Apr 13, 2014

மோடி

நரேந்திர மோடியின் பிம்பம் இன்று நேற்று உருவாக்கப்படவில்லை. நமக்கே தெரியாமல் நம்மைச் சுற்றிலும் பல ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். மோடியின் ஆட்சியில் குஜராத் வளர்ச்சியடைந்திருக்கிறது என்றார்கள், தொடர்ந்து மூன்று முறையாக குஜராத் மக்கள் மோடியை வெற்றியடையச் செய்திருக்கிறார்கள் என்று பேசினார்கள், மோடி ஒரு வலுவான அரசியல்தலைவர் என்று எழுதினார்கள். அந்த மாநிலத்தில் மின் தடை என்பதே இல்லையென்றும், மது முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுவிட்டது என்றும் நிறையச் செய்திகள் நம்மை அடைந்து கொண்டிருந்தன. 

கவனித்துப் பார்த்தால் இதில் ஒரு சூட்சமம் இருக்கிறது. மோடி ஒரு வலுவான தலைவர் என்று சொல்லப்பட்ட அதே காலத்தில் காங்கிரஸ் பிரதமரின் பலவீனங்கள் வெளிப்படுத்தப்பட்டன. குஜராத்தில் ஊழல் இல்லை என்று சொல்லப்பட்ட அதே சமயத்தில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஊழல்கள் expose செய்யப்பட்டன. ஆக, ஒரு இடத்தை காலி செய்த படியே அந்த இடத்திற்கு அடுத்த தகுதியான ஆள் இவர்தான் என்று சுட்டுவிரல்கள் மோடியை நோக்கி நீட்டப்பட்டன. இது போன்ற ‘மோடியிஸ’ எண்ணங்கள் சாமானிய மக்களிடம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது.  ‘டீம் மோடியின்’ குறிக்கோளே சாமானிய மக்கள்தான். இந்த தேசத்திற்கு அடுத்த பிரதம வேட்பாளர் தான்தான் என்பது மோடிக்கும் அவரது குழுவுக்கும் வெகுகாலத்திற்கு முன்பே தெரிந்திருக்கிறது. தெளிவாக காய் நகர்த்திக் கொண்டிருந்தார்கள். மோடியின் மீது மக்களின் பார்வை விழத் துவங்கியது. இந்த எண்ணத்திற்குத்தான் தேர்தல் சமயத்தில் ‘மோடி அலை’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். 

சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும், பிரியங்காவுக்கும் இந்த ‘பிம்பம்- உருவாக்கம்’ தேவைப்படவில்லை. அவர்களுக்கு பின்னால்தான் ‘காந்தி’ ஒட்டியிருக்கிறார் அல்லவா? ஆனால் அந்தக் குடும்பத்தைத் தவிர இந்தியாவில் வேறு யார் தலையெடுக்க வேண்டுமானாலும் மிகக் கடுமையான பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. அந்த பிரயத்தனத்தை மிக நேர்த்தியாகவே மோடி அணியினர் செய்திருக்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பாக ஊடகங்கள் இவ்வளவு ‘ரீச்’ அடைந்திருக்கவில்லை. இன்று நிலைமை மாறியிருக்கிறது. தேசத்தின் பெரும்பாலான கிராமங்களில் செய்திச் சேனல்கள் தெரிகின்றன. பெரும்பாலான மக்களுக்கு பத்திரிக்கைகள் கிடைக்கின்றன. பல வருடங்களுக்கு முன்பு தமிழகத்தின் கிராமங்களில் தேசிய அரசியல் தலைவரின் பெயரைக் கேட்டால் காந்தி குடும்பத்தைத் தவிர வேறு எந்தப் பெயரையும் சொல்ல மாட்டார்கள். இன்றைக்கு அந்த நிலை இல்லை. கெஜ்ரிவாலின் பெயர் வரைக்கும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

கெஜ்ரிவாலின் நிலைமை வேறு. 2009 ஆம் ஆண்டுத் தேர்தலைப் போல காங்கிரஸ் கட்சிக்கு எதிரியாக எந்த பலமான தலைவரும் இல்லாத சூழல் இப்போது இருந்திருந்தால் காங்கிரஸ் கட்சியே கெஜ்ரிவாலை நசுக்கியிருக்கும். காங்கிரஸ் கடந்த சில ஆண்டுகளாக உறங்கிவிட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புவரை மோடி தனக்கு அச்சுறுத்தலாக வருவார் என்று அந்தக் கட்சி புரிந்து கொள்ளவேயில்லை. அவர்கள் தங்கள் வேலையில் கவனமாக இருந்தார்கள். திடீரென்று மோடி பெரிய உருவமாக வளர்ந்து நின்றார். காங்கிரஸால் எந்தவிதத்திலும் எதிர்க்க முடியாத உருவம் அது. நிலைமை கை மீறிவிட்ட பிறகு காங்கிரஸின் இப்போதைய தேவையெல்லாம் மோடி என்ற மனிதனுக்கு ஆப்பு வைக்கக் கூடிய ஒரு தலை. அந்தத் தலையாக கெஜ்ரிவாலைப் பார்க்கிறது. அதனால் சற்று ஒதுங்கி கொஞ்ச தூரம் ஓடிக் கொள்ளட்டும் என்று கெஜ்ரிவாலுக்கு வழிவிடுகிறார்கள். அவ்வளவுதான்.

தன்னை அடுத்த பிரதம் வேட்பாளராக உருவாக்கிக் கொண்ட மோடியால் தான் ஒரு அப்பழுக்கற்ற தலைவர் என்ற இமேஜை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை என்பதுதான் இன்றைக்கு மோடிக்கு இருக்கும் பிரச்சினை. 2001 இல் நிகழ்ந்த குஜராத் நிலநடுக்கத்தையும் அதன் பிறகு அந்த மாநிலத்தின் மாற்றங்களையும் மறைக்கும்படியான பூதமாக 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் எழுந்து நின்றது. அதற்கு பின் குஜராத்தில் பேசப்பட்ட அத்தனை திட்டங்களும் இந்தக் கலவரத்தின் நிழலுக்குள் பதுங்கி கொள்ளும்படியாக ஊடகவியலாளர்களும் மோடி எதிர்ப்பாளர்களும் பார்த்துக் கொண்டார்கள்.

மோடி ஒரு சிறந்த நிர்வாகி என்பதிலும், வலிமையான தலைவர் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. கொற்கை நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கிய தமிழ் எழுத்தாளர் ஜோ.டி.க்ரூஸ் இவற்றைத்தான் முன் வைக்கிறார். சாமானிய மக்களின் வலிகளைப் புரிந்து கொள்ளும் தலைவனாக மோடி இருப்பார் என்கிறார். தமிழக எழுத்தாளர்களில் மோடியை வெளிப்படையாக ஆதரித்தவர்களில் ஜோ.டி.க்ரூஸ்தான் முக்கியமானவர். கர்நாடகாவில் அனந்தமூர்த்தியும், க்ரிஷ் கர்னாட்டும் மோடியை எதிர்ப்பதை இங்கே பிரபலப்படுத்திக் கொண்டிருக்கும் ஊடகங்கள் ஜோ.டி.க்ரூஸ் ஆதரிப்பதை வெகு சுலபமாக இருட்டடிப்பு செய்துவிட்டன.

என்னதான் மோடியின் சில பாஸிட்டிவ் தகுதிகள் பேசப்பட்டாலும் அவரது மீதான கறையைத் தாண்டி இந்த திறன்கள் அவரைப் பிரதமராக்குமா என்று தெரியவில்லை. தன்னை இந்த தேசத்தின் அடுத்த தலைவராக பிம்பப்படுத்திக் கொள்ள அவருக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டன. எப்பொழுதும் பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளத்தான் பல ஆண்டுகள் தேவைப்படும். ஆனால் அதை அடித்து நொறுக்க சில மாதங்கள் போதுமானது. இப்பொழுது மோடி எதிர்ப்பாளர்கள் அதைத்தான் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். 

குஜராத் கலவரங்களோடு சேர்த்து எந்த வாய்ப்பு கிடைத்தாலும் மோடியின் தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசியாக அவரது வேட்பு மனுவில் அவரது மனைவியின் பெயரை வெளிப்படுத்தியது வரை குதறுகிறார்கள். வாக்காளர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள் என்று சொல்ல முடியாது. சிறு சலனம் கூட வாக்காளர்களின் முடிவை மாற்றிவிடக் கூடும். எனது வகுப்புத் தோழன் MD முடித்த மருத்துவர். இதுவரை மோடியின் பக்கமாக சாய்ந்திருந்தான். இந்த வார ஆனந்த விகடன் கட்டுரையை படித்துவிட்டு ‘யோசித்துக் கொண்டிருக்கிறேன்’ என்கிறான். தேர்தல்கள் முழுமையாக முடிந்து முடிவுகளைத் தெரிந்து கொள்ள இன்னமும் ஒரு மாத காலம் இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். 

இங்கு மோடிக்கு ஆதரவு என்றாலே மதவெறியனாகவும், பார்ப்பனியத்தைத் தூக்கிப்பிடிப்பவனாகவும் பார்ப்பது துரதிர்ஷ்டம். அறுபதாண்டு காலமாக இந்தியாவையும் தமிழகத்தையும் கூறு போட்டு விற்றவர்களை வெளிப்படையாக ஆதரிக்கிறார்கள். இதுவரையிலான தங்களது அத்தனை கொள்கைகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு அரசியல் ஆதாயங்களுக்காக எந்தச் சங்கடமும் இல்லாமல் கட்சி மேடையேறுகிறார்கள். தங்களை முற்போக்கு அறிவாளி என்றும், நடுநிலை ஊடகவியலாளர்கள் என்றும் சொல்லிக் கொள்பவர்கள் தயக்கமே இல்லாமல் ஊழல்வாதிகளுக்கு சார்பாக பேசுகிறார்கள். ஆனால் மோடிக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று சொல்பவனின் அத்தனை விவகாரங்களையும் தெரு வரை இழுத்துவிடுகிறார்கள். 

இங்கு எல்லா அரசியல்வாதிகளுமே அயோக்கியர்கள்தான். வாக்கு கேட்டு வரும் அத்தனை பேருமே அசிங்கம் பிடித்தவர்கள்தான். மோடியும் அரசியல்வாதிதான். மோடியும் வாக்குக் கேட்டு வருபவர்தான். மோடி வென்றாலும் தோற்றாலும் எனக்கு எந்த ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் காங்கிரஸ் தலைவர்களைவிடவும், போலி மதசார்பற்ற தலைவர்களைவிடவும் ஐந்தாண்டுகள் இந்த நாட்டை நிர்வகிக்கும் திறமை நிறைந்தவர் என்ற ஒரே நம்பிக்கையின் காரணமாக இப்பொழுதும் நான் மோடிக்கு ஆதரவாகத்தான் இருக்கிறேன். மோடியை இவர்கள் தோற்கடித்தாலும் பரவாயில்லை. ஒரு ஸ்திரமான அரசுக்கு வழிவிட்டால் போதும் என விரும்புகிறேன். ஆனால் என்ன நடக்கும் என்று உறுதியாகக் கணிக்க முடியவில்லை.

30 எதிர் சப்தங்கள்:

இரா திலீபன் said...

//குஜராத்தில் பேசப்பட்ட அத்தனை திட்டங்களும் இந்தக் கலவரத்தின் நிழலுக்குள் பதுங்கி கொள்ளும்படியாக ஊடகவியலாளர்களும் மோடி எதிர்ப்பாளர்களும் பார்த்துக் கொண்டார்கள்.
மோடி ஒரு சிறந்த நிர்வாகி என்பதிலும், வலிமையான தலைவர் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை.//

யார் எப்படியோ.... நான் உங்கள பார்ப்பன இந்து வெறியன் அப்டினெல்லாம் சொல்லல... மோடி ஒண்ணும் பண்ணல அப்டிங்கரதுதான் விஷயம். இந்த நாட்டுல அதானி,அம்பானி,டாடா மட்டும் குடிமக்கள் இல்ல நாமளும் இருக்கோம்.
கடைசியா ஒண்ணு அரசியல்ல ஒரு தனி நபரை பார்த்து எந்த முடிவும் முடிவு பண்ண முடியாது அவரை கட்சி சார்ந்துதான் பார்க்க முடியும்ங்கறத கொஞ்சம் யோசிங்க... அவங்க தேர்தல் அறிக்கையை பார்த்துமா நம்புறீங்க.....?



//போலி மதசார்பற்ற தலைவர்களைவிடவும் ஐந்தாண்டுகள் இந்த நாட்டை நிர்வகிக்கும் திறமை நிறைந்தவர் என்ற ஒரே நம்பிக்கையின் காரணமாக இப்பொழுதும் நான் மோடிக்கு ஆதரவாகத்தான் இருக்கிறேன்.//


அப்புறம் இதுக்கு மேல நான் எதுவும் பேசல ப்ரோ உண்மையிலேயே உங்க கிட்ட என்னால முடியல. ஆட்சிக்கு ஒரு வேளை வந்தால் அவரால ஒரு மயிரையும் புடுங்க முடியாது சீரழிவு அதிகம் ஆகத்தான் போகுது. அப்படி ஆனால் அதை நியாயப்படுத்தும் தார்மீக கடமைக்கு தயாராகிக்கொள்ளுங்கள்.

Anonymous said...

ஜெர்மன் குடிமக்கள் ஹிட்லரை ஆதரிக்க அவரின் ஆளுமையையும், நிர்வாக திறமையையும் காரணமாக சொல்லப்பட்டதை நினைவு கூர்கிறேன்.

மோடியின் மீது சுமத்தப்படும் குற்றங்கள் பொய்யாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அவரை ஆதரிப்பதை தவறுறென கருத முடியாது ஆனால் அவர் மீது சுமத்தப்படும் குற்றங்களை உண்மையாக இருந்தாலும் அவரின் மற்ற திறமைகளுக்காக ஆதரிப்பது சரியாக இருக்குமா என புரியவில்லை.

Vaa.Manikandan said...

நன்றி திலீபன். சீரழிவு இருந்தால் நியாயப்படுத்த மாட்டேன். இப்போதைக்கு நம்புகிறேன். நல்லது நடக்கும் என நம்புகிறேன். இப்போதைய சீரழிவு இருக்காது என நினைக்கிறேன். ஒருவேளை எதிர்மறையாக நடந்தால் அதையும் வெளிப்படையாகவே எதிர்ப்பேன். நம்மால் முடிந்தது அதுதானே?

kailash said...

Problem here is he is portraying himself as a holy cow and rest as pigs . When others criticize him he couldn't tolerate , think if rahul has lied his marital status . Everyone talks about Gujarat Model but no one is ready to explain the Gujarat Model . Achievements need evidence , CAG which complained about 2g Spectrum allocation also tabled the Gujarat Govts audit report in
State assembly and highlighted these points . These are fact findings by CAG and not allegations by any party . He is reluctant to appoint chairman for Lok Ayukta committee in the fear that his govt/ministers might be exposed . Still I am wondering how modi is being called as an efficient administrator , I agree he is not corrupted but he is power hungry and autocratic politician who likes one man show .

1. Poor Debt Mgmt : The state government had taken a loan of Rs 15,083 crore to adjust the monetary deficit of Rs 11,027 crore, leaving a balance of Rs 3,645 crore, which is poor debt management, said CAG.

2. ROI : In the last five years, the average return on this investment was 0.25% while the state government has paid interest at the rate of 7.75%.

3. Spending on Education and Health : Compared to Other states Gujarat Spends less

4. Wide variation under every major head of account - many allocated funds were not used

Ponkumar said...

http://en.wikipedia.org/wiki/Godwin's_law

Godwin's law (or Godwin's Rule of Nazi Analogies)[1][2] is an Internet adage asserting that "As an online discussion grows longer, the probability of a comparison involving Nazis or Hitler approaches 1" [2][3]—​ that is, if an online discussion (regardless of topic or scope) goes on long enough, sooner or later someone will compare someone or something to Hitler or Nazism.

எம்.ஞானசேகரன் said...

சபாஷ்! வெளிப்படையான, தீர்க்கமான முடிவு!

Santhanam said...

Modi represents a Hardcore Hindutva like Advani. If you see the some supporters of Modi (Very Hardcore Hindutva), you won't support Modi.

BalajiS said...

If one that too an MD Doctor, changes his political opinion about a Gujarat Leader after ananda vikatan, I pity his political awareness about the country.

Ask him to read

http://othisaivu.wordpress.com/ - loads of articles about

http://www.manushi.in/articles.php?articleId=1758 - Article about relationship between Modi and Muslims between September 2001 and before Godhra riots - Truth and nothing but the truth.

www.mediacrooks.com

I request others also about the read.

To answer about Kailash's question about debt/spending on education and health care/

Governance is about problem solving. Its not about spending.

Gujarat has got 24x7 power. Good roads. People need not quit agriculture seeking jobs to urban areas in Gujarat.
Modi govt has created 1 lakh check dams, yes its true one lakh small check dams for the purpose of agriculture.
Its the only state where cataract surgery is performed on cattle.
75% of water consumtption is surface water and not ground water. Govt worked to a specific plan and created a water grid.

When central govt wants to spend money only for specific community and insists the state govt to do that how can one state govt have the freedom to plan on education and health sectors?

Narmada dam started in 1961 and completed in 21st century.

Dont question a govt on statistics. Statistics can not be felt be common people.
Question the problems solved/tackled/eradicated by a government.

When Modi came for investor conference to TN few years ago, people wanted to invest in education sector in Gujarat.
Modi strictly said, education can not be commercialized and put a full stop.

Look at the state of affairs in TN. all the politicians run schools/polytechnics/arts/engg/medical/dental colleges.




radhakrishnan said...

அருமையான பதிவு.பல்லாண்டுகால பூதாகாரமான தவறுகளைச் செய்த காங்கிரஸை க் கண்டுஒள்ளாமல் அதற்கு
மாற்றாக உருவெடுக்க முனையும் கட்சியை நசுக்க என்ன ஆட்டம் ஆடுகிறார்கள்? திமுக போய் அதிமுக, மறுபடி
திமுக என்று மாறி மாறி வருவதால்தான் அவற்றிற்கு ஒருபயமாவது இருக்கிறது.இதேபோல்தான் மத்தியிலும்
சரிப்படவில்லையென்றால் 5 ஆண்டுகளில் அல்லது அதற்குள் மாற்ற முடியாதா? சும்மா பூச்சாண்டி காட்டினால்
மக்கள் பயப்படும் அளவு இப்போது மக்கள் மடையர்கள் அல்ல இவர்கள் நினைப்பது போல். ஜனநாயகத்தை மதிக்கத் தெரியவில்லையே பலருக்கு. அருமையான அலசல் வாழ்த்துக்கள் மணி.

சி. சரவணகார்த்திகேயன் said...

தொடர்புடைய சில தவிர்க்கவியலாத கேள்விகள்:

1) 2002 குஜராத் கலவரங்களில் நேரடித் தொடர்புண்டு. அதை மறுக்கிறீர்களா அல்லது மறக்கிறீர்களா? மறுக்கிறீர்கள் எனில் ஓர் எழுத்தாளராய் எப்படி சாத்தியம்? மறக்கிறீர்கள் எனில் ஈராயிரம் சிறுபான்மை இன உயிர்களும் சில நூறு பாலியல் வல்லுறவுகளும் அத்தனை அற்பமான சங்கதிகளா?
2) அதே போல் மீண்டும் மோடி நடத்தினால்? ஒருவேளை அப்படி நேரடியான படுகொலைகள் நடக்காவிடிலும் சிறுபான்மையினர் மோடியின் ஆட்சியில் பல வழிகளில் பழி வாங்கப்பட வாய்ப்புண்டு. அப்படி நடக்காது என நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? எனில் அதற்கான அடிப்படை என்ன?
3) //மோடி ஒரு சிறந்த நிர்வாகி என்பதிலும், வலிமையான தலைவர் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை.// - இதை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? இதற்கான தரவுகள் உண்டா? அதாவது இந்தியாவின் எந்த சமகால முதல்வரை விடவும் அவரே சிறந்த நிர்வாகி என்பதற்கான ஆதாரம் என்ன?
4) பிஜேபி தன் தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில், பொது சிவில் சட்டம், அரசியல் சாசனத்தில் 370வது பிரிவை நீக்குதல், பசு வதை தடுப்பு என சிறுபான்மையினருக்கு எதிரான விஷயங்களை முன்வைத்திருக்கிறார்கள். மோடி ஏன் இதை எல்லாம் எதிர்க்கவில்லை என நினைக்கிறீர்கள்?
5) மோடியை அவரது கலவரத் தொடர்பு தெரிந்தும், பிஜேபியை அதன் தொடரும் இந்துத்துவம் தெரிந்தும் ஆதரிப்பவர்களை இந்து வெறியர் என்று அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது? தெரியாதவர் தெரிந்து கொண்டு தானே ஆதரிக்க வேண்டும்? அதுவரை அவரையும் பழி சூழத்தானே செய்யும்?

இயன்றால் இவற்றுக்கு விரிவாக விடையளிக்கவும்.

நீண்ட ஆய்வு மற்றும் நாடு முழுக்க மக்களிடையே எடுக்கப்பட்ட பல ரகசிய கருத்துக் கணிப்புகளுக்குப் பின் தான் பிஜேபி சிறுபான்மையினருக்கு எதிரான விஷயங்களைத் தைரியமாக தன் தேர்தல் அறிக்கையில் சேர்த்திருக்கிறது என்பது என் கருதுகோள். அதாவது இதை எல்லாம் சொன்னால் இந்துக்களிடம் ஓட்டு விழும் என்பது அவர்களின் தர்க்கரீதியான முடிவு (கவனிக்கவும், இது வெறும் நம்பிக்கை அல்ல). உண்மையில் இதற்கு பிஜேபியை விட, அப்படி இருப்பவர்களையே குற்றம் சொல்ல முடியும். இதனால் தான் அவர்களை இந்து வெறியர்கள் என அழைக்க வேண்டியதாகிறது. என் சமீப அனுபவங்களில் மற்றும் பிறர் அனுபவங்களைக் கேட்டதில் நம்மைச் சுற்றி நம்மை அறியாமலே ரகசிய இந்து வெறியர்கள் நிறைந்திருக்கிறார்கள் என்பதே என் புரிதல்.

தொடர்புடைய என் கட்டுரை: http://www.tamilpaper.net/?p=8702 & http://www.tamilpaper.net/?p=8705

Unknown said...

//1) 2002 குஜராத் கலவரங்களில் நேரடித் தொடர்புண்டு. அதை மறுக்கிறீர்களா அல்லது மறக்கிறீர்களா? மறுக்கிறீர்கள் எனில் ஓர் எழுத்தாளராய் எப்படி சாத்தியம்? மறக்கிறீர்கள் எனில் ஈராயிரம் சிறுபான்மை இன உயிர்களும் சில நூறு பாலியல் வல்லுறவுகளும் அத்தனை அற்பமான சங்கதிகளா?//
2000 பேரின் உயிர் பறிக்கப்பட்ட சோகமான நிகழ்வு பற்றிமட்டும் பேசும் எல்லோரும் அதற்குக் காரணமான, சிலர் 60 பேரை எரித்துக் கொன்ற நிகழ்வு பற்றி ஏன் வாயைத் திறப்பதில்லை.

//2) அதே போல் மீண்டும் மோடி நடத்தினால்? ஒருவேளை அப்படி நேரடியான படுகொலைகள் நடக்காவிடிலும் சிறுபான்மையினர் மோடியின் ஆட்சியில் பல வழிகளில் பழி வாங்கப்பட வாய்ப்புண்டு. அப்படி நடக்காது என நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? எனில் அதற்கான அடிப்படை என்ன?//
அதுவரை மதத்தின் பெயரால் அரசைப் பணியவைத்து வந்த வாய்ப்பு நழுவிப் போய்விடும் என்கிற சிறுபான்மையினரின் பயம்தான் காரணம்.

சி. சரவணகார்த்திகேயன் said...

@K Gopaalan

//ஏன் வாயைத் திறப்பதில்லை.// மேலே தந்திருக்கும் என் கட்டுரையில் அதற்கு பதில் இருக்கிறது.

சனா குனா said...

பிஜேபி தன் தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில், பொது சிவில் சட்டம், அரசியல் சாசனத்தில் 370வது பிரிவை நீக்குதல், பசு வதை தடுப்பு என சிறுபான்மையினருக்கு எதிரான விஷயங்களை முன்வைத்திருக்கிறார்கள். மோடி ஏன் இதை எல்லாம் எதிர்க்கவில்லை என நினைக்கிறீர்கள்?//

காஷ்மீர் விவகாரம் பல வருடங்களாக பிரச்சினையாக இருப்பதற்குக் காரணம் 370வது பிரிவு தான், அது எப்படி சிறுபான்மையினருக்கு எதிரானதாக சொல்ல முடியும்?

உச்சநீதிமன்றம் மோடியை குற்றமற்றவர் என்று கூறிய பிறகும் அவரை அதில் சேர்ப்பது எந்த விதமான தந்திரம்?

குஜராத் கலவரத்தில் சிறுபான்மையினர் மட்டுமே கொல்லப்பட்டார்கள் என்பது ஒரு சார்பு நிலை இல்லையா? கலவரத்துக்குக் காரணம் இரண்டு சமுதாயத்தினருமே தான். பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டிய பிரச்சினை இது.

ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயர்களும், அதன் பின்னர் ஊடகங்களும் போலி மதசார்பின்மைவாதிகளும் இதை மிகப் பெரிய பிரச்சினையாக்கி அதன் மூலம் குளிர் காய்கிறார்கள்.

அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என்று கூறுபவர்கள் ஏன் பொது சிவில் சட்டம் என்று கூறும் போது மட்டும் பொங்குவது ஏன்?

பி ஜே பி தன்னுடைய கொள்கையாக இந்துத்வாவை கொண்டிருக்கிறது, நாட்டில் சிறுபான்மையினருக்காக பல கட்சிகள் இருக்கும் போது பெரும்பான்மையினருக்கு ஒரு கட்சி இருப்பதில் என்ன தவறு?

”தளிர் சுரேஷ்” said...

நல்ல அலசல் கட்டுரை! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சி. சரவணகார்த்திகேயன் said...

@saravanan kumar

//உச்சநீதிமன்றம் மோடியை குற்றமற்றவர் என்று கூறிய பிறகும்.// இதற்கும் கட்டுரையிலேயே பதில் உள்ளது.

மற்ற கருத்துக்கள் யாவும் மேலோட்டமான பொதுப்புத்தியிலிருந்து கிளைத்தவை. பொருட்படுத்த ஏதுமில்லை. நன்றி.

Vaa.Manikandan said...

1) 2002 குஜராத் கலவரங்களில் நேரடித் தொடர்புண்டு. அதை மறுக்கிறீர்களா அல்லது மறக்கிறீர்களா? மறுக்கிறீர்கள் எனில் ஓர் எழுத்தாளராய் எப்படி சாத்தியம்? மறக்கிறீர்கள் எனில் ஈராயிரம் சிறுபான்மை இன உயிர்களும் சில நூறு பாலியல் வல்லுறவுகளும் அத்தனை அற்பமான சங்கதிகளா?

இது எனக்கு குழப்பமாக இருக்கிறது. குஜராத்தில் கலவரம் நடந்தது உண்மை. ஆயிரக்கணக்காணோர் கொல்லப்பட்டதும் உண்மை. கலவரத்தை மோடி தடுக்கவில்லை என்றும், அவர்தான் தூண்டிவிட்டார் என்பதற்கும் தரவுகளாக இருக்கும் கட்டுரைகளைப் போலவே, மோடி கலவரங்களைத் தடுத்தார் என்றும் குஜராத் அரசின் திறமையால்தான் கலவரங்கள் ஒடுக்கப்பட்டன என்றும் கட்டுரைகளை வாசித்தேன். நீங்கள் எப்படி மோடி கலவரங்களோடு நேரடித் தொடர்புடையவர் என்று நம்புகிறீர்களோ, அதே போல மோடிக்கு நேரடித் தொடர்பு இல்லை என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். என்னால் இதில் எந்தவித முடிவுக்கும் ஸ்திரமாக வர முடியவில்லை என்பதுதான் உண்மை. 2002 க்கு பிறகு பன்னிரெண்டு வருடங்கள் குஜராத்தில் வேறு மதக்கலவரங்கள் உருவாக்கப்படவில்லை என்பதுதான் மோடிக்கான credibility என்று நினைக்கிறேன்.

2) அதே போல் மீண்டும் மோடி நடத்தினால்? ஒருவேளை அப்படி நேரடியான படுகொலைகள் நடக்காவிடிலும் சிறுபான்மையினர் மோடியின் ஆட்சியில் பல வழிகளில் பழி வாங்கப்பட வாய்ப்புண்டு. அப்படி நடக்காது என நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? எனில் அதற்கான அடிப்படை என்ன?

இது ஒரு ஹைப்போகிரெடிக்கான கேள்வி. இன்னொரு சீக்கிய கலவரத்தைக் காங்கிரஸ் அரசு நடத்தினால்? இன்னொரு தோல்வியடைந்த ஐந்தாண்டுகளை மூன்றாம் அணி அமைத்தால் என்று கேட்டுக் கொண்டே போகலாம். மோடியை இப்போதைக்கு நம்புகிறேன். தேசத்தில் கலவரங்களை கட்டவிழ்த்துவிடும் அளவிற்கு நமது அரசியல் சாசனங்களும், அமைப்பு முறைகளும் இல்லை என்று நம்புகிறேன். மேலும், மோடி பிரதமரானால் திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடக்கும் தமிழ்நாட்டில் கலவரம் நடக்கும் என்பதும், காங்கிரஸ் ஆட்சி நடத்து கர்நாடகாவில் மைனாரிட்டிகள் தாக்கப்படுவார்கள் என்பதெல்லாம் அதீத கற்பனை. ஒருவேளை, அப்படி நடக்குமானால் இப்பொழுது மோடியை ஆதரிப்பதைவிட பன்மடங்கு எதிர்ப்பேன். அவ்வளவுதான் இன்றும் செய்யமுடியும், நாளையும் என்னால் செய்ய முடியும்.

3) //மோடி ஒரு சிறந்த நிர்வாகி என்பதிலும், வலிமையான தலைவர் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை.// - இதை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? இதற்கான தரவுகள் உண்டா? அதாவது இந்தியாவின் எந்த சமகால முதல்வரை விடவும் அவரே சிறந்த நிர்வாகி என்பதற்கான ஆதாரம் என்ன?

எந்தத் தரவுகள் நம்புபடி இருக்கின்றன? உண்மையில் அதுதான் பெரிய குழப்பமாக இருக்கிறது. மோடிக்கு ஆதரவான தரவுகளை முழுமையாக மறுத்து மோடிக்கு எதிரான தரவுகள் வந்து கொண்டிருக்கின்றன. மோடியை அடிக்கும் எல்லாத் தரவுகளைத் தாக்கியும் தரவுகள் வந்து கொண்டிருக்கின்றன. எந்தப் புள்ளிவிவரத்தையும் என்னால் முடியவில்லை. 2001 ஆம் ஆண்டு நிலநடுக்கத்தில் சிதைக்கபட்ட குஜராத்தின் பகுதிகளை 2010 ஆம் ஆண்டு வாக்கில் நேரடியாக பார்த்திருக்கிறேன் என்ற அடிப்படையிலும், தொடர்ச்சியாக மூன்று முறை முதல்வராகத் தேர்ந்தெடுத்த குஜராத் மக்களின் மீதான நம்பிக்கையிலும் உருவாகி வந்த எண்ணம்தான். இது பொதுப்புத்தியில் இருந்து வந்த எண்ணம் என்று ஒதுக்கிவிடலாம்தான். ஆனால் ராகுலைவிடவும், மன்மோகனைவிடவும், கெஜ்ரிவாலைவிடவும் நிர்வகிக்கும் திறன் வாய்ந்தவர் என்பதை மோடி குஜராத்தில் நிரூபித்திருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன்.

4) பிஜேபி தன் தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில், பொது சிவில் சட்டம், அரசியல் சாசனத்தில் 370வது பிரிவை நீக்குதல், பசு வதை தடுப்பு என சிறுபான்மையினருக்கு எதிரான விஷயங்களை முன்வைத்திருக்கிறார்கள். மோடி ஏன் இதை எல்லாம் எதிர்க்கவில்லை என நினைக்கிறீர்கள்?

இதை மோடி எதிர்க்க வாய்ப்பே இல்லை. அதே ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் ஊறி வளர்ந்தவர்தான் மோடி.

5) மோடியை அவரது கலவரத் தொடர்பு தெரிந்தும், பிஜேபியை அதன் தொடரும் இந்துத்துவம் தெரிந்தும் ஆதரிப்பவர்களை இந்து வெறியர் என்று அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது? தெரியாதவர் தெரிந்து கொண்டு தானே ஆதரிக்க வேண்டும்? அதுவரை அவரையும் பழி சூழத்தானே செய்யும்?

இன்றைய பிரதம வேட்பாளர்களில் மோடியை ஆதரிப்பதுதான் சிறந்த ஆப்ஷன் என்றுதான் கூறியிருக்கிறேன். மற்றபடி, இந்து வெறியன் என்பதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதனை தொடர்ந்து வாசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்- இசுலாமிய, கிறித்துவ நண்பர்கள் உட்பட.

Paramasivam said...

மிக நன்றாக எழுதி உள்ளீர்கள். நானும் மாற்றத்தை விரும்புகிறேன். கடந்த மூன்று வருடங்களாக வெளிப்பட்ட ஊழல்கள், நாட்டை பற்றி கவலைப்படாத ஆளும் கட்சி, அந்த குடும்பத்தில் பிறந்த காரணத்துக்காகவே ஒருவரை திடீரென முன்னிறுத்துவது எனக்கு பிடிக்கவில்லை. M.J.Akbarம், நீங்கள் கூறிய Joe De Cruzeம் கூறுவது போல், நாம் நடக்க இருப்பதை நோக்கி முன்னேற வேண்டும். ஒரு மாநிலத்தில் ஒருவர் மூன்று முறை தேர்ந்து எடுக்கப் பட்டால், மத்தியில் உள்ள பலம் வாய்ந்த அவர் எதிரியால் ஒரு தப்பும் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால், அவருக்கு நாம் ஒரு வாய்ப்பு நிச்சயம் கொடுப்பது தான் சரி. இல்லை எனில், திரும்ப ஊழல்கள் வரிசை தான். நாம் என்ன அடிமை சாசனம் அக்குடும்பத்திற்கு எழுதி கொடுத்தது உள்ளோமா?

Paramasivam said...

ஆம். மோதி தான் சிறந்த ஆப்ஷன். நானும் ஒத்துக் கொள்கிறேன்.

Paramasivam said...

கலவரத்தில் இறந்தது ஈராயிரம் இல்லை. ஓராயிரத்திற்கு கீழ். சரி பார்க்கவும்.

Muthu said...

ஸ்திரமான அரசு என்ற எதிர்ப்பார்ப்பு சாமானிய மனிதனுக்கு எந்த நன்மையும் செய்ய போவதிலலை. நீங்கள் எதிர்ப்பார்ப்பது ஒரு அப்பர் மிடில் கிளாஸ் எதிர்ப்பார்ப்பு. ஒரு கவிஞர் ஒரு சாதாரண அப்பர் மிடில் கிளாஸ் திங்கிங்கில் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மோடியின் கார்ப்பரெட் தீவிரவாதம் அவருடைய மதவாதத்தைவிட அதிபயங்கரமானது....

அதிகம் சொல்ல ஓன்றுமில்லை. உங்கள் எதிர்ப்பார்ப்பு நிகழ வாழ்த்துக்கள். ஏறகனவே சொன்னபடி அத்தனை ஊடகங்களும் வாங்கப்பட்டாயிற்று. இப்போது கேள்வி 272 ஆ அல்லது 300 ஆ என்பதுதான்...

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போக!

kailash said...

/Governance is about problem solving. Its not about spending. /

Governance also means fiscal responsibility . I appreciate Modi Govt wrt water and power management but in other areas he lags a lot .

1. I am not talking about the statistics , its the fact . Its not about commercialisation of education , iam talking about the higher drop out rates in gujarat schools which is a worry some factor in longer term . Its because of Kamaraj Govts efforts towards primary education, TN stood tall later. Any govt. should give top priority to education and health care . In any govts ministry list i eagerly notice the education ministers name and all lists disappoints me except Thangam Thennarasu who put lot of efforts to improve govt schools .

2. Central Govt wont allocate funds just like that , State has to submit their proposal to Planning Commission and discuss ( fight ) with them . After PC's ( not chidambaram) recommendation central govt allocates fund , in fact Modi and Jaya made a huge cry that Central is not allocating enough funds to oppn. ruled states . If Central govt has allocated a fund w/o approval/knowledge of State then state should have returned that unutilised fund and they should not use it to balance their budgets .


BJP/Modi Supporters never answer these two questions

1. Why Gujarat govt. dint select chairman for Lok Ayukta or in other words dint supported Lok Ayukta ?

2. When it comes to yeddy in KN he is mass leader and if its SP Chavan he is tainted . This is like Enakkuna Thakkali Chutney unakkuna Rathama



/Gujarat has got 24x7 power. Good roads. People need not quit agriculture seeking jobs to urban areas in Gujarat./

When Tata went to gujarat for nano all fertile lands were sold to Tata , only diff is farmers got premium price for their lands . You are correct they dint moved to urban areas but their farm lands were changed as factory and till today no one knows whats there in that agreement ? I call it as lack of transparency you call it as elimination of red tapes .

krishnamoorthy s p said...

அருமையான கட்டுரை.

agniashok said...

நல்ல கட்டுரை எனக்கு தயவு செய்து யாராவது விளக்குவீர்களா? மதசார்புன்னா என்னா? மதசார்பற்றன்னா என்னா? ஏன்னா இங்க மதசார்புன்னா ஹிந்து மதம் பற்றி யாராவது பேசினால், மதசர்பற்றன்னா ஹிந்துக்கள திட்டி மட்டம் தட்றதுதான். பிற மதத்தை உயர்வா பேசுறதுதான் அப்படி போயிட்டு இருக்கு

DHAKSHNA said...

நமக்கு ஸ்திரமான அரசை விட நல்லரசு தான் வேண்டும். கடந்த 10 ஆண்டுகள் ஸ்திரமான ஆட்சி இருந்தும் ஆட்சியாளர்கள் சரியில்லாததால் வந்த வினை இது. காங்கிரஸ்க்கு ஏற்பட்ட நிலைமை இவர்களுக்கும் வரலாம். எல்லா அரசியல் கட்சியும் ஊழல் நிறைந்ததே. எப்போதும் நமக்கு நல்லாட்சி கிடைக்காது என்பதில் எள்ளலவும் சந்தேகம் வேண்டாம்.

பாலு said...

First of all I hate all these so called pseudo secularists.. Secularism means real secularism.. What these nadunilai vyaadhis practise is hindu secularism.. I am not a hardcore RSS pracharak or something like that.. But these FIGHTERS who fight for the minorities go little overboard and they cannot tolerate this article.. This article is just an embodiment of common man's thoughts.. Nothing more and nothing less. Democracy is a trial and error method only. It does not have an ISI or Agmark stamp on somebody. You have tried someone for the last 60 long years and it is time for someone else. Modi is also not a Magician.. Being in power is more complicated than sitting outside and raising slogans.. Kejriwal easily chose the latter..

Unknown said...

A courageous and decent article which expresses the heart beat of common man... True Secularist...

BalajiS said...

Fiscal responsibility is a term used by MBAs/CAs and harvard educated finance ministers. I dont care about fiscal responsibility.

Govt first provide power/water/roads/peace. create an free and fair environment for people to THRIVE on their own.
Remember Power grid/Water grid / Road Grid / Railway Grid /Primary Education Centres/Technical Institutes- are one time investment for a country. You need to build nation first.
USA built this just after 2nd world war.

Once you build this the country will thrive on its own. It will propel growth and will take care of fiscal responsibility after a decade or so.

You dont question anybody for taking 40 years to build a dam. and you talk about fiscal responsibility?


USA has huge huge debt. But it provides basic amenities to its citizens and protects its citizens.

So dont show your finance knowledge here.


1. About education - Guarathi's are business minded people. They dont worry about education. If they can find a way to earn
money, they quit schooling and do business. Each state has its own character.

And you stupidly and conveniently compare period of 1954-63 Kamaraj's rule with 2001-2013 Modi rule.
You should compare the same with the congress rule of Gujrat between 1960-1995.
Your comparison is wrong and motivated.

Can you list the reasons for drop outs in Gujarat?

Just ask yourself a question again, why after 45 years after independence, only thangam thennarasu has to put lot of efforts to improve govt schools? What were the education ministers doing before that?

BalajiS said...

Dear Kailash,

But one think I am very happy about your comment is that You could not find /mention any other contemporary politician to compare with Modi. You had to go back 50 years and mentioned only Kamaraj.

You are right. Kamaraj was the only and one and only people's chief Minister. He understood people's problems and found pragmatic solutions for many.

He drove bureacracy towards solutions based governance rather than schemes/doles based government.

When central govt people were saying that theres no place in Tamil Nadu for a BHEL factory, he asked the requirements and identified Trichy as the right place. Otherwise we would not have got BHEL.

When a business man (I think soundiraraja group) wanted to open a textile mill near Dindigul and came for permission, kamaraj told that the the factory should bear the cost of electrication of 60 odd(not sure) kms from dindigul to that factory. This way Kamaraj made the factory owner pay for electrication and got all the villages in between electricity.

He along with C Subramanyam and R Venkantraman are the root cause for what tamil nadu is today.

Like that Modi is a very very pragmatic "governor". He would find out of the box solutions for the problems.



kumudini said...

உங்களை போன்ற போலி நடுநிலைவாதிகளின் தலையில் இடி விழ

Unknown said...

Innocents were killed even in Congress reign after INDIRA GANDHI assassination... please have a look at this copy paste from Wikipedia... Following her cremation, millions of Sikhs were displaced and nearly three thousand were killed in anti-Sikh riots. Rajiv Gandhi on a live TV show said of the carnage, "When a big tree falls, the earth shakes"