சைவத்திற்கு மாறிவிட்டேன் என்று சொன்னால் பலரும் நம்புவதில்லை. அது ஆயிற்று பல மாதங்கள். ஆரம்பத்தில் வெகு கடினம். நினைக்கும் போதெல்லாம் நாக்கு பரபரவென்றது. அதுவும் விருந்துக்குச் சென்றால் பக்கத்து இலையில் கோழி குதிக்கும். ஆடு ஆடும். மீன் துள்ளும். என்னடா இது நம் மனோவலிமைக்கு வந்த சோதனை என்று நினைத்தபடியே பருப்பையும் ரசத்தையும் கரைத்து உள்ளே தள்ளினால் இறங்குவேனா என்று மல்லுக்கு நிற்கும். கோழியைக் கடிப்பதாக நினைத்து வாழைக்காய் பஜ்ஜியை ஒரு கடி. ஆட்டை இசிப்பதாக நினைத்து முட்டைக்கோசு பொரியலை ஒரு கடி. சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும்.
பிறந்ததிலிருந்தே அசைவம்தான். உடல் தேற வேண்டும் என்பதற்காக தினந்தோறும் இரவில் ஆட்டுக்கால் சூப்பு வைத்து அடுத்த நாள் காலையில் அம்மா கொடுத்ததெல்லாம் நடந்திருக்கிறது. ஞாயிறு தவறாமல் மிளகு அரைத்து வைத்த அசைவக் குழம்பு வீட்டில் மணக்கும். நாக்குப் பழகிக் கிடக்கிறது. வேலைக்குச் சேர்ந்து ஓரளவு காசு கையில் சேர்ந்த பிறகு வாரத்தின் இடைப்பட்ட நாட்களிலும் அசைவம்தான். ஒரு நாளாவது பிரியாணி தின்னக் கிளம்பிவிடுவேன். இத்தனை வருடங்களில் மருந்துக்காகக் கூட அசைவத்தைத் தவற விட்டதில்லை. முப்பது வருடங்களாகப் பழகிய நாக்கு இது. திடீரென்று தின்னக் கூடாது என்று சொன்னால் எப்படிக் கேட்கும்? திடீரென்றுதான் தோன்றியது. கனவு மாதிரி. விட்டுவிட்டேன்.
கடந்த ஒரு வருடமாக வள்ளலாரைப் பின்பற்றுகிறவர்கள், சித்த மருத்துவர்கள் என நிறையப் பேர் அறிமுகமாகியிருக்கிறார்கள். அவர்களுடன் உரையாடவும் விவாதிக்கவும் வாய்ப்புக் கிடைக்கிறது. அத்தனை பேரும் அசைவத்தை எதிர்க்கிறார்கள். பலராமய்யா என்றொரு சித்த மருத்துவர். தொழில்முறையில் வழக்கறிஞர். பிறகு நீதிபதியானவர். இப்பொழுது உயிரோடு இல்லை. அவர் எழுதிய சித்த மருத்துவத் திரட்டு என்ற நூல் மிக முக்கியமான நூல். அதை வைத்து மருத்துவம் பழகுகிறோமோ இல்லையோ- வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளலாம்.
இரவில் ஏழு மணிக்கு உணவை உண்டுவிட்டு ஒன்பது மணிக்கு உறங்கச் சொல்கிறார். பதினோரு மணியிலிருந்து அதிகாலை மூன்று மணி வரை எந்தக் காரணத்தைக் கொண்டும் தூக்கத்தை தவிர்க்கக் கூடாது. அதிகாலையில் சூரியன் வருவதற்கு முன்பாக எழுந்துவிட வேண்டும். இரவில் ஒரு செப்பு பாத்திரத்தில் வென்னீரை ஊற்றி வைத்து அடுத்த நாள் அதிகாலையில் குடித்துவிட வேண்டும். காலைக்கடன்களை முடித்துவிட்டு ஓடவோ வேகமான பயிற்சிகளைச் செய்யவோ வேண்டியதில்லை- நான்கைந்து மைல்களுக்கு உலாவினால் போதும். ஒவ்வொரு வாய் சோற்றையும் பதினைந்திலிருந்து பதினேழு முறை மென்று அரைத்துக் கூழாக்கிவிட வேண்டும். உண்டு முடிக்கும் வரையில் இடையில் நீர் அருந்தக் கூடாது. அசைவம் தவிர்க்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இப்படி நிறைய.
வரிசைக்கிரமமாக எழுதினால் ஒரு அழகான கட்டுரையை எழுதிவிடலாம். பலராமய்யா சொல்லக் கூடிய ஒவ்வொரு விதியுமே பின்பற்றுவதற்கு எளியவைதான். ஆனால் சற்றே மெனக்கெட வேண்டும். நோயின்றி வாழ்தலைக் காட்டிலும் வேறு என்ன பேறு இந்த வாழ்க்கைக்குத் தேவைப்படப் போகிறது? மருத்துவமனைகளின் வாயில்களில் ஒரு நாள் நின்றுவிட்டு வந்தால் போதும். ‘சாகிற வரைக்கும் ஆஸ்பத்திரிப் பக்கம் வராம இருந்தா அதுவே பெரிய வரம்’ என்ற நினைப்பு வந்துவிடும். நோய் வந்த பிறகு மருத்துவம் பார்ப்பது வேறு; வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தில் நோயைத் தள்ளிப் போடுவது வேறு. இரண்டாவது சாலச் சிறப்பு. அப்படியான வாழ்க்கை முறை, உணவுப்பழக்கங்களுக்கான புத்தகங்களையும் உரையாடல்களையும் தேடிக் கொண்டிருந்த போதுதான் பலராமய்யா குறித்தான அறிமுகம் உண்டானது. அவரும் அசைவத்தை முற்றாக விலக்கச் சொல்கிறார்.
இப்படி கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து அசைவத்திற்கு எதிரான மனநிலை தெளிவாக உருவாகியிருக்கிறது. ஆதிமனிதனின் உணவே அசைவம்தான் என்று யாராவது சொல்லும் போது நம்ப முடிவதில்லை. அப்படியென்றால் குரங்கு அசைவமாகத்தானே இருந்திருக்க வேண்டும்? மனிதனும் கூட குரங்கைப் போலத்தான் இருந்திருக்க வேண்டும். இடையில் அசைவம் பழகியிருக்கக் கூடும். இப்படியெல்லாம் உருட்டி புரட்டி ஒரு முடிவுக்கு வந்து இப்பொழுது மிகத் தீவிரமாக சைவத்தை ஆதரிக்கிற மனநிலை வடிவம் பெற்றிருக்கிறது.
ஆரம்பத்தில் வீட்டிலேயே கூட யாரும் நம்பவில்லை. ‘இவனாவது கறி திங்காம இருக்கிறதாவது’ என்றார்கள். நானும் கூடத்தான் நம்பவில்லை. மனோரீதியாகப் பெரும் போராட்டம்தான். அசைவத்தை விட்டுவிட்ட பிறக் ஒன்றிரண்டு வாரங்கள் கழித்து வீட்டில் கொத்துக்கறி செய்து வைத்திருந்தார்கள். ‘அசைவத்தை விட்டுவிட்டேன்’ என்று சொல்லிவிட்டு குழம்பு மட்டும் ஊற்றச் சொல்லிக் கேட்டால் கலாய்ப்பார்கள். அதனால் அவர்கள் எல்லோரும் அந்தப் பக்கமாக நகர்ந்து பிறகு அவசர அவசரமாக ஒரு கரண்டி ஊற்றித் தின்ன வேண்டியதாகிவிட்டது. நல்லவேளையாக யாரும் பார்க்கவில்லை. அலுவலகத்திலும் சைவத்துக்கு மாறிவிட்டதைப் பற்றிச் சொல்லியிருந்தேன். ஆனால் நாம் மாறிவிட்டோம் என்பதற்காக அவர்கள் தின்னாமல் இருப்பார்களா? அடுத்தவன் பிரியாணி தின்னும் போது அவன் வாயைப் பார்ப்பது போன்ற கொடுமை வேறு எதுவுமில்லை.
பக்கத்து வீட்டில் குழம்பு கொதிப்பதும், ரோட்டோரக் கடையில் ரோஸ்ட் மணப்பதும் வெகு தீவிரமாக ஈர்த்தன. ஆரம்பத்திலிருந்தே சைவபட்சிகளாக இருப்பவர்கள் மிகச் சாதாரணமாகத் தாண்டிப் போய்விடுவார்கள். என்னைப் போன்றவர்களுக்கு வெகு சிரமம். பற்களைக் கடித்து மனதை வழிக்குக் கொண்டுவருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. ஆனால் இப்பொழுது தெளிவாகியிருக்கிறது. அசைவத்தைத் தவிர்த்த பிறகு ஏதோ பெருங்குற்றத்திலிருந்து விடுபட்ட மனநிலை உண்டாகியிருக்கிறது. பெருமைக்காகச் சொல்லவில்லை. உண்மையிலேயே அதுவொரு ஆசுவாசம். இனி எந்தக் காலத்திலும் ஓர் உயிரைக் கொல்லப் போவதில்லை என்று நினைக்கும் போது மனமும் ஒரு முகமாகியிருக்கிறது.
நாகர்ஜூனாவில் கோழி மார்பு ரோஸ்ட், சிக்கன் 65, இறால் பிரியாணியைப் பக்கத்து இலைக்காரன் தின்னும் போதும் கூட பருப்பு பொடியையும், கோங்குரா ஊறுகாயையும் கவனம் சிதறாமல் உண்ண முடிகிறது. சந்தோஷமாகத்தான் இருக்கிறது. அசைவத்தை தவிர்க்கச் சொல்லி உபதேசம் செய்வதற்காக இதை எழுதவில்லை. வாழ்க்கை முறையில் நாம் நிறைய மாறுதல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. தினசரி நடவடிக்கைகள், உணவுப்பழக்கவழக்கங்கள் என ஏகப்பட்டவை. புனைவுகளையும் அன்றாட நடப்புகளையும் மட்டுமே வாசித்தும் பேசியும் கொண்டிராமல் நம்மளவில் மாற வேண்டியவனவற்றைப் பற்றி யோசிக்கும் போதும் தெரிந்து கொள்ளும் போதும் எவ்வளவோ இருப்பதாகத் தோன்றுகிறது.
சொல்ல வேண்டுமெனத் தோன்றியது!
23 எதிர் சப்தங்கள்:
poyya yov
சூப்பர்ஜி.. சூப்பர்ஜி.. சொல்ல வேண்டுமெனத் தோன்றுவதெல்லாம் சொல்லுங்க ஜி.. புத்தகங்கள்ல படிச்சு தியரியா மட்டும் மனசுல இருக்குற விஷயங்களை எப்படி ப்ராக்டிகலா approach பண்ணலாம்ன்னு நிறைய பதிவுல பேசிருக்கீங்க... நல்லா தான் இருக்கு... ஆனா friends, cousins கிட்ட இதெல்லாம் பேசுனா ஒரு மாதிரியா பாக்காய்ங்க ஜி... வெள்ளைக்காரனுக கான்செப்ட்லயும் டெக்னாலஜிலயும் காட்டுற ஆர்வத்தை நம்ம தொலைச்சிட்டுருக்கிற பாரம்பரியத்தை தெரிஞ்சுகிறதுல காட்ட மாட்டேங்குறாங்க... அத தான் என்ன பண்ணனு தெரியல...
//‘சாகிற வரைக்கும் ஆஸ்பத்திரிப் பக்கம் வராம இருந்தா அதுவே பெரிய வரம்’//
அப்பல்லோ மருத்துவம்! எப்பிடியெல்லாம் சிந்திக்க வைக்கிறது பாத்தியளா.
//நல்லவேளையாக யாரும் பார்க்கவில்லை.//
வேணிக்கு தெரியுமாம்.வெளியே சொன்னா வெட்கம் ன்னு சொல்லலியாம்.
உங்க பழைய பதிவுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அசைவம் சாப்பிட்ட கதைகள் படித்த நினைவு. சாப்பிடாதன்னு சொல்ல ஆசைதான். ஆனா நியான்டர்களும், விமுக்களும் fiat பேலியோவுக்காக வரிந்து கட்டும் போது, நான் ஏதோ நல்லதுக்குச் சொல்லப்போக, 'போடா வந்தேறி'ன்னு திராவிட எழுத்தாளர்களின் வரலாற்றுப் புத்தகங்களையும், ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களின் டகால்டி மொழி பெயர்ப்புகளையும் துணைக்குக் கூப்பிடுவீங்கன்னு நினைச்சு கம்முனு ஆயிட்டேன். பிறிதொன்றின் புண் அப்படின்னான் பாட்டன் வள்ளுவன். நல்ல முடிவு.
அருமை. எனது தந்தையின் வலுக்கட்டாயத்தினால் படித்து, உணவு குறித்த எனது பார்வையை முற்றிலுமாக மாற்றிய புத்தகம். படிக்கவில்லை என்றால் படித்து பயனுருங்கள்.
http://www.udumalai.com/unavu-maruthuvam.htm
Chandapurala kozhi vankittu vanthu valarthakku koondu senji vechikalae... Athu enna aachu?
என்னளவில் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது, ஆகவே நான் வெளிநடப்பு செய்கிறேன். மீன் வறுவல் வாழ்க! பிரியாணி வாழ்க!! கோழி சூப் வாழ்க!!!
Where we can buy Dr Balaramayya book sir?
Welcome to the club, Mani! Next upgrade is becoming vegan. Let me know if you need help.
நான் எழுதிய/ரசித்த சில வரிகள்:
கோழி திண்பவனைப்பார்த்து
பாம்பு திண்பவன் சொன்னான்
தயிர்சாதமென்று.
என் மதிய உணவு ஆவதைவிடவும்
மேலான பயன்களும், வாழத் தகுதியும்
ஒரு உயிருக்கு உண்டென நம்புவதால்…
சனிப்பிணம் தனியாய்ப் போகாது
இறுதி ஊர்வலத்துக்கு வந்தவர்களுக்கு
சுடச்சுட கொதிக்குது ஆட்டுக்கறி குழம்பு
http://nammabooks.com/index.php?route=checkout/cart
Could you please share a Snapshot or book store or link or contact details to purchase one?
samiye saranam iyappa sorry, saranam manikanda.,,!
congrads sir. i'm confident your health will be great from here on.
i doubt whether veg foods alone can provide food for entire humenbeeings in this world.
nonveg started due to famin in places like china where they had no other option apart from eating cats, snakes and lizards.
i still doubt whether vegan people can live without killing any life. while breathing, we unknowingly killing many lifes. we are not taking milk and its products without torchering cows by killing their freedom and forcing them to live in a conjusted place.
i fully agree that veg is good for health and we should follow it.
but, i cannot agree that only nonveg people are killers and veg people are not killers. the law of universe never allows such life we desire.
they are selling the book as hot copy only sir.
we blind people can read if they provide in soft copy in word format.
kindly tell us if any way is there to purchase as soft copy.
மிக நல்ல முடிவு. நீங்கள் உணருவீர்கள்.
//அவர் எழுதிய சித்த மருத்துவத் திரட்டு என்ற நூல் மிக முக்கியமான நூல். அதை வைத்து மருத்துவம் பழகுகிறோமோ இல்லையோ- வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளலாம்// புத்தகம் எங்காவது கிடைத்தால், தெரியப் படுத்தினால்-- நன்றி சார்.
Well said Aravind
Been there, done that and back to the form :)
In my life, had two episodes of vegetarianism. One for about 2 years and another one for about 5 years.
Whenever I was a vegetarian, I felt guilt free and some kind of pride in being vegetarian and cannot say the same when I am non-vegetarian.
Wish you good luck to remain a vegetarian through out your life :)
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக சைவ உணவு. முட்டை கூட இல்லை. முட்டைக் கேக் என்றாலே வாந்தி வருகிறது. ஆறு மாதத்திற்கு ஒரு தடவை கொலஸ்ட்ரால் சோதனை செய்வதுண்டு. சைவத்திற்கு மாறியதிலிருந்து கொலஸ்ட்ராலின் அளவு எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. காய்கறிகள், பழங்கள் என உணவை சரி விகிதமாக மாற்றியதிலிருந்து உடலமைப்பு சீரானது. ஜட்ஜ் பலராமய்யா பல விஷயங்களைச் சொல்லி இருக்கிறார். இனி அதை அப்டேட் செய்தால் உடல் காற்று போல ஆகி விடும் என நம்புகிறேன். கோவையில் சனி மற்றும் ஞாயிறுகளில் காண்ட்ராக்ட் வெள்ளைக்கோழிக் கறி ஒன்றரை லட்சம் கிலோ விற்கிறதாம். மருத்துவமனைகளில் கூட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது.
////இரவில் ஒரு செப்பு பாத்திரத்தில் வென்னீரை ஊற்றி வைத்து அடுத்த நாள் அதிகாலையில் குடித்துவிட வேண்டும்.//// இதற்கான காரணம் இது தான் - http://www.nature.com/news/2005/050408/full/news050404-14.html
Available here:
http://nammabooks.com/index.php?route=product/manufacturer/product&manufacturer_id=2205
//மனிதனும் கூட குரங்கைப் போலத்தான் இருந்திருக்க வேண்டும். இடையில் அசைவம் பழகியிருக்கக் கூடும்//
குரங்கு சைவம்னு யார் சொன்னாங்க ?😆
//மனிதனும் கூட குரங்கைப் போலத்தான் இருந்திருக்க வேண்டும். இடையில் அசைவம் பழகியிருக்கக் கூடும்//
குரங்கு சைவம்னு யார் சொன்னாங்க ?😆
பெரும்பாலும் சைவம்தானே?
//The diet of nearly all monkeys and apes are simple. Fruits, nuts, leaves, insects and on occasion the odd snack of a lizard or bird. Primates have the capacity to eat sugary fruits, leaves and meat, but meat is rarely consumed, if at all.//
Post a Comment