Dec 11, 2006

பெரியார் என்னடா பண்ணினார்?

செம பேஜாராகிக் கிடக்கிறேன். ஆரியன், திராவிடன்னு அடி பின்னுறத பார்த்தா புகை கிளம்புது. காலங்காலமாக திராவிட இனத்துக்கு சலுகை வழங்குவதாகச் சொல்லி மாயை ஏற்படுத்துவதும், அவனுக்கே தெரியாமல் அவர்களினூடாக புகைச்சலை விளைவித்து, பிரிந்து கிடப்பவர்களை, எதிர் இனம் ஒவ்வொருத்தனாக வேட்டையாடுவதும் இயல்பானதுதானே?

அண்ணா, ஒருத்தர் தனித்தனியா பேரு போட்டு திட்டுறாருன்னு சொல்லுறீங்க. அசிங்கஅசிங்கமா பேசுறாருன்னு சொல்லுறீங்க. அதுக்குத்தான் நாட்டாமைத் தனம் பண்ணி ஒதுக்கி வெச்சாச்சு. அதோட விடுறீங்களா? அதுக்கு படிச்ச, நாகரீகம் தெரிஞ்ச நீங்க இப்படியா பதில் சொல்லுவீங்க?

வெட்கமா இல்லை? சோத்துக்கு உப்பு போட்டு தானே திங்குறீங்க?

பெரியார் உங்களை என்னடா பண்ணினார்? உங்களை மாதிரியே எல்லோரும் பேசினா என்ன ஆகும் இந்த பேட்டை? அடங்கொக்கக்கா பெரியாரை சமத்துவ மாமான்னு சொல்லுறத எத்தனை நாளைக்குதான் வேடிக்கை பார்க்கிறது?

ஒரு விவகாரம் ஆறிப் போனா நல்லாவா இருக்கும்? புண்ணை சொறிஞ்சுட்டே இருந்தாதான் சுகம். ஆறிபோனா அந்த இடத்த எதுக்கு கண்டுக்க போறோம்?சொறிங்க...சொறிங்க..வூட்டாண்ட யாராவது வெட்டியா குந்திகினு இருந்தா உள்ள இழுத்து விடுங்க..அவியளும் சொறியட்டும்...
ரத்தம் சீழா மாறி நாறடிக்கட்டும்.

இந்த சனியன் புடிச்ச சண்டை போடுறதுக்கு நான் ஒண்ணும் எளக்கியவாதியும் இல்லை, மேட்டர் தெரிஞ்ச மெத்தப் படிச்ச புடு**யும் இல்லைன்னுதான் பேசுறதே இல்லை. சண்டை இருந்தா உங்களோட நிறுத்த வேண்டியதுதானே? செத்துப் போன நல்ல மனுஷனுகளை எல்லாம் இழுத்துப் போட்டு நாறடிக்கிற நாறவாயனுகளுக்குள்ள சிக்கிட்டோம்ன்னு வருத்தமாதான் இருக்கு.

பெரியார் மட்டுமில்லை. காந்தீயம், அம்பேத்கரியல் என எல்லா இயங்களும், இசங்களும் மறுவாசிப்புக்கும் மறுஆய்வுக்கும் உட்படுத்த வேண்டிய காலகட்டம்தான். கருத்துப் பூர்வமாக விவாதிப்பதும், எல்லாக் கருத்துக்களையும் ஏற்பதும்/மறுப்பதும் அல்லது சில கருத்துகளை ஏற்பதும்/மறுப்பதும் அடுத்த தலைமுறைக்கான சித்தாந்தங்களும், வாழ்வியல் நெறிமுறைகளும் உண்டாவதற்கான வழிகளைத் திறக்கும். சமூகத்திற்கான நல்ல விவாதமாகவும் அமையும்.

பெரிய ஆளுங்க பேசிட்டுப் போனத, செஞ்சுட்டுப் போனத பேசுங்கன்னு சொன்னா, புதைச்ச இடத்துல இருந்து எடுத்துட்டு வந்து அறுத்துப் போட்டு பேசுறீங்க. போற போக்குல குரூப் சேர்ந்து எந்தத் தலைவன் குறி பெருசுன்னும் பேசுவாங்க....நாமதான் பார்த்து நடந்துக்கணும்.

அரை வேக்காட்டுத் தனமாக ஒரு தலைவரை தெரிந்து கொள்வதும், அரையுங் குறையுமாக உளறுவதும் சகிக்கலை ராஜாக்களா...

தனிப்பட்ட முறையில் நீங்கள் நாறிக் கொளவதற்காக பெரியவர்களை அசிங்கப் படுத்தாதீர்கள். அது பெரியாரோ, ராஜாஜியோ, கலைஞரோ, புரட்சித் தலைவியோ. நீ யாருடா இதை சொல்றதுக்குன்னு எவனாவது கேட்டா நான் என்ன சொல்வேன் தெரியுமா? தே*** பையா அந்த மனுஷன அசிங்கமா பேசுறதுக்கு நீ யாருடான்னு. பின்ன அந்த மனுஷர்களா வரப்போறாங்க? நாமளா எதாவது திட்டி மூஞ்சி மேல சாணி எறிஞ்சாத்தான் உண்டு.

இந்த விஷயத்துல கொஞ்சம் கூட வெட்கமே இல்லைங்க எனக்கு. கடைஞ்செடுத்த பச்சைப் பொறுக்கி. என்னை மாதிரி பல பேரு திரியறோம். சும்மா மனசுக்குள்ள பெரிய 'ராடு'ன்னு நினைசுட்டு கண்டத கிறுக்காதீங்க.

அவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்...இவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன் பழைய பல்லவியை எடுத்து விடாதீங்க அப்புகளா.....

இதுல அடிவருடித் தனமும் இல்லை, ஜல்லியடித்தலும் இல்லை. நீங்க எப்படி வேணும்னாலும் நாறிக்குங்க. மக்களிடம் தலைவர் என்ற நிலையில் இருப்பவர்களின் கருத்துக்களை விவாதிக்காமல், தனிப்பட்ட முறையில் அசிங்கப் படுத்தாதீர்கள் என்பதுதான் கன்குளூஷன்.

வெட்டித்தனமாக வாந்தி எடுக்கறதை நிறுத்துங்கள். சுத்தம் செய்து விட யாரும் வரப் போவதில்லை.

25 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

"பெரியார் மாமா,
மஞ்சத் துண்டன்,
திருமா காக்கா"-இதுலாம்
த.மணத்திற்குதெரியாதா?இல்லே புரியாதா?

Anonymous said...

யோவ் பன்னாட,

அந்த வெங்காய மாமா அவர் நாளுல பண்ணினத தானே இப்ப மத்தவங்க அவருக்கு செய்யறாங்க.

அந்தாளு பேசாத அசிங்க பேச்சா! அந்தாளு உடக்காத சிலயா! அந்தாளு திட்டாத நல்ல மனுசங்களா....

இதுக்கு எதுக்கு கூப்பாடு போடற.

உனக்கு பண்ணினா வலிக்குதாக்கும். அதே மத்தவங்களுக்கு என்ன வேணுமின்னாலும் எழுதுவீங்க. போங்கடா பொறம்போக்குகளா!!!

என்ன சொன்னே,

////
செத்துப் போன நல்ல மனுஷனுகளை ...////

யப்பா, யப்பா... என்னமா பசப்பறே நீ. நல்ல மனுசன்னு யாரு முடிவு பண்றது. நீயும் உங்க கூட்டமுமா. நீங்க நல்லவன்னு சொன்னா, யாரும் ஒன்னும் சொல்லக்கூடாதா.

நீங்க மட்டும். சாமி, சாதி எல்லாத்தையும் என்ன வேணுமின்னா பேசுவீங்க.

சாக்கடை உங்க மனசுலதான் இருக்கு. கொஞ்சம் ஓரமா ஒக்காந்து யோசி.

நீ அந்த நாத்தம் புடிச்ச விடாதுகருப்புக்கு வால் புடிச்சுட்டு இதே பதிவுல எப்படிடா மத்தவங்கள அசிங்கமா எழுதாதேன்னு சொல்றே. கொஞ்சங்கூட வெட்கமில்லாம. அதுசரி, உன்னை பெத்ததுக்கு குடும்பமில்லே வெட்கப்படணும்

We The People said...

அப்ப... அசத்தல் மணி.

சூப்பர். இதைத்தான் எழுத நினைத்தே. நீங்க இன்னும் சூப்பரா எழுதிட்டீங்க...

//பெரியார் உங்களை என்னடா பண்ணினார்? உங்களை மாதிரியே எல்லோரும் பேசினா என்ன ஆகும் இந்த பேட்டை? அடங்கொக்கக்கா பெரியாரை சமத்துவ மாமான்னு சொல்லுறத எத்தனை நாளைக்குதான் வேடிக்கை பார்க்கிறது? //

அது!! இதுக்காக தான் இது சம்மந்த பட்ட பின்னூட்டமிட்டவருக்கு, அவர் பின்னூட்டத்தை பிரசுரித்தவருக்கு அனுப்பினேன், ஒரு சிலர் அந்த பின்னூட்டங்களை எடுத்தாங்க சிலர் எடுக்க... அல்பமா சண்டைப்போட்டு மண்டைய ஒடைக்கறங்க...

நல்ல சூடு!!! வாழ்த்துக்கள். நன்றி பதிவுக்கும்

மாசிலா said...

நல்ல பதிவு.

தமிழ்மணம் செய்ய வேண்டிய வேலையை
நீங்க கொஞ்சம் சூடா செய்து இருக்கிறீங்க.

நன்று.
நன்றி.
வணக்கம்

கோவி.கண்ணன் [GK] said...

//பெரியாரை சமத்துவ மாமான்னு சொல்லுறத எத்தனை நாளைக்குதான் வேடிக்கை பார்க்கிறது?
//

தமிழக முதல்வர்களே தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் தலைவருக்கு மாமா பட்டமா ?

என்னத்தை சொல்வது வெறுப்புணர்வின் உச்சம்.

குழலி / Kuzhali said...

மணி உங்கள் ஆவேசம் நிதானமாகவே வெளிப்பட்டுள்ளது, சிலருக்கு சொறிந்து கொண்டே இருக்க வேண்டும், அதுவும் இப்போது வேறு ஒரு அரசியலுக்காக திட்டம் போட்டு செய்து கொண்டிருக்கும் சிலரின் தரமிழந்த செய்கைகள் சில திட்டங்களுக்காக நடக்கின்றது, இத்தனை நாட்கள் ஒருவரின் பின்னால் ஒளிந்து கொண்டு அய்யோ அய்யோ என்று கத்தி கதறி ஆர்ப்பாட்டம் செய்தார்கள், இப்போது?

அய்யா நடுநிலை ஆட்கள் என்று நினைப்பவர்களே பாருங்கள் என்ன நடக்கின்றது என்று.... எதை சொறிகிறார்கள் என்று? ஏன் சொறிகிறார்கள் என்று.... எல்லா பொறுமைகளும் உங்களுக்காகத்தான் வெறும் அனுதாபங்களை சம்பாதிக்க நடத்திய நாடகம் இப்போது எந்த கட்டத்தை நோக்கி நகர்கிறது என்று.

Sivabalan said...

// மக்களிடம் தலைவர் என்ற நிலையில் இருப்பவர்களின் கருத்துக்களை விவாதிக்காமல், தனிப்பட்ட முறையில் அசிங்கப் படுத்தாதீர்கள் என்பதுதான் கன்குளூஷன். //

ம்ம்ம்ம்... சரியான பார்வைதான்.. எற்புடையதே!!

Vaa.Manikandan said...

அண்ணா..

அனானிணா...வாங்க...

இதாங்க சொன்னது அரையும் குறையுமா பேசப்படாதுன்னு...நான் தனிப்பட்ட தாக்குதலை நிறுத்துங்க..கருத்துகளை என்ன கிழி வேணும்னாலும் கிழிச்சுத் தொங்கப் போடுங்கன்னு சொன்னேன். மறுபடியும் அதே ரூட்டுக்கு போறீங்க!

இந்த மாதிரி குண்டக்க மண்டக்க பேசுவீங்கன்னுதான், பெரியார் மட்டுமில்லை,யாரையுமே பேசாதீங்கன்னு சொல்லி எழுதினேன். எனக்கு யாருக்கும் வால் பிடிச்சு எழுத வேண்டிய கட்டாயமில்லை என்பதனை தெளிவா புரிஞ்சுக்குங்க...

இந்த 'குரூபிஸ'த்தில் இதுவரையிலும் என் ஒரு கட்டுரையோ அல்லது பின்னூட்டம் வந்திருக்காது என்பதையும் தெரியப் படுத்த விழைகிறேன்.

சரிங்க..அவரு செத்துப் போன கெட்ட மனுஷனாவே இருக்கட்டும்...கருத்துக்களை எதிர்த்தால் மிகுந்த மரியாதையோடு ஆதரிக்கும் முதல் குழுவில் நான் இருப்பேன். அதைத்தான் தெளிவாகவும் எழுதி இருக்கேன்.

என் குடும்பம் வெட்கப் படுவது குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க பொண்ணு பார்க்க வேண்டாம் விடுங்க. :)

Krishna (#24094743) said...

கருத்துக்கள் மிகச் சரியானவையே. ஆனால் மிகப் பெரும்பாலான சமயங்களில் விவாதங்களில் தனிமனிதன்/ஒரு ஜாதியைக் குறித்துத் தாக்கத் தொடங்குவது யார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதுவும் சபையில் இல்லாதவரைப் பற்றிப் பேசுதலே தவறு எனக் கூறும் தமிழ் நல்லுலகில், இறந்தவர்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கதே. இரு சாராருமே இதை உணரும் காலம் வரும் என நம்புகிறேன்.

ஆனாலும் உங்கள் பதிவில் உபயோகப் படுத்தப்பட்டுள்ள 'தமிழிற்கு' என் வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

Madhu Ramanujam said...

பெரியார் இன்னொருத்தர் சிலையை உடைச்சா அது போராட்டம், அவர் சிலையை மத்தவங்க உடைச்சா அது பாப்பாரத்தனம். எந்த ஊர் நியாயம்ங்க இது?

உங்க பிரச்சினை தான் என்ன? நீங்க மேடை போட்டு சாதியை ஒழிக்கறேன் பேர்வழினு சொல்லிகிட்டு பார்பனன் பூரா திருடன், அவனை வெட்டுங்கள், குத்துங்கள் அப்படினு சொல்லுவீங்க. ஆனா பார்பனன் எவனாவது அதே வார்த்தையை உங்களைப் பார்த்து சொன்னா சண்டைக்கு வருவீங்க. விமர்சனத்தை தாங்கிக்கிற மனபக்குவம் இல்லாதவன் விமர்சிக்கக் கூடாது.

நிசத்தைச் சொல்லணும்னா, நீங்கல்லாம் பெரியார் சொன்ன விசயத்தை விட்டு பெரியார் சிலைய புடிச்சிகிட்டு ஆடறீங்க. கருத்தா இல்லை கல்லானு முதல்ல முடிவு பண்ணுங்க சாமி.

Vaa.Manikandan said...

ஆகா...
மதுசூதனன் அண்ணாச்சி..
நான் பெரியார் சிலை பத்தி எல்லாம் பேசவே இல்லை..மேட்டர படிங்க..தலைப்ப மட்டும் படிச்சுட்டு பின்னூட்டம் இட்டீர்களா?

Thamizhan said...

Nandri.
Sign of an educated person is what others can learn from him.Mud slinging and poronoid conversations are not useful.Every one has to take responsibility.There is an equal reaction for every action.Attacking ideas can be done decently.Indecent exposure is non productive.

வஜ்ரா said...

//
"பெரியார் என்னடா பண்ணினார்?"
//

இப்ப பெரியாரை எதிர்ப்பவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்று பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

அதைத்தான் அவர் செய்தார் என்பது உண்மை. Reversal of fortunes.!

கருத்தளவிலும் பெரியாருக்கு விமர்சிக்க (இந்து மதத்தை மட்டும் தான்!) வழங்கப் பட்ட சுதந்திரத்தை பெரியாரிஸ்டுகள் பெரியாரை விமர்சிப்பவர்களுக்கு வழங்காமல், இந்த மாதிரி அடா உடா பதிவு பதிக்கிறார்கள்.

கொள்கையளவில் கிருத்துவம், இஸ்லாம், கம்யூனிசம், பெரியாரிசம் எல்லாம் இந்த விஷயத்தில் ஒன்றே என்று எண்ணத் தோன்றுகிறது.

அவர்கள் மற்றவர் நம்பிக்கையை விமர்சித்தால் அது (பகுத்)அறிவு இயல், மற்றவர்கள் அவர்கள் நம்பிக்கையை விமர்சித்தால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது.

இதற்குப் பெயர் தான் Intolerance.

Sundar Padmanaban said...

மணிகண்டன்

//பெரியார் மட்டுமில்லை. காந்தீயம், அம்பேத்கரியல் என எல்லா இயங்களும், இசங்களும் மறுவாசிப்புக்கும் மறுஆய்வுக்கும் உட்படுத்த வேண்டிய காலகட்டம்தான்//

மத்த வசவு வாக்கியங்களைத் தவிர்த்து உங்கள் பதிவில் (எனக்கு) ஏற்கத்தக்கதாக இருந்தது இந்த ஒரு வாக்கியம்தான்

இதைத்தான் "மாற்றமே மனித தத்துவம்" என்று சொல்லியிருக்கிறார்களே!

எந்த ஒரு நம்பிக்கையும் மறு ஆய்வுக்கு உட்பட்டதே. யாரும் விரும்பாவிட்டாலும் காலம் எல்லாவற்றையும் மறு ஆய்வுக்கு உட்படுத்திவிடும்.

இப்போது நிகழ்பவைகளை நிகழ்த்துபவர்களுக்கு ஒரு Hidden Agenda இருக்கிறது. அதன்படி செயல்படுகிறார்கள். நோக்கம் நிறைவேறியதும் வேறு வேலை பார்க்கப் போய்விடுவார்கள். அப்புறம் காக்கா எச்சம் போடுதோ கடந்து செல்பவர்கள் எச்சில் துப்புகிறார்களோ வாகனப் புகையும் தூசியும் படிகிறதோ என்று எவனும் கவலைப்படப் போவதில்லை. பிறந்த இறந்த தினத்திற்கு வந்து ஏணி வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து மாலை போட்டுவிட்டுப் போவதோடு முடிந்தது அவர்கள் 'கடமை'.

எல்லாம் நேர விரயம்!

We The People said...

மணி சார்,

நீங்க சொல்ல வந்த கருத்தை விட்டுவிட்டு ஏதேதோ பேசறாங்க.

அவர்கள் சொன்ன மாமா வசனம் படுகேவலமானது. அவர் செய்த நன்மை மறந்த செயல். அவர் கடவுள் எதிர்த்தார் கரெக்ட், ஆனா அதை மட்டும் தான் சொல்லவில்லை. ஒரு பெரிய புரட்சியை செய்தார் என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கு தான் தெரியும். அவர் சமுதாயத்துக்கு செய்த நன்மை மறந்து, அதை மறந்து அவரை வக்கிர புத்தியோட மாமா என்றும், திருமா வை காகா என்று சொல்லுவது கண்டிக்கதக்கது. அதே போல் கடவுள் நம்பிக்கையை எதிரிக்கறோம் பேர்வழி என்று கேவலாமா திட்டுவது, பாப்பான், அவனே,இவனே என்று ஏக வசனத்தில் இன்னும் இங்கு சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டுவது தவறு. இருவரும் தவறு செய்கிறார்கள். இவர்கள் திருந்த மாட்டார்கள்... நீங்க சொன்னா மாதிரி, இன்னும்
//அவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்...இவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன் பழைய பல்லவியை எடுத்து விடாதீங்க அப்புகளா.....//

என்று அதே பல்லவி எழுதறாங்க... ஒன்னு சொல்லிக்கறது இல்லை. இவர்கள் இப்படித்தான் நாம விட்டுவிட்டு போக வேண்டியது தான். இரு அணியும் திருந்த நினைக்காமல் தனிமனித தாக்குதல் செய்கிறது. இதுல நாம தான் கொடுமையை அனுபவிக்கறோம். இங்க பல பதிவுகள் மூடுவிழா நடத்திவிட்டன, ஒரு நாள் நாமும் அப்படி செய்துவிட்டு போவது மேல் என்று என்ன தோன்றுகிறது.

:(((((((((

Madhu Ramanujam said...

மணிகண்டன், பதிவ படிக்காம பின்னூட்டம் போடலைங்க. சுத்தி சுத்தி எல்லாம் அங்க தான் வரும் அப்படிங்கிறதைத் தான் நான் சொல்லவரேன்.

enRenRum-anbudan.BALA said...

மணிகண்டன்,
விவகாரத்திற்குள் வர விருப்பமில்லை ! ஆனால், ஓர் அனானி நண்பரின் படு காட்டமான பின்னூட்டத்திற்கு தாங்கள், நிதானம் இழக்காமல் பதிலளித்ததை மிகவும் பாராட்டுகிறேன் !!!

Anonymous said...

நூத்துல ஒன்னு சொன்னாலும் சூத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க.

(நான் யாருன்னு உங்களுக்குத் தெரியும்)

Vaa.Manikandan said...

கருத்தினை ஆமோதித்த நண்ப‌ர்கள் அனைவ‌ருக்கும் நன்றி.

சில எதிர்வினைகளுக்கு பதில் அளிக்க விரும்புகிறேன்.

கிருஷ்ணா& சுந்த‌ர்,

நான் பெரும்பாலும் இந்த மாதிரியான விவகாரங்களில் தலையிட விரும்புவதில்லை. நான் பெரியாரை முற்றிலும் ஏற்றுக் கொள்வதில்லை என்ற போதிலும், என் மண்ணில்(ஈரோடு) பிறந்த மாபெரும் தலைவன் அவன். எனக்கான சில திராவிட கொள்கைகள் இருக்கின்றன என்பது அவ‌ரின் க‌ருத்துக்களால்தான்.

நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். என் ஊரில் நான் தாழ்த்தப்பட்டோரிடம் பழகுவதும் அது குறித்து நான் எதிர்கொண்ட சில பிரச்சினைகளையும். இங்கு பணிபுரியும் இடங்களில் இருக்கும் சில நண்பர்களைப் பார்க்கும் போது பெரியாரின்றி இத்தகைய எழுச்சி வந்திருக்குமா என யோசிப்பதுண்டு. இது எல்லாம் இங்கு குறிப்பிடுவது கூட வேஷம் கட்டுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடலாம்.

ஏதோ என்னையுமறியாமல் எனக்குள் ஒரு வேகம் நேற்று வந்தது. அதன் வெளிப்பாடுதான் இந்தக் கட்டுரை. என்ற போதும் நன்கு யோசித்து இவற்றை எழுதுவதில் தப்பில்லை என்ற முடிவில்தான் எழுதினேன். அடுத்த கட்டுரைகளில் என் மொழியின் தரத்தினை உய‌ர்த்திக் கொள்ள முயல்கிறேன்.

மது,
பிரச்சினை அந்த இடத்திற்கு வ‌ராம்லே அங்குதான் வ‌ரும் என முடிவு செய்வது அறிவார்ந்த செயலா? திசைதிருப்பல் போன்றில்லை?

வஜ்ரா,
பெரியாரின் க‌ருத்துக்களை விம‌ர்சித்து எழுதிய கட்டுரைகளுக்கு என் பின்னுட்டம் அல்லது கட்டுரைகளை இவ்வளவு காட்டமாக பார்த்தீர்களா?
என் பிரச்சினை எல்லாம் பெரியாரின் க‌ருத்துக்களுக்கான எதிர்வினை குறித்தல்ல. பெரியார் குறித்த தனிப்பட்ட தாக்குதல் குறித்துதான். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

Vaa.Manikandan said...

என் நடுநிலைமை குறித்தும், நண்ப‌ர் குழலியின் நடுநிலைமை குறித்தும் வந்த ஒரு பின்னூட்டம்,

நூத்துல ஒண்ணு சொன்னாலும் நல்லா இருக்கு என்றும் அடைப்புக்குறிக்குள் என்னை யார் என்று உங்களுக்குத் தெரியும் என்று வந்த ஒரு பின்னூட்டம்

ஆக இரண்டு பின்னூட்டங்கள் மட்டுறுத்தப் படுகின்றன.

என் நடுநிலைமை குறித்து பிரகடனப்படுத்துவதால் என்ன பயன் வந்து விடப் போகிறது?

அப்படியே இருப்பினும் எந்த மனிதனும் நடுநிலைமாயாளனாக இருத்தல் சாத்தியமில்லை. அவனுக்கென ஒரு நிலைப்பாடு நிச்சயம் இருக்கும். அதனை எப்படி வெளிப்படுத்துகிறான், எதிர்வினைகளை எப்படி எதிர் கொள்கிறான் என்பதில்தான் சமூகம் அவனை எடையிடுகிறது என்பது என் நம்பிக்கை.

அசுரன் said...

கட்டுரையைப் பத்தி எதுவும் குறிப்பாக இங்கு நான் சொல்லவில்லை. அதற்க்கு வந்த ஒரு பின்னூட்டத்தை மட்டும் விமர்சிக்கலாம் என்று பார்க்கிறேன்.

//கருத்துக்கள் மிகச் சரியானவையே. ஆனால் மிகப் பெரும்பாலான சமயங்களில் விவாதங்களில் தனிமனிதன்/ஒரு ஜாதியைக் குறித்துத் தாக்கத் தொடங்குவது யார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி//

அது சரி ஜாதியில்லைன்னு ஆகிப் போச்சுன்னாக்க எதுக்கு ஜாதிப் பேர் சொல்லித் திட்டும் போது கோபம் வரனும்....

அதுதான் உங்களோட அடையாளம் இல்லன்னு ஆகிப் போச்சுல்ல.. யாரும் வந்து உங்க சர்டிபிகேட்டு பாத்துதான் பழகுறாங்களா?

அசுரன்

Krishna (#24094743) said...

அசுரன் அய்யா:
//அது சரி ஜாதியில்லைன்னு ஆகிப் போச்சுன்னாக்க எதுக்கு ஜாதிப் பேர் சொல்லித் திட்டும் போது கோபம் வரனும்....
//
ஜாதியில்லைன்னா முதல்ல ஜாதிய சொல்லி ஏன் திட்டணும்? அடுத்தவரைத் திட்டுவதற்கு யார் உரிமை கொடுத்தார்கள்? உங்களை ஜாதியோடோ, ஜாதியில்லாமலோ யார் திட்டினாலும் கோபம் வரும் என நினைக்கிறேன். அதே விளக்கம் தான் மற்றவருக்கும்.

//அதுதான் உங்களோட அடையாளம் இல்லன்னு ஆகிப் போச்சுல்ல.. யாரும் வந்து உங்க சர்டிபிகேட்டு பாத்துதான் பழகுறாங்களா?///
வலையுலகு தவிர வேறு யாரும் இப்படி வன்மம் கொண்டு பழகுவது கிடையாது. தனிமனித சுதந்திரம் என்பதன் அர்த்தம் வலையுலகில் அடுத்தவரைக் கண்டபடி பேசுவது என்று ஆகிவிட்டது.

வாழுங்கள்! வாழ விடுங்கள். உலகம் மிகப் பெரியது - இங்கு அனைவருக்கும் இடம் உள்ளது. :-)

bala said...

//அது சரி ஜாதியில்லைன்னு ஆகிப் போச்சுன்னாக்க எதுக்கு ஜாதிப் பேர் சொல்லித் திட்டும் போது கோபம் வரனும்....
//

அசுரன் அய்யா,

புரட்சிகர கட்சியோட கொள்கையை விளக்கமா சொல்லிட்டீங்க.
இனிமே நீங்க பார்ப்பனத்தனத்தை திட்டும் போது,வன்னியத்தனம்,செட்டித்தனம்,முதலியார்தனம்,பெரியார் தனம்,கிறித்துவத் தனம்,இஸ்லாமியத்தனம் என்று எல்லா ஜாதி/மத தனத்தையும், சோஷலிஸ முறையில் திட்டுவோம்.அதான் ஜாதி இல்லாமல் ஆயிடுத்தில்ல.
நடு நிலமையோடு செயல் படுவோம்.
யாராவது கேட்டால் நீங்க சாதி/மதத்தை விட்டு ஏன் விலகாமல் இருக்கீங்கன்னு சொல்லிடலாம்.

பாலா

வஜ்ரா said...

//
ெரியார் குறித்த தனிப்பட்ட தாக்குதல் குறித்துதான்.
//

ஓரளாவுக்கு பெரியாரும் அவரது சிஷ்ய கேடிகளும் ஆரம்பித்து வைத்தது தான் இந்தத் தனி மனித தாக்குதல்.

இன்றும் பாருங்கள், பெரியார் கொள்கையை விமர்சித்தால் வந்து விழும் "போடா ங்கோத்!@#$%^&*!, பார்ப்பாரத்*#^$க்குப் பொறந்தவனே, " என்று மெயில்.

பெரியார் மீது அதீத பாசம் கொண்டவர்கள் இவர்கள்.

இவர்கள் செய்வதைத்தான் பதிலுக்குச் செய்கிறார்கள் இந்த புதுப் பெரியார் எதிர்ப்பாளர்கள்.

அதனால் அது சரியான ஒன்று என்று சொல்லவில்லை, ஆனால் அந்தத் தவறை தவறு என்று சொல்ல எந்தப் பெரியாரிஸ்டுக்கும் அருகதையில்லை.

Hariharan # 03985177737685368452 said...

திரு. மணிகண்டன்,

ஈவெரா பக்தர்கள் என்கிற போர்வையில் ஈவெரா சொல்லிய நல்லவைகள் எதையுமே பின்பற்றாமல் ஈவெராவை வெறும் "பிராண்ட் ஈக்விட்டி"க்காகவும், அறிவைப் பயன்படுத்தாமல் வெறும் "பகுத்தறிவு பிராண்ட் ஐகான்" என்கிற அளவிலே அரசியல் திரா"விடம்" செய்கின்ற கும்பலை விட ஈவெராவின் பல கருத்துக்களை, செயல்பாடுகளை விமர்சித்தாலும் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் இருக்கிற பொதுஅறிவைப் பயன்படுத்தி தெய்வத்தின் மீது நம்பிக்கையுள்ள சாதாரணமான மனிதனாக வாழ்கிறது எவ்வளவோ மேலானது!

ஈவெரா மதம் என்று பகுத்தறிவோடும், சுயமரியாதையோடும் ஈவெராவினை சிலைகள் வடித்து ஆரதிப்பது, துதிப்பது, வெடிகுண்டுவீசுவது, தாக்குவது என்பவைகள் எந்த ஒரு சாதரணமானவனுக்கும் ஈவெரா என்னடா பண்ணினார் என்கிற சலிப்பு, வெறுப்பையே உண்டுபண்ணும்!

அன்புடன்,

ஹரிஹரன்