்ந்து வருகிறேன். முன்பாக எனக்கு திரைத், பிரஷர், டென்ஷன் என பல மாத்திரைகளை சாப்பிட்டு கொண்டிருந்தேன், இதை தொடர்ந்த பிறகு இதுவரை ஒரு மாத்திரையும் தொட வில்லை. இத்தனைக்கு இடையில் ஜுரம், வாந்தி பேதி என பல வந்திருக்கு, எதற்கும் மாத்திரை தொட வில்லை. நேரில் இருந்தால் நிறைய பேசுவேன். கருத்து பகுதி என்பதால் சுருங்க கூறுகிறேன். என் பையனுக்கு குழந்தையில் இருந்தே வீசிங் பிரச்னை இருந்தது.மூன்று மாதம் ஒரு முறை அட்மிட் செய்து பாப்போம், இந்த தெரபி இல் காற்றை பற்றி விள்ளகமாக கூறினார்கள் வீட்டிலேயே சுவாசிக்கும் கிட் இருக்கிறது. அதில நாம் சுவாசிக்கும் காற்று ஓடி கொண்டிருக்க வேண்டும், எப்படி ஓடி கொண்டிருக்கு நதியில் நீர் எடுக்க வேண்டும் என்போமா அப்படியே. சரி விசயத்திற்கு வருவோம். இரவில் ஊரங்கும் பொது அடைபட்ட ரூமில் இருக்கும் காற்று இருப்பவர்களுக்கு அரை மணிநேரம் மட்டுமே பிராண சக்தியை கொடுக்கும். மற்ற நேரம் எல்லாம் நாம் விடும் அசுத்த காற்றையே சுவாசிப்போம். இதனால் நிரயீரல் கெடும். அதனால் நுரையீரல் சம்பாத்த பட்ட வியாதிகள் வரும். வீசிங், மூச்சி திணறல், சளி ஆஸ்துமா, இவை எல்லாம். தெரபி யில் தெரிந்தது. அதனால் வீட்டில் ஒரு பக்கம் ஜன்னல் ஒரு பக்கம் எசேஸ்ட் பேன் போட்டேன். இரவில் அந்த பேன் ஓடும், அது ஓடும் பொது வீட்டில் இருக்கும் அசுத்த காற்று வெளியேற்றி வெளியில் இருக்கும் காற்று உள்ளே வரும் அதில் பிராண சக்தி கிடைக்கும். அதை பயன்படித்தி ந அன்றிலிருந்து இன்று வரை பயனுக்கு வீசிங், சளி பிரச்னை இல்லை. திரபி யில் உள்ளது அனைத்துமே பயனுள்ளது. நிறைய பேருக்கு சொல்லி கொடுத்த நிறைய சர்க்கரை நோயாளிகளை மாத்திரை போடுவதில் இருந்து நிறுத்தி இருக்கிறேன். அவர்கள் நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறார்கள். நீங்கள் கொஞ்சம் முயன்று பாருங்கள். இது அனைத்து நோய்க்கும் மருந்து. please try anatomic theraphy, healer basker, You will get some ideas. நன்றி வாழ்க வளமுடன்
அய்யா, மனம் தளர வேண்டாம், ஆஸ்துமா விற்கு நாட்டு வைத்திய பகுதியில் நிறைய குறிப்புகள் எடுத்து வைத்திருக்கிறேன். தற்போது கையில் இல்லை. வேண்டுமென்றல் நான் தேடி எடுத்து தருகிறேன். நன்றி வாழ்க வளமுடன்
‘இந்தத் துன்பத்தை இவன் தாங்கிக் கொள்வான்’ என்று முடிவு செய்யப்பட்டு அந்தத் துன்பம் அவரவருக்கு வழங்கப்படுகிறது.
Keep the faith Mani
அப்பா குணமடைந்து நன்றாக மீண்டெழுவார். நம்பிக்கையுடன் இருங்கள். மன உறுதியுடன் குடும்பத்தில் இருக்க வேண்டிய நீங்களே கலங்கினால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்? தைரியமாக இருங்கள்.
உங்கள் தந்தை நலம் பெற எனது பிரார்த்தனைகளும்.....
அப்பா நலம் பெற எனது பிராத்தனைகள்.
என்ன சொல்வதென தெரியவில்லை மணி. தங்களின் பெற்றொர்கள் விபத்தை சந்தித்த கட்டுரையை வாசித்த அன்று இருந்த அதே மனநிலை.
மணி..உங்கள் மன வலிமையும் தைரியமும் அப்பாவை மீட்டு கொண்டு வரும்.எங்களது பிரார்த்தனைகள் உங்களை சுற்றியே....விரைவில் மீண்டு வருவோம்.
Whatever has to happen will happen. We can only try to minimize the damages. Be brave and go forward. I think your father would also tell you the same.
Dear Mani
wishing a speedy recovery for your Father. Our thoughts and prayers are with your family..
அப்பா விரைவில் நலமாகி வருவார் ... எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்... தைரியமா இருங்கண்ணா..
அன்புடன் மணி அவர்களுக்கு,
உங்கள் தந்தை விரைவில் குணமடையவும்
உங்களுடைய மனச் சஞ்சலங்கள் நீங்கவும்
பிராத்திக்கிறேன்.
உஷா
அண்ணா புயலுக்கு பின்னால் அமைதியாக இருப்பது போல, இதுவரை நடந்தவற்றை விடுங்கள் இனி உங்களுக்கு நடப்பவை எல்லாமே நல்லபடியாக மனநிறைவாக இருக்கும்
Hi Mani Sir,
Your Father will get well soon. I pray for his speedy recovery.
our prayers are with you..
தங்கள் தந்தை முழு நலம் பெறவும் தாங்கள் தைரியம் பெறவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் மணிகண்டன்.
I wish you and your family all the best and i hope your
father comes out of this sudden setback and make you
happy. They say 'HEALTH IS WEALTH'. Yes the real wealth is
not the materialistic one but that of peacefulness in
the family is the real wealth. Let that reaches your family.
We pray for your DAD. God Bless.
மணி,
உங்கள் உணர்வுகள் புரிகிறது.
அப்பா விரைவில் குணமடைவார்.நம்புங்கள். நல்லதே நடக்கும்.
Mani Sir,
I pray God for your Dad's speedy recovery.
Mani Anna,
Appa viraivel kunamadaiya naangalum saami kumbidurom.
Let him get well soon.
-Dhanapal
உங்கள் தந்தை நலம் பெற எனது பிரார்த்தனைகள்
அப்பா விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நல்லதே நடக்கும். தைரியமாக இருங்கள்.
Mani, We'll pray for your Father, GOD will be with you always.
Mani - Praying for your dad's recovery soon. Be bold and strong!
I share your grief. I am sure your father will recover soon and you will be back with us as usual.
Mani na, sure dad will get well soon. We pray for him.
Unimaiya Varithikal
//நம் ரத்த உறவுகளில் நிகழும் போதுதான் வலியையும் கண்ணீரையும் உணர முடிகிறது.
Hi Mani,
Sure he will recover soon.
All the very best to him.
Prabhakar
உங்கள் தந்தை விரைவில் குணமடைய வேண்டுகிறேன்..
உங்களின் தயாள குணத்திற்கு நல்லவையே நடக்கும்
நம்பிக்கை உங்களை தூக்கி நிறுத்தட்டும் நண்பா...
Praying for a speedy recovery for your father Mani!!
If you need any medicine from USA, i will be very glad to send it to you.
Please let me know.
We are all with you during the difficult times.. Please have faith.
Take care.
- Prabhu Jayaprakasan
Dear Mani,
He will alright soon wishing him the speedy recovery.
Take care.
Regards
K Siva.
வாசு அண்ணன் விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகள்.
எனது பிராத்தனைகள்
இதுவும் கடந்து போகும் சார் ...
உங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். ஒன்று மட்டும் சொல்வேன்...
தெய்வம் நமக்குத் துணை மணி...ஒரு
தீங்கு வர மாட்டாது மணி.
இளவல்ஹரிஹரன், மதுரை.
Post a Comment