Nov 9, 2017

என்னய்யா உங்க திட்டம்?

சில நாட்கள் கழித்துத்தான் எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். ‘இதையெல்லாம் அப்பப்போ எழுதிடுங்க...வேற யாருக்காவது வழிகாட்டியாக இருக்கும்’ என்று சில நண்பர்கள் சொன்னார்கள். எழுதிவிடலாம்.

ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாக பாலா மார்ஸ் என்ற நண்பர் ‘நீட் தேர்வுக்கு எதையாவது செய்யுங்க..என்னால முடிஞ்ச பணத்தை நான் அனுப்பி வைக்கிறேன்’ என்றார். அதற்கு முன்பாக வரைக்கும் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருந்து கொண்டேயிருந்தது. பணம் பிரச்சினையில்லை. இப்படி யாராவது வலுவாகச் சொல்லும் போதுதான் இறங்கிவிடும் துணிச்சல் வந்துவிடுகிறது. கடலூர் வெள்ளத்தின் போதும் கூட அப்படியான ஊசலாடுகிற மனநிலைதான். ஒரு நண்பர் ‘இறங்குங்க’ என்றார். அதன் பிறகுதான் மடமடவென்று வேலையைத் தொடங்கினோம். பாலா சொன்னவுடன் ஆசிரியர் அரசு தாமஸிடம் பேசினேன். கல்வி சார்ந்த களப் பணிகளுக்கு அவர்தான் பெரும் உதவியாக இருக்கிறார். ஆரம்பத்தில் தமிழகம் முழுவதுமிருந்து அரசுப் பள்ளி மாணவர்களை பொறுக்கியெடுத்து பயிற்சியளிக்கலாம் என்றுதான் திட்டம். நாகேசுவரன் மாதிரியானவர்கள் மிகுந்த முயற்சிகளைச் செய்தார்கள். ஆனால் அது சாத்தியமாகத் தெரியவில்லை. 

இத்தகைய பணிகளில் தலைமையாசிரியர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். தமிழகம் முழுவதும் பரவலாகத் தலைமையாசிரியர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் புரிய வைப்பதில் தொடங்கி ‘வெளியூரில் தங்கமாட்டாங்க’ என்பது வரைக்கும் தடைக்கற்கள் நிறைய இருந்தன. ‘இந்தக் காரியத்தை நம்மால் செய்ய முடியாமல் போய்விடக் கூடும்’ என்ற பயமும் கூட உருவானது. ஒரு முறை கோடு காட்டி பதிவு செய்திருந்தேன். ஆனாலும் மனதுக்குள் சுணக்கம் எதுவுமில்லை. பெரிய அளவில் செய்வதை அடுத்தாண்டு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வர வேண்டியதாகிவிட்டது.

கடந்த முறை ஊருக்குச் சென்றிருந்த போது தாமசு மற்றும் இளங்கோவை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு பள்ளியாகச் சென்றோம். தொடக்கத்தில் சில ஆசிரியர்களிடம் மனத்தடைகள் இருந்தன. பொறுமையாக விளக்கினோம். இரண்டாவது முறை அலைபேசியில் பேசும் போதே ஆசிரியர்களிடம் வித்தியாசத்தை உணர முடிந்தது. மடமடவென்று மாணவர்களின் பட்டியல்கள் வந்து சேர்ந்தன. கிட்டத்தட்ட முப்பது மாணவர்கள்.

பத்தாம் வகுப்பில் நானூற்று இருபதுக்கும் மேலான மதிப்பெண்களைப் பெற்றவர்கள் இவர்கள். பனிரெண்டாம் வகுப்பில் ஆயிரம் மதிப்பெண்களைத் தாண்டிவிடுவார்கள் என்று ஆசிரியர்கள் நம்புகிறார்கள். இந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டியல் இனத்தைச் சார்ந்த மாணவர்கள். பழங்குடியின மாணவர்கள் இரண்டு அல்லது மூன்று பேர்களை பயிற்சியில் இணைக்க வேண்டும் என முயற்சித்தோம். இதுவரை அமையவில்லை. கடைசிவரைக்கும் முயற்சிக்கும் திட்டமிருக்கிறது. உத்தேசப் பட்டியலில் நான்கு மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவினைச் சார்ந்தவர்கள். பத்தாம் வகுப்பில் நானூற்று எழுபத்தைந்துக்கும் அதிகமான மதிப்பெண்களை வாங்கியவர்கள். 

‘எதுக்குய்யா இவ்வளவு வடிகட்டல்?’ என்று சிலர் கேட்டார்கள். 

பனிரெண்டாம் வகுப்புக்கான பொதுவான பயிற்சி என்றால் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். நீட் தேர்வுக்கு அப்படியில்லை. அந்த மாணவரால் ப்ளஸ் டூ தேர்வையும் சமாளித்து நீட் தேர்வையும் எழுத முடிவதற்கான திறன் இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களை அழைத்து வைத்து நாட்களை வீணடித்தால் அதுவுமில்லாமல் இதுவுமில்லாமல் போய்விடக் கூடும். பயிற்சிக்கு வந்து போகும் நேரத்தில் இரண்டு மூன்று கேள்விகளைப் பொதுத்தேர்வுக்குப் படித்தால் பத்து மதிப்பெண்கள் கூடுதலாக வாங்குவார்கள். அவர்களின் எதிர்காலம் இது. கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.

இந்த முப்பது மாணவர்களையும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சனிக்கிழமையன்று ஒரு நேர்காணல் நடத்தி மாணவர் உண்மையிலேயே நீட் தேர்வு எழுதுவதில் தீவிரமாக இருக்கிறாரா என்று பார்ப்பது மட்டுமில்லாமல் அவரால் பொதுத்தேர்வில் கோட்டைவிட்டுவிடாமல் நீட் தேர்வுக்கும் தயாரிப்புகளைச் செய்ய முடியும் என்றால் மட்டுமே இறுதிப்பட்டியலில் சேர்க்கவிருக்கிறோம். அநேகமாக இருபது மாணவர்களைத் தேர்ந்தெடுக்கக் கூடும். மற்ற மாணவர்களிடம் அவர்களின் மனம் கோணாமல் ‘நீ ப்ளஸ்டூவில் மார்க் வாங்குப்பா...உன் குடும்பச் சூழல் எங்களுக்குத் தெரியும்..சரியான படிப்பில் சேரும் வரைக்கும் மட்டுமில்லை..நீ நல்லபடியா ஒரு நிலைமைக்கு வரும் வரைக்கும் நாங்க உதவுகிறோம்’ என்று சொல்லி அனுப்பி வைத்துவிடலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் இருபது அல்லது இருபத்தைந்து மாணவர்களுக்கும் ஏப்ரல் மாதம் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிந்தவுடன் விடுதியுடன் கூடிய ஒரு பள்ளிக்கூடத்தைப் பிடித்து அங்கே மாணவர்களைத் தங்க வைத்து இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்குத் தனித்தனியாக ஆசிரியர்களை நியமித்து நீட் தேர்வுக்கான பயிற்சியளிப்பதுதான் நோக்கம். இடைப்பட்ட காலத்தில் இந்த மாணவர்களுக்கு எப்படி உதவுவது என்று யோசித்துக் கொண்டிருந்த போது எதேச்சையாக மருத்துவர் கார்த்திகேயனைச் சந்தித்தோம். 

இந்திய மருத்துவச் சங்கம் (IMA) ஈரோட்டில் நீட் தேர்வுக்கான பயிற்சிக்கு ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறது.  இந்தியன் பப்ளிக் பள்ளியுடன் இணைந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வகுப்புகளை நடத்துகிறார்கள். அந்தப் பயிற்சி வகுப்பில் ‘உங்கள் இருபது மாணவர்களுக்கு இடம் கொடுக்கிறோம்’ என்றார்கள். அட்டகாசமாகப் போய்விட்டது. பொதுத்தேர்வு தொடங்கும் வரைக்கும் நம் மாணவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பயிற்சி வகுப்புக்காக ஈரோடு செல்வார்கள். அவர்கள் சென்று வருவதற்கான வாகனத்தை நாம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வருகிற ஞாயிற்றுக்கிழமை பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன.  நீட் தேர்வு குறித்தும் படிக்க வேண்டிய பாடங்கள் குறித்தும் மாணவர்களுக்கு ஒரு புரிதலை உருவாக்கிக் கொடுக்கக் கூடும். ஓரளவுக்குத் தயாராகிவிடுவார்கள். தேர்வுகளுக்குப் பிறகு நாம் நடத்தவிருக்கும் முழுநேர பயிற்சி வகுப்புகளுக்கான முன்னோட்டமாக இது அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

உண்மையைச் சொன்னால் பணியை ஆரம்பிக்கும் போது துல்லியமான பாதை எதுவும் தெரியவில்லை. ‘இதைச் செய்யணும்’ என்று பெருமொத்தமான ஒரு திட்டம்தான் இருந்தது. நிறையப் பேர்களிடம் பேசுவதும் களத்தில் இறங்கிப் பார்ப்பதும் நமக்கான பாதையைப் புலப்படுத்தியிருக்கிது. இன்னமும் வெகு தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்று தெரியும். பதிவின் முதல் பத்தியில் எழுதியது போல எங்கேயாவது யாருக்கேனும் இத்தகைய முயற்சிகள் திறப்புகளை உண்டாக்கக் கூடும். நம்மைப் போலவே களத்தில் இறங்கக் கூடும் அல்லது நமக்கு வேறு சில ஆலோசனைகளைச் சொல்லக் கூடும்.

உங்கள் அத்தனை பேரின் ஆசிகளுடன் இறங்கிப் பார்க்கிறோம். நல்லதே நடக்கட்டும்.

10 எதிர் சப்தங்கள்:

Jaypon , Canada said...

ருமையான முயற்சி. வெற்றியடைய வாழ்த்துக்கள்

Anonymous said...

FOLLOWING ARE MY TIPS .IF SUITABLE YOU CAN USE THEM.
' NEET' EXAM IS NO 'ROCKET SCIENCE. IT IS JUST A TECHNIQUE/SKILL IT CAN BE EASILY MASTERED EVEN ABOVE AVERAGE STUDENTS. YOU ARE PICKING UP ONLY COMMITTED STUDENTS. NO PROBLEMS.

THE EXAM IS ONLY IN MAY 2018. AMPLE TIME IS THERE. 5 MONTHS. IT IS MORE THAN ENOUGH FOR A HARD WORKING STUDENT. AT PRESENT 2 HOUR A DAY. AFTER BOARD EXAMS IN APRIL2018 ALL TIME ONE CAN SPARE.
SINCE IT IS THE SAME SUBJECTS IT WILL NOT INTERFERE WITH BOARD PREPARATIONS.
IN 2017 'NEET' TOPPERS WERE FROM STATE BOARDS OF PUNJAB/MADHYA PRADESH SUPPOSED TO BE EDUCATIONALLY BAD STATES
THOUGH CONDUCTED BY ' CBSE' IT WILL NOT BE CBSE SYLLABUS .THE ' NEET,' SYLLABUS CAN BE GIVEN TO TEACHERS/ STUDENTS TO STUDY UNCOVERED/NEW SUBJECTS


NEET,' SYLLABUS CONTAINS 11TH& 12TH (NCERT & CBSE) SYLLABUS .
THE CATCH IS HERE ONLY.
IN OUR SCHOOLS 11 TH PORTION IS IGNORED. SOME/MANY SCHOOLS TEACH 12 TH PORTION IN 11 TH ITSELF.THAT TOO ONLY MUGGING NO UNDERSTANDING. SO ONLY ALL ENTRANCE EXAMS ARE TOUGH FOR EVEN OUR BRIGHT BOYS WHILE ABOVE AVERAGE STUDENTS OF OTHER STATES QUALIFY/GET THROUGH.THEY SAY IT IS CHANGING THIS YEAR. LET US PRAY FOR THIS WELCOME CHANGE.

NEXT IS NEGATIVE MARKING. OUR STUDENTS ARE NOT USED TO THIS. NO NEGATIVE MARKING IN OUR EXAMS. STUDENTS ARE ADVISED TO ANSWER ALL QUESTIONS.
IN 'NEET' EVERY WRONG ANSWER CARRIES 'ONE(1)' NEGATIVE MARK.
LOSS OF ONE MARK WILL AFFECT 'RANKINGS' VERY MUCH.
SO IT IS BETTER NOT TO ANSWER IF NOT VERY SURE.
GUESSWORK/GAMBLING WILL COST VERY DEARLY.
180 QUESTIONS IN 180 MTS (3 HOURS). AMPLE TIME IN A MULTIPLE CHOICE EXAM. 60 SECNDS(1 MINUTE) WITH A STOP WATCH WE CAN SHOE STUDENTS HOW LONG A MINUTE IS. AN AVERAGE YOUNGSTER 16/17 YEARS OLD CAN COVER MORE THAN 100 MTS IN 15 SECS. JUST TO SHOW ONE MINUTE/60 SECS IS A GOOD ENOUGH TIME.


FIRST START WITH YOUR CONFIDENT AREA. IN 'NEET' USUALLY IT IS BOTANY/ZOOLOGY.
THEN CHMISTRY AND LASTLY PHYSICS. THIS BECAUSE IN PHYSICS PROBLEMS WILL BE THERE AND IT WILL BE TIME CONSUMING.
HUMAN TENDENCY WILL NOT ALLOW TO GO TO OTHER PAPER AND WE WILL END UP NOT ANSWERING EVEN KNOWN QUESTIONS.


AT NO COST MORE THAN 45 MINUTES PER SUBJECT. WE CAN EASILY LEAVE AND COME BACK AT THE END.
FOR A KNOWN QUESTION 10 SECONDS IS MORE THAN ENOUGH. ONE SAVES 50 SECONDS. THE HARDER ONE WORKS MORE TIME CAN BE SAVED TO USE FOR DIFFICULT QUESTIONS.
1SO 'NEET' IS EASY FOR OUR CHILDREN IF THEY PREPARE PROPERLY.
I AM AVAIVLABLE FOR ANY CONSULTATION/HELP.
MY MAIL ID IS nagooo 2002@yahoo.co.uk
MY LAND LINE NO IS 24422607. STUDENTS CAN CALL ME AT ALL TIMES.
ANBUDAN,
M.NAGESWARAN.

சேக்காளி said...

பொன்.முத்துக்குமார் said...

பிரமாதப்படுத்துகிறீர்கள் மணி. மனங்கனிந்த வாழ்த்துக்கள். மாணவமணிகள் சாதிக்கவும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

Unknown said...

மணி அண்ணா,

இதில் எதாவது உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் நான் உதவ தயிராக இருக்குறேன். அழைக்கவும்.

அன்புடன்
வ. பூபதி
சரவணம்பட்டி

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

உங்கள் area code என்ன திரு.நாகேஷ்வரன் அவர்களே.வாழ்க வளமுடன்

Anonymous said...

Blogger Gopalakrishnan P said...
உங்கள் area code என்ன திரு.நாகேஷ்வரன்
I AM AT CHENNAI.
MY AREA CODE IS 044.
I HAVE NOT GIVEN MY MOBILE NO SINCE MY SPEECH IS BLURRED BECAUSE OF MY AILMENT AND IT IS MORE IN MOBILE.
AT HOME MY WIFE WILL BE THERE AND ANY NOT CLEAR MATTER SHE WILL EXPLAIN.
DO NOT WORRY. I WILL TALK SLOWLY AND FROM THE SECOND CALL PEOPLE WILL UNDERSTAND MY VOICE.
FEEL FREE. I WANT TO BE OF SOME USE TO THIRU.MANIKANDAN.
ANBUDAN,
M.NAGESWARAN.

Anonymous said...

Mani Anna en paer n.gokulan. . Naan patti maniya karan model schoola patikkurom enna select panra maari eeuntha plz ennaium A.Karthik raja aakiya eruvaraium select pannuna plz.. Nechchayama neetla pass panni neetla select aavom .. En appa ammaven vaaligal engalukku purinthu vittathu select pannugga ethu engalukku kitaiththa nalla vaaipu naangal sirantha muraiel vetri peruvom....��

Vaa.Manikandan said...

அருமை கோகுலன், கார்த்திக்ராஜா...நிசப்தம் தளத்தைக் கணடறிந்து அதில் ஒரு பதிவைத் தேடி நீங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கவேயில்லை. மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. உங்கள் இருவரையும் தேர்ந்தெடுத்த மாணவர்களின் பட்டியலில் வைத்திருக்கிறோம்.வாழ்த்துக்கள்.

Malar said...

Heart felt congratulations for your efforts..All the best!