Aug 23, 2008

சாரு நிவேதிதாவும் வெட்டி அலம்பலும்

தமிழ் இலக்கிய உலகில் நடைபெறும் இலக்கிய ரீதியான செயல்பாடுகளை நான் அவ்வப் பொழுது குழும மின்னஞ்சலாக அனுப்புவது வழக்கம். சுஜாதா நினைவுக் கூட்டம், களரி‍ இறக்கை இணைந்து நடத்திய கூத்துக் கலைஞர்களுக்கான விழா, மணல் வீடு பற்றிய குறிப்பு, சில புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள், ஆதவன் தீட்சண்யாவின் கடிதம் போன்றவற்றை. என்னிடம் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகள் இருப்பதால் நண்பர்கள் கேட்கும் போதெல்லாம் இதை செய்து வந்திருக்கிறேன்.

இந்த முறை மிக மோசமான அனுபவம் எனக்கு.

==========

மணிகண்டனின் முதல் கடிதம்

Vaa.Manikandan writes:

வணக்கம்.
உயிர்மையின் இணையதளம் www.uyirmmai.com உயிரோசை என்னும் வார இதழ் , உயிர்மை பதிப்பகத்தின் புத்தகங்கள் மற்றும் மனுஷ்ய புத்திரனின் வலைதளம் என்னும் பகுதிகளோடு இயங்குகிறது.

நவீன தமிழ் இலக்கியத்தின் இன்னொரு முகம் தங்களின் பார்வைக்கு.


நன்றி.
வா.மணிகண்டன்

* * *

சாருவின் பதில் கடிதம்

On 8/22/08, charunivedita wrote:

திரு மணிகண்டன் அவர்களுக்கு ,

நீங்கள் யார் ? எதற்காக எனக்கு இந்த அறிவிப்பை அனுப்பித் தொந்தரவுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்குகிறீர்கள் ? என்னுடைய இணையதளமான www.charuonline.com இல் உயிர்மை இணையதளம் பற்றிய விளம்பரம் வருவது உங்களுக்குத் தெரியுமா இல்லையா ?

அது கூடத் தெரியாமல் எனக்கு ஏன் இந்த அறிவிப்பை அனுப்பி இருக்கிறீர்கள் ? இனிமேல் நீங்கள் மெயில் அனுப்பும் போது யாருக்கு எதற்காக அனுப்புகிறோம் என்ற தெளிவுடன் அனுப்புங்கள்.

பின் குறிப்பு: இந்த அறிவிப்பை என் நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும் அனுப்பி விட்டீர்களா ? இல்லையெனில் உடனே அனுப்பி வையுங்கள்.


சாரு


* * *

மணிகண்டனின் இரண்டாவது கடிதம்


திரு. சாரு நிவேதிதா அவர்களுக்கு ,


தற்போதைக்கு நான் வெட்டிப் பயல். மன்னிக்கவும். அது ஒரு குழும மின்னஞ்சல். முகவரிப் புத்தகத்தில் உள்ள பல முகவரிகளில் இதுவும் ஒன்று. மொத்தமாக தேர்ந்தெடுக்கும் போது உங்களுடையதும் வந்துவிட்டது.

ஓ! உங்களுக்கு ஒரு இணையதளம் இருக்கிறது அல்லவா ? மன்னித்துக் கொள்ளுங்கள். ஒரு காலத்தில் அதன் வாசகன் நான். வெறும் கடிதங்களும் , கேள்வி பதில்களும் மட்டுமே நிறைந்த ஒரு ' பாலைவனமாக ' மாறிய பிறகு அதனை நான் திறப்பதேயில்லை என்பதால் நான் உயிர்மை பற்றிய குறிப்பை பார்க்கவில்லை.

நீங்கள் இந்த சமூகத்தின்பால் கோபமும் , வெறியும் மிக்க ஒரு எழுத்தாளன் என்பதை நான் அவ்வப் பொழுது மறந்துவிடுவது என் குற்றமே. அதை எந்தவிதமான தயக்கமுமில்லாமல் வெளிப்படுத்தும் வெளிப்படையான மனிதர் வேறல்லவா ? ஒரு நான்கு வரி மின்னஞ்சல் குறிப்பு தங்களுக்கு மன உளைச்சலைத் தந்துவிட்டது.

பிரான்ஸ் போன்ற நாடுகளைப் போன்று பிறரை எந்தவிதத்திலும் துன்புறுத்தாத நாட்டில் நான் பிறந்திருக்க வேண்டும். சுரணையற்ற இந்தியாவில் அதுவும் எழுத்தாளனை கொண்டாடாவிட்டாலும் பராவாயில்லை... அவனை துன்புறுத்தி அதில் இன்பம் துய்க்கும் மானங்கெட்ட தமிழகத்தில் பிறந்துவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். இனி தங்களின் மின்னஞ்சலை என் முகவரி புத்தகத்திலிருந்தே எடுத்துவிடுகிறேன்.

யாருக்கு அனுப்பும் போது எதற்காக அனுப்புகிறேன் என்ற மிக முக்கியமான விஷயத்தை என் மர மண்டைக்கு உணர்த்தியதை என் வாழ்நாள் முழுமைக்குமாக மறக்கமாட்டேன்.

பின்னுக்கு பின் குறிப்பு: இது நான் குறிப்பிட்டது போன்ற குழும மின்னஞ்சல் என்பதால் அவருக்கும் ஒரு அறிவிப்பு சென்றிருக்கும். இதுதான் இந்த டெக்னாலஜியின் கொடுமை. ஒரு பைசா செலவில்லாமல் என்னால் பலரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்க முடிகிறது. அவருக்கும் அவரது மன உளைச்சலுக்காக மன்னிப்பு கோரி ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிடுகிறேன்.

நன்றி

வா.மணிகண்டன்.

======

1. நான்கு வரி மின்னஞ்சல் அவருக்கு மன உளைச்சலைத் தந்துவிட்டது.

2. அவரைப் பற்றிய அவரது எழுத்து பற்றிய குறிப்பு இல்லாத மெயில் அவருக்கு மன உளைச்சலைத் தருமா?

3.இதை கிரிமினல்களும்,இலக்கியச் சூழலும் என்ற தலைப்பில் தனது வலைப்பதிவில் ஒரு பதிவிட்டிருக்கிறார்.

4. இதில் கிரிமினல்த்தனம் எங்கே இருந்து வந்தது?

5. ஒரு இணையதளத்தில் பகிரங்கமாக உள்ள (charunivedita@charuonline.com)என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடிதப் போக்குவரத்து கூடாது என்று சொல்வதற்கு அவருடையதாகவே இருப்பினும் அவருக்கு உரிமை கிடையாது.

6. இரண்டாவது கடிதத்தில் நான் அவரை கலாய்த்திருப்பதற்கு காரணம், தன் கோபத்தை வெளிப்படுத்துவதாக எழுதியிருப்பதும், தன் வலைப்பதிவை தமிழ் பேசத் தெரிந்த ஒவ்வொருவனும் வாசித்துக் கொண்டிருக்கிறான் என்று தெறித்த தொனியும்தான்.

7. திரு.சாரு, கிரிமினல் என்ற சொல்லை உபயோகப்படுத்தும் முன் அதற்கான பொருளைத் தெரிந்து சொல்லுங்கள்.

8. அப்படியே நான் கிரிமினலாக இருந்தாலும் நீங்கள் என்னைப் பார்த்துச் சொல்வதை நான் விரும்பவில்லை.

9. எனக்கு அருவெறுப்பாகவும் என் மீதே எனக்கு கோபமாகவும் இருக்கிறது. உங்களுக்கு எல்லாம் மின்னஞ்சல் அனுப்பியதை நினைத்தால்.

20 எதிர் சப்தங்கள்:

குழலி / Kuzhali said...

ஹா ஹா இரண்டாவது கடிதம் அச்சு அசல் சாரு பாணி நக்கல்....

சாரு பல நேரங்களில் அதீதமாக உணர்ச்சி வசப்பட்டு தேவையில்லாத வார்த்தைகளை வெளியிடுகிறார் அதில் ஒன்று கிரிமினல் என்று விளித்திருப்பது

Anonymous said...

Another akkapor with saaru

http://vettipaiyal.blogspot.com/2008/07/blog-post_27.html

Santhosh said...

மணி சாரு ஒரு பெரிய லூசு.. அந்தாளு எழுதுவதில் பாதி யாரையாவது திட்டி வம்புக்கு இழுத்து எழுதுவது. அதுவும் எப்படி நான் குடிக்க காசு குடுக்காத இவனெல்லாம் ஒரு மனுசனா அந்த மாதிரி, திட்ட எந்த காரணமும் இல்லாட்டி இது மாதிரி ஒரு மொக்க காரணம்... மீதி அவர் எப்படி தன்னுடைய பெண் நண்பர்களுடன் chat செய்து வழிகிறார் அல்லது தன்னுடைய பெண் நண்பர்கள் எவ்வாறு தன்னை புகழ்கிறார் என்பது மீதி எப்படி அவர் தன்னுடைய நண்பர்களுடன் குடித்து கூத்தடிக்கிறார்கள் என்பது.. எப்படி தான் இவரெல்லாம் பெரிய எழுத்தாளர் ஆனார் என்றே தெரியவில்லை :(.. எல்லாம் அந்துமணி போன்றவர்கள் ஏத்தி விட்டதால் வந்த வினை.

Anonymous said...

""ஒரு ' பாலைவனமாக '" மாறிய ""
charuonline செல்லும் ஒட்டகங்களில் நானும் ஒருவன்.

கடன் அட்டை வாங்க சொல்லி இதுவரை வந்த "n" number of calls ku ,
till date, I answered properly to that unknown marketting person.
I knew thats a disturbence everyday, but still i feel that, thats their job to do for the bread.

நேசிப்பையும் சகித்தலையும் ஊருக்கு உபதேசிக்கும் சாரு ? ? ?
இது ஒரு பிரச்சினை என்று சொல்வதை பற்றி .......
வேறு என்ன சொல்ல ?

dnt feel bad mani, but try to understand his position.
charu needs to write something for his readers everyday.
Thats all.

மாயவரத்தான் said...

Ungala criminalnnu sollirukkudhunnu neengalave yen nenaikireenga?

Adhu ungala illa boss.

Leave it.

Thankku thanae sollikkiravangala paththi namakku enna kavala?

வானம்பாடி said...

ஆயிரக்கணக்கானோருக்கு மின்னஞ்சல் அனுப்புவது எரிதம் தானே? அதுவும் ஒருவர் கேட்காமலேயே தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தால் கண்டிப்பாக எரிச்சல் வரும். சாருவின் பதில் இந்த ஒரு மின்னஞ்சலுக்கு மட்டுமல்ல என்பது அவரது பதிலில் இருந்து புரிகிறது. நீங்கள் என்னமோ பெரிய சேவை புரிவதாக நினைக்கலாம், அனால் அந்த விஷயம் தேவைப்படாதவர்களுக்கு அது எரிதம் தான், எரிதம் எரிச்சலை தான் தரும்.

Anonymous said...

கிரிமினல்கள் என்றால் அவரையும்
சேர்த்தே குறிப்ப்பிடுகிறார் :)

Vaa.Manikandan said...

நன்றி குழலி.

சந்தோஷ் அவர் என்னமோ எழுதட்டும். அதனை நான் பார்ப்பதில்லை. அதை நான் இரண்டாவது மின்னஞ்சலில் குறிப்பிட்டதுதான் அவருக்கு கோபம் உண்டாக்கியிருக்க முடியும். தன் வலைத்தளத்தைப் படிக்காதவன் எப்படி கிரிமினலாக இல்லாமல் இருக்க முடியும் என்று.

அனானிமஸ் கருத்துக்களிட்ட நண்பர்களுக்கு நன்றி.

:) நன்றி மாயவரத்தான். அவர் தன்னைக் குறிப்பிடுவதை சற்று தெளிவாக குறிப்பிட்டிருக்கலாம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

குழும அஞ்சல்களுக்கும் உங்களுக்கும் ஏழாம் பொருத்தமா? சுஜாதாவுடன்கூட ஒரு சின்ன பிரச்சனை வந்துச்சில்ல :)

விடுங்க மணிகண்டன். அவர் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் :(

Vaa.Manikandan said...

சுதர்சன்,

தங்களுக்கு சற்று விரிவாக பதிலளிக்க விரும்புகிறேன்.

இடைநிலைப் பத்திரிக்கை சார்ந்த நிகழ்வுகளை மின்னஞ்சலில் அனுப்புவதை விட்டுவிடுங்கள்.

சிறுபத்திரிக்கைகள் அவர்களின் நிகழ்வுகள் குறித்தான மின்னஞ்சல்கள் ஓரளவிற்கேனும் நல்ல பலனை கொடுத்திருக்கின்றன.

500 ரூபாய் என்ற தொகை அவர்களுக்கு எத்தனை முக்கியமானது உங்களுக்கு புரிந்திருக்கலாம். ஒரு ஆயுள்ச் சந்தா கிடைக்கும் போது அது சிறுபத்திரிக்கையாளனுக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக அமையும்.

நீங்கள் குறிப்பிட்ட அந்த 'பெரிய சேவை' செய்வதாக நான் நினைக்கவில்லை. ஆனால் இத்தகைய செயல் என்னைப் பொறுத்த வரைக்கும் முக்கியமான ஒன்று.

இதுவரை அனுப்பிய பல மின்னஞ்சல்களுக்கு எதிர்மறையான பதில்கள் வந்ததில்லை. அனுப்ப வேண்டாம் என்ற நண்பர்களுக்கு அடுத்த முறை அனுப்பியதில்லை.

இலக்கியத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதருக்கு இலக்கியம் சார்ந்த நிகழ்வொன்று தேவையில்லாததாக இருக்கும் என்று என்னால் எப்படி கணிக்க முடியும்??

நிழலின் குரல் said...

ஜெயமோகனை போய் சிங்கம்னு சொன்னா எனக்கு கோபம் வராதா ? ஜெயமோகனை படிக்கறவன் கிரிமினல் இல்லாம என்ன ?

http://pesalaam.blogspot.com/2008/01/blog-post_24.html

நிழலின் குரல் said...

இது முழுக்க முழுக்க கூக்ளியின் தவறுதான் .

Vaa.Manikandan என கூகுளிட்டால் வருவதெல்லாம் ஜெமோவிடம் நீங்கள் பேசியதுதான் ,ஹிஹி

நான் ஜொமோவின் ரசிகன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/இலக்கியத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதருக்கு இலக்கியம் சார்ந்த நிகழ்வொன்று தேவையில்லாததாக இருக்கும் என்று என்னால் எப்படி கணிக்க முடியும்??/

மணிகண்டன், என்ன சொல்றீங்க, சாருவுக்கு உயிர்மை பற்றிய விவரங்கள் தெரியாதென்றா??

சந்தோஷ் போன்றவர்களின் ‘லூசு' மாதிரியான பின்னூட்டங்கள் கொஞ்சம் எரிச்சலை வரவழிக்கின்றன. உங்களுக்கு அம்மாதிரியான விமர்சனங்கள் நிச்சயம் உவப்பாயிருக்காது எனத் தெரியும்!

Vaa.Manikandan said...

சுந்தர்,

இல்லை. இந்தக் கட்டுரையோடு சேர்த்து வாசிக்கும் போது நீங்கள் நினைக்கும் பொருளை அந்த வாக்கியம் தருகிறது. நான் வேறு மாதிரியாக எழுதியிருக்க வேண்டும்.
அது சுதர்சனின் பின்னூட்டத்திற்கான பொதுப்படையான பதில். யாருக்கு அனுப்புகிறோம் என்று பகுப்பதில் எனக்கு வரக் கூடிய இயல்பான சிக்கலை விளக்குவதற்காக உபயோகப்படுத்திய வாக்கியம்.

லக்கிலுக் said...

//இப்பதிவை வைத்து என்னை வட்டத்தை விட்டு வெளியே வரச் சொல்வீர்களேயானால் என்னைச் சுற்றிலும் வட்டம் பெரிதாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இன்னும் சுஜாதா, சாரு நிவேதிதா, மனுஷ்ய புத்திரன், திலீப்குமார், மனோஜ், தேவதேவன், பிரான்சிஸ் கிருபா என்று நிறைய படைப்பாளிகள் இருக்கிறார்கள்.//

கொஞ்ச நாட்களுக்கு முன்பாக இதை எழுதியவரின் பெயர் வா.மணிகண்டனா என்று கூகிளில் தேடிக் கொண்டிருக்கிறேன் :-)

தமிழ்நதி said...

இத்தனை கோபப்பட்டிருக்க வேண்டாமென்றுதான் தோன்றுகிறது. அதனைவிட இவ்வளவு பெரிய எழுத்தாளருக்கு இதற்காகக் கோபப்படக்கூட நேரமிருப்பதுதான் இன்னும் ஆச்சரியம் தருகிறது.

Anonymous said...

அண்ணாச்சி, சாருவுக்கு கோபம் வரக் காரணம் என்ன தெரியுமா, உங்கள் பிளாகில் மாறி மாறி வரும் படங்களில் ஜெமோவுடன் நெருக்கமாக நீங்கள் நின்று கொண்டிருப்பது தான். எதிரிக்கு நண்பனும் எதிரி தானே என்று கருதியே அவர் அவ்வளவு காட்டமாக விமர்சித்திருக்கிறார். உண்மையிலேயே இது தேவையில்லாதது. அவரது பக்குவமின்மையையே இது காட்டுகிறது.

- அசோக்

ரௌத்ரன் said...

நண்பா..சாருவோட அந்த பதிவ படிச்சுட்டு வர வர ரொம்ப சின்னப்புள்ளத்தனமா சிந்திக்கராரேன்னு பரிதாபப்பட்டேன்..இப்போதான் கொஞ்சம் வெளங்கறாப்ல இருக்கு...ம்ம்,என்ன ஒரு வில்லத்தனம்...?

Anonymous said...

நண்பர்களுக்கு ஒரு விளக்கம்

Ramesh said...

http://pesalaam.blogspot.com/2008/01/blog-post_24.html
and this blog clearly shows, how one's ilakiyam is growing.

thanks manikandan iyya.