Dec 24, 2005

வலைப்பதிவுகளின் தொடர்ச்சியான வீழ்ச்சி

நான் வலைப்பதிவு பற்றி அறிந்த சமயத்தில் மிகுந்த உத்வேகத்துடன் எழுதி வந்த பலரின் பெயர்களைக் கூட இப்போது படிக்க முடிவதில்லை. அவ்வளவு தான் வலைப்பதிவு எழுத்தின் ஆயுளா? அல்லது ஒருமுறை நட்சத்திரம் ஆனவுடன் முடித்துக் கொள்கிறார்களா? செறிவற்ற பின்னூட்டங்களும், தனிப்பட்ட வெறுப்பு தாங்கிய சொற்களும்,வரிகளும் பலருக்கும் வலியினைத் தந்திருக்கலாம். அல்லது உபயோகமற்ற சொல்லாடலின் பயன் என்ன என்ற வினா கூட எழுந்திருக்கலாம்.

ஏதோ,
மிக உக்கிரமான விவாதம் எதுவும் அரங்கேறுவது போல் தெரியவில்லை. அனானிமஸ்கள் கூட ஓய்ந்துவிட்டர்கள். மழையும் காற்றும் வீசி முடித்த அமைதியை உணரமுடிகிறது.

புதியவர்கள் பலர் சாரலடித்துக் கொண்டிருக்கிறார்கள். பல பதிவுகள் பக்குவமற்று ஏதோ எழுதுகிறேன் என எழுதிவருகிறார்கள். ஆனால் புதியவர்கள் தனித்து வெளிப்படக் கூடும்.தொடர்ந்து நிலைத்து எழுதுவார்களா என்றுதான் தெரியவில்லை.

ஜெயமோகன் சொல்வார். அலுப்பு தராத எந்த பெரும் நாவலும் இருக்க முடியாது என்று. வலைப்பதிவில் இப்போது வருகின்ற அலுப்பு அவ்வகையானது இல்லை.

பலரும் சொன்னதுதான். தமிழை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் ஊடகம் இணையமாக இருக்கும். வலைப் பதிவு அதில் மிக முக்கியமானதாக இருக்கும் என்று.இன்றைய சூழலில் எனக்கு இரண்டாவது கூற்று சரியெனப் படவில்லை.

25 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

test comment

Jayaprakash Sampath said...

நீங்க சொல்றது ரொம்ப சரி

dondu(#11168674346665545885) said...

என்ன மணிகண்டன் அவர்களே,
தமிழ்மணத்தில் உங்கள் இந்தப் பதிவை சேமித்து விட்டர்கள் அல்லவா? ஆனால் இப்போதெல்லாம் பதிவு போட்டு சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் நிஜம். Round Robin முறைப்படி சேமிப்பதாகக் கேள்விப்பட்டேன்.

என்னைப் பொருத்தவரையில் போலி டோண்டுதான் வலைப்பூக்களின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம். இப்போதைக்கு அடக்கி வாசிக்கிறான். பின்பு நடக்க வேண்டியது என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனின் திருவுள்ளப்படியே நடக்கும்.

வலைப்பூவிற்கு வந்ததிலிருந்து எனக்கு தமிழில் எழுத மிகப் பெரிய உந்துதல் கிடைத்துள்ளது. சொல்லி வைத்தாற்போல ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு வேலைகள் வேறு அதிகம் வர ஆரம்பித்துள்ளன.

ஆகவே என்ன நெருடலாக இருந்தாலும் என் கடன் பணி செய்து கிடப்பதே என்றக் கொள்கைதான் எனக்கு இப்போது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

முத்துகுமரன் said...

வீழ்ச்சி என்பதை ஏற்க இயலாது மணிகண்டன்.
வலைப்பூக்களில் இலக்கிய ஆர்வம் உள்ளவர்களால் தொடர்ந்து நீடிக்க முடிவதில்லை. நீடிக்க விரும்புவதும் இல்லை. இங்கு உரையாடல்களே முன்னுரிமை பெறுவதால் இலக்கிய ஆர்வலர்கள் ஒரு கட்டத்தில் விலகிப் போகின்றனர். சிறுகதை, கவிதை, நாவல் என எந்த வகையான படைப்புகளுக்கும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துப்பரிமாற்றங்கள் அதிகம் வருவதில்லை. இது சோர்வைத் தந்துவிடுகிறது.

தனிப்பட்ட ஒருவரால் வலைப்பூவுலகிற்கு வீழ்ச்சி என்பது குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த கதைதான். அருவறுக்கத்தக்க, ஆபாசமான பின்னூட்டங்களை தடுத்து நிறுத்த Comment Moderation போன்ற வசதிகள் இருக்கும் போது அவற்றை பயன்படுத்த மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களும் இந்த தொய்வுக்கு காரனமாகின்றனர். ஏனெனில் தொடர்ச்சியான நிராகரிப்புகள் மூலம்தான் அந்த மாதிரியான மனிதர்களை செயல் இழக்க வைக்க முடியும்.

புறக்கணிப்பை போன்ற மிகச் சிறந்த ஆயுதம் வேறெதுவுமில்லை.

நன்றி

Vaa.Manikandan said...

நன்றி பிரகாஷ்.
சதயம் நீங்கள் எதனை உண்மை எனக் குறிக்கிறீர்கள் என்று தெரியவில்லை.
நன்றி டோண்டு.
//நீடிக்க விரும்புவதும் இல்லை. இங்கு உரையாடல்களே முன்னுரிமை பெறுவதால் இலக்கிய ஆர்வலர்கள் ஒரு கட்டத்தில் விலகிப் போகின்றனர். சிறுகதை, கவிதை, நாவல் என எந்த வகையான படைப்புகளுக்கும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துப்பரிமாற்றங்கள் அதிகம் வருவதில்லை. இது சோர்வைத் தந்துவிடுகிறது.//
முழுமையாக ஒத்துப் போகிறேன் முத்துக்குமரன்

நண்பன் said...

எனக்கென்னவோ - இப்பொழுது நன்றாகவே இருக்கிறதாகப்படுகிறது. விவாதங்கள் மோசமாகப் போகவில்லை என்றே சொல்வேன்.

முன்பு எப்படி இருந்தது என்பது தெரியாது ஆகையால் ஒப்பிட முடியவில்லை.

மற்றபடிக்கு நலமாகவேத் தெரிகிறது.

உங்கள் கட்டுரையில் பலருக்கும் ஒப்புதல் இல்லை போலிருக்கிறது - பாருங்கள் கிட்டத்தட்ட ஓட்டுகள் தம்மை சரி செய்து கொண்டுள்ளன. (நான் போட்டது +வ்)

மு. சுந்தரமூர்த்தி said...

மணிகண்டன்,
நீங்கள் சொல்வது சரி. நாள்தோறும் ஓரிரு முறை தமிழ்மணத்தில் எட்டிப்பார்த்தாலும், ஐந்து நிமிடத்திற்கு மேல் தங்கி படிக்குமளவுக்கு ஒன்றுமிருப்பதில்லை. ஆரம்பிக்கும் போது இருக்கும் ஆர்வம் பின்னர் தொய்ந்துபோக முக்கிய காரணம் நேரமின்மை என்று நினைக்கிறேன். முதலில் சிலமாதங்கள் ஆர்வக்கோளாறு நேரத்தைப் பற்றிய பிரக்ஞையைக் கொடுப்பதில்லை. பிறகு யோசித்து பார்க்கும்போது செலவிட்ட நேரத்தையும் கிடைத்த பலனையும் சமன்படுத்திப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். இதற்கிடையில் படிந்துவிடும் முத்திரையும் ஊக்கத்தைக் கெடுக்கும் இன்னொரு காரணி.

முகமூடி said...

// தனிப்பட்ட ஒருவரால் வலைப்பூவுலகிற்கு வீழ்ச்சி என்பது குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த கதைதான் // இதை ஒரு பார்வையாளனாக இருந்து சொல்வது சுலபம். ஆனால் அறுவறுக்கத்தக்க அளவில் பல்முனை - ஆபாச எழுத்தில் பின்னூட்டம், போலிப்பெயரில் அடுத்தவர் பதிவில் ஆபாசமாக எழுதுவது - போன்ற தாகுதல்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும்போது ஒரு கட்டத்தில் நூலிழை அறுந்துவிடுகிறது. ஒரே வாரத்தில் 100க்கும் மேல் கற்பனையே செய்ய முடியாத அளவு ஆபாசமான எழுத்தை தாங்கி வரும் பின்னூட்டங்களை மாடரேஷனில் தடுத்தாலும் அதை அழிப்பது என்பது சோர்வை தரும் விஷயம். மாடரேஷன் என்பது பலருக்கும் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயமில்லை. ஆனால் அதை ஒரே ஒருவரால் நாம் செயல்படுத்த வேண்டியிருக்கிறது என்பது நிர்ப்பந்தத்தின் காரணமாக வரும் எரிச்சலை தருகிறது.

// படிந்துவிடும் முத்திரையும் ஊக்கத்தைக் கெடுக்கும் இன்னொரு காரணி // இது ஒரு மிகவும் முக்கியமான காரணி. கருப்பொருளை விடுத்து கருத்தை சொல்லுபவனை பற்றிய ஆராய்தலை , அதுவும் ஒரு ஊகமாக இவன் இப்படித்தான் இருக்க முடியும், அதற்கு இதுதான் காரணமாக இருக்க முடியும் என்ற தேக்க சிந்தனையை அனைவருக்கும் பரப்பி அதன் மூலம் எழுதுபவனின் நோக்கத்தை சிதறடிப்பது எழுதுபவனுக்கு அலுப்பை தரும் விஷயம்.

Muthu said...

//கருப்பொருளை விடுத்து கருத்தை சொல்லுபவனை பற்றிய ஆராய்தலை , அதுவும் ஒரு ஊகமாக இவன் இப்படித்தான் இருக்க முடியும், அதற்கு இதுதான் காரணமாக இருக்க முடியும் என்ற தேக்க சிந்தனையை அனைவருக்கும் பரப்பி//

ஒருவர் சொல்லவந்த விஷயத்திற்கும் அவரின் பிண்ணணிக்கும் தொடர்பு இருந்தால் இது நியாயம்தானே...இது எப்படி தேக்க சிந்தனை ஆகும்?.

இதை பொதுவாக அமைத்துக்கொள்ள முடியாது முகமூடி..கேஸ் பை கேஸ் ஆக்த்தான் பார்க்க முடியும்.....

நிலா said...

//நீங்கள் சொல்வது சரி. நாள்தோறும் ஓரிரு முறை தமிழ்மணத்தில் எட்டிப்பார்த்தாலும், ஐந்து நிமிடத்திற்கு மேல் தங்கி படிக்குமளவுக்கு ஒன்றுமிருப்பதில்லை.//

ஆமோதிக்கிறேன். முன்பு எப்படி என்று தெரியவில்லை. இப்போது நல்ல பதிவுகளைக் காண்பது அரிதாகத்தான் இருக்கிறது

ஜென்ராம் said...

//ஒருமுறை நட்சத்திரம் ஆனவுடன் முடித்துக் கொள்கிறார்களா? //

நட்சத்திர வாரத்திற்குப் பிறகு ஒரு வாரம் இடைவெளி விட்டு பிறகு எழுதலாம் என்று நினைத்திருந்தேன். அதற்குள் பலவிதமான நேர நெருக்கடிகளுக்கு உள்ளாக நேர்ந்தது. எழுதாமல் போனதும் நட்சத்திர வாரம் முடிந்ததும் என்னைப் பொறுத்தவரை தற்செயல் நிகழ்வே.

அவரவர் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் இருப்பதும் பிற கருத்துகளுக்கு செவி சாய்க்க மறுப்பதும் தாயின் கருவறையில் தொப்பூழ்க் கொடியுடன் சாதிக் கொடியும் புதிதாக சேர்ந்து கழுத்தை நெறிப்பதும் பலரிடம் இருந்த ஆரம்பகட்ட உற்சாகத்தைக் குறைத்திருக்கலாம். நான் எழுதவும் பின்னூட்டமும் இடாவிட்டாலும் கூட வீட்டில் ஓய்வாக அமர்ந்திருக்கும்போது பதிவுகளை வாசிக்காமல் இல்லை. வேலையிடங்களிலேயே தமிழ்ப்பணியையும் எழுத்து வேலையையும் முடித்து விடும் ஒப்பற்ற வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.

தொடர முயல்கிறேன்.

பூனைக்குட்டி said...

//நான் வலைப்பதிவு பற்றி அறிந்த சமயத்தில் மிகுந்த உத்வேகத்துடன் எழுதி வந்த பலரின் பெயர்களைக் கூட இப்போது படிக்க முடிவதில்லை. அவ்வளவு தான் வலைப்பதிவு எழுத்தின் ஆயுளா? //

மாற்றம் என்பது மானிடத்தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
கல்லாய் மரமாய் காடு மேடாய்
மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன்

- கண்ணதாசன்

//பல பதிவுகள் பக்குவமற்று ஏதோ எழுதுகிறேன் என எழுதிவருகிறார்கள்//

:D

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

நண்பர் மணிகண்டன் மட்டுறுத்தும் வசதியினைப் பயன்படுத்தலாமே? சில மணிகள் தாமதமாய்ப் பின்னூட்டங்கள் வந்தாலும் எதுவும் கெட்டுப்போகாது. ஆனால், இப்படியான இடுப்புக்குக் கீழான தாக்குதல்களை ஒதுக்கமுடியும்.

Anonymous said...

நல்ல போட்டி.

இத.இத.இதத் தான நம்ம மணிகண்டனும் எதிர்பார்த்தாரு.

போட்டுத் தாக்குங்கப்பூ.

Vaa.Manikandan said...

உங்க வாக்குக்கு நன்றி நண்பன். அப்புறம் வாக்கு, பின்னூட்டம் குறித்து எல்லாம் கவலைப்பட்டால் இங்க இருக்கவே முடியாது. எல்லாம் ஜூஜூபி மேட்டர் தல!

நன்றி சுந்தரமூர்த்தி.

//மாடரேஷன் என்பது பலருக்கும் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயமில்லை.//
எனக்குக் கூட மாடரேஷன் என்பது இயலாத விஷயம்தான். கணிணி முன் முழு நேரமும் அமர்ந்திருந்தால் செய்ய இயலும். எனக்கு ஸ்க்ரூ டிரைவரும், டெஸ்டரும் தான் சூலாயுதம் மாதிரி நான் எங்க மாடரேஷன் எல்லாம் பண்றது?

தளபதியாரே(ராம்கி)! என்ன கோபமா எழுதியிருக்கீங்க போல இருக்கு? நான் யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை. பொத்தாம் பொது அம்புட்டுதேன்.

கணேஷ் வழி தெரியுத?

மற்ற அனைவருக்கும்....மோகந்தாஸ்,முத்து, நிலா நன்றி.

Vaa.Manikandan said...

ராஜா அனானி!

என்னப்பு இப்படி பெரும்தலைகள என்னொட பேட்டைல வந்து கலாசிகினு கீறே? உனக்கு என்னய்யா குறை வெச்சேன்....ராஜா ல, தங்கம் ல....பிளீஸ் வேண்டாம் செல்லம்...என்னைய மாதிரி பொடிப் பசங்க எல்லம் பொழைசுட்டுப் போகட்டும்னு விடுய்யா!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
சல்மா அயூப் said...

வலைப்பதிவுகள் மழைக் காளான்களாக ஆனது எதனால்!

தினசரி ஏதாவது எழுத வேண்டும் என்று நிர்பந்தத்தில் விழய ஆழமில்லாமல் ஏனோ தானோவென்று கருத்துக்கள்.

தினசரி கேட்டதும், படித்த்தும், உண்றதும், உறங்கியதும் என்று டைரி மாதிரி எழுதி எல்லோரும் படிக்க வேண்டியது என்று எதிர்பார்ப்பதே தவறு.

தன் வீட்டை கழுவி விடுவதும், தன் பனியின் பைத்தியக்காரத்தனங்களும் நிரந்தரமான ஆயுள் கொண்ட பதிவுகள் அல்ல.

ஆராய்ந்து எழுதுங்கள். ஆழமாக எழுதுங்கள். ஏதாவது பொருள் இருந்தால் மட்டுமே எழுதுங்கள். வலைப்பதிவு உயிர்க்கும்.

நன்றி.

ஜோதி

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Vaa.Manikandan said...

Thanks Jothi for ur comments

Mr.Anonymous, This is enough.
I request u to stop this.please. I don't know anything to say.