Jul 17, 2012

ஓவியம்: என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி




"என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி" கவிதைத் தொகுப்பில் இடம்பெறவிருக்கும் கவிதைகளைப் பற்றி ஓரிரு மாதங்களுக்கு முன்பாக ஓவியர் ஞானப்பிரகாசம் ஸ்தபதியுடன் பேசிக் கொண்டிருந்ததேன்.

“உங்கள் தொகுப்பிற்கான அட்டைப்பட ஓவியத்தை நான் வரைஞ்சு தரட்டுமா நண்பா” என்றார். 

உள்ளூர மிகுந்த சந்தோஷமாக இருந்தது. ஆனால் அவரின் வேலைகளுக்கு குறுக்கீடாக இருக்குமோ என்பதற்காக தயங்கினேன். அதெல்லாம் ஒன்றும் பிரச்சினையில்லை என்றார். 

கவிதைகளை மொத்தமாக அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்தேன். அட்டைப்படத்திற்கான ஓவியத்தை ஞானப்பிரகாசம் தருவதாகச் சொல்லியிருக்கிறார் என காலச்சுவடு பதிப்பகத்திற்கு தகவல் தந்திருந்தேன். பதிப்பகத்திலிருந்து எந்த அவசரப்படுத்தலும் இல்லை. ஞானத்திற்கு நான் நினைவூட்டல் செய்ததாக கூட நினைவில் இல்லை. தனது பயணங்கள், ஏற்கனவே ஒத்துக் கொண்ட ஓவிய வேலைகளுக்கும் இடையில் தொகுப்பிற்காக அற்புதமான ஓவியத்தை அனுப்பி சந்தோஷம் கொள்ளச் செய்திருக்கிறார். 

கவிதைகளில் சொல்லாமல் விட்டுப்போன ஆயிரம் செய்திகளை இந்த ஓவியம் பேசுகிறது என்றுதான் தோன்றுகிறது. 

ஞானப்பிரகாசத்திற்கு நன்றி கலந்த அன்பு. (அவரது அலைபேசி எண்: 9944011944)

தொகுப்பிற்கான அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் தொகுப்பு வெளியாகும். காலச்சுவடு பதிப்பகம் வெளியிடவிருக்கிறது.

எனது பெரும்பாலான எழுத்து நிசப்தம்.காம் தளத்தின் வழியாகத்தான் வெளிப்படுகிறது. இத்தளத்தினூடாக எதிர்கொள்ளும் உங்கள் விமர்சனங்களும் பாராட்டுகளுமே என்னை உற்சாகமாக இயங்கச் செய்து கொண்டிருக்கின்றன. உங்கள் அனைவருக்கும் எனது பிரியமான அன்பும் நெகிழ்வான நன்றிகளும்.

4 எதிர் சப்தங்கள்:

ஜீவ கரிகாலன் said...

vaazhthugal sir

Radha N said...

really nice art.

nagu
www.tngovernmentjobs.in

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள்.

Unknown said...

Good One MK.