Aug 26, 2005

தமிழன் ஐய்யா,இது இந்தியத் தமிழன்.

இந்தியா மீதோ,இந்திய அரசின் மீதோ இலங்கைத்தமிழர்களுக்கு தீவிரமான கோபம் இருக்கலாம்.இருப்பது என் பதிவில் இடப்பட்ட ஒரு சில பதிவுகளில் தெரிகிறது.அதுவும் நன்றாக.
ஒரு நாட்டினை மற்ற நாட்டின் இராணுவம் கையக்கப்படுத்த நினைக்கும் போதோ அல்லது தனது போலிஷ்க்காரத்தனத்தினை காட்ட நினைக்கும் போதோ சுயமரியாதை உள்ள யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும்.
அதுவும் தன் தாயின் மீதும்,தனது தங்கையின் மீதும் கை வைக்கும் போது?

எனது பதிவினை பதித்துவிட்டு,திரு எஸ்.வி.ராமகிருஷ்ணன் அவர்களிடம் இது குறித்து விவாதிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.("அது அந்தக் காலம்" ஆசிரியர்).

இலங்கையின் ஆரம்பகாலம் முதல் இன்று வரையிலும் உள்ள நிகழ்வுகளை,சார்பின்றி விளக்கினார்.ஒரு தேர்ந்த வரலாற்று ஆசிரியரைப்போல்.

பிரபாகரன் அவர்கள் டெல்லியில் கையொப்பம் இட்டது,சத்ரபதி சிவாஜி,அவுரங்கசீப்பிடம் அகப்பட்டதற்கு இணையானது.

இவ்வளவு நாட்களாக இலங்கையின் மீது ஒரு உணர்வுப்பூர்வமான பிடிப்பு மட்டும் இருந்து வந்தது.இப்போது அறிவுப்பூர்வமாகவும் சிந்திக்கத்தோன்றுகிறது.

இந்தப் பதிவில் என்னுடைய அநுதாபத்தை தெரிவிக்க வேண்டும் எனவோ,எனது ஆதரவினை தெரிவிக்க வேண்டும் எனவோ எழுத ஆரம்பிக்கவில்லை.

இலங்கைத்தமிழர்களுக்கு இந்திய அரசின் மீது உள்ள கோபம் ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்.தமிழக ஆட்சியாளர்கள் மீதும் இருக்ககூடும்.ஆனால் இங்குள்ள தமிழர்கள் வெளிப்படையாக பேசத்தயங்கினாலும்,பெரும்பான்மையானோர் உணர்வுப்பூர்வமாக உங்களின் உணர்வுகளை மதிக்கிறார்கள்.போற்றுகிறார்கள்.

ஒரு உதாரணத்திற்காக.என் ஊர்ப்பெயரினை இநணையத்தில் தேடினால் கண்டறிவது மிகக்கடினம்.
என் ஊரில்,பொதுக்கூட்டங்கள் நடக்கும் திடலுக்குப் பெயர்,திலீபன் திடல்.

15 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

ஜெனரல் ஜரூஸெல்ஸ்கியே தன்னுடைய கடந்த காலத் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கேட்டுக்கொண்டாரே. பிறகு நீங்கள் எதுக்காக சும்மா இருக்கும் போலிஷ்காரர்களோடு வம்பு பண்ணுகின்றீர்கள்?

Anonymous said...

ராஜீவை கொன்றதற்காக இந்திய தமிழர்களும், இலங்கை தமிழர் தலைவர்கள் மீது கொள்ளும்
கோபமும் நியாயமானதுதானா ?

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

மணிகண்டன்,

உங்களுடைய ஊர் என்னவென்று தெரிந்துகொள்ளலாமா?

-மதி

மு. மயூரன் said...

சிறுபான்மை மக்களது போராட்டங்களின் பால் தங்கள் அறிவுபூர்வமான தீர்க்கமான பார்வையை வெளிப்படுத்தும் பதிவுகளால் வெகுவாக ஈர்க்கப்படுகிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்க நிறைய ஆவல்...
உலக இனங்களின் போராட்டங்கள் பற்றி அறியவும் ஆவல்.

ராஜீவை கொன்றதற்காக ஏற்பட்ட கோபம் நியாயமானது.

இந்திய சுதந்திரப்போரின்போது, ஆங்கிலேய தலைவர்களை கொன்ற போது, அவர்கள் கோபம் கொண்டு திருப்பி தாகிகி, சுதேசிகளை அழீத்ததும் நியாயமானது.

இந்திராவை கொன்றபோது சீக்கியர்களை தாக்கிய கோபமும் நியாயமானது.

தனிமனிதர்களை கொல்தல் எப்போதும் கொல்ல்ப்பட்டவரை சார்ந்தவருக்கு கோபத்தை உண்டாக்கும்.

கோபம் வந்தால் என்ன செய்யலாம்?ராஜீவ் காந்தியை கொல்ல முயன்றது முதன் முதலில் சிங்கள தீவிரவாதம்தான்.
குருதி வர, பிடரியில் துப்பாக்கியால் விஜிதமுனி தாக்கியபோது, சிங்களவர்கள் மீது இந்தியா கோபம் கொண்டதா?

இப்போதும் அந்த கோபம் இருக்கிறதா?

தன்னலம் சார் அதிகார உறவுகள் தமக்குள் கோபம் கொள்வதில்லை.

Anonymous said...

//உண்மையிலே கோபமாகவா இருக்கிறார்கள்

கோபம் இல்லாமலேயா ,
அத்துனை பேருக்கு தூக்குத்தண்டனை கிடைத்தது ?

Anonymous said...

இன்னமும் ஏன் உங்கள் இயக்கங்கள்
பல நாடுகளில் பயங்கரவாத தடுக்கப்பட்ட இயக்கத்தில் இருக்கு ?

அனானி 2

முகமூடி said...

// இலங்கையின் ஆரம்பகாலம் முதல் இன்று வரையிலும் உள்ள நிகழ்வுகளை,சார்பின்றி விளக்கினார்.ஒரு தேர்ந்த வரலாற்று ஆசிரியரைப்போல் //

அதை இங்கே பகிர்ந்து கொள்ள முடியுமா..

மாலன் said...

>>பிரபாகரன் அவர்கள் டெல்லியில் கையொப்பம் இட்டது,சத்ரபதி சிவாஜி,அவுரங்கசீப்பிடம் அகப்பட்டதற்கு இணையானது.<<

இது மிகைப்படுத்தப்பட்ட கருத்து. பிரபாகரன் அவரது சம்மதத்தின் பேரிலேயே தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அழைத்துச் செல்லப்படும் முன் யாழ்பாணத்திலும் இரண்டு, மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்த்ன. அவற்றில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் விவாதிக்கப்பட்டன. அந்தப் பேச்சுவார்த்தையில் பிரபாகரனும் விடுதலைப்புலிகள் அமைப்பின் மற்ற உயர்நிலைத் தலைவர்களும் (யோகி, மாத்தையா, ஷங்கர்) கலந்து கொண்டனர்.
இடைக்கால நிர்வாக அமைப்பை ஏற்பதாக ஜே.என்.தீக்ஷித்திற்கு பிரபாகரன் ஒரு கடிதமும் எழுதியதுண்டு.
இந்த விவரங்கள் ஜெயின் கமிஷன் அறிக்கையில் காணப்படுகின்றன. இந்தியா டுடே இந்த அறிக்கையை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது.
( http://india-today.com/jain/index.html)
முடிந்தால் படித்துப் பாருங்கள். நேரமிருப்பவர்கள் யாராவது அதை மொழிபெயர்த்துக் கூட வலைப்பதிவிகளில் தொடராக வெளியிடலாம்.

Thangamani said...

மாலன், Island of Blood (by Anita Pratap)-ல் பிரபாகரனும் இன்னும் சிலரும் டெல்லி அசோகா ஹோட்டலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, கடுமையான காவலும் போடப்பட்டிருந்தது என்றே குறிப்பிடுகிறார். அனிதா சாதுர்யமாக பாதுகாப்பை ஊடுறுவி பேட்டியும் எடுத்திருப்பார். அப்புத்தகத்தில் இருந்தும் பிற தகவல்களின் மூலமும் அறியவருவது பிரபாகரன் மீது கடுமையான அழுத்தம் செலுத்தப்பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன்.

Ganesh Gopalasubramanian said...

மணி எனக்கு இந்த சப்ஜெக்ட் புதிது. விஷயங்கள் அவ்வளவாக தெரியாது. தெரிந்து கொள்ள முனைந்ததுமில்லை. ஆனால் ராஜீவ் காந்தியைக் கொன்றது புலிகள் தான் என்ற கருத்து மட்டும் நெஞ்சத்தில் வேரூன்றியிருக்கிறது. பிரச்சனைகள் பல இருப்பினும் மனிதனுக்கு மனிதன் காட்ட வேண்டிய அந்த அடிப்படை அன்பு இரு புறங்களிலிருந்தும் மறுபுறத்திற்கு காட்டப்படவில்லை என்றே நினைக்கிறேன். இலங்கைப் பிரச்சனைகளைப் பற்றி இன்னும் எழுதுங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாயிருக்கும்.

மாலன் said...

தங்கமணி,
நான் அனிதாவின் புத்தகத்தைப் படிக்கவில்லை.
இணையத்தில் காணக்கிடைக்கும் புலிகள் ஆதரவுத் தளங்களில் அவர் பிரபாகரனுடன் நடத்திய சந்திப்புக் குறித்த பகுதிகள் மீள் பிரசுரம் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தப் பகுதியைக் காணவில்லை. உங்களிடம் இருந்தால் அறியத் தாருங்கள்.

கீழே உள்ளது ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கையில் காணப்படுவது:
Mr. Puri had said, he had instructions to invite Prabhakaran to visit

India tomorrow, i.e. 24th July. Prabhakaran said that he need a few minutes to think. After about a minute or so, he said "OK, I will come". Then he raised some other matter. He said that he would like to take a delegation along. He wanted to take two or three body guards and also other LTTE leaders Yogi and Thileepan. He also expressed that Balasingham, who is in Madras, should also join. He also sought advice that he wanted his wife and two children to accompany him to Madras so that they meet his wife's parents who are in Madras. He will take two attendants to look after his children. He also said that he would like to pay a courtesy call on the Tamil Nadu Chief Minister Shri M.G. Ramachandran and he also wanted that an LTTE operative from Madras by name Sornam be brought in the helicopter so that he could visually identify the helipad. Land for the helipad was selected and all arrangements for airlifting Prabhakaran along with the delegation were made. They left Jaffna in two Indian Air Force helicopters at 1026 hrs. on 24th July for Tiruchi. During the flight he had informed Prabhakaran that High Commissioner Dixit had informed him on the previous evening that the Prime Minister issued categorical instructions that as per Prabhakaran's wishes, the new camps established at Vadamarachchi region should be closed down. High Commissioner had taken up the matter with Jayawardene and the latter had agreed so that all the anxieties that he had expressed be taken care of. Prabhakaran seemed satisfied.

They reached Tiruchi at about 1130 hrs. Then they proceeded by a special Indian Air Force flight AN 32 for Madras at 1130 hrs. Prabhakaran, Yogi, Thileepan, Capt. Gupta, Nikhil Seth and Shri Puri drove straight from the airport to the Chief Minister's residence and Prabhakaran's family members were escorted by LTTE cadres to the city. At the Chief Minister's residence, Food Minister Shri S. Ramachandran came out to welcome Prabhakaran and he said that Chief Minister would receive only three persons. Sri S. Ramachandran escorted Prabhakaran and his associates to the Chief Minister's room. They returned after 15 minutes. It was only a courtesy call. They came to the airport and joined the other members of the LTTE delegation. Kittu, Raheem, Raghu and several other LTTE leaders meanwhile reached the airport. LTTE also alerted the Press and a large number of pressmen reached the airport and began interviewing Prabhakaran. Shri Puri and others remained away from Prabhakaran, the pressmen and photographers during the interview. Shri Puri received a detailed briefing from some of the pressmen later. The pressmen informed Shri Puri that Prabhakaran and the LTTE were extremely happy. They were interpreting the invitation by the Prime Minister as official recognition of the LTTE. One journalist even told Mr. Puri that Balasingham had earlier told him that the LTTE had agreed to the package offer by Jayawardene. This was in fact in keeping with what Balasingham told the DIB, JS(BSM) and Mr. Puri in Madras on 21st July.

They reached Delhi at 1900 hrs. High Commissioner Dixit and JS(BSM) called on Prabhakaran at Ashoka Hotel around 2030 hrs. Prabhakaran during this call on him said that camps established in Vadamarachchi should also be closed down and the details of the agreement of which reference is there in the press, had not been shown to him and to his colleagues. High Commissioner then told Prabhakaran that the agreement will be shown to him next morning and each of its clauses and sub- clauses would be explained to him. He also said that it would be preferable after Prabhakaran's meeting with the Prime Minister that an agreement between India and the LTTE could be signed. Prabhakaran said that before signing any document, he wished to discuss the matters considerably in more details. He again raised the point about LTTE's goal, Eelam. At this point, Dixit and JS(BSM) explained that there was no pressure on Prabhakaran to sign any document. The agreement would only be between the Governments of India and Sri Lanka and that the language of any understanding between India and the LTTE could in fact be jointly drafted between Balasingham and Shri Puri the next day (25th July).

5.6 Discussions took place on 25th July with Prabhakaran. Copy of the final draft agreement was handed over to Balasingham. Shri Puri read out the various clauses which were translated by Balasingham. This process took about one hour and fifteen minutes

தமிழில் மொழி பெயர்த்துப் பதிப்பிக்க அவகாசமில்லை. மன்னிக்கவும்
அன்புடன்
மாலன்

வலைஞன் said...

ஒரு தீவிரவாத இயக்கத்தின் தலைவரை பேச்சுவார்த்தைக்கே அழைத்திருந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்படாமல் இருந்திருக்காது. உளவுத்துறை/காவல்துறையின் ரகசிய நிர்வாக நடவடிக்கைகள் மறைக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு.

எனவே
//பிரபாகரனும் இன்னும் சிலரும் டெல்லி அசோகா ஹோட்டலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, கடுமையான காவலும் போடப்பட்டிருந்தது// என்பது உண்மையாயிருக்க வாய்ப்புண்டு.

வெளிப்படையான வீட்டுக்காவல் என்றில்லாமல் பாதுகாப்பு என்ற பெயரிலாவது இது சாத்தியம்தான். அதுமட்டுமல்லாமல் பிரபாகரனால் மற்றவர்களுக்கு ஆபத்து என்றாலும் சரி பிரபாகரனுக்கு மற்றவர்களால் ஆபத்து என்றாலும் சரி அது அன்று மத்தியஸ்தம் செய்த இந்திய அரசை பாதிக்கக் கூடிய விசயம்தானே? மற்றப்படிக்கு அழுத்தங்களுக்கு பணியக்கூடியவராக தோன்றவில்லை.

Vaa.Manikandan said...

நான் போலிஷ்காரனை குறிப்பிடவில்லை.ஒரு நாட்டின் போலிஷ்காரத்தனத்தை குறிப்பிடுள்ளேன்.
மதி அவர்களே,எனது ஊர் ஈரோடு மாவட்டத்தில் ஒரு சிற்றூர்.நிச்சயம் இங்கு குறிப்பிட வேண்டுமா?நன்றி மயூரன்,கனேஷ்.தொடருகிறேன்.

//பிரபாகரன் அவரது சம்மதத்தின் பேரிலேயே தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அழைத்துச் செல்லப்படும் முன் யாழ்பாணத்திலும் இரண்டு, மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்த்ன. அவற்றில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் விவாதிக்கப்பட்டன.//

மாலன்,சிவாஜி ம் ராஜபுத்திர மன்னன் ஜெயசிங்கால்,சிவாஜின் சம்மத்தின் பேரிலேயே அழைத்துச் செல்லப்பட்டார்.தெளிவுபடுத்திக்கொண்டு விரிவாக எழுதுகிறேன்.

கருத்துக்கு நன்றி அனு.

Anonymous said...

இலங்கைத்தமிழர்களுக்கு இந்திய அரசின் மீது உள்ள கோபம் ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்.தமிழக ஆட்சியாளர்கள் மீதும் இருக்ககூடும்.ஆனால் இங்குள்ள தமிழர்கள் வெளிப்படையாக பேசத்தயங்கினாலும்,பெரும்பான்மையானோர் உணர்வுப்பூர்வமாக உங்களின் உணர்வுகளை மதிக்கிறார்கள்.போற்றுகிறார்கள்

100% correct. forget about the people like 'Hindu' Ram and others.

Did rajiv ever think about tamils welfare? our intelligence and some anti tamil advisors misled him to distroy tamils struggle.
so may thiks behind that. they advised 'dravidan' movement will wake again and some 'aganda thamizhagam' like so many.

what ever happend is finished. now our people are ready to accept pakistan. and pujabis in both sides are coming together.

why cant we? why our medias and govt. is keep silent in singala govt. suppersion and supporting them?????

so people like maalan wants to take revange with all tamilians for rajiv????

Anonymous said...

மேலே கருத்து பகிர்ந்து கொள்ளப்பட்ட விடயங்கள் குறித்த
அனிதாப் பிரதாப் மற்றும் இது சம்பந்தமான கட்டுரைகள் இங்கே.