உலகிலேயே முதன்முறையாக ஜென்மங்கள் கடக்கும் டிராவல் மெசினை கண்டுபிடித்து தன் நண்பர்களாகிய கணேஷ், மற்றும் கார்த்தியிடம் மெசினைப்பற்றிய விளக்கவுரை கொடுத்துக்கொண்டிருந்தான் அன்பு.
‘நான் பிறந்த அப்போ எப்படி இருந்தேன்னு இதுல கூட்டிட்டு போய் காட்டு’ என்றான் கணேஷ்.
‘இல்லை இல்லை இதில் டைம் டிராவல் செய்ய இயலாது..போன ஜென்மம் அல்லது அடுத்த ஜென்மத்திற்கு மட்டுமே போக முடியும்’ என்று விளக்கினான் அன்பு.
கணேஷ் போன ஜென்மத்திற்கும், கார்த்தி அடுத்த ஜென்மத்திற்கும் போக ஆசைப்பட்டனர். ஒருவர் பின் ஒருவராக மெசினில் அமர்ந்தனர்.
மெசினில் எதை எதையோ அமுக்கிய பின் டிக்…டிக்…டிக் என்ற ஒலிக்குப் பிறகு
‘பிராசஸ் சக்ஸஸ்…’என்று குட்டித்திரையில் காண்பித்த அடுத்த நொடி இருவரும் மாயமாய் மறைந்தனர்.
‘வெற்றி…வெற்றி’ என்று கூக்குரலிட்ட அன்பு போன ஜென்மம் போனவர்களை திரும்ப இந்த ஜென்மம் கொண்டு வரவேண்டிய பார்முலாவை படிக்கபோனான்.
மதி டிராவல்ஸ்
mathytravels@gmail.com
2 எதிர் சப்தங்கள்:
Really mokkai sir
//போன ஜென்மம் போனவர்களை திரும்ப இந்த ஜென்மம் கொண்டு வரவேண்டிய பார்முலாவை படிக்கபோனான்.//
இதுக்கு பணமதிப்பிழப்பு செஞ்ச குரூப்பு எம்புட்டோ மேல்
Post a Comment