Dec 22, 2009

ஒரு பெயர் வேண்டும்

பத்து பதினைந்து நாட்களாக குழந்தைக்கான பெயருக்காக இணையதளங்களை மேய்ந்து கொண்டிருக்கிறேன். முதலில் இந்தத் தேடல் இத்தனை கடினமானதாக இருக்கும் என்று நினைக்கவில்லை.

இந்த தேடலின் சிக்கலே நமக்கே தெரியாமல் விதிகள் உருவாக்கப்படுவதுதான். புதிய விதிகள் மெளனமாக நுழைவதும் சில பழைய விதிகள் தளர்த்தப்படுவதும் தொடர்ந்து அரங்கேறுகிறது.

தேர்ந்தெடுக்கும் பெயர் நான், மனைவி என்ற முதல் தலைமுறையில் தொடங்கி, அம்மா அப்பா என்ற இரண்டாம் தலைமுறை, அப்பச்சி அமத்தா என்ற மூன்றாம் தலைமுறை வரைக்கும் பிடித்தமானதாக இருக்க வேண்டும் என்பது முதல் விதி.

இருபது வருடங்களுக்கு பிறகு 'உங்களுக்கு வேறு பெயரே தோன்றவில்லையா?" என்று மகன் கேட்கக் கூடாது என்பது இரண்டாவது விதி.

இவ்வாறான சில அடிப்படையான விதிகளோடு பெயர்களுடனான விளையாட்டை இரவில் கணிணியில் தொடர்கிறேன்.

குறிப்பிட்ட பெயர்களே திரும்ப திரும்ப வேறு வேறு தளங்களில் இருக்கின்றன. சில தமிழ் பிரியர்களின்(வெறியர்கள்?) தமிழ் மோகம் எரிச்சல் உண்டாக்குகிறது. தமிழ் படுத்துகிறேன் என்ற பெயரில் பல பெயர்களை குதறி எடுத்திருக்கிறார்கள்.

முடிந்தவரை வடமொழி எழுத்துக்கள் இல்லாமல் பெயர் கிடைத்தால் பரவாயில்லை என்பது 2() விதி. இவை தவிர்த்து நானாக உருவாக்கி வைத்திருக்கும் விதிகள் பின்பருபவை.

1. ஊரில் எந்த முதியவரும் சிக்கலில்லாமல் அந்தப் பெயரை உச்சரிக்க வேண்டும்.

2. ''கரம் இருந்தால் ஆங்கிலத்தில் எழுதுவது சிரமம் என்பதால் அவற்றை தவிர்க்க விரும்புகிறேன்.

3. வேற்று மொழிக்காரர்கள் பெயரை சிதைக்கக் கூடாது.

4. 'ன்' விகுதி வேண்டாம்.

5. Permutatian and combination க்குதயார்.


இத்தனை விதிகளில் ஒன்றிரண்டு மீறப்படலாம். விருப்பமான பெயர் அமையாமல் போகும் பட்சத்தில் அனைத்து விதிகளையுமே மீறிவிடக் கூடும். Break the rules!!!
உங்களுக்கு ஏதேனும் பெயர் தோன்றினால் சொல்லுங்கள்.
--
ஆர்.அபிலாஷ் தொகுத்திருக்கும் "இன்றிரவு நிலவின் கீழ்" என்ற ஹைக்கூக்கள் மிகுந்த உற்சாகம் தருவதாயிருக்கின்றன.

இதுவரைக்கும் ஹைக்கூவுக்கான வரைமுறைகள் எதையும் தெரிந்து வைத்திருக்கவில்லை. சுஜாதா அவ்வப்போது அவரது கட்டுரைகளில் எழுதியதை தவிர தேடியும் படித்ததில்லை. ஆனால் டீக்கடை செய்தித்தாள்களின் ஓரங்களில் மூன்று வரிகளை மடக்கிப் போட்டு ஹைக்கூ என்ற தலைப்பின் கீழாக பிரசுரிக்கப்பட்டிருப்பது சத்தியமாக ஹைக்கூ இல்லை என்று நம்பி வந்திருக்கிறேன். அந்த நம்பிக்கை பொய் போகவில்லை என்பதை "இன்றிரவு நிலவின் கீழ்" தொகுப்பை வாசிக்கும் போது உணர்கிறேன்.
இது பற்றி விரிவாக எழுத விருப்பமிருக்கிறது. எதற்குத்தான் விருப்பமில்லை? (எழுதுவதற்கு வளைய வேண்டும்).
ஒரே ஒரு ஹைக்கூ. (இது எத்தனை ஆழம்....எத்தனை மென்மை என்று பாருங்கள்..)

குவிந்த கைகளில்
எனக்குக் கொண்டுவருகிறாள்
சில்வண்டின் மெளனம்

11 எதிர் சப்தங்கள்:

முனைவர் இரா.குணசீலன் said...

http://gunathamizh.blogspot.com/2009/11/blog-post_15.html

இந்த சுட்டியில் தொகுக்கப்பட்ட தளங்களில் பாருங்கள் நண்பரே...

M.Rishan Shareef said...



அருள்மொழி
அண்ணாதுரை
அருள்
அருள்மணி
அமுதவன்
அறிவழகன்
அறிவு
அழகுச்சொழன்
அகத்தியன்
அருண்மொழி
அகரன்
அம்முவன்
அமிழ்தன்
அரசு
அருளன்
அருணன்
அவனியன்
அறிவன்
அன்பன்
அமுதன்


ஆதித்யன்
ஆதவன்
ஆதித்தமிழன்



இளவரசன்
இனியாழ்
இன்ச்சொல்
இரும்பொறை
இளங்கோ
இனியன்
இன்பன்
இறையன்பு
இறைவன்
இசைக்கோ
இசைமனி
இசைவன்
இமையன்


ஈகன்



கபிலன்
கதிர்
கலையரசன்

கா
கார்முகிலன்

கு
குற்றாளன்




மதியழகன்
மலரவன்
மணிமாறன்

மு
முகிலன்


ஒப்பில்லாமணி

பி
பிறைசூடன்

யா
யாழ்ச்செல்வன்
யாழ்மணி

வி
விண்ணவன்


சொ
சொல்வளவன்

தா
தாமரைக்கண்ணன்
தாமரைமணாளன்

செ
செந்தூரன்
செந்தமிழரசன்


தமிழன்பன்
தமிழ்ழகன்
தமிழ் மணி



உதய மனி

சீ
சீராளன்
சீர்மையன்

வை
வையை

சி. சரவணகார்த்திகேயன் said...

"சகா"

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ஹூம்.....கடினம்தான்.....பெயர் முடிவுசெய்த பின் தெரிவியுங்கள்...நல்ல பெயர் அமைய வாழ்த்துக்கள்


ஹைக்கூ மிகவும் அழகு.....

sathishsangkavi.blogspot.com said...

அழகான தமிழ் பெயரா வையுங்க நண்பரே.............

அழகான ஹைக்கூ..........

Vaa.Manikandan said...

நன்றி ரிஷான், குணசீலன், சரவணகார்த்திகேயன்.

நன்றி சங்கவி, ஆருரன்.

Anonymous said...

Kaviyan
Kavin

தமிழ் said...

வாழ்த்துகள்

நல்ல தமிழ்ப்பெயர் கிடைக்க‌

ஆ! இதழ்கள் said...

கிடைச்சுச்சா? என்னது?

Anonymous said...

//சரவணகார்த்திகேயன் சி. said...
"சகா"//

:-)
வைகைப்புயல் வடிவேலுவின் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சி நினைவிற்கு வருகிறது.

சி. சரவணகார்த்திகேயன் said...

@Anonymous
சீனாதானா தானே!
தப்பில்லைங்க..
அது Basic Instinct..