Oct 6, 2017

மின்சாரக் கனவு- போட்டிக்கதை 1

அக்டோபர் மாதம், 2031. 

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்தியா குறிப்பாக தமிழகம் பரபரத்துக் கிடந்தது. .

தமிழக இளைஞனுக்கு அறிவித்திருந்தார்கள். 

பிரபல முக நூல் பதிவர்கள் அவனைப்பற்றி பதிவிட்டு லைக் வாங்கி குவித்து கொண்டும், வாட்ஸ் அப்பில் உண்மையான தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும் என்று குதூகலமாக இருந்தது. பரிசை வாங்கி கொண்டு சென்னை விமான நிலையத்தில் இறங்கிய அவனுக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டு அனைத்து ஊடகங்களும் அவனை சூழ்ந்து அவனுடைய பேட்டிக்காக காத்திருந்தன.

என்ன கண்டுபிடிப்பு? எப்படி? ஊடக வெளிச்சத்தில் அவன் பேச ஆரம்பித்தான். வழக்கமாக அனைவரும் சொல்வது போல அவன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்,ஆசிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துவிட்டு தொடர்ந்தான். 

‘எனக்கு சிறு வயது முதலே ஒரு கனவு இருந்தது. மனித சமுதாயத்திற்கு மிக அத்தியாவசியத் தேவையைக் குறைந்த செலவில் உற்பத்தி செய்யவேண்டும் என்பதுதான் அது. அதன் அடிப்படையில் உருவானதுதான் என்னுடைய இந்த கண்டுபிடிப்பான  ‘தானியங்கி மின் உற்பத்தி கருவி’ (Auto Power Generator). இந்த இயந்திரம் குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்தி இயக்க ஆரம்பித்தால் அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யும். மின் உற்பத்தி தொடங்கியவுடன் அதற்கு தேவையான மின்சாரத்தை அந்த இயந்திரத்தில் இருந்தே எடுத்துகொள்ளும். இதை நியூட்டனின் நெம்புகோல் தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கியுள்ளேன். புரியும்படி சொல்லவேண்டும் என்றால் செயின் புள்ளி பார்த்திருப்பீர்கள் அதை பயன்படுத்தி வெறும் கையால் செயினை சுற்றும்போது அந்த புள்ளியின் நடுவில் தொங்கும் மற்றொரு செயினின் முனையில் உள்ள கொக்கியில் மிகப்பெரிய பாரத்தை எளிதாக தூக்க முடியும். அதே முறையில் ஒரு ஜெனரேட்டரை இயக்கும்படி வடிவமைத்துள்ளேன், அதை சிறிய அளவில் இரண்டு கன அடி பெட்டியில் இருக்குமாறு தயாரித்து உள்ளேன்.

இந்த இயந்திரத்தை உங்கள் வீட்டின் மின் இணைப்பு இருக்கும் மெயின் பெட்டியில் பொருத்தி விட்டால் உங்கள் வீட்டிற்குறிய மின் தேவையை பூர்த்தி செய்யும். அதே போல் பெரிய தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரத்தை தயாரிக்கும் வகையிலும், கார், பஸ், லாரி,டிராக்டர் போன்ற வாகனங்களில் பொருத்தும் வகையிலும் வடிவமைக்க முடியும். இப்போது எண்ணி பாருங்கள் இதன் மகத்துவத்தை. எண்ணெய் வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று வெளிநாட்டில் கை ஏந்த வேண்டியதில்லை. நெடுவாசல் போராட்டமும் வேண்டாம். அணு உலை வேண்டாம். அனல் மின் நிலையமும் வேண்டாம். நிலக்கரியும் வேண்டாம்; நிலக்கரி ஊழலும் வேண்டாம். கார்பன் டை ஆக்சைடும் கார்பன் மோனாக்சைடும் இல்லை. புவி வெப்ப மயமாகாது. மழைபெய்யும்; நாடு செழிக்கும். தொழில் வளம் கொழிக்கும். பொருளாதாரம் உயரும். ரூபாயின் மதிப்பு உயரும்”.

திடீரென புழுக்கம் கொசு கடி எழுந்து பார்த்தவன்.  ‘அடச்சே இந்த ஈபி காரனுங்களுக்கு இதே பொழப்பா போச்சு..நினச்சா கரண்ட கட்’

சுரேஷ் கோவிந்தசாமி

4 எதிர் சப்தங்கள்:

SENTHIL said...

BLOOM BOX- K.R.Sridhar

சேக்காளி said...

பாஸ் இதே மாதிரி சிந்தனையில நம்ம கிட்டயும் ஒண்ணு இருக்கு
சுத்துனா மின்சாரம் வரும் அது மின்னாக்கி(ஜெனரேட்டராமாம்)
மின்சாரத்தை உள்ளே குடுத்தா அது சுழலி( மோட்டாராமாம்)
இந்த ரெண்டையும் ஒரு புள்ளி இணைக்க முடிஞ்சா ?

சேக்காளி said...

//அக்டோபர் மாதம், 2031.//
ம்க்கும். அப்ப 2020 ல வல்லரசா ஆவாதா?

Sundar Kannan said...

Kind advise,

Read some basic scientific theories well before writing science fictions stories.

Energy can neither be created nor destroyed.

It's an universal fact and cant be changed in the future too.