எங்கள் வீட்டில் அரை டிக்கெட்டுகளோடு சேர்த்து மொத்தம் எட்டு பேர். தம்பியும் நானும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறோம். அம்மா அப்பாவும் எங்களோடுதான் இருக்கிறார்கள். என் மனைவியின் தங்கையையே தம்பிக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டதால் தொந்தரவு இல்லை. முக்கியமாக அவர்களிடையே சண்டை எதுவும் வருவதில்லை. இந்தக் கூட்டுக்குடும்ப முறையினால் ஒரு சகாயம் இருக்கிறது. மற்றவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ எனக்கு இருக்கிறது- வீட்டில் எதைப் பற்றியும் கண்டு கொள்வதில்லை. அவ்வப்போது திட்டுவார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் அவர்களுக்கும் சலித்துப் போய்விட்டது போலிருக்கிறது. தெருவில் நிறுத்தி தண்ணீர் தெளித்துவிட்டார்கள். கண்டு கொள்வதேயில்லை.
சம்பளம் வந்தவுடன் பெட்ரோல் செலவுக்கான காசை மட்டும் வைத்துக் கொண்டு மிச்சப் பணத்தைத் தம்பியிடம் கொடுத்துவிடுகிறேன். அவ்வளவுதான் - மொத்தச் சுமையும் தோளைவிட்டு இறங்கியது மாதிரிதான். வீட்டுச் செலவுகளை அப்பா பார்த்துக் கொண்டால், வெளிச் செலவுகளை தம்பி பார்த்துக் கொள்கிறான். சனி, ஞாயிறு ஆனால் தோளில் பையை மாட்டிக் கொண்டு எந்த ஊருக்கு வண்டியேறினாலும் யாரும் கேட்பதில்லை.
இதை எதற்குச் சொல்கிறேன் என்றால்- உண்மையிலேயே சேமிப்பு பற்றியெல்லாம் எனக்கு அதிகமாகத் தெரியாது. அதைத் தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை, அதற்கான அவசியமும் வரவில்லை. திருமணத்திற்கு முன்பாக வருமான வரி விலக்குக்காக பஜாஜ் அலையன்ஸின் பரஸ்பர நிதியில் மூன்று வருடங்களுக்கு தலா பத்தாயிரம் கட்டினேன். இப்பொழுது கிட்டத்த பத்து வருடங்களைக் கடந்தாயிற்று. முதிர்வுத் தொகை எவ்வளவு இருக்கிறது என்று விசாரித்தால் இருபத்தி மூன்றாயிரம் என்கிறார்கள். அதோடு சரி. வேறு முதலீடும் செய்யவில்லை.
இப்படியே பணம் பற்றிய கவனமில்லாமல் கடைசிவரைக்கும் விட்டேத்தியாக இருந்துவிட வேண்டும் என்பதுதான் ஆழ்மன ஆசையாக இருக்கிறது. பணம் பற்றிய கவனமின்மை என்பது மிகப்பெரிய சுதந்திரம். அதற்காக வறுமையில் உழல வேண்டும் என்று அர்த்தமில்லை. நமக்கான அத்தனை தேவைகளையும் வேறொருவர் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவைப்படும் போது மட்டும் கைக்கு பணம் வந்துவிட வேண்டும். அந்த மாதிரியான சுத்ந்திரம்.
எதற்கு இந்த சொந்தக்கதை?
பணம் சேர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து எழுதிய முந்தைய பதிவுக்கு பின்னூட்டங்களில் வந்திருந்த ஐடியாக்கள் தவிர சில மின்னஞ்சல்களும் வந்திருந்தன. நண்பர்களுக்கு நன்றி. இவை எனக்கு எந்த அளவுக்கு உதவும் என்று தெரியவில்லை. ஆனால் பிறருக்கு உதவக் கூடும்.
போண்டா மணி என்றொரு நண்பர் அடிக்கடி கடிதம் எழுதுவார். அவரது மின்னஞ்சல்-
பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. கல்லூரி காலத்தில் இருந்தே பணம், சேமிப்பு, வட்டி விகிதம், பங்குச்சந்தை என அதிகம் பேசி கொண்டு திரிவேன். பணம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் என்னவோ அதிக ஆர்வம் இல்லை. எனினும் என் சார்பாக சில ஐடியாக்கள்.
1) வீட்டில் அதிகமாக பணம் சம்பாதிப்பவர்களுக்கு டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். ஒரு கோடிக்கான இன்சூரன்ஸ் 9000/வருடம் கிடைக்கிறது. ஆன்லைனில் வாங்கினால் முகவருக்குத் தர வேண்டிய பணத்தை மிச்சம் பிடிக்கலாம்.
2) வருமான வரிக்காக போட்ட எந்த பத்தாயிரத்திற்கும் மேல் செலவாகும் காப்பீடுகளையும் உடனடியாக ரத்து(surrender/paid-up) செய்யவும். பிரையோஜனமற்றவை.
3) வீட்டுக் கடன் எடுத்த வங்கி SBI என்றால் (Max Gain)வீட்டு கடன் திட்டம் மூலமாக 10 சதவிகித வட்டியில் சேமிக்கலாம். இணையத்தில் தேடிப்பாருங்கள். மிகச் சிறந்த கடன் திட்டம் அது. நான் அந்த திட்டதில் தான் வீடு வாங்கி உள்ளேன்.
4) தங்கம் ஒரு தவறான முதலீடு. பெண் குழந்தை இருந்தால் மட்டும் கல்யாணத்திற்காக மாதம் ஒரு கிராம் தங்கம் வாங்க வேண்டும். தங்கம் வாங்கும் போதும் செய்கூலி, சேதாரம் என்று ஏமாறுகிறோம். விற்கும் போதும் செம்பு சேர்த்து இருக்காங்க, BIS Halmark முத்திரை இல்லை என்று ஏமாறுகிறோம். எந்த நகைக் கடையிலாவது வாங்கிய காசுக்கே ஒரு மாதம் கழித்து விற்று விட முடியுமா ?
5) விவரம் தெரியாவிட்டால் எக்காரணம் கொண்டும் பங்கு சந்தை , பரஸ்பர நிதி எனச் செல்ல வேண்டாம். தெரியாத விஷயத்தில் விலகி இருப்பதே நல்லது. நூறு பங்குகளில் இரண்டு பங்கு தான் நல்ல லாபம் தரும்.நூறு fund-ளில் இரண்டு fund தான் நல்ல லாபம் தரும்.
அப்படியானால் மிச்சம் உள்ள பணத்தை என்ன தான் செய்வது?
6) தபால் அலுவலகத்தில் மாத வருமானத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஒன்றரை லட்சத்திற்கு மாதம் ஆயிரம் கையில் கிடைக்கும். நீங்களும் மனைவியும் சேர்ந்து 9 லட்சம் ரூபாய் வரைக்கும் இதில் சேமிக்கலாம்.
7) முதலீடு செய்வதற்கு கையில் அதிகப் பணம் இருந்தால் வீட்டு மனையிடம் ஒன்றே நல்ல முதலீடு. உங்களுக்கு நன்றாக தெரிந்த நகரத்தில், உறவினர் யாரேனும் வசிக்கும் நகரத்தில் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்குள் காலி வீட்டு மனையிடம் வாங்கலாம். சாலை வசதி, Corner plot ஆக இருந்தால் நலம். வீடு கட்டாமல் கண்காணித்து மட்டும் இருந்தால் போதுமானது. ஐந்து மடங்கு லாபம் வருவது போலத் தெரிந்தால் விற்று விடலாம்.
8) வீட்டில் இருந்து வெளியே செல்லும் பணம் ஒரு ரூபாயாக இருந்தாலும் குறித்து வைத்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் வாங்குகிற சம்பளத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய கூடாது (வீட்டு விசேஷங்கள்[பண்டிகைகள் அல்ல] இருக்கும் மாதங்கள் மட்டும் விதி விலக்கு).
9) ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் எந்தப் பொருளை வாங்கினாலும் இணையதளங்களில் ஐந்து பரிந்துரைகளையாவது (review)படித்து தான் வாங்க வேண்டும்.
என் ஐடியாக்கள் சிறிதளவேனும் உதவினால் மிக்க மகிழ்ச்சி.
******
நவீன் எழுதியிருக்கும் கடிதம்.
சமீபத்தில் என்னுடன் வேலை பார்ப்பவர்கள் சிலர் கேட்டதனால் சில ஆராய்ச்சிகள் செய்து தெரிந்து கொண்டது இது தான்.
சேமிப்பு என்றவுடனே ஒரு housing loan மூலமாக ஊருக்கு வெளிய ஆயிரம் சதுரடியில் வீடு வாங்கச் சொல்லித்தான் எல்லாரும் சொல்வார்கள். யாருமே டெர்ம் இன்சூரன்ஸ் / mediclaim / ஓய்வூதியத் திட்டங்கள் பற்றியெல்லாம் சொல்ல மாட்டார்கள். என்னதான் உருண்டு புரண்டு சேர்த்து வைத்தாலு குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஒருவருக்கு ஏற்படும் விபத்து அல்லது மருத்துவச் செலவானது அனைத்து சேமிப்பையும் கரைத்து விடும். அதனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் Mediclaim இருப்பது அவசியம். ஒரு வேலை உங்கள் அலுவலகத்தில் ஏற்கனவே Mediclaim எடுத்திருந்தால் அவர்கள் தரக் கூடிய தொகை எவ்வளவு, அது எந்தெந்த நோய்களுக்கு பயன்படும், எந்த மருத்துவமனைகளில் பயன்படுத்த முடியும் என்பதைத் தெளிவாக தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
Term Insurance:
முதலில் தனி நபர் காப்பீடு எடுப்பது ரொம்ப முக்கியம். இது நாம் வாங்கி இருக்கும் கடனை விடவும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். என்டோன்மன்ட் , Moneyback என்பதெல்லாம் வேண்டாம். Term Insurance தான் சரி. இந்தத் திட்டத்தின்படி குறிப்பிட்ட காலத்திலே ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் காப்பீட்டுத்தொகை கிடைக்கும். இல்லையென்றால் எதுவும் கிடைக்காது. ஒரு கோடி ரூபாய்க்கு காப்பீடு எடுப்பதற்கு வருடத்திற்கு ரூ.12000 கட்ட வேண்டி வரும்.
Money Back, எண்டோன்மெண்ட் ஆகியவற்றில் முதிர்வுக்காலம் முடிந்தவுடன் பணம் திரும்பக் கிடைக்கும். ஆனால் நாம் ஒவ்வொரு வருடமும் கட்ட வேண்டிய தொகை அதிகமானதாக இருக்கும்.
Recurring Deposit:
இதில் கிடைக்கக் கூடிய வட்டி வேறு எந்தத் திட்டத்திலேயும் வருவதில்லை. அதனால் ஒவ்வொரு மாதமும் ஆயிரமோ, இரண்டாயிரமோ- உங்களால் முடியும் தொகையைச் சேர்த்து வையுங்கள்.
குழந்தைகள் படிப்பு:
ஒரு குழந்தைக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கும் போது சேமிக்க ஆரம்பிக்கலாம், அவர்களுக்கு 18/20/22/24 வயசு ஆகும் போது பணம் திரும்ப கிடைக்கும்.
பரஸ்பர நிதி:
இதில் retirement funds, மாதாந்திர வருமானத் திட்டம் என்று தனித்தனியாகவே இருக்கின்றன. மாதம் 1000/2000 ரூபாய் சேமிக்கலாம். கூட்டு வட்டி கணக்கில் திரும்ப கிடைக்கும் பணம் திருப்தி தரக்கூடியதாக இருக்கும். இதற்கு வருமான வரிவிலக்கும் உண்டு.
முக்கியமான குறிப்பு: நாம் எடுத்து வைத்திருக்கும் காப்பீடு / முதலீடுகள் / வங்கி கணக்குகள் (online banking username, passwords) உட்பட அனைத்தையும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம்.
13 எதிர் சப்தங்கள்:
Thanks for the info...
I guess for tax benefits we can take up some MFs.
//பரஸ்பர நிதி:
இதில் retirement funds, மாதாந்திர வருமானத் திட்டம் என்று தனித்தனியாகவே இருக்கின்றன. மாதம் 1000/2000 ரூபாய் சேமிக்கலாம். கூட்டு வட்டி கணக்கில் திரும்ப கிடைக்கும் பணம் திருப்தி தரக்கூடியதாக இருக்கும். இதற்கு வருமான வரிவிலக்கும் உண்டு. //
இது தவறான வழிக்காட்டுதல்,
நான் 2 லட்சம் மியுட்சுவலில் யுனிட் லின்க்ட் என்ற வகையில் போட்டிருந்தேன் , 5 ஆண்டுகளுக்கு பிறகுபோட்டதை விடகம்மியா தான் இருக்குனு சொன்னாங்க கடுப்பாகி 20 னாயிரம் கம்மியா இருந்தாலும் பரவாயில்லைனு கேன்சல் செய்துவிட்டேன்,உண்மையில் யாரும் அவங்க முயற்சிக்காத ஒன்றை கேள்விப்பட்டேன் வகையிலே பரிந்துரை செய்கிறார்கள்.
மியுட்சுவல் ஃபண்ட்கள் எல்லாம் 20 ஆண்டுகளாவது இருக்கணும் ,அப்போக்கூட அதன் வளர்ச்சி , பேங்க் சேவிங்க்ஸ் அக்கவுண்ட் வட்டி விகிதம் விட கம்மியாத்தான் இருக்குமாம் இதனை ஒரு அனுபவஸ்தர் சொல்லவும் , இனிமே அந்தப்பக்கமே போறதில்லைனு முடிவுக்கட்டியாச்சு,
ரூபா நோட்டாவச்சிருந்தா அழுக்காகிடும்னு நினைப்பவர்கள் வேண்டுமானால் ,மியுட்சுவலில் போட்டு வச்சு வேடிக்கை பார்க்கலாம் அவ்வ்!
----------
ஹி...ஹி சிறந்த முதலீடு என்பதை விட எளிதான ஒன்று , ஊருல இருந்த வீட்டுமேல இன்னொருஃப்ளோர் கட்டி வாடகைக்கு விட்டாச்சு , 5,000 வாடகை,அட்வான்ஸ் , 25,000 மட்டுமே.
# கோடிக்கணக்கில பணம் இருப்பவர்கள் ,இன்னும் நிறைய முதலீடுகள் குறித்து பரிசீலிக்கலாம்.
1. டெர்ம் இன்ஸ்சூரன்ஸ்
2. பிக்ஸட் டொபிட் டபுள்
3. பிளாட்
4. தங்கம் ( குறைந்த அளவ)
5. மாதாந்திர ஆர்டி ( கூட்டுறவு வங்கியில்)
சிவபார்க்கவி
Hi
Very useful inputs.
ULIP plans taken a few year's back, are total flop. They had paid up to 35% as commission to agents and invested only 65%. Moreover, they also charge 10% every year for the next five years. This is almost a cheating scam done with the blessing of the concerned authorities. Imagine how long it would take for the 65 % to become 100 %. This will be more than 6 years. Your money will start growing only after that. SEBI has now woken up ordered these funds not to pay exorbitant commission and yearly charges. The funds taken recently are more likely to yield results. All other suggestions like investing in Land etc are very subjective. Buying Gold jewellery is fraught with high risk. As Mr (Bonda) Mani, mentioned above, this is also a cheating scam. You lose 12-15% the moment you have bought these jewels. May be Gold Coin id okay. But of late, that also doesn't appreciate.
I have found out recently that there is a scheme in City Union Bank called VIP recurring fund.Here you get FD interest rate for your monthly remittances ( 9.75 % for senior citizens)another advantage is during 10th 11th and 12th months you can transfer more funds from your SB which will also qualify for the full interest rate.Some mutual funds like Reliance Growth are also good at all times.
Mutual Fund eppa eduthalum nastamthan... Nama kattunatha vida kammiyathan kidaikkuthu...
2 vatti emanthachu....
mani sir.. very useful information...i will refer my clients(4500)age 18 to 103.- sivakumar from sundaram finance(TVS GROUP)-branch incharge-coimbatore-9944066681
திரு வவ்வால் அவர்களுக்கு
மேலே நான் குறிப்பிட்டு இருப்பது கண்டிப்பாக MIP/ RETIREMENT Mutual funds மட்டுமே. இது கண்டிப்பாக ULIP அல்ல.
திரு மணி அவர்கள் தனது ஓய்வு காலத்திற்கு ஏற்ற திட்டங்களை கேட்டு இருக்கின்றார், எப்படியும் அடுத்த பத்து இருபது வருடங்கள் சேமிக்க வேண்டிய வரும். அதனால் குறைந்த பட்சம் என்று வைத்தால் கூட வருடம் 8-10 சதம் வருமானம் கிடைக்கும்.
நன்றி
நவீன்
//They had paid up to 35% as commission to agents//
Ever wondered why the junior bank officers, even branch managers keep on peddling this sh*tty insurance product on hapless bank customers?
It is because of the hefty commission. If they can make just 1 or 2 customer fell for the bait every month, it adds a cool income above their regular monthly salary.
//நான் 2 லட்சம் மியுட்சுவலில் யுனிட் லின்க்ட் என்ற வகையில் போட்டிருந்தேன்//
வவ்வால்,
நீங்க SIP மூலமாகவா முதலீடு செஞ்சீங்க? அந்த பரஸ்பர நிதியை எக்காரணத்துக்காக தேர்வு செய்தீர்கள்?
டெர்ம் இன்சூரன்ஸ் பணியில் சேர்ந்தவுடன் (24-26 ஆண்டுகள் வயதுடைய நபர்) எடுத்துவிடுவது நல்லது. பிரீமியம் தொகை குறைவாக இருக்கும். மெடிக்கல் செக்கப்பும் சில காப்பீட்டு நிறுவனகள் விலக்குத் தரலாம். 40 வயதில் டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்கச் சென்றால் பிரசர், டயாபடீஸ் என லைப்ஸ்டைல் நோய்கள் ரிஸ்கை அதிகமாக்கி பிரீமியத்தை ஏற்றிவிடும் (1.5X or 1.75X).
30 முதல் 35 வருடங்கள் என்று பார்த்தாலும் ஓய்வு பெரும் வயது வரை பாதுகாப்புக் கொடுக்கும். மேலும் ஓய்வு பெற்ற மூத்த குடிமகன்களுக்குத் வேண்டியது மருத்துவத்திற்கான காப்பீடே தவிர சம்பாதனைக்கான காப்பீடு அல்ல.
எவ்வளவு தொகைக்கு என்பது எவ்வாறு கணக்கிடுவது?
ஒரு பேச்சுக்கு நாளை நீங்கள் மங்கள்யான் போன்ற விண்கலமேறி செவ்வாய் கிரகத்துக்கு சென்றுவிட்டு 25 ஆண்டுகள் கழித்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்களில்லாமல் உங்கள் குடும்பம் வாழ எவ்வளவு பணம் தேவைப்படும்? அதைக் கணக்கிட்டு கவரேஜ் எடுக்கவும். அது உங்கள் மாத வருவாயின் 20X, 30X, 50X என்பது உங்கள் விருப்பம். அது உங்களுக்கு சொந்த வீடு உள்ளதா, குழந்தைகள் கல்வி, திருமணம், தற்போதைய சேமிப்பு மற்றும் கடன் பொறுத்து மாறும். கவரேஜ் தொகை குடும்பத்துக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு கொடுக்கும் அளவாக இருக்க வேண்டும். அதன் அளவு *இவன் உயிரோடு இருக்க வேண்டுமா* என்று எண்ணுமளவுக்கு இருக்க வேண்டியதில்லை. :) இன்சூரன்ஸ் கொலைகளும் இவ்வையகத்தில் உண்டு.
பிரீமியம் தொகைக்கு வரிவிலக்கு உண்டு. எனவே, ரூ 12000 கட்டினாலும் உத்தேசமாக ரூ 8000 எனக் கொள்ளலாம் (30.3% tax bracket assumed)
நான் டெர்ம் இன்சூரன்ஸைப் பார்ப்பது எப்படியென்றால் நம் குடும்பத்தின் பாதுகாப்புக்காக செய்யும் தினசரி செலவு ரூ 20 முதன் 50 வரை என ( Rs 8000 ~ Rs 18000 annual premium divided by 365 days a year = Rs 20 to Rs 50 apprx). இதைவிட வெட்டியாகவும், பயனின்றியும் தினசரி பல செலவுகள் செய்கிறோம். அதைத் தவிர்த்தாலே இதை ஈடு கட்ட முடியும்.
தங்கள் பயன்தரும் பகிர்வுக்குப் பாராட்டுகள்.
மியூட்சுவல் பஃண்ட் திட்டங்களுக்கும், யுலிப் திட்டங்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அடிப்படையே வேறானாது. மியூட்சுவல் பஃண்ட் திட்டங்கள் எஸ்.ஐ.பி. முறையில் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆர்.டி.போல சேமித்து வந்தால் நிச்சயமாய் லாபம் உண்டு. நான் முதலீடு செய்து 80 சதவீதம் வரை லாம் அடைந்திருக்கிறேன். இப்போதும் முதலீடு செய்து வருகிறேன்.
//இன்சூரன்ஸ் கொலைகளும் இவ்வையகத்தில் உண்டு/// thegidi movie
Post a Comment