Apr 8, 2015

குட்டிப் பையனிடமிருந்து..

நிதின் பற்றி முன்பொருமுறை குறிப்பிட்டிருக்கிறேன். சிறுவன். துபாயில் வசிக்கிறான். தன்னுடைய சேமிப்பு பணத்தை அரவிந்தனின் மருத்துவச் செலவுகளுக்காக அனுப்பி வைத்திருந்தான்.

அரவிந்தனுடைய அம்மா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அழைத்து தாங்கள் மருத்துவமனைக்குச் செல்வதாகச் சொல்லியிருந்தார்- அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது. அதை நிதினுக்குத் தெரிவித்துவிட வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதி அதை ஸ்கேன் செய்து அவனது தந்தைக்கு அனுப்பி வைத்திருந்தேன்.  மின்னஞ்சலில் அனுப்புவதைக் காட்டிலும் கைப்பட எழுதி அனுப்புவதில் சற்று நெருங்குவதான உணர்வு வருகிறது. ஆனால் எனது கையெழுத்துத்தான் கோழிக்காலில் எழுதுகோலைக் கட்டிவிட்டது போல இருக்கும்.

அடுத்த நாள் நிதினும் அதே முறையில் பதிலை அனுப்பியிருந்தான். கையெழுத்து அட்டகாசமாக இருந்தது.

இது போன்ற சிறு சிறு காரியங்கள் மூலமாக அடுத்த தலைமுறையோடு ஏதாவதொரு பிணைப்பை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. 

நிதின் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பான் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நிழற்படத்துடன் கூடிய இந்தப் பதிவு நிச்சயம் அவனை உற்சாகமூட்டும்.
                                                                                                                                   

Dear Nithin,

Hope you are doing great. I am not sure if you can read Tamil but please apologize as I am not very good with English. Kindly ask daddy to read for you.

நீ உனது சேமிப்பிலிருந்து வழங்கிய ரூ.4765/- பணமானது ஒரு குட்டிப்பையனின் அறுவை சிகிச்சைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவன் பெயர் அரவிந்தன். பிறந்ததிலிருந்தே அவனுடைய வலது கை வேலை செய்வதில்லை. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். அரவிந்தனின் அப்பா ஏழை. பணம் வேண்டும் என்று கேட்டார். அரவிந்தன் பாவமில்லையா? அவனுக்கு பணம் வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டிருந்தேன். உன் அப்பாவும் உன்னைப் போலவே மிக நல்லவர் என்பதனால் நீ சேர்த்து வைத்திருந்த பணத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அதை அரவிந்தனுக்கு கொடுத்துவிட்டேன். நேற்று அரவிந்தனுக்கு கோயமுத்தூரில் ஆபரேஷன் நடந்தது. அவனது அம்மா உனக்கு நன்றி தெரிவிக்கச் சொன்னார். THANK YOU SO MUCH NITHIN.

ஏழைகளுக்கு நாம் கொடுக்கும் ஒவ்வொரு பணத்துக்காகவும் கடவுள் நம்மை ஒவ்வொரு முறை ஆசிர்வதிப்பார். உன்னை கடவுள் இதுவரை பலமுறை ஆசிர்வதித்திருப்பார். கடவுளின் blessings எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. உன்னைப் போன்ற நல்லவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கு மட்டுமே கிடைக்கும். 

நீ உன் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரங்களை அடையும் போதும் இதே போன்று நல்லவனாகவும் அடுத்தவர்களுக்கு உதவுபவனாகவும் இருக்க வேண்டும். அப்படித்தான் இருப்பாய் என நம்புகிறேன்.

இந்தக் கடிதத்தை முன்பே எழுதியிருக்க வேண்டும். சில வேலைகளின் காராணமாக எழுத முடியவில்லை. sorry for the delay.

Be a Kind heart. Spread the love across the globe irrespective of race, gender, religion etc.. I am sure, You will.

It is very nice to write a letter to such a kind and cute heart. I am really happy.

My sincere best wishes and prayers to you and your family.

Be in touch.

அன்புடன்,
மணிகண்டன்
                                                               


Dear Mani Uncle,

First of all I want to thank you for your kind words and blessings. I'm happy to know that Arvind got operated. Hope he will recover well. I pray to god for his well being.

I'm happy that my savings are useful. I will continue this habit and try to help those in need. I will fulfill your expectations about me.

Thank you

Nithin