Oct 19, 2017

கேள்வி பதில்கள்

எடப்பாடி அரசு நல்ல காரியம் ஒன்றைக் கூடச் செய்யவில்லையா?

மாநிலம் முழுவதும் குளம் குட்டைகளில் மண் எடுக்க அனுமதியளித்தது மிகச் சிறந்த செயல். மழைக்குப் பிறகு நிறைய நீர் நிலைகள் நிரம்பியிருக்கின்றன. பாராட்டியே ஆக வேண்டும்.

எழுத்தாளர் ஒருவரின் பயணக்கட்டுரை படிக்க நேர்ந்தது. நான் ஆறு வருடங்கள் தங்கியிருந்த இடம்.நிறைய தகவல் பிழைகள். அதிலிருந்து அவருடைய பிற கட்டுரை பற்றிய நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. இது சரியா?

ஒரு கட்டுரையில் பிழைகள் நேர்வது இயல்பு. ஒரேயொரு கட்டுரைக்காகச் சந்தேகப்பட வேண்டியதில்லை. 

‘காந்தி மீது 4 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. கோட்சே சுட்டது 3 குண்டுகள்தான். 4-வது குண்டு எங்கிருந்து வந்தது என்று முறையாக விசாரிக்கவில்லை. அந்த 4-வது குண்டுதான் காந்தி உயிரிழக்க காரணம்’ என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதே?

வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கிறது. அபினவ் பாரத் என்கிற அமைப்பைச் சார்ந்த பங்கஜ் பத்னி என்பவர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த அமைப்பு பற்றி கூகிளில் தேடிப் பார்க்கலாம். அதற்கு மேல் இதில் கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது?


சசிகலா தமிழ்நாட்டில் தங்களின் ஆட்சிதானே என்று கணக்குப்போட்டு தன்னை தமிழக சிறையில் அடையுங்கள் என்று போராடி சட்ட அனுமதி பெற்று தமிழக சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சிறையில் சசிகலாவின் உயிருக்கு உத்தரவாதம் இருக்குமா அல்லது கடுமையாக கொடுமை படுத்தப்பட்டிருப்பாரா? (நழுவாமல் பதில் சொல்லவும்)

என்ன நிகழ்ந்திருக்கும் என்று யூகிப்பது சாத்தியமில்லை. ஆனால் தவறான முடிவெடுக்காமல் தப்பித்துவிட்டார் என்றுதான் நானும் நினைக்கிறேன்.

நீட் பற்றி வழவழவென்று ரவுண்டடிக்காமல் ஆணித்தமாக (மரியாதையாக அதை எதிர்த்து) உங்களுடைய கருத்தைக் கூறவும்?

உயர்திரு. நீட் அவர்கள் ஒழிக.

ARYAN INVASION THEORY என்பது இப்போது ஒரு கட்டுக்கதை என்பது பல்வேறு தரவுகளின் மூலம் நீருபிக்கப்பட்டு விட்டது. ஆனால் இந்த வரலாற்று திரிபை, திராவிட கட்சிகள், உண்மையான வரலாறாகவே இரண்டு மூன்று தலைமுறை பள்ளி மாணவர்களுக்கு கல்வி மூலம் புகுத்தியிருக்கிறது. ஆனால் அந்த திராவிட கட்சிகள், தவறான வரலாறை குழந்தைகளுக்கு கல்வி மூலம் புகுத்தியதற்காக வருத்தமடைந்திருப்பார்கள் என நீங்கள் நம்புகிறீர்களா? இதை விட முக்கியமானது, இந்த தவறான வரலாறை படித்த இரண்டு தலைமுறையின் ஒட்டு மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் எத்தனை பேர் அல்லது எத்தனை சதவீதம் அவர்கள் கற்றது தவறான வரலாறு என உணர்ந்திருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?

நிரூபிக்கப்பட்டுவிட்டதா? நான் இன்னமும் இது சரியான வரலாறு என்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

குக்கூ குழந்தைகள் அறிவியக்கம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நேரடித் தொடர்பில்லை.

Did you feel any heat for criticizing politicians?

களத்தில் இறங்கினால் மட்டும்தான் அரசியல்வாதிகள் பதறுவார்கள். இணையத்தில் எழுதுவதெல்லாம் அவர்களுக்குப் பொருட்டே இல்லை. இங்கேயே மேய்ந்து கொண்டிருப்பவர்களைப் பற்றி எழுதினால்தான் சூடு தெரியும்.

Which is your favorite movies in Tamil?

நாயகன், தில், பாட்ஷா

கமல் அரசியலுக்கு வந்தால் என்ன நிகழும்?

வயதான காலத்தில் அவருக்கு நன்றாகப் பொழுது போகும்.

Sarahahவில் கேட்கப்பட்டவை.

7 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Which is your favorite movies in Tamil?

"தில்" This is really surprising

சேக்காளி said...

நான்தான் அந்த கேள்வியை கேட்டேன் என்று தெரிந்து கொண்டதால் தானே அதற்கு பதிலளிக்கவில்லை?

அன்பே சிவம் said...

நண்பர் சேக்காளி அப்படி என்னதான் கே😣😣ட்டாரு?!😣

Anonymous said...

======நான் இன்னமும் இது சரியான வரலாறு என்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறேன்============

ஆரியம் வந்தேறின்னா கிறிஸ்துவம் என்ன உள்நாட்டிலே ஆரம்பிச்சதா? அதுவும் வந்தேறிதானே?
ஆரியம் மண்ணின் சாமிகளை கும்பிடலன்னா கிறிஸ்துவமும் அப்படித்தானே?

வந்தேறி பார்ப்பானே என்று திட்டுபவர்கள்[குறுகிய மனப்பான்மை உடையவர்கள்], வந்தேறி கிறிஸ்துவனே என திட்டுவார்களா? திட்டுவதில் கூட சமத்துவம் இல்லையே....

Selvaraj said...

உண்மைதான் சசிகலா தப்பித்துவிட்டார் என்றே நினைக்க தோன்றுகிறது

"உயர்திரு நீட்" என்ன மரியாதையா? .

அவருக்கு பொழுதுபோகும் ஆனா நமக்கு ?

சேக்காளி said...

//ஆரியம் வந்தேறின்னா கிறிஸ்துவம் என்ன உள்நாட்டிலே ஆரம்பிச்சதா?//
Anonymous சார்
ஒரு ரெண்டாயிரம் பேரை ,சரி வேண்டாம் அஞ்சாறு பேரை ஆரியரா மாத்தி உடுங்களேன்.

சேக்காளி said...

//நண்பர் சேக்காளி அப்படி என்னதான் கே😣😣ட்டாரு?!😣//
எனக்கே மறந்து போச்சு அன்பே சிவம்.
நீங்களும் புதுவை லேருந்து காருல அஞ்சாறு பேரோட வர்றேன் ன்னு சொன்னீங்க. சர்வீசுக்கு போன காரு இன்னும் வரல யோ?